தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
ஒரு முஸ்லிமின் செயல், அல்லது பேச்சு “குப்ர்” என்ற நிராகரிப்புக்கு இடம்பாடானதாக, சாத்தியமானதாயிருந்தால் அவனை நேரில் விசாரித்து விளக்கம் பெற்ற பிறகுதான் அவனுக்கு “பத்வா” தீர்ப்பு வழங்க வேண்டும்.
ஒரு முறை விசாரித்து தெளிவு கிடைக்காது போனால் இரண்டாம் முறை விசாரிக்க வேண்டும். இரண்டாவதிலும் தெளிவு கிடைக்காது போனால் மூன்றாம் முறை விசாரிக்க வேண்டும். இவ்வாறு தேவைக்கேற்ப விசாரிக்க வேண்டும். இவ்வாறு விசாரிப்பது ஆகும், ஆகாது என்று தீர்ப்பு வழங்குவதற்கேயாகும்.
ஆனால் ஒருவரின் செயல், பேச்சுக்காக அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” கொடுப்பதாயின் மட்டும் அவனை ஆயிரம் தரமேனும் விசாரித்த பின்புதான் அவ்வாறு “பத்வா” கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒருவனை மதம் மாற்றுவதென்பது சாதாரண பாவமல்ல. அது பெரும் பாவமாகும். ஆகையால் தெளிவு கிடைக்கும் வரை விசாரித்த பிறகுதான் “முப்தீ” தீர்ப்பு வழங்குபவர் எழுது கோலில் கை வைக்க வேண்டும்.
விசாரிக்கப்படவுள்ள விடயம் “ஷரீஆ”வோடு தொடர்புள்ளதாயின் “ஷரீஆ” சட்டத்துறையில் பாண்டித்தியம் பெற்றவராகவும், ஸூபிஸ ஞானத்தோடு தொடர்புள்ளதாயின் அந்த அறிவில் பாண்டித்தியம் பெற்றவராகவும், வானவியல் துறையோடு தொடர்புள்ளதாயின் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவராகவும் “பத்வா” வழங்கும் “முப்தீ” இருக்க வேண்டும். இது மிகப்பிரதான நிபந்தனையாகும்.
நான் பேசிய தத்துவத்திற்காக எனக்கும், எனது தத்துவத்தை சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கண்ட வழிமுறைகளில் ஒன்றையும் பேணாமலேயே “பத்வா” வழங்கியுள்ளது.
உலமா சபை என்னை ஒரு முறையேனும் விசாரிக்கவுமில்லை, ஒரு தவணையேனும் எனக்குத் தரவுமில்லை. இதுவே உண்மையும், சத்தியமுமாகும். இவர்களின் இச்செயல் “ஷரீஆ” சட்டத்திற்கும், உலக நடைமுறைக்கும் முரணானதேயாகும். இது 1979ம் ஆண்டு நடந்தது. 40 வருடங்கள் கடந்துவிட்டதால் 40 வயதுக்கு குறைந்தவர்களுக்கு இதன் விபரம் தெரியாது. எனினும் இது தொடர்பான முழு விபரங்களும் மிக விரைவில் வெளிவரவுள்ள “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற 2000 பக்கங்கள் கொண்ட எனது நூலில் இடம் பெற்றுள்ளன.
قال الشّيخ عبد الحافظ بن علي المالكي رحمه الله أخبرني الشّيخ أمين الدين إمام جامع العمري بمصـر المحروسة، أنّ شخصا وقع فى عبارة مُوهمة للتّكفير، فأفتى علماء مصـر بتكفيره، فلمّا أرادُوا قتلَه قال السّلطان هل بقِيَ أحدٌ من العلماء لم يحضُر، فقالوا نعم، الشّيخ جلال الدين المحلّي شارح المنهاج، فأرسل ورائه، فحضـر، فوجد الرجل فى الحديد بين يدي السّلطان، فقال الشّيخ ما لِهذا؟ فقالوا كَفَرَ، فقال ما مُستَنَدُ من أفتى بتكفيره؟ فبَادَرَ الشّيخ صالح البُلقيني وقال قد أفتى والدي شيخ الإسلام سراج الدين فى مثل ذلك بالتّكفير، فقال الشّيخ جلال الدين رضي الله عنه يا ولدي! أتُريدُ أن تقتل رجلا مسلما موحّدا يُحبُّ الله ورسوله بفتوى أبيك؟ خَلُّوا عنه الحديد، فجَرَّدُوه، وأخذ الشّيخ جلال الدين بيده وخَرَجَ، والسلطان ينظر، فَمَا تَجَرَّأ أحد يتبعُه، رضي الله عنه، (لوامع الأنوار وروض الأزهار، ص19)
அஷ் ஷெய்கு அப்துல் ஹாபிள் இப்னு அலீ அல் மாலிகீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வரும் செய்தியை “மிஸ்ர்” நாட்டின் ஜாமிஉல் அம்ரீ பள்ளிவாயலின் இமாம் அமீனுத்தீன் தனக்கு அறிவித்ததாக கூறுகின்றார்கள்.
ஒருவன் பேசிய பேச்சு “குப்ர்” நிராகரிப்புக்கு சந்தேகமானதாக இருந்தது. அவன் “காபிர்” என்று மிஸ்ர் நாட்டு உலமாஉகள் அனைவரும் “பத்வா” வழங்கிவிட்டார்கள். அந்த “பத்வா”வின் படி அவனைக் கொலை செய்ய முடிவு செய்து அவனை சங்கிலியால் கட்டினார்கள். அவ்வேளை அங்கு வந்த “ஸுல்தான்” அரசன் அல்லது அதிகாரி இந்நாட்டிலுள்ள உலமாஉகளில் யாராவது வர உள்ளார்களா? அல்லது எல்லோரும் வந்து விட்டார்களா? என்று வினவினார். ஆம், “மின்ஹாஜ்” என்ற விரிவுரை நூலை எழுதிய அஷ் ஷெய்க் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ அவர்கள் மட்டும் வரவில்லை என்று சொல்லப்பட்டது. அவர்களை அழைத்து வருமாறு அரசர் கட்டளையிட்டார். அவர்கள் அங்கு அழைத்து வரப்பட்டார்கள். அரசருக்கு முன்னால் அந்த மனிதன் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததைக் கண்ட ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இவருக்கு என்ன நடந்தது என்று வினவினார்கள். இவர் “காபிர்” ஆகிவிட்டார் என்று சொல்லப்பட்டது.
இவர் “காபிர்” என்றும், கொலை செய்யலாம் என்றும் “பத்வா” வழங்கியவரின் ஆதாரம் என்னவென்று வினவியபோது அங்கு நின்றிருந்த அஷ் ஷெய்கு ஸாலிஹுல் புல்கீனீ அவர்கள் அவசரமாக முன்வந்து, “இவ்வாறான விடயத்தில் எனது தந்தை ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இவ்வாறுதான் “பத்வா” வழங்கியுள்ளார்கள்” என்று கூறினார். அப்போது அஷ் ஷெய்கு ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவரை எனது மகனே! என்று விழித்து, தவ்ஹீத் வாதியான, அல்லாஹ்வையும் றஸூல் அவர்களையும் நேசிக்கும்படியான ஒரு முஸ்லிமை உன் தந்தையின் “பத்வா”வை ஆதாரமாக எடுத்து நீ கொலை செய்யப் போகின்றாயா? என்று கேட்டபின் இவரின் சங்கிலியை அவிழ்த்து விடுங்கள் என்று கூறி அவரின் கரம் பற்றி இமாம் ஜலாலுத்தீன் அவர்கள் அவரை அழைத்துச் சென்றார்கள். இந்த நிகழ்வை அரசர் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆதாரம்: லவாமிஉல் அன்வார் வறவ்ழுல் அஸ்றார்.
பக்கம் – 19
இந்த வரலாறில் பல பாடங்கள் உள்ளன. பல மயக்கங்களும் உள்ளன. “காபிர்” என்றும், கொலை செய்யப்பட வேண்டும் என்றும் “பத்வா” வழங்கிய ஷெய்குல் இஸ்லாம் ஸிறாஜுத்தீன் புல்கீனீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், அந்த “பத்வா”வை மறுத்து ஒரு முஸ்லிம், கொலை செய்யப்படக் கூடாது என்று அவரை விடுவித்த ஷெய்குல் இஸ்லாம் ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் ஸூபீ மகான்களேயாவர். இவர்களில் எவரையும் குறை காண எம்மால் முடியாது. இதன் முழு விபரமும் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. எனினும் இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ என்பவர் செய்ததே சரியான தீர்ப்பு என்பது எனது கருத்தாகும்.
உலமா சபையின் நிறைவேற்றுக்குழுவில் ஸூபீ கொள்கைகளைப் பின்பற்றும் உலமாஉகளே பெரும்பான்மையாக உள்ளார்கள் என்று ரிஸ்வீ கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறியது அவரின் இரண்டாவது பொய்யோ என்றும், ஸுன்னீ உலமாஉகள் என்று சொல்ல வேண்டியவர் ஸூபீ உலமாஉகள் என்று سَبْقُ اللِّسَانْ நா தடுமாறி அவ்வாறு சொல்லிவட்டாரோ என்றும், அல்லது நீங்கள் மட்டும் ஸூபீகள் அல்ல. எங்கள் சபையிலும் ஸூபீகள் உள்ளார்கள் என்று என்னைப் பயங்காட்டி எனக்கு மன ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக அவ்வாறு சொல்லிவிட்டாரோ என்றும் எனக்கு எண்ணத் தோணுகிறது.
என்னையோ, ஸூபிஸ சமுகத்தையோ பயங்காட்டுவதற்கு இவர் யார்? இவர் என் போன்ற ஒரு மௌலவீதான். இவரின் உலமா சபை போல் எனது தலைமையிலுள்ள ஸூபிஸ உலமா சபையும் நாடாளுமன்றில் கூட்டிணைக்கப்பட்ட உலமா சபைதான். இவருக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லாமலேயே அவ்வாறு “பத்வா” வழங்கியுள்ளார். நான் இந் நாட்டில் பிறந்து இந் நாட்டில் வாழ்ந்து வருகின்ற ஓர் இலங்கை முஸ்லிம். என்னைக் “காபிர்” என்று சொல்ல இவர் யார்? இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
இவருக்கு எதிராக சட்ட சடவடிக்கை எடுப்பதற்கும் என்னால் முடியும். நான் அவ்வாறு எடுத்தால் என்னை சுட்டுக் கொல்வது தவிர அவருக்கு வேறு வழி இல்லை. இதைக் கருத்திற் கொண்டுதான் உலமா சபை என்னைக் கொலை செய்ய வேண்டுமென்று தனது “பத்வா”வில் எழுதியுள்ளது. இதன் பின்னணியில்தான் என்னுடனிருந்த ஸூபீகளில் ஒருவரான பாறூக் மௌலவீ கொலை செய்யப்பட்டதும், என்னைக் கொலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய ஒன்பது பேர் கொண்ட குழு எனது அலுவலகத்திற்கு வந்து 34 வேட்டுக்கள் வைத்ததுமாகும்.
இது தொடர்பான அனைத்து விபரங்களும் ஜனாதிபதி ஆணைக் குழுவிடம் எம்மால் கையளிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கு தீர்க்கமான, நியாயமான ஒரு முடிவு எடுக்குமென்று நானும், இலங்கை வாழ் ஸூபிஸ சமுகமும் எதிர்பார்க்கின்றோம்.
தனது சபையில் ஸூபீகளும் உள்ளார்கள் என்று இவர் கூறியது நூறு வீதம் பொய்யேயாகும். அவ்வாறிருந்தால் அவர்கள் எதார்த்தத்தில் ஸூபீகளாக இருக்கமாட்டார்கள். ஏனெனில் ஸூபீகள் என்போர் மனச் சாட்சிக்கு முரணாகவும், மார்க்கத்திற்கு விரோதமாகவும் ஓர் எழுத்துக் கூட எழுதவுமாட்டார்கள். ஒரு சொல் கூட பேசவுமாட்டார்கள். ரிஸ்வீ சொல்வது போல் அவர்கள் ஸூபீகளாயிருந்தால் அவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” தத்துவமும், “ஹுலூல் இத்திஹாத்” என்ற வழிகேடும் தெளிவாக விளங்கியிருக்கும். இவர்களோ இரண்டுக்குமிடையிலுள்ள வேறுபாடு தெரியாமல் நான் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை “ஹுலூல் இத்திஹாத்” என்று கற்பனை செய்து கொண்டே “பத்வா” வழங்கியுள்ளார்கள். அவர்களின் “பத்வா”வை பரந்த அறிவு ஞானமுள்ள ஒருவர் வாசித்துப் பார்த்தால் இது என்ன ”பத்வா” என்று தூக்கியெறிவார். இவ்விவகாரம் நீதிமன்று சென்றால் நானும் அவ்வாறுதான் செய்வேன்.
“பத்வா” எழுதிய “முல்லா முப்தீ” யாரோ தெரியவில்லை. நீதிவானுக்குரிய முதல் நிபந்தனை அவர் வழக்காளி, குற்றவாளி இருவரையும் விசாரிக்க வேண்டும். ஒரே தவணையில் தீரப்புக்கூற சாத்தியமில்லாது போனால் இரண்டாம், மூன்றாம் தவணைகள் என்று பல தவணைகள் வழங்கி ஆய்வு செய்த பிறகுதான் தீர்ப்பு வழங்க வேண்டும்.
ரிஸ்வீ அவர்களே! உங்களிடம் ஸூபீகள் இருப்பதாக கூறுகின்றீர்கள். அந்த ஸூபீகளை அழைத்துக் கொண்டு நீங்களும் என்னிடம் வாருங்கள். “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் ஸூபீ மகான்களால் தெளிவாக எழுதப்பட்ட அறபு நூல்கள் என்னிடம் உள்ளன. வரும் ஸூபீகளே நான் எடுத்துக் கொடுக்கும் பாடத்தை வாசித்து அவர்களே விளக்கம் கூறட்டும். நோயாளிதான் மருந்து பாவிக்க வேண்டும். அதைத் தேடிப் பெற்றுக் கொள்ளவும் வேண்டும். உங்கள் நோய்க்கு என்னிடம் மருந்துண்டு வருவீர்களா?
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، قال الشّيخ أبو طاهر فانظر كيف سمّاهم مسلمين (اليواقيت، ج أوّل، ص 21 )
ஒவ்வொரு கலைக்கும் ஒரு தலைவர் இருப்பார். ஹதீதுக் கலைக்கு இமாம் புகாரீ இருப்பது போன்றும், “பிக்ஹு” கலைக்கு இமாம் ஷாபிஈ இருப்பது போன்றுமாகும்.
ஸுன்னத் வல் ஜமாஅத் மக்கள் “அகீதா” கொள்கையில் பின்பற்றுகின்ற இமாம் அபுல் ஹஸன் அலீ அல்அஷ்அரீ அவர்களாவர். இது ஸுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் அனைவரும் எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொண்ட ஓர் உண்மையாகும்.
இமாம் அஷ்அரீ அவர்களுக்கு பல “அஸ்ஹாப்” தோழர்கள் அல்லது சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்தான் அஹ்மத் இப்னு சாஹிர் அஸ்ஸர்கஸீ என்பவராவார். இவர் தனது “ஸிறாஜுல் உகூல்” என்ற நூலில் கூறியுள்ளதாக அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல்கஸ்வீனீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
ஒரு நாள் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்கள் பக்தாதில் உள்ள எனது வீட்டுக்கு வந்த சமயம் அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அவர்கள் என்னிடம் பக்தாதில் உள்ள தோழர்கள் அல்லது முரீதுகள் அனைவரையும் தன்னிடம் ஒன்று கூட்டித் தருமாறு கேட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன்.
அவர்கள் அங்கு கூடியிருந்த தோழர்களிடம், நான் சொல்லப் போகின்ற விடயத்திற்கு நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருங்கள். அதாவது முஸ்லிம்களில் பொது மக்களில் எவரையும் நான் “காபிர்” என்று சொல்லமாட்டேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் இறைவன் ஒருவன் என்று சொல்பவர்களாகவே இருக்கின்றார்கள். இஸ்லாம் என்பது இவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும் என்றார்கள்.
இந்தச் செய்தியை கூறிய இமாம் அபூ தாஹிர் அவர்கள் இமாம் அஷ்அரீ அவர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் என்று கூறியிருப்பது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம்: 01, பக்கம் 21.
ஆசிரியர்: இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள்.
இந்தப் பெரும் மகான் கூட தனது வாழ்க்கையில் ஒருவரைக் கூட காபிர் – முர்தத் என்று சொல்லவில்லை என்றும், சொல்லமாட்டேன் என்றும் சொல்லிருக்கும் நிலையில் இந்த ரிஸ்வி என்னை மட்டுமன்றி எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும், மொத்தமாக உலகில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்கள் அனைவரையும் “முர்தத்” என்று சொல்லியிருப்பது இஸ்லாமிய சட்டம் இவரைக் கொலை கம்பத்தில் நிறுத்தும் செயலாகும்.
இந்த மகான் இவ்வாறு சொல்லியிருக்கும் நிலையில் இவர் இந்தச் செய்தியைக் கூட அறியாமல் ஒரு நாட்டின் தாய் சங்கத்திற்கு தலைவராயிருப்பது சிரிக்க வேண்டி செய்தியாகும். வேடிக்கை என்றால் இதுதான் வேடிக்கை! இச் செய்தியை நாய் சங்கத்தின் தலைவர் அறியாதிருப்பது வேடிக்கையாகாது.
إنّ من قال لأخيه المسلم يا كافر! فقد رجع القائل بقوله، فالمعنى أنّ من دعا أخاه المسلم يا كافر! فقد كان الداعي كافرا بقوله إن لم يكن المدعوُّ كافرا، وينبغي للمفتى أن يحتاط بالتكفير ما أمكنه لِعِظَم خَطَرِه وغَلَبَةِ عدم قصده سيّما من العوام، وما زال أئمّتنا على ذلك قديما وحديثا، (إعانة الطالبين ، الجزء الرابع، ص – 133 )
ஒருவன் தனது முஸ்லிமான சகோதரனுக்கு காபிர் என்று சொன்னால் அவ்வாறு சொன்னவனே “காபிர்” ஆகிவிட்டான்.
இதன் கருத்து என்னவெனில் ஒருவன் தனது முஸ்லிமான சகோதரனை “காபிர்” என்று சொன்னால் அவ்வாறு சொல்லப்பட்டவன் “காபிர்” இல்லாவிட்டால் அவ்வாறு சொன்னவனே “காபிர்” ஆகிவிடுவான். எனவே, “பத்வா” வழங்கும் “முப்தீ” ஒரு விடயம் ஆகும் அல்லது ஆகாது என்று “பத்வா” வழங்குவதில் பேணுதலாயிருப்பதை விட ஒருவர் காபிர் அல்லது முர்தத் என்று பத்வா வழங்கும் விடயத்தில் தன்னால் முடிந்தவரை மிகப் பேணுதலாக இருப்பதவசியம். ஏனெனில் இவ்வாறு “பத்வா” வழங்கப்பட்டவனில் “காபிர்” என்று சொல்வதற்குரிய காரணம் இல்லையானால் சொன்னவன் காபிராகிவிடுவான்.
ஆகையால் காபிர் – முர்தத் என்று “பத்வா” வழங்கும் விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாகவும், பேணுதலாகவும் செயல்பட வேண்டும்.
ஆதாரம்: இஆனதுத் தாலிபீன்
பாகம் – 04, பக்கம் – 133
ஆசிரியர் அபூ பக்ர் இப்னு ஷதா அத்திம்யாதீ, மறைவு – ஹிஜ்ரீ 1302
ஒரு முஸ்லிமை “காபிர்” என்றோ, “முர்தத்” என்றோ சொல்பவன் பின்வரும் பாடலில் கூறப்பட்டவன் போலாவான்.
وَمَنْ بَصَقَ الْآفَاقَ عَادَ بُصَاقُهُ – عَلَى وَجْهِهِ لَوْمًا كَتَكْفِيْرِ مُسْلِمٍ
ஒருவன் ஆகாயத்தைப் பார்த்தவனாக – அண்ணாந்து பார்த்தவனாக துப்பினால் அந்த துப்பல் அவனுக்கே திரும்பிவிடும். இவ்வாறுதான் ஒருவன் முஸ்லிமான தனது சகோதரனை “காபிர்” என்று அழைப்பதுமாகும்.
وقد ذكر الإمام قطب الوجود حجّة الإسلام فى كتابه ‘ مشكاة الأنوار ومصفات الأسرار ‘ فصلا مطوّلا فى أمره، الحلّاج رحمه الله، واعتذر عن إطلاقاته كقوله أنا الحقّ وما فى الجبّة إلّا الله، وحَمَلَهَا كلّها على محامِلَ حسنة، وقال هذا من فرط المحبّة وشِدّة الوجد، وهو مِثْلُ قول القائل ‘ أنا أهوى ومن أهوى أنا فإذا أبصرته أبصرتنا ‘ وحسبك هذا مِدحةً وتزكيةً،
“அனல் ஹக்” என்று சொன்ன இமாம் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் விடயம் தொடர்பாக ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “மிஷ்காதுல் அன்வார் வமிஸ்பாதுல் அஸ்றார்” என்ற தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்கள். இமாம் ஹல்லாஜ் அவர்கள் “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்றும், எனது சட்டையில் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்றும் கூறியது அவர்களுக்கு ஏற்பட்ட அடங்காத இறை காதலினாலாகும். அது மன்னிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு காரணம் கூறி ஹல்லாஜ் அவர்களை “காபிர்” என்று கூறாமல் புகழ்ந்துள்ளார்கள் இமாம் கஸ்ஸாலீ அவர்கள். அவர்கள் அவரைப் புகழ்ந்திருப்பது ஒன்றே அவர் காபிர் அல்ல என்பதற்கு ஆதாரமாகும்.
وكان ابن شريح إذا سُئل عنه يقول ‘ هذا رجل قد خفى عليّ حالُه، وما أقول فيه؟ وهذا شبيهٌ بكلام عمر بن عبد العزيز رحمه الله، وقد سُئل عن عليّ ومعاوية رضي الله عنهما فقال ‘ دِماءٌ طهّر الله منها سُيوفَنا، أفلا نُطهِّر من الخوض فيهم ألسنَتَنا ‘
وهكذا ينبغي أن لا يكفِّر أحدا من أهل القبلة، أي المسلمين، بكلام يصدر عنه ويحتمل التأويل على الحق والباطل،
(حياة الحيوان الكبرى، ص – 246، الشّيخ كمال الدين الدميري)
فإنّ الإخراج من الإسلام عظيم، ولا يُسارع به إلّا جاهل، ويُحكى عن الشّيخ شيخ العارفين قطب الزمان عبد القادر الكيلاني قُدّس سرّه أنّه قال ‘ عثُر الحلّاجُ، ولم يكن له من يأخذ بيده، ولو أدركتُ زمانه لأخذْتُ بيده، وهذه وما سَبَقَ عن الغزالي فى أمره كان لِمَنْ له أدنى فهمٍ وبصيرة ‘
இமாம் இப்னு ஷுறைஹ் அவர்களிடம் இமாம் ஹல்லாஜ் பற்றிக் கேட்கப்பட்ட போது, அவரின் நிலைமை எனக்குப் புரியாது. அவர் விடயத்தில் நான் என்ன சொல்வது என்று கூறினார்கள்.
இப்னு ஷுறைஹ் அவர்களின் இந்தப் பேச்சு உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களின் பேச்சு போல் உள்ளது. ஒரு சமயம் உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் அலீ றழியல்லாஹு அன்ஹு, முஆவியா றழியல்லாஹு அன்ஹு ஆகியோர் பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்களின் இரத்தங்களை எங்களின் வாள்களை விட்டும் அல்லாஹ் சுத்தமாக்கி வைத்துள்ளான். ஆகையால் அவர்கள் பற்றித் தவறாகப் பேசாமல் நமது நாவுகளை நாம் சுத்தப்படுத்திக் கொள்வோம் என்று சொன்னார்கள்.
எனவே, ஒரு முஸ்லிமை “காபிர்” என்று கூறாமல் இருப்பது நமக்கு அவசியமாகும். ஒரு முஸ்லிம் பேசிய பேச்சு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் சாத்தியமானதாயிருந்தால் அது சத்தியமானதென்று கருதி அந்த முஸ்லிமை பதுகாப்பது அவசியமாகும்.
ஏனெனில் ஒரு முஸ்லிமை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேற்றுவது பெரும் பாவமாகும். இவ்வாறான பாவத்தை ஒரு அறிவிலியே தவிர வேறெவரும் செய்யமாட்டான். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள். “ஹல்லாஜ் தவறிவிட்டார். அவரின் கரம் பற்றிக் காப்பாற்ற அந்த வேளை எவரும் இருக்கவில்லை. நான் அவ்வேளை இருந்திருந்தால் அவரின் கரம் பற்றிக் காப்பாற்றியிருப்பேன்”
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்களும், இமாம் கஸ்ஸாலீ அவர்களும் இமாம் ஹல்லாஜ் அவர்களின் விடயத்தில் கூறியுள்ள கருத்துக்கள் அவர் பரிசுத்தமானவர் என்பதற்கு சரியான சான்றாகும்.
ஆதாரம்: ஹயாதுல் ஹயவான் அல் குப்றா, பக்கம் – 244, ஆசிரியர்: கமாலுத்தீன் அத்தமீரீ
يا عبد الله! ويا رئيس جمعيّات العلماء بسـريلانكا! هداك الله، وهدى من معك من المحجوبين بالحجب الظلمانيّة إلى مقام الإستقامة الّذي أشار إليه الربّ سبحانه وتعالى فى سورة هود، بقوله فاستقم كما أُمِرْتَ، وأشار إليه الرسول صلّى الله عليه وسلّم بقوله شيَّبَتْنِيْ هود،
وهذه سطور وحروف وكلمات سطرها يدُ من لا يدَ له، شاء الله السّاطر كما فى قوله ‘ وما تشائون إلّا أن يشاء الله ‘ أن يهديك ويَهْدِيَ من معك إن كان لهم حظٌّ من شراب القوم – أهل الله، إلى الصـراط المستقيم، الذي أنعم الله به على النّبيّين والصدّيقين والشّهداء والصالحين، واختارني مظهرا لاسمه الهادى، فإنّ الله لا يتجلّى لأحد إلّا فى مظهرٍ شائَه، كما قال الشّيخ الأكبر محي الدين ابن عربي قدّس سرّه، بعد رجوعه من عالم السِّمْسِمْ، الّذي هو عالم يعرج إليه العارف وقت فنائه فى ذاته،
وفى القصّة المذكورة عِبرٌ ودروس لكل عالم يحكم بين النّاس ويُفتى، وأنت يا أيّها الرئيس قد أفتيت جمّا غفيرا وجمعا كبيرا من المؤمنين الموحّدين بالردّة، وهذاخطأ كبير وذنب عظيم عند الله تعالى، وأفتيت أيضا بجواز قتلي وقتل أصحابي الّذين صدّقوا قولي، استفتِ قلبك واستفت قلبك واستفت قلبك وإن أفتاك المفتون، وهذا قول الرّسول لا قول عبد الرؤوف، فكن كالشّيخ الصوفي جلال الدين المحلّي إن رُمت سعادة الدارين، وارجع عن فتواك إن أردت شفاعة سيّد الكونين، وتب إلى الله توبة نصوحا إن عشقت رؤيته وهو راضٍ عنك، وائتني إن أردت الفناء عنك وعن كلّ شيئ شَغَلك عن الله بقلب خالص لا شوب فيه، لكن بشـرط خلع نعليك، علمك وعملك، كما أتى القطب أبو الحسن الشّاذلي جَبَلَ القطب السيّد عبد السلام بن مشيش ليبايعه،
يا رئيس العلماء أو رئيس جمعيّات العلماء!
قد آذيت بفتواك قلوب أمّة كبيرة من الموحّدين وفرقة عظيمة من المؤمنين المخلصين، وظلمتهم بفتواك ظلما عظيما لا يماثِلُهُ ظلم، فاتّقِ دعوة المظلوم إن كنت تقيّا، وزرني بسرعة البرق إن أردت سلامة الدارين وسعادتهما، وشفاعة سيّد الوجود سيّد الثقلين، وما عليّ إلّا البلاغ،
المقتول بسيف فتوى العميان،
عبد الرؤوف عبد الجواد
20 أكتوبر 2020