Tuesday, October 8, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !

இந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !

முஹர்றம் மாதத்தின் ஆஷூறா தினத்தையொட்டி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையினரால் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை
*********************************************************************

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

முஹர்றம் மாத பத்தாம் நாள் ஆஷூறா தினமாகும். அன்றிரவு மஃரிப் தொழுகையின் பின் அல்லது இஷாஉ தொழுகையின் பின் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரால் ஒரு தரம் யாஸீன் ஓதுங்கள். அல்லது மூன்று தரம் ஓதுங்கள். துஆ ஓதும் போது ஸெய்யிதுனா அலீ, ஸெய்யிததுனா பாதிமா, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் பெயர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அன்றிரவு முடிந்தளவு தான தருமம் செய்யுங்கள். ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு வழங்குங்கள்.  உங்கள் வீட்டுக்கு அண்மையிலுள்ள பள்ளிவாயல் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் செயற்படும் பள்ளிவாயல் ஆயின் அங்கு தொழவருகின்றவர்களுக்கும் வழங்குங்கள்.

உங்கள் வீடு, கடை, தொழிலகம் முதலான இடங்களிலும் யாஸீன் ஓதி சகல பலாய், முஸீபத்களும் அகன்று பறகத்தும், செல்வமும், சந்தோசமும், ஆரோக்கியமும் ஏற்பட துஆசெய்யுங்கள்.
இம்மாதத்தின் ஒன்பதாம் நாளான தாஸூஆ தினமும், பத்தாம் நாளான ஆஷூறா தினமும் நோன்பு நோற்பது சுன்னத் நபீ வழியாகும்.
ஆஷூறா தினம் ரொட்டி சுட்டுக் கொடுப்பதும் யாஸீன் ஓதுவதும் பித்அத் அநாச்சாரம் என்று கற்றும் அறிவற்ற சிலர் கூறலாம். அவர்களின் கூற்றை குப்பைத் தொட்டியில் எறிந்து எரித்து விடுங்கள்.
ஆஷூறா தினம் ஓதுவதற்காக வலீமாரில் பலர் பல்வேறு துஆக்களை எழுதியுள்ளார்கள். அவற்றில் ஒரு துஆவை இங்கு எழுதியுள்ளோம். ஓதிப் பயன் பெறுங்கள்.
دعاء يوم عاشوراء   ***    ஆஷூறா தின துஆ
+++++++++++++++++++++++++++++++++++++++++++
اَللهم يَاقَابِلَ تَوْبَةِ آدَمَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவமன்னிப்பை ஆஷூறா
தினம் ஏற்றுக் கொண்ட நாயனே!
وَيَا رَافِعَ إِدْرِيْسَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆஷூறா தினத்தில்
வானத்தின் பக்கம் உயர்த்திய நாயனே!
وَيَا مُسَكِّنَ سَفِيْنَةِ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலை ஆஷூறா தினம் ஜூதீ
என்ற மலையில் தக்க வைத்த நாயனே!
وَيَا مُنَجِّيَ إِبْرَاهِيْمَ مِنْ نَارِ نُمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நும்றூத் என்பவனின் நெருப்பில் இருந்து ஆஷூறா தினம் காப்பாற்றிய நாயனே!
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை ஆஷூறா தினம் ஒன்றிணைத்த நாயனே!
وَيَاكَاشِفَ ضُرِّ أَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கஷ்டத்தை ஆஷூறா தினம் நீக்கி வைத்த நாயனே!
وَيَافَارِجَ كُرْبَةِ ذِي النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மீனின் வயிற்றில் இருந்து ஆஷூறா தினம் காப்பாற்றிய நாயனே!
وَيَاغَافِرَ ذَنْبِ دَاؤُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ தாஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாவத்தை ஆஷூறா| தினம் மன்னித்த நாயனே!
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسَى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ்ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஆஷூறா தினம் ஏற்றுக் கொண்ட நாயனே!
وَيَازَائِدَ الْخَضِرِ فِى عِلْمِهِ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ ஹழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவை ஆஷூறா தினம் அதிகப்படுத்திய நாயனே!
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆஷூறா தினம் வானத்திற்கு உயர்த்திய நாயனே!
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ
நபீ முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆஷூறா தினம் உதவி செய்த நாயனே!
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ
சுவர்க்கம், நரகம் இரண்டையும் ஆஷூறா தினம் படைத்த நாயனே!
وَيَا مُنَزِّلَ التَّوْرَاةِ وَالزَّبُوْرِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ عَاشُوْرَاءَ
தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை ஆஷூறா தினம் இறக்கி வைத்த நாயனே!
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ
ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் ஆகியோரை ஆஷூறா
தினம் படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّلوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ
அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை ஆஷூறா
தினம் படைத்த நாயனே!
وَيَاخَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் ஆஷூறா
 தினம் படைத்த நாயனே!
وَيَاخَالِقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَوْمَ عَاشُوْرَاءَ
வானங்கள், பூமி யாவையும் ஆஷூறா தினம் படைத்த நாயனே!
 
إِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ، وَادْفَعْ عَنَّا السَّيِّئآتِ وَالْبَلِيَّاتِ، يَادَافِعَ الْسَيِّئآتِ وَالْبَلِيَّاتِ، وَسَلِّمْنَا مِنْ آفَاتِ الدُّنْيَا وَفِتَنِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَآلَامِهَا وَشِدَّاتِهَا وَفَقْرِهَا وَمِنْ آفَاتِ الْآخِرَةِ وَعَذَابِهَا وَأَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ الثَّقَلَيْنِ وَرُسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدٍ الْمُصْطَفَى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَامَالِكَ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ سَيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ أَبِيْ مُحَمَّدٍ الْحَسَنِ وَأَبِيْ عَبْدِ اللهِ الْحُسَيْنِ، اَللهم زِدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا، وَصَلَّى الله وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنَ،
RELATED ARTICLES

Most Popular

Recent Comments