Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பேணுதல் எப்போது பூரணமாகும்? مَتَى يَتِمُّ الْوَرَعُ؟

பேணுதல் எப்போது பூரணமாகும்? مَتَى يَتِمُّ الْوَرَعُ؟

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ

قال الشيخ القطب الرباني، والغوث الصمداني، محي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز: ” و لا يتِمُّ الورَعُ إلّا أنْ يَرَى عشرةَ خِصَالٍ فريضةً على نفسه، أولها حفظُ‍‌ اللّسان عن الغِيبة لقوله تعالى: وَ لاٰ يَغْتَبْ‌ بَعْضُكُمْ‌ بَعْضاً (الحجرات:الآية ۱۲)، و الثاني الِاجتِنابُ عن السُّخْرِيَّة لقوله تعالى: وَلاَ يَسْخَرْ قَوْمٌ‌ مِنْ‌ قَوْمٍ‌ عَسىٰ‌ أَنْ‌ يَكُونُوا خَيْراً مِنْهُمْ‌ (الحجرات:الآية ۱۱)، و الرابع غَضُّ البصر عن المَحارِم لقوله تعالى:قُلْ‌ لِلْمُؤْمِنِينَ‌ يَغُضُّوا مِنْ‌ أَبْصَارِهِمْ‌ (النّور:الآية ۳۰)، و الخامس صِدْقُ اللّسان لقوله تعالى: وَ إِذَا قُلْتُمْ‌ فَاعْدِلُوا اي فاصدقوا، (الأنعام:الآية ۱۵۲)، و السادس أن يَعرف مِنَّةَ اللّهِ تعالى عليه كَيْلَا يُعْجِبَ بنفسه لقوله تعالى: بَلِ‌ اللّٰهُ‌ يَمُنُّ‌ عَلَيْكُمْ‌ أَنْ‌ هَدَاكُمْ‌ لِلْإِيمَانِ‌ (الحجرات:الآية ۱۷)، و السابع أن يُنفقَ ماله في الحقّ و لا يُنفقَه في الباطل لقوله تعالى: وَ الَّذِينَ‌ إِذَا أَنْفَقُوا لَمْ‌ يُسْرِفُوا وَ لَمْ‌ يَقْتُرُوا (الفرقان:الآية ۶۷) أي لم ينفقوا في المعصية و لم يمنعوا من الطاعة، و الثامن أن لا يطلبَ لنفسه العُلُوَّ والكِبْرَ لقوله تعالى: تِلْكَ‌ الدَّارُ الْآخِرَةُ‌ نَجْعَلُهَا لِلَّذِينَ‌ لاَ يُرِيدُونَ‌ عُلُوًّا فِي الْأَرْضِ‌ وَ لاَ فَسٰاداً (القصص:الآية ۸۳) ، و التاسع المُحافظةُ على الصلوات الخمس في مواقيتها لقوله تعالى: حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ‌ وَ الصَّلَاةِ‌ الْوُسْطَى، والعاشر الإستقامةُ على السنّة والجماعة لقوله تعالى إنّ هذا صراطي مُسْتَقِيما فَالتَّبِعُوه،

வலீகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“ஒருவனின் பேணுதல் பூரணமாவதாயின் அவன் தனக்கு பத்து விடயங்கள் கடமை என்பதை புரிந்து அதன் படி செயல்பட வேண்டும்.

ஒன்று – புறம் பேசாமல் நாவைப் பேணிக் கொள்ள வேண்டும். ஆதாரம். உங்களில் ஒருவர் இன்னொருவரை புறம் பேச வேண்டாம் என்ற திரு வசனமாகும்.

இரண்டு – பரிகாசம் – பகடி – கிண்டல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆதாரம். ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் பரிகாசம் செய்யப்பட்டவர்கள் செய்தவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கவும் சாத்தியமுண்டு என்ற திருவசனமாகும்.

மூன்று – மூலப் பிரதியில் இல்லை – அச்சில் இல்லை.

நான்கு – “ஹறாம்” விலக்கப்பட்டவற்றை பார்க்காமல் இருத்தல் வேண்டும். ஆதாரம் – தமது பார்வையை தடுக்கப்பட்டவற்றைப் பார்க்காமல் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற திருவசனமாகும்.

ஐந்து – உண்மை பேச வேண்டும் – பொய் பேசக் கூடாது. ஆதாரம் – நீங்கள் பேசினால் உண்மை பேசுங்கள் என்ற திருவசனமாகும்.

ஆறு – அல்லாஹ் அவனுக்குச் செய்த உபகாரத்தை அவன் புரிந்து கொள்ள வேண்டும். தனது திறமையென்று பெருமை பேசாமலிருப்பதற்காக. ஆதாரம் – அல்லாஹ்தான் நீங்கள் ஈமான் கொள்வதற்கு வழிகாட்டி உபகாரம் செய்தவன் என்ற திருவசனமாகும்.

ஏழு – ஒருவன் தனது செல்வத்தை சத்திய வழியில் செலவு செய்தல் வேண்டும். அசத்திய வழியில் செலவு செய்தல் கூடாது. ஆதாரம் – சிலர் அவர்கள் தமது செல்வத்தை வீண் செய்யாமல் நல்வழியில் செலவிடுபவர்களாயிருத்தல்.

எட்டு – தனக்கு உயர்வு உண்டென்று பெருமையாக நடத்தல். ஆதாரம் – சுவர்க்கம் – அல்லது மறுமை என்பது பூமியில் பெருமையாக வாழாமல் இருந்தவர்களுக்காகும் என்ற திரு வசனமாகும்.

ஒன்பது – ஐங்காலத் தொழுகைகளை பேணுதலாகத் தொழுவதாகும். ஆதாரம் – தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். குறிப்பாக அஸ்ர் தொழுகையை தொழுது கொள்ளுங்கள் என்ற திரு வசனமாகும்.

பத்து – ஸுன்னத் ஜமாஅத் கொள்கையில் செவ்வனே செல்வதாகும். ஆதாரம் – இது எனது நேரான பாதை அதை நீங்கள் பின்பற்றுங்கள் என்ற திரு வசனமாகும்.
ஆதாரம் – கலாயிதுல் ஜவாஹிர்
பக்கம் – 81 – 82
ஆசிரியர் – அஷ் ஷெய்கு முஹம்மத் இப்னு யஹ்யா

பத்து விடயங்களில் மூன்றாவது விடயம் மூலப் பிரதியில் இல்லை. அச்சில் இடம்பெறவில்லை. குத்பு நாயகம் அவர்களின் பேச்சாயிருப்பதால் நாமாக ஒன்றைச் சேர்க்க விரும்பவில்லை.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments