Monday, October 7, 2024
Homeநிகழ்வுகள்34வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா-2020 (3 நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

34வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா-2020 (3 நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)

அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களினதும் நினைவாக 09.10.2020 வெள்ளிக்கிழமை தொடக்கம் 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 34வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

 
இப்பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது. அதேபோன்று இருபெரும் மகான்கள் பேரிலான திருக்கொடியேற்றமும், இலங்கைத் திருநாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், கௌரவ பிரதமர் அவர்களுக்கும், மற்றும் முப்படையினருக்கும், நாட்டு மக்களுக்காகவும் நல்லாசி வேண்டியும், நாட்டின் சமாதானம், சகவாழ்வு மற்றும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காகவும் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது.
 
தொடர்ந்து மூன்று தினங்களும் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் அருள்நிறைந்த மஜ்லிஸ் நிகழ்வுகள் சபையை அலங்கரிக்க விஷேட நிகழ்வாக அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு) அன்னவர்களினால் மூன்று தினங்களும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
 
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்திற் கொண்டு கந்தூரி நிகழ்வுகளில் Covid-19 சுகாதார வழிமுறைகள் மிகச் சிறப்பான முறையில் பின்பற்றப்பட்டது.
 
இறுதித்தினமான கந்தூரி தினத்தன்று  துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் 34வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிப் பெருவிழா நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments