தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
وكم ترجع صور التجلي الإلهيّ إلى مرتبة من العدد
இஸ்லாமில் உருவ வழிபாட்டுக்கு இடமே இல்லை. காரணம் என்ன?
இறைவனின் “தஜல்லியாத்” வெளிப்பாடுகள் என்பதற்கு எண்ணிக்கையில் இடமுண்டா?
الجواب لهذا السؤال كما قاله الشّيخ الأكبر محي الدين ابن عربي فى الباب الثامن والتسعين ومأة، أنّها ترجع كلّها إلى صورتين، صورة تنكر وصورة تعرف، ولا ثالث لها، قال: وقد ورد أنّ الله تعالى لمّا كلّم موسى عليه الصلاة والسلام تجلّى له فى اثني عشـر ألف صورة، وفى كلّ صورة يقول له يا موسى! لينتبه موسى فيعلم أنّه لو كان جميع التّجلّى بصورة واحدة لم يقل له فى كل صورة كلمة يا موسى،
اليواقيت والجواهر، ج أوّل، ص 112، المبحث الثاني والعشرون)
அவனன்றி ஒன்றுமில்லை என்ற இறை தத்துவத்தை ஏற்றுக் கொண்டவன் அவனுக்கு குறிப்பிட்ட உருவம் எதுவுமில்லை என்பதையும், உருவ வழிபாடு – சிருட்டி வழிபாடு கூடாது என்பதையும் ஏற்றுக் கொள்வான்.
إِذَا صَلُحَ الرَّأْسُ فَلَيْسَ مِنَ الْجَسَدِ بَأْسُ،
தலை சரியானால் உடலில் எந்தக் கோளாறும் இருக்காது.
மேற்கண்ட கேள்விக்கு இறையியல் தத்துவ மேதை அஷ் ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அல்கிப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய பதில்.
அல்லாஹ் எத்தனை உருவத்தில் தஜல்லீ – வெளியானாலும் அவை யாவும் இரண்டு வகைகளாக மட்டுமே பார்க்கலாம். ஒன்று. அறிந்த உருவம். இரண்டு. அறியாத உருவம். மூன்றாம் வகை இல்லை.
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு தூர்ஸீனா மலையில் அல்லாஹ் பேசிய போது அவன் 12 ஆயிரம் உருவத்தில் பேசியுள்ளான். ஒவ்வொரு “தஜல்லீ”யின் போதும் யா மூஸா – யா மூஸா என்று அவர்களை அழைத்தே பேசினான்.
இவ்வாறு அவன் அவர்களுக்கு யா மூஸா – யா மூஸா என்று ஒவ்வொரு தஜல்லீயின் போதும் அழைத்தது ஒவ்வொன்றும் தனித்தனியான “தஜல்லீ” என்று அவர்கள் விழிப்புணர்வு பெறுவதற்கேயாகும். ஏனெனில் அவ்வாறு அவன் அழைக்கவில்லையானால் 12 ஆயிரம் “தஜல்லீ”களையும் ஒரு தஜல்லீ என்று அவர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகும். (அல்யவாகீத் வல் ஜவாஹிர், பாகம் 01, பக்கம் 112)
மேற்கண்ட விபரத்தை பின்வரும் உதாரணம் மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். இது நான் கூறும் உதாரணமாகும். ஒருவன் இன்னொருவனோடு ஒரே சந்திப்பில் ஐந்து மணி நேரம் பேசிக்கொண்டிருந்தாலும் அது ஒரு சந்திப்பாகவே கணக்கு எடுக்கப்படும். பல சந்திப்பாக கணக்கு எடுக்கப்படமாட்டாது. எனினும் ஐந்து மணி நேரத்தில் ஐந்து தரம் ஒருவன் மற்றவனை விட்டும் மறைந்து மறைந்து சந்தித்தால் அது ஐந்து சந்திப்பாகவே கருதப்படும். ஆகையால் 12 ஆயிரம் சந்திப்பு என்பதை மூஸா நபீ விளங்கிக் கொள்வதற்காகவே 12 ஆயிரம் தரம் யா மூஸா – யா மூஸா என்று இறைவன் அழைத்தான்.
ஒருவன் இன்னொருவனுக்கு ஐந்து முறை ஸலாம் சொல்ல விரும்பினால் அவனை விட்டும் ஒரு நொடி நேரமாவது மறையாமல் ஸலாம் சொல்ல முடியாது. ஏனெனில் ஸலாம் உன்பது ஒருவன் இன்னொருவனை சந்திக்கும் போது மட்டும்தான் “ஸுன்னத்” ஆகும். ஒருவன் இன்னொருவனை சந்தித்து ஸலாம் சொல்லி பேசிக் கொண்டிருக்கும் போது அவனை விட்டும் மறையாமல் ஐந்து தரம் அவனுக்கு ஸலாம் சொன்னால் அது ஐந்து தரம் ஸலாம் சொன்னதாகாது. இவ்வாறுதான் அல்லாஹ்வுக்கும், நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட “தஜல்லீ” ஆகும்.
அல்லாஹ்வை யார் காண்பதாயினும் ஏதேனும் ஒரு “மள்ஹர்” பாத்திரம் மூலமே காணலாம். உதாரணமாக நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்ஸீனா மலையில் இறைவனைக் கண்டது போன்று. இதையே ஸூபீ மகான்கள் وَلَسْتَ تَنَالُ الذَّاتَ إِلَّا بِمَظْهَرٍ நீ அல்லாஹ்வைக் காண்பதாயின் ஏதாவதொரு “மள்ஹர்” பாத்திரம் மூலமே காண முடியும். அந்தப் பாத்திரமே அவனின் உருவமாகிறது. அல்லாஹ் “முத்லக்” எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவன். ஆயினும் “மள்ஹர்” மூலம் அவனைக் காணும் போது அந்த மள்ஹர் “முகய்யத்” கட்டுப்பாடுள்ளதாயிருப்பதால் அவனை அதில் கட்டுப்பபாடுள்ளவனாகவே காண முடியும்.
الله إله مُطْلَقٌ لَا مُقَيَّدٌ – وَلَكِنَّهُ يُرَى مُقَيَّدًا فِى الْمَظْهَرِ
அல்லாஹ் எப்போதும் “முத்லக்” கட்டுப்பாடில்லாதவனாயினும் கட்டுப்பாடான பாத்திரத்தில் அவனைக் காணும் போது கட்டுப்பாடுள்ளவனாகவே காண முடியும்.
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِيْ بِيْ، فَلْيَظُنَّ بِيْ مَا شَاءَ،
எனது அடியான் என்னை நினைக்குமிடத்தில் நான் இருக்கிறேன். எனவே, அவன் என்னை விரும்பியவாறு நினைக்கட்டும் என்ற ஹதீதுக்கு விளக்கம் கூறிய அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” என்ற நூலில்
إِنْ شَاءَ أَطْلَقَ وَإِنْ شَاءَ قَيَّدَ
அவன் என்னை விரும்பிய மாதிரி நினைத்துக் கொள்ளட்டும். அவன் விரும்பினால் கட்டுப்பாடில்லாதவனாக நினைக்கட்டும், அவன் விரும்பினால் கட்டுப்பாடுள்ளவனாக நினைக்கட்டும் என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் இறைஞானத்தை அல்லாமாக்கள் மறைத்தும், மறுத்தும் வந்ததாலும், வந்து கொண்டிருப்பதாலும் இறை ஞானம் தொடர்பாக பொது மக்களை எருமைகளாக்கியது இந்தப் பசுக்கள்தான்.
ரிஸ்வி ஸாஹிப் சூரியனை தனது கையால் மறைக்க நினைப்பதும், நாய் வாலால் கடலை அளக்க நினைப்பதும், அப்பிள் மரத்தடியில் ஆலம் பழம் தேடி நிற்பதும் வடிகட்டிய முட்டாள்தனமேயாகும்.
اَللهم أَرِهِ الْحَقَّ حَقًّا وَالْبَاطِلَ بَاطِلًا إِنْ كَانَ سَعِيْدًا فِى عِلْمِكَ، وَإِلَّا فَأَمِتْهُ مَوْتًا يَتَعَجَّبُ النَّاسُ مِنْهُ، وَيَعَضُّوْنَ عَلَى أَيْدِيْهِمْ،