தொடர் – 2
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ
مَا فِى قَلْبِيْ غَيْرُ اللهْ
نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ
لَا إِلَــهَ إِلَّا اللهْ
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ
مَا فِى جَيْبِيْ إِلَّا اللهْ
نُـوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهْ
لَا إِلَــهَ إِلَّا اللهْ
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ
مَا فِى قَلْبِيْ غَيْرُ اللهْ
نُـوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهْ
لَا إِلَــهَ إِلَّا اللهْ
மேற்கண்ட பாடல் வரிகள் யாரால் இயற்றப்பட்டதென்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரம் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. எனினும் பல்லாண்டுகளாக இப்பாடல்கள் முஸ்லிம்களால் பாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளால் பாடப்பட்டு வருகின்றன. ஒரே பாடல் சில சொற்கள் மாற்றத்தோடு மூன்று வகையாக பாடப்பட்டு வருகின்றன.
இவற்றில் இறுதியாக எழுதியுள்ள அடிகள் மட்டும் “ஷரீஆ”வுக்கோ, “தரீகா”வுக்கோ முரணானதாக எனக்குத் தெரியவில்லை. ஆயினும் இதுவும் பிழையென்று சொல்பவர்களும் உள்ளனர். இவர்கள் சரக்கில்லாத கப்பல்கள் என்பது எனது அபிப்பிராயமாகும்.
பொருள்.
வரிகள் ஒன்று:
எனது இரட்சகன் எனக்குப் போதுமானவன். அவன் வலுப்பமுள்ளவன்.
எனது “கல்ப்” உள்ளத்தில் அல்லாஹ்வுக்கு வேறான, அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளி, அல்லாஹ் ஸலவாத் சொல்வானாக!
அல்லாஹ் தவிர எதுவுமில்லை.
வரிகள் இரண்டு:
எனது இரட்சகன் எனக்குப் போதுமானவன். அவன் வலுப்பமுள்ளவன்.
எனது “ஜெய்ப்” நெஞ்சில் அல்லாஹ் தவிர – அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையானவர்கள்.
(அல்லாஹ்வின் நிழலாவார்கள்)
அல்லாஹ் தவிர எதுவுமில்லை.
வரிகள் மூன்று:
எனது இரட்சகன் எனக்குப் போதுமானவன். அவன் வலுப்பமுள்ளவன்.
எனதுள்ளத்தில் அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையானவர்கள்.
(அல்லாஹ்வின் நிழலானவர்கள்)
இம் மூன்று வகை வரிகளில் மூன்றாம் வகை வரிகளை மட்டும் நான் முழுமையாக சரி காண்கிறேன். எனது உள்ளத்தில் அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை என்றால் அல்லாஹ்வின் நினைவல்லாத ஒன்றுமில்லை என்று கருத்து வரும். جَيْبْ “ஜெய்ப்” என்றால் நெஞ்சு அல்லது உள்ளம்.
نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ
என்ற பாடல் அடி மொழியிலக்கண அடிப்படையில் பொருத்தமற்றதாகும்.
نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهْ
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஒளி அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையாகும்.
“ஷரீஆ”வின் பார்வையில் பிழையில்லாமற் பாடுவதாயின் நான் இறுதியாக எழுதிய அடிகளே சரியானவையாகும். இவ் அடியில் பிழை காண்பதாயின் வஹ்ஹாபீகளும், ஸூபிஸ ஞானம் தெரியாதவர்களுமே பிழை காண்பார்கள்.
மூன்றாம் வகை அடிகள் சரியென்றாற் கூட نُوْرُ مُحَمَّدْ ظِلُّ اللهْ பெருமானார் அவர்களின் ஒளி அல்லாஹ்வின் நிழல் என்று பொருள் கொள்ளாமல் அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்றே பொருள் கொள்ள வேண்டும்.
ظِلٌّ
என்ற இச் சொல்லுக்கு நிழல் என்ற பொருள் இருந்தாற் கூட இவ்விடத்தில் அவ்வாறு பொருள் கொள்வது கொள்கை ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே, இவ்விடத்தில் ظِلُّ اللهْ என்ற வசனத்திற்கு அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமை என்று பொருள் கொள்ள வேண்டும்.
ظِلٌّ
என்ற சொல்லுக்கு “வுஜூத்” உள்ளமை என்ற பொருள் உண்டா? என்று “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை தெரியாத ஒருவர் கேட்பதற்கு இடமுண்டு. ஆம், என்று அவருக்கு பதில் கூறுவோம்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
أَلَمْ تَرَ إِلَى رَبِّكَ كَيْفَ مَدَّ الظِّلَّ
என்று கூறியுள்ளான். உங்களின் இரட்சகன் “ளில்”லை எவ்வாறு நீட்டியுள்ளான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டாமா? என்று கூறியுள்ளான். திருக்குர்ஆன் (25 – 45) இவ்வசனத்தில் வந்துள்ள ظِلٌّ – “ளில்லுன்” என்ற சொல்லுக்கு நிழல் என்றும், “வுஜூத்” உள்ளமை என்றும் பொருள் கொள்ளலாம். இவ் இரு பொருளுக்கும் இவ்வசனம் சாத்தியமானதாகும்.
இதன்படி உங்களின் இரட்சகன் நிழலை எவ்வாறு நீட்டியுள்ளான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டாமா? என்று பொருள் கொள்ள முடியும்,
இதே போல் உங்களின் இரட்சகன் “வுஜூத்” உள்ளமையை எவ்வாறு விரித்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டாமா? என்றும் பொருள் கொள்ள முடியும். இவ்வாறு திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் தமது “தப்ஸீர்”களில் கூறியுள்ளனர். அதாவது أَيْ بَسَطَ الْوُجُوْدَ உள்ளமையை – தனது “தாத்”தை விரித்துள்ளான் என்று தெளிவாகவே கூறியுள்ளனர்.
எவ்வாறு நிழலை நீட்டியுள்ளான் என்று ஆய்வு செய்து பார்ப்போம்.
அதாவது எந்தவொரு வஸ்த்தாயினும் அதற்கு சூரிய வெளிச்சத்தில் நிழல் விழும் – உண்டு என்பது உண்மையே. அந்த வஸ்த்து எதார்த்தத்தில் எந்த அளவுக்கு நீளமானதாயிருந்தாலும் அதை விடப் பதின் மடங்கு நீளமுள்ளதாக அதன் நிழலை நாம் பார்க்கிறோம். காணுகிறோம். மனிதன் நான்கு முழ நீளமுள்ளவனாக இருந்தாலும் அவனின் நிழல் பதின் மடங்கு நீளமுள்ளதாக இருக்கும். இது வியப்பான விடயமேயன்றி சாதாரண விடயமல்ல. இதனால்தான் இது குறித்து அல்லாஹ் நிழலை எவ்வாறு நீட்டியுள்ளான் என்று வியப்பூட்டும் வகையில் கூறியுள்ளான்.
இவ்வசனம் பின்வரும் வசன அமைப்பில் வந்திருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதன்று.
أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ، وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ، وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ، وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ،
ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அவதானித்துப் பார்க்கமாட்டார்களா? மேலும் வானத்தின் பால் அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும், அசையாது ஸ்திரப்படுத்தப்பட்ட மலைகள் பால் அவை எவ்வாறு நடப்பட்டுள்ளன என்பதையும், இன்னும் அவர்கள் வசிக்கும் பூமியின் பால் அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்களா? (அத்தியாயம்: 89, வசனங்கள்: 17, 18, 19, 20)
மேற்கண்ட வசனங்களில் நான்கு விடயங்கள் குறித்து பார்க்க வேண்டாமா? பார்க்க வேண்டாமா? என்று திரும்பத் திரும்ப அல்லாஹ் தூண்டியுள்ளான். அல்லாஹ்வின் வெளிப்பாடுகளில் உன்னிப்பாக சிந்திக்க வேண்டியவையாக இவை இருப்பதினால்தான் அவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளான். இவை போன்றதே அவன் – “வுஜூத்” தனது உள்ளமையை – “தாத்”தை விரித்திருப்பதுமாகும். இதுவும் உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டியதேயாகும். இதை உன்னிப்பாக ஆய்வு செய்தால் மட்டும்தான் “அல்லாஹு அக்பர்” اللهُ أَكْبَرْ அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற சொல்லுக்கான கருத்தும், “அல்லாஹு வாஸிஉன்” اللهُ وَاسِعٌ அல்லாஹ் விசாலமானவன் என்ற சொல்லுக்கான கருத்தும் புரியும். அவன் மட்டுமே உள்ளான் என்ற தத்துவத்தின் படி அவனை விடப் பெரியவன் எவ்வாறு இருக்க முடியும்? அவனை விட விசாலமான ஒன்று எவ்வாறு இருக்க முடியும்? அவன் பெரியவன் மட்டுமல்ல. நமது மூதாட்டிகள் சொல்வது போல் அவன் “பென்னாம் பெரியவனும்” ஆவான்.
இவர்களின் இக்கூற்றின்படி அல்லாஹ்வின் “தாத்” – “வுஜூத்” உள்ளமைதான் பூமியாக, கடலாக, மலையாக, வானமாக, மற்றுமுள்ள ஏனைய வஸ்த்துக்களாகவெல்லாம் விரிந்துள்ளதென்ற உண்மைத் தத்துவம் விளங்கப்படுகின்றது.
இப் பிரபஞ்சத்தின் கருவான அல்லாஹ்வின் “வுஜூத்” உள்ளமையானது தன்னில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலும், அது அழியாமலும், மற்றும் விகாரப்படாமலும் அது இருந்தவாறே இருக்கும் நிலையில் தான் அனைத்துப் பிரபஞ்சங்களாகவும் பரந்து, விரிந்து காணப்படுகிறது. இது வியப்பான விடயமேயாகும்.
அல்லாஹ்வின் “வுஜூத்” எனும் மெய்ப் பொருள்தான் அழியாமலும், மாறுபடாமலும், சிதைவு ஏற்படாமலும் அது எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருக்கும் நிலையில் பிரபஞ்சம் அனைத்துமாய் வெளியாகியிருப்பது சிந்திக்க வேண்டிய வியப்பான விடயமேயாகும்.
இவ் உண்மையை மெய்ஞ்ஞானிகள் நூறு வீதம் ஏற்றுக் கொண்டாலும் விஞ்ஞானிகள் ஒரு வீதம் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதை ஏற்றுக் கொள்ளுமளவு இன்னும் விஞ்ஞானம் முன்னேறவில்லை. முன்னேறியிருந்தாலும் விஞ்ஞானிகள் மெய்ஞ்ஞானத்தை கருவாகக் கொண்டு இன்னும் ஆராயத் துனியவில்லை.
மனிதர்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் பிரபஞ்சம் அனைத்தும் இறைவனுக்கு வேறுபடாத, அவனை விட்டும் பிரியாத, அவன் தனானது என்ற தத்துவத்தை அவர்கள் உணர்வார்கள். அவர்களுக்கு நற்பாக்கியம் இருந்தால் மட்டும் அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. நான் கூறும் “எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்ட மெய்ஞ்ஞானிகள் விஞ்ஞானிகளை விடச் சிறந்தவர்களாகி விட்டனர். அவர்களை முந்தியும் விட்டார்கள்.
உலக வரைபடத்தில் ஒரு “நுக்தா” புள்ளிபோல் தோற்றும் இலங்கைத் திரு நாடு உலக நாடுகளில் பேசும் பொருளாக ஆகும் காலமொன்று வரும். அது வெகு தொலைவில் இல்லை. அப்படியொரு காலம் கருக்கட்டுவதாயின் அது இலங்கை நாட்டின் கிழக்கேதான் கருக்கட்டும் வாய்ப்பு உண்டு. இது எனது யூகம்தான். இறையறிவிப்பல்ல. அப்படியொரு காலம் வருமாயின் உலகம் முழுவதும் இந்நாட்டை திரும்பிப் பார்க்கும் என்பதில் ஐயமில்லை.
“எல்லாம் அவனே” எனும் தத்துவத்தை தனது வயிற்றினுள் வைத்திருக்கும் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் இஸ்லாமிய மூல மொழியை முதலில் மொழிந்த முதல் மனிதன் காற்பாதம் பதிந்த பாரத நாட்டின் ஒரு மூலையில் கிடந்த سَرَنْدِيْبْ – சரந்தீப் அனைத்து நாடுகளும் சரணடையும் சரண் தீவாக அவர் பொருட்டால் ஆகாதா?
“ஹஸ்பீ றப்பீ” பாடும் பக்தர்களே! பக்தைகளே!
தினமும் “ஸுப்ஹ்” தொழுகையை தொடர்ந்து எவருடனும் பேசாமல் “ஹஸ்பீ றப்பீ ஜல்லல்லாஹ்” பாடலில் நான் சரிகண்ட பாடலை மூன்று தரம் ஓதிய பின் பின்வரும் ஓதலை ஒரு தரமாவது ஓதுங்கள். கைமேல் பலன் கிடைக்கும்.
اللهم إِنِّيْ أَسْئَلُكَ يَا الله (3) أَنْتَ الرَّحْمَنُ الرَّحِيْمُ، يَا غِيَاثَ الْمُسْتَغِيْثِيْنَ اَغِثْنِيْ (3) يَا حَنَّانُ يَا مَنَّانُ أَدْرِكْنِيْ أَدْرِكْنِيْ يَارَزَّاقُ اُرْزُقْنِيْ اُرْزُقْنِيْ كهيعص حمعسق بِحَقِّ طَمْسَغَانْ طَمْغَانْ آهٍ آهٍ آهٍ اُجْلُبْ لِيَ الْقُلُوْبَ وَسَخِّرْهَا وَاجْلُبْ لِيَ الرِّزْقَ مِنْ كُلِّ مَكَانٍ وَكُلِّ إِنْسَانٍ بِفَضْلِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْمِ وَبِحَـقِّ الْإِسْمِ الْأَعْظَمِ الْخَفِيِّ الظَّاهِرِ مِنْهُ وَمَا بَطَنَ وَالْبَاطِنِ مِنْهُ وَمَا ظَهَرَ، اُجْلُبْ لَنَا رِزْقَنَا وَسَهِّلْهُ عَلَيْنَا مِنْ كُلِّ مَكَانٍ وَكُلِّ إِنْسَانٍ بِأَلْفِ أَلْفِ لَاحَوْلَ وَلَاقُوَّةَ اِلَّا بِالله الْعَلِيِّ الْعَظِيْمِ، اللهم إِنَّكَ قُلْتَ وَأَنْتَ أَصْدَقُ الْقَائِلِيْنَ فَابْتَغُوْا عِنْدَ اللهِ الرِّزْقَ وَنَحْنُ نَعْلَمُ أَنَّكَ أَنْتَ خَلَقْتَنَا وَخَلَقْتَ لَنَا رِزْقًا، اللهم لَا تُشْغِلْنَا بِسَبِبِهِ وَلَا تُتْعِبْنَا فِيْ طَلَبِهِ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَصَلَّى الله عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسلَّمَ.
اَللهم طَوِّلْ عُمْرَ مَنْ عَلَّمَنِيْ هَذَا الدُّعَاءَ الْمُبَارَكْ، وَطَوِّلْ عُمْرَهُ فَوْقَ مِأَةِ سَنَةْ، بِالْأَعْمَالِ الصَّالِحَةِ وَالْعَافِيَةِ التَّامَّةْ، وَائْتِ بِأَعْدَائِهِ عِنْدَ قَدَمَيْهْ،