Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஷெய்குல் அக்பர் நாயகம் பற்றி இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்

ஷெய்குல் அக்பர் நாயகம் பற்றி இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்

مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة.
أعزّه الله تعالى في الدنيا والآخرة

ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟

فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن عربي، ففِرقةٌ تعتقد ولايته، وهي المُعينة المُصيبة المحقّة، ومن هذه الفرقة الشيخ تاج الدين بن عطاء الله من الأئمّة المالكيّة، والشيخُ عفيف الدين اليافعي من الأئمّة الشافعيّة. فإنّهما بَالَغَا في الثّناء عليه ووَصَفَاه بالمعرفة، وفِرقةٌ تعتقد ضلالته، منهم طائفة كثيرة من الفقهاء، وفِرقةٌ تسكت في أمره، ومنهم الحافظ الذّهبي في الميزان،

وعن الشيخ عزّ الدين بن عبد السلام فيه كلامَانِ، الحَطُّ عليه ووَصْفُه بأنّه القطب، والجمع بينهما ما أشار اليه الشيخ تاج الدين عطاء الله في لطائف المنن، أنّ الشيخ عزّ الدين كان في أوّل امره على طريقة الفقهاء من المسارعة إلى الإنكار على الصوفيّة، فلمّا حجّ الشيخ أبو الحسن الشّاذلي ورجع جاء إلى الشيخ عزّ الدين قبل أن يدخل بيته، وأقرأ له السلام من النبي صلّى الله عليه وسلّم، فَخَضَعَ الشيخُ عزّ الدين لذلك، ولَزِمَ مجلسَ الشاذلي من حينئذ، وصار يُبالِغُ في الثناء على الصوفيّة، لمّا فَهِمَ طريقتَهم على وجهها،وصار يحضُرُ معهم مجالسَ السَّماع ويرقُص فيها،

அறபுப் பகுதியின் சுருக்கம்:

முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றியும், அவர்களின் நூல்களை எரிக்க வேண்டுமென்றும் , அவர் யஹூதீ நஸாறாக்களை விடவும் , அல்லாஹ்வுக்குப் பிள்ளைகள் உண்டு என்று வாதித்தவர்களை விடவும் மிகக் கொடிய “காபிர்” ஆவார் என்று சொன்னவர் பற்றியும் அஷ் ஷெய்குல் அல்லாமஹ் இமாம் ஜலாலுத்தீன் அஸ் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அவர்கள் தந்த பதில் பின்வருமாறு.

இப்னு அறபீ அவர்களின் விடயத்தில் முன்னோர் , பின்னோர்களிற் பலர் பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளார்கள்.

அவர்களிற் சிலர் இப்னு அறபீ அவர்கள் “விலாயத்” என்ற ஒலித்தனம் உள்ளவர்கள் – ஒரு வலிய்யுல்லாஹ் என்று நம்புகின்றார்கள். இவ்வாறு நம்புகின்றவர்கள்தான் – சொல்கின்றவர்கள்தான் – சரியானவர்களாவர். இவர்களில் இமாம் மாலிக் அவர்களின் மத்ஹபைச் சேர்ந்த அஷ் ஷெய்கு தாஜுத்தீன் இப்னு அதாஇல்லாஹ் அவர்களும், இமாம் ஷாபிஈ அவர்களின் மத்ஹபைச் சேர்ந்த அபீபுத்தீன் அல் யாபிஈ அவர்களும் அடங்குவார்கள். இவர்கள் இருவரும் இப்னு அறபீ அவர்களை மிக விஷேடமாகப் புகழ்ந்தும், அவர்கள் ஒரு ஞான மகான் என்றும் கூறியுள்ளார்கள்.

அவர்களில் இன்னும் சிலர் இப்னு அறபீ அவர்கள் வழிகேடர் என்று நம்புகின்றார்கள். இவர்களில் அதிகமானோர் “புகஹாஉ” என்றழைக்கப்படுகின்ற சட்டக் கலையோடு சம்பந்தப் பட்டவர்களாவர்.

அவர்களில் இன்னும் சிலர் இப்னு அறபீ அவர்களின் விடயத்தில் நல்லது கெட்டது ஒன்றும் சொல்லாமல் மௌனிகளாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அல் ஹாபிழ் அத் தஹபீ ஆவார்கள்.

அஷ் ஷெய்கு அல் இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ் ஸலாம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இப்னு அறபீ பற்றி இரண்டு விதமாக தங்களின் கருத்தைக் கூறியுள்ளார்கள். ஒன்று , அவர்கள் பற்றி நல்லது கெட்டது ஒன்றும் கூறாமல் மௌனமாயிருத்தல். இரண்டு, அவர்கள் ஒரு “குத்பு” என்று கூறுதல்.

இவர்கள் இரண்டு விதமாகவும் கூறியதற்கு அஷ் ஷெய்கு இப்னு அதாஇல்லாஹ் என்ற இறை ஞானி தங்களின் “லதாயிபுல் மினன்” என்ற நூலில் பின்வருமாறு ஒரு விளக்கம் கூறியுள்ளார்கள்.

அதாவது அஷ் ஷெய்கு இஸ்ஸுத்தீன் அவர்கள் தங்களின் ஆரம்ப காலத்தில் “புகஹாஉ” எனும் சட்டக் கலைக் காரர்களுடன் சேர்ந்து கொண்டு ஸூபிஸ ஞானிகளை மறுப்பதில் மிகத் தீவிரமுள்ளவர்களாக இருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் ஷாதுலிய்யஹ் தரீகஹ்வின் தாபகரான இறை ஞானி “அல் குத்புல் அக்பர்” அபுல் ஹஸன் அஷ் ஷாதுலீ அவர்கள் “ஹஜ்” வணக்கத்தை முடித்துக் கொண்டு தங்களின் நாட்டுக்கு வந்த போது தங்களின் வீட்டுக்குச் செல்லாமல் அஷ் ஷெய்கு இஸ்ஸுத்தீன் அவர்களின் வீட்டுக்கு முதலில் சென்று நபீ பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலாம் சொன்னதாக அவர்களிடம் கூறினார்கள். அப்போது இமாம் இஸ்ஸுத்தீன் அவர்கள் அபுல் ஹஸன் ஷாதுலீ அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களுக்குத் தலை சாய்த்து அவர்களின் ஸுபிஸ வழியைச் சரிகண்டு அவர்களைப் பற்றிப் பிடித்து அவர்களின் திருச் சபைகளில் அமர்ந்து ஸுபீகளின் கருத்தைச் சரிகண்டு அவர்களோடு முழுமையாகச் சேர்ந்து அவர்களின் திருச் சபைகளில் கலந்து பேரின்பம் பெற்று இறை இஷ்கால் – காதலால் – உந்தப்பட்டு “றக்ஸ்” நடனமாட ஆரம்பித்து விட்டார்கள். (இத்துடன் அறபுப் பகுதியின் சுருக்கம் முடிந்தது.)

மேலதிக விளக்கம்

அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் கூறிய இமாம் ஸுயூதீ அவர்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பட்டியலில் மிகப் பிரசித்தி பெற்ற பல்கலைப் பண்டிதராவார். பிரசித்தி பெற்ற எழுத்தாளருமாவார்கள். சுமார் 561 நூல்கள் எழுதிய மேதையாவார்கள்.

பிறப்பு – இவர்கள் ஹிஜ்ரீ 849ல் (1445 ஒக்டோபர் 3ம் திகதி) கெய்ரோவில் பிறந்தார்கள். இவர்களுக்கு 6 வயதாக இருந்த போதே தந்தை “வபாத்” மரணித்து விட்டார்கள். (ஹிஜ்ரீ 855 ஸபர் மாதம் 1451 மார்ச் மாதம்) ஸூபீ மகான்களில் ஒருவரான தந்தையின் நண்பர் ஒருவர் இவரைப் பொறுப் பெற்றார். இமாம் ஸுயூதீ அவர்கள் ஹிஜ்ரீ 864ல் (1406) கல்வி கற்கத் தொடங்கினார். (ஹிஜ்ரீ 911 ஜுமாதல் ஊலா 18ல் – 1505 ஒக்டோபர் 17ல் “வபாத்” ஆனார்கள்.

தந்தையின் மரணத்தின் பின் ஸூபிஸ ஞானி ஒருவரால் வளர்க்கபட்ட இமாம் ஸுயூதீ அவர்கள் மரணிக்கும் வரை ஸூபீகளுக்கும் , ஸூபிஸ ஞானத்திற்கும் ஆதரவானவராகவே இருந்து வந்துள்ளார்கள்.

ஸுயூத், உஸ்யூத் இரண்டு விதமாகவும் சொல்லலாம். இது “மிஸ்ர்” நாட்டிலுள்ள ஓர் ஊரின் பெயராகும்.

மேற்கண்ட அறபுப் பந்தியில் இமாம் ஸுயூதீ அவர்கள் وفرقة تعتقد ضلالته، منهم طائفة كثيرة من الفقهاء இப்னு அறபீ அவர்கள் ஒரு வழிகேடர் என்று கூறுபவர்களில் அநேகர் சட்டக் கலையோடு சம்பந்தப்பட்ட “புகஹாஉ” சட்டக் காரர்கள் என்று கூறியிருப்பது ஒரு விடயத்தை நினைவூட்டுவதுடன் அது பற்றிச் சிந்திக்கவும் தூண்டுகின்றது.

அதாவது ஸூபிகளையும், ஸூபிஸ ஞானக்கருத்துக்களையும் அன்று எதிர்த்தவர்களும் “புகஹாஉ” என்ற சட்டக் கலைக் காரர்களே ,இன்று எதிர்ப்பவர்களும் அவர்களே என்பதை விளங்க முடிகின்றது. பொதுவாக எக்காலத்திலும் ஸூபிஸ ஞானத்தை எதிரப்பவர்கள் “ழாஹிர்” வெளிப்படை அறிவுள்ளவர்களேயாவர். இவர்களின் கெடுபிடிகளாலேயே இந்த அறிவு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்துள்ளது.

சட்டக் கலைக் காரர்கள் சட்டக்கலை மட்டும்தான் அறிவு என்று விளங்கியிருந்ததால் ஏனைய கலைகள் பற்றி அவர்கள் ஆராயவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருக்கவில்லை. இவர்களின் நடவடிக்கையாலேயே ஸூபிஸ ஞானத்துக்கு – “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டிற்கு – இந்த “முஸீபத்” துன்பம் ஏற்பட்டது. இதனால் தான் “உலமாஉழ் ழாஹிர்” வெளி நீச்சல் காரர்கள் இந்த ஞானத்தை கால் பந்தாக்கிக் கொண்டார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments