“வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழை என்றும், “குப்ர்” நிராகரிப்பு என்றும், “ஷிர்க்” இணை வைத்தல் என்றும் கூறி வருகின்ற மார்க்க அறிஞர்களுக்கான இறைஞான இலவச வகுப்புக்கள்.
“வஹ்ததுல் வுஜூத்” மெய்ப் பொருள் ஒன்று என்ற இஸ்லாமிய ஸூபிஸ ஞான தத்துவம் பிழை என்றும், “குப்ர்” என்றும் கூறிவருகின்றவர்களுக்கான இலவச ஞான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாதமும் முதல் வருகின்ற சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை “தெளிவு” என்ற தலைப்பில் நடைபெறும். தொடராக ஐந்து மாதங்களில் 15 மணித்தியாலங்கள் நடைபெற்று குறித்த அமர்வு நிறைவு பெறும்.
உலமாஉகளில் 50 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். வெளியூர் மௌலவீமாருக்கு மட்டும் பிரயாணச் செலவும், பேரூந்துக் கட்டணமும் வழங்கப்படும்.
கலந்து கொள்வோருக்கான நிபந்தனைகள்:
01. அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அறபுக் கல்லூரிகளில் மௌலவீ தராதரப் பத்திரம் (certificate) பெற்றவர்களாயிருத்தல். விண்ணப்பக் கடிதத்துடன் “மௌலவீ ஷஹாதா” certificate இணைக்கப்பட வேண்டும்.
02. யாராவது ஒரு ஞானகுருவிடம் “பைஅத்” பெற்றவராயிருத்தல். அதற்கான ஆதாரமும் இணைக்கப்பட வேண்டும்.
03. “காதிரிய்யா தரீகா”வின் தாபகரான குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, “ரிபாஇய்யா தரீகா”வின் தாபகரான அஸ் ஸெய்யித் அஹ்மத் கபீர் ரிபாயீ, “ஷாதுலிய்யா தரீகா”வின் தாபகரான அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ, “அக்பரிய்யா தரீகா”வின் தாபகரான அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும், மற்றும் அஷ்ஷெய்கு ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ, அஷ்ஷெய்கு தாஜுத்தீன் அதாஉல்லாஹ், அஷ்ஷெய்கு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களையும் இஸ்லாமிய தத்துவ மேதைகள் என்றும் ஏற்றுக் கொண்டவர்களாயிருத்தல்.
மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய இறுதித் திகதி: 27.08.2020
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு
(Incorporated by act of parliament 46 of 2009)
BJM வீதி, காத்தான்குடி 06.
மேலதிக விபரங்களுக்கு பின்வரும் கைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்க.
077 377 1414, 0773 186 146