الأحاديث الدالة على الوباء والطاعون
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ: مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الطَّاعُونِ؟ فَقَالَ أُسَامَةُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ’’الطَّاعُونُ رِجْزٌ أَوْ عَذَابٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلَا تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا، فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ، وقَالَ أَبُو النَّضْرِ لَا يُخْرِجُكُمْ إِلَّا فِرَارٌ مِنْهُ‘‘
عن أَبِي وَقَّاصٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ’’الطَّاعُونُ آيَةُ الرِّجْزِ، إبْتَلَى الله عَزَّ وَجَلَّ بِهِ نَاسًا مِنْ عِبَادِهِ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ، فَلَا تَدْخُلُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا، فَلَا تَفِرُّوا مِنْهُ‘‘
إِنَّ رَجُلًا سَأَلَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ عَنِ الطَّاعُونِ، فَقَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: أَنَا أُخْبِرُكَ عَنْهُ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ’’هُوَ عَذَابٌ أَوْ رِجْزٌ أَرْسَلَهُ اللهُ عَلَى طَائِفَةٍ مِنْ بَنِي إِسْرَائِيلَ، أَوْ نَاسٍ كَانُوا قَبْلَكُمْ، فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلَا تَدْخُلُوهَا عَلَيْهِ، وَإِذَا دَخَلَهَا عَلَيْكُمْ، فَلَا تَخْرُجُوا مِنْهَا فِرَارًا‘‘
عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: ’’إِنَّ هَذَا الْوَجَعَ أَوِ السَّقَمَ رِجْزٌ عُذِّبَ بِهِ بَعْضُ الْأُمَمِ قَبْلَكُمْ، ثُمَّ بَقِيَ بَعْدُ بِالْأَرْضِ، فَيَذْهَبُ الْمَرَّةَ وَيَأْتِي الْأُخْرَى، فَمَنْ سَمِعَ بِهِ بِأَرْضٍ، فَلَا يَقْدَمَنَّ عَلَيْهِ، وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا فَلَا يُخْرِجَنَّهُ الْفِرَارُ مِنْهُ‘‘
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، خَرَجَ إِلَى الشَّامِ، حَتَّى إِذَا كَانَ بِسَرْغَ لَقِيَهُ أَهْلُ الْأَجْنَادِ، أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ وَأَصْحَابُهُ، فَأَخْبَرُوهُ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ، قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ عُمَرُ: ادْعُ لِي الْمُهَاجِرِينَ الْأَوَّلِينَ فَدَعَوْتُهُمْ، فَاسْتَشَارَهُمْ، وَأَخْبَرَهُمْ أَنَّ الْوَبَاءَ قَدْ وَقَعَ بِالشَّامِ، فَاخْتَلَفُوا فَقَالَ بَعْضُهُمْ: قَدْ خَرَجْتَ لِأَمْرٍ وَلَا نَرَى أَنْ تَرْجِعَ عَنْهُ، وَقَالَ بَعْضُهُمْ مَعَكَ بَقِيَّةُ النَّاسِ وَأَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نَرَى أَنْ تُقْدِمَهُمْ عَلَى هَذَا الْوَبَاءِ فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ ادْعُ لِي الْأَنْصَارَ فَدَعَوْتُهُمْ لَهُ، فَاسْتَشَارَهُمْ، فَسَلَكُوا سَبِيلَ الْمُهَاجِرِينَ، وَاخْتَلَفُوا كَاخْتِلَافِهِمْ، فَقَالَ: ارْتَفِعُوا عَنِّي، ثُمَّ قَالَ: ادْعُ لِي مَنْ كَانَ هَاهُنَا مِنْ مَشْيَخَةِ قُرَيْشٍ مِنْ مُهَاجِرَةِ الْفَتْحِ، فَدَعَوْتُهُمْ فَلَمْ يَخْتَلِفْ عَلَيْهِ رَجُلَانِ، فَقَالُوا: نَرَى أَنْ تَرْجِعَ بِالنَّاسِ وَلَا تُقْدِمَهُمْ عَلَى هَذَا الْوَبَاءِ، فَنَادَى عُمَرُ فِي النَّاسِ: إِنِّي مُصْبِحٌ عَلَى ظَهْرٍ، فَأَصْبِحُوا عَلَيْهِ، فَقَالَ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ: أَفِرَارًا مِنْ قَدَرِ اللهِ؟ فَقَالَ عُمَرُ: لَوْ غَيْرُكَ قَالَهَا يَا أَبَا عُبَيْدَةَ – وَكَانَ عُمَرُ يَكْرَهُ خِلَافَهُ – نَعَمْ نَفِرُّ مِنْ قَدَرِ اللهِ إِلَى قَدَرِ اللهِ، أَرَأَيْتَ لَوْ كَانَتْ لَكَ إِبِلٌ فَهَبَطَتْ وَادِيًا لَهُ عُدْوَتَانِ، إِحْدَاهُمَا خَصْبَةٌ وَالْأُخْرَى جَدْبَةٌ أَلَيْسَ إِنْ رَعَيْتَ الْخَصْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللهِ، وَإِنْ رَعَيْتَ الْجَدْبَةَ رَعَيْتَهَا بِقَدَرِ اللهِ، قَالَ: فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، وَكَانَ مُتَغَيِّبًا فِي بَعْضِ حَاجَتِهِ، فَقَالَ: إِنَّ عِنْدِي مِنْ هَذَا عِلْمًا، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ، فَلَا تَقْدَمُوا عَلَيْهِ، وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا، فَلَا تَخْرُجُوا فِرَارًا مِنْهُ‘‘
عَنْ أَبِي هُرَيْرَةَ، حِينَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”لَا عَدْوَى وَلَا صَفَرَ وَلَا هَامَةَ، فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُولَ اللهِ فَمَا بَالُ الْإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ، فَيَجِيءُ الْبَعِيرُ الْأَجْرَبُ فَيَدْخُلُ فِيهَا فَيُجْرِبُهَا كُلَّهَا؟ قَالَ: فَمَنْ أَعْدَى الْأَوَّلَ؟”
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ”لَا عَدْوَى وَلَا هَامَةَ وَلَا نَوْءَ وَلَا صَفَرَ”
عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَلَا غُولَ”
وهذه الأحاديث الثمانية رواه الإمام مسلم، كلّها من شرح مسلم للامام النووي، من صفحة 203 – إلى 213
குறிப்பு : மேற்கண்ட 8 நபீ மொழிகளுக்கான விளக்கமும், விபரமும், மற்றும் தொற்று நோய் பற்றி இஸ்லாம் கூறும் கருத்தும், மரணித்த ஒருவரின் உடலை எரிப்பதற்கு மார்க்கத்தில் இடமுண்டா? என்பன போன்ற விபரங்களும் எமது அடுத்து வரும் பதிவுகளில் இடம்பெறும். தொடர்ந்து வாசிப்பவர்கள் பயன் பெருவர்.
(முதலாவது ஹதீதின் பொருள்)
நபீ தோழர் ஸஃது இப்னு அபீ வக்காஸ் அவர்களின் தந்தை அவர்கள், நபீ தோழர் உஸாமா இப்னு சைத் என்பவரிடம் “தாஊன்” பற்றி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார். அதற்கு உஸாமா (“தாஊன்” என்பது அசுத்தம் அல்லது பனூ இஸ்றாயீல் – இஸ்ரவேலர்களுக்கு அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு வேதனையாகும். எங்காவதொரு இடத்தில் அது இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு செல்லாதீர்கள். நீங்கள் எங்காவது ஓர் இடத்தில் இருக்கும் வேளையில் அது அங்கு வந்தால் அதற்கு பயந்து அந்த இடத்தை விட்டும் வெளியாகி விடாதீர்கள்.) என்று நபீ அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறினார்கள் என்றார்.
ஆதாரம் – முஸ்லிம், அறிவிப்பு – ஸஃத் இப்னு அபீ வக்காஸ்
இந்த ஹதீது இன்னொரு அறிவிப்பில் பின்வருமாறு வந்துள்ளது.
إِنَّ هَذَا الْوَجَعَ أَو السَّقَمَ رِجْزٌ، عُذِّبَ بِهِ بَعْضُ الْأُمَمِ قَبْلَكُمْ، ثُمَّ بَقِيَ بَعْدُ بِالْأَرْضِ ، فَيَذْهَبُ الْمَرَّةَ ، وَيَأْتِي الْأُخْرَى ، فَمَنْ سَمِعَ به بِأَرْضٍ فَلَا يَقْدُمَنَّ عَلَيْهِ ، وَمَنْ وَقَعَ بِأَرْضٍ وَهُوَ بِهَا فَلَا يُخْرِجَنَّهُ الْفِرَارُ مِنْهُ،
(இதன் பொருள்)
நிச்சயமாக இந்த வலி அல்லது நோய் அசுத்தமானது. உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகத்தவர்கள் அதன் மூலம் வேதனை செய்யப்பட்டுள்ளார்கள். பின்பு அந்த நோய் பூமியில் தங்கி விட்டது. ஒரு சமயம் போகும். இன்னொரு சமயம் வரும். எங்காவது ஓர் இடத்தில் அது இருப்பதாக கேள்விப்பட்டவர் அங்கு செல்ல வேண்டாம். ஒருவர் எங்காவது ஓர் இடத்தில் இருக்கும் போது அங்கு அது வந்தால் அவர் அந்த இடத்தை விட்டும் வெளியேறி விடவும் வேண்டாம். (அந்த நோயைப் பயப்படுவது அவனை வெளியேற்றி விடவேண்டாம்)
ஆதாரம் – ஷர்ஹ் முஸ்லிம்
ஆசிரியர் – இமாம் நவவீ
பக்கம் – 204 பாகம் – 14
குறிப்பு :
وَأَمَّا الطَّاعُوْنَ فَهُوَ قُرُوْحٌ تَخْرُجُ فِي الْجَسَدِ، فَتَكُوْنُ فِي الْمَرَافِقِ أو الآبَاطِ أو الأَيْدِيْ أو الأَصَابِعِ وَسَائِرِ الْبَدَنِ، ويكون معه وَرَمٌ وَأَلَمٌ شَدِيْدٌ، وتَخْرُجُ تِلْكَ القُرُوحُ مع لَهِيب ويُسوِّد ما حَوَالِيْهِ أو يُخْضِرُ أو يُحَمِّرُ حمرة بَنَفْسَجِيَّةً،
وَأَمَّا الوَبَاءُ فقال الخليل وغيره هو الطاعون، وقال هو كُلُّ مَرَضٍ عَامٍّ ، والصّحيح الذي قاله الْمُحقِّقُون أنّه مرَضُ الكَثِيرِيْن من النّاس في جهةٍ من الأَرض دون سائر الجهات، ويكون مخالفا لِلمُعتادِ من أمراضٍ في الكَثْرَة وغيرها، ويكون مرضهم نوعا واحدا بخلاف سائر الأوقات، فإنّ أمراضهم فيها مختلفةٌ، قالوا وكُلُّ طاعونٍ وباءٌ ولَيْسَ كُلُّ وَبَاءٍ طَاعُوْنًا.
(شرح مسلم – ص – 204)
சுருக்கம்:
“தாஊன்” என்பது உடலில் ஏற்படுகின்ற பொக்களங்கள். இவை பொதுவாக உடலெல்லாம் ஏற்படும். குறிப்பாக கைகள், விரல்கள், கமுக்கட்டுகள் போன்ற இடங்களில் ஏற்படும். அதோடு வீக்கமும், கடுமையான வலியும் ஏற்படும். பொக்களங்கள் எரிவோடு இருக்கும். அவை உள்ள இடங்கள் கறுப்பாக அல்லது சிவப்பாக அல்லது பச்சை நிறமாக ஆகிவிடும்.
“வபா” என்பது “தாஊன்” தான். பொதுவாக எல்லா நோய்களுக்கும் “வபா” என்று கூறலாம். இது பற்றி அதிகமானோரின் தீர்க்கமான முடிவு என்னவெனில் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் மட்டும் அதிகமானவர்களுக்கு ஏற்படுகின்ற, வழமையான நோய்க்கு மாறான நோய் என்பதாகும். பொதுவாக “தாஊன்” அனைத்தையும் “வபா” என்று சொல்லலாம். ஆயினும் “வபா” அனைத்தையும் “தாஊன்” என்று சொல்ல முடியாது.
முதலாவது ஹதீதின் மூலம் “தாஊன்” அல்லது கொரோனா போன்ற நோய் அசுத்தமானதேயன்றி அது சுத்தமானதல்ல என்பதும், அது இஸ்ரவேலர்களுக்கு அல்லது முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட வேதனை என்பதும், அந்த நோயுள்ள இடத்திற்கு வேறு இடத்திலுள்ள மற்றவர்கள் போகக் கூடாதென்பதும் விளங்கப்படுகின்றன.
இப்படியொரு விதி – நிபந்தனை ஹதீதில் கூறப்பட்டிருப்பதை மேலோட்டமாக மட்டும் அறிந்து கொண்டு தாஊன் – கொரோனா போன்ற நோய் தொற்று நோய் என்று முடிவு செய்தல் அறிவுடைமையல்ல. ஏனெனில் இதற்கு மாறான ஹதீதுகளும் உள்ளன. எனவே இது தொடர்பான பிரதான ஹதீதுகளை எழுதி முடித்த பின் தீர்க்கமான ஓர் முடிவுக்கு நாம் வருவோம். இன்ஷா அல்லாஹ். தொடர்ந்து எம்முடன் தொடர்பாக இருக்குமாறு அறிவுத்தாகமுள்ள அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எமது பதிவுகள் தொடர்பாக கருத்துக்கள், ஆட்சேபனைகள் கூற விரும்புவோரை வாழ்த்துகிறோம். பிரேதங்களை எரிப்பது தொடர்பான எமது கருத்து பின்னர் வெளியிடப்படும்.
(இரண்டாவது ஹதீதின் பொருள்)
“தாஊன்” என்பது அசுத்தத்தின் அடையாளமாகும். அதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களிற் சிலரைச் சோதித்தான். அதை நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு போகாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் வேளையில் அது அங்கு வந்தால் அதைக் கண்டு ஓடி விடாதீர்கள்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
وجاء في الحديث الأول: ”الطاعون رجز، وجاء في الحديث الثاني آية الرجز، وجاء في الحديث الأول: أو عذاب أرسل على بني إسرائيل أو من كان قبلكم، وجاء في الحديث الثاني: ابْتَلَى الله به ناسا من عباده، قوله عذابا لهم – ( هذا الوصف بكونه عذابا مُختصٌّ بمن كان قبلنا، وأما هذه الأمة فهو لها رحمة وشهادة، ففى الصحيحين قوله صلى الله عليه وسلم” المَطعونُ شهيدٌ، وفى حديث آخر في غير الصحيحين أنّ الطاعون كان عذابا يبعثه الله على من يشاء، فجعله رحمة للمؤمنين، فليس مِن عبد يقع الطاعون فيمكث في بلده صابرا يعلم أنّه لن يُصيبَه إلّا ما كتب الله له إلَّا كان له مثل أجرِ شهيد ، وفى حديث آخر” الطاعون شهادة لكل مسلم، وإنّما يكون شهادة” لِمَن صَبَرَ كما بيّنه في الحديث المذكور، وفى هذه الأحاديث مَنْعُ القدوم على بلد الطاعون ومنع الخروج منه فرارا من ذلك، أمّا الخروج لِعَارضٍ فلا بأس به ، وهذا الذي ذكرناه هو مذهبُنا ومذهبُ الجمهور، قال القاضي هو قول الأكثرين، قال حتى قالت عائشة الفرارُ منه كالفرار من الزَّحف،
قال: ومنهم من جوز القدوم عليه والخروج منه فرارا، قال ورُوى هذا عن عُمَر بن الخطّاب رضي الله عنه وأنّه نَدِمَ على رجوعه من سَرْغَ ، وعن أبي موسى الأشعريّ ومسرُوق والأسود بن هلال أنّهم فَرُّوا من الطاعون، وقال عمرو بن العاص فرُّوا عن هذا الرِّجْزِ في الشِّعاب والأودية ورُئُوْس الجبال، فقال معاذ بل هو شهادة ورحمة، ويتأوّل هؤلاء النَّهْيَ على أنّه لم يُنْهَ عن الدخول عليه والخروج منه مَخافَةَ أن يُصِيبَه غيرُ المُقَدَّر لكن مَخافَةً لِفِتنة على الناس لئلّا يظُنُّوا أنّ هلاك القادم إنّما حَصَلَ بقُدُومه، وسَلامةَ الفَارِّ إنّما كانت بفراره
(شرح مسلم للنووي من صفحة 204 الى صفحة 206 )
முதலாவது ஹதீதில் தாஊன் என்பது அசுத்தம் என்று வந்துள்ளது. இரண்டாவது ஹதீதில் அசுத்தத்தின் அடையாளம் என்று வந்துள்ளது. முதலாவது ஹதீதில் அது ஒரு வேதனை. இஸ்ரவேலர்களுக்கு அல்லது உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று வந்துள்ளது. இரண்டாவது ஹதீதில் அல்லாஹ் தனது அடியார்களிற் சிலரை அதனால் சோதித்தான் என்று வந்துள்ளது. இந்த வசனங்களுக்கிடையில் சிறிய அளவிலான வித்தியாசம் இருந்தாலும் கூட பிரதான கருத்தில் முதலாம் ஹதீதுக்கும், இரண்டாம் ஹதீதுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமுமில்லை. (இது எனது கருத்து)
அவர்களுக்கு வேதனையாக அனுப்பிவைக்கப்பட்ட தென்று முதலாம் ஹதீதில் வந்தது தொடர்பாக அது வேதனை என்பது இஸ்ரவேலர்களுக்கும், நபீ அவர்களுக்கு முந்தின நபீமார்களின் சமூகத்தினருக்குமேயாகும். ஆனால் பெருமானார் அவர்களின் இந்த சமூகத்திற்கு அது வேதனையல்ல. மாறாக அருளும், “ஷஹாதத்” என்ற உயர் பதவியுமேயாகும்.
ஏனெனில் “தாஊன் நோயால் மரணித்தவர் ஷஹீத்” என்று புஹாரீ, முஸ்லிம் என்ற இரு நூல்களிலும் “ஹதீது” வந்துள்ளது. குறித்த இரு நூல்கள் தவிர்ந்த ஏனைய நூல்களில் “தாஊன் வேதனையாக ஆகிவிட்டது, அதை அல்லாஹ் நாடியவர்களுக்கு அனுப்பி வைப்பான். அதை விசுவாசிகளுக்கு அருளாக ஆக்கினான்” என்று வந்துள்ளது.
ஓர் அடியான் தனக்கு அல்லாஹ் நாடியதே நடக்குமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் “தாஊன்” உள்ள தனது ஊரில் பொறுமையுடன் இருந்து மரணித்தானாயின் அவனுக்கு ஒரு “ஷஹீத்” புனிதப் போரில் மரணித்தவருக்கு கிடைக்கின்ற நன்மை போன்றது கிடைக்கும். இன்னுமொரு ஹதீதில் தாஊன் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் “ஷஹாதத்” ஆகும் என்று வந்துள்ளது. அவன் பொறுமை செய்திருந்தால் மட்டும்.
மேற்கண்ட ஹதீதுகளின் மூலமும், குறிப்பாக இரண்டாவது ஹதீது மூலமும் “தாஊன்” உள்ள ஊருக்கு போவது தடை என்பதும், தாஊன் உள்ள ஊரிலிருந்து வெளியேறுவது தடை என்பதும் விளங்கப்படுகிறது.
“தாஊன் உள்ள ஊரிலுள்ள ஒருவர் அதற்குப் பயந்து அவ் ஊரை விட்டும் வெளியேறுவதுதான் தடையேயன்றி ஓர் அவசர தேவைக்காக வெளியேறுவது குற்றமாகாது. இதுவே அனேகமான அறிஞர்களின் முடிவாகும். ஆயிஷா நாயகி அவர்கள் “தாஊனுக்குப் பயந்து ஓர் ஊரை விட்டும் வெளியேறுவது யுத்தகளத்திலிருந்து பின்வாங்குவது போன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம்களிற் சிலர் “தாஊன்” உள்ள ஊருக்குப் போவது ஆகுமென்றும், அங்கிருந்து வெளியேறுவது ஆகுமென்றும் கூறியுள்ளார்கள். ஷாம் நகருக்குச் செல்வதற்காக நபீ தோழர்களுடனும், குறைஷிப் பிரமுகர்களுடன் வந்து அங்கு “தாஊன்” உண்டு என்பதை அறிந்து திரும்பிச் சென்ற உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்னொரு காலத்தில் அதை நினைத்துக் கவலைப் பட்டார்கள் என்றும் செய்திகள் உள்ளன.
அபூ மூஸல் அஷ்அரீ, மஸ்றூக், அஸ்வத் இப்னு ஹலால் ஆகியோர் “தாஊன்” நோய்க்குப் பயந்து ஓடினார்கள் என்றும் தகவல்கள் உள்ளன. நபீ தோழர்களிற் சிலர் “தாஊன்” நோயிலிருந்து தப்பிக்கொள்வதற்காக மலை உச்சிக்கும், மறைவிடங்களுக்கும் சென்றதாகவும் தகவல்கள் உள்ளன.
நபீ தோழர்களிற் சிலர் இவ்வாறு நடந்து கொண்டது பயத்தினால் என்று கொள்ள முடியாது. எனினும் மக்கள் தங்களைத் தவறாக எடை போடாமலிருப்பதற்கேயாகும்.