தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
அல்லாஹ் முஹம்மது யாரையா – அலிபு லாமீமுக்குள் பாரையா! (காரைக்கால் ஷெய்கு தாவூத்ஷா)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا يَحْيَى بْنُ الْحَسَنِ بْنِ فُرَاتٍ الْقَزَّازُ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصٍ الْعَطَّارُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ»
سنن الترمذي، ج 6، ص 85
باب مناقب علي بن أبي طالب، 3726
المعجم الكبير للطّبراني، ج 2، ص 186
ومن غرائب حديث جابر بن عبد الله، 1756،
ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (தாயிப் போர் நாள் வந்த போது நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு பகல் முழுக்க பேசிக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் றஸூலே! இன்று நீண்ட நேரம் அலீ அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்றார்கள். அதற்கு நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் அவருடன் பேசவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான்) என்று அருளினார்கள்.
ஆதாரம்: ஸுனன் அத்துர்முதீ, பாகம் 06, பக்கம் 85, மனாகிப் அலீ றழியல்லாஹு அன்ஹு, 3726)
அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ, பாகம் 02, பக்கம் 186, 1756)
ஹதீதின் சுருக்கம்: தாயிப் யுத்தம் வந்த போது நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் கூட்டத்தை விட்டும் இருவரும் தனியாகச் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ்வின் திருத்தூதரே! இன்றெல்லாம் அலீ அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்றார்கள். அதற்கு நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவருடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்றார்கள்.
இந்த நபீ மொழியில் اِنْتَجَيْتُهُ என்று ஒரு சொல் வந்துள்ளது. இச் சொல்லின் வரலாறை ஆய்வு செய்தால் نَاجَى مُنَاجَاةْ என்ற சொல்லடியில் உள்ளதென்பது தெளிவாகும். இதற்கு اَلرَّجُلَ سَارَّهُ بِمَا فِى فُؤَادِهِ مِنَ الْأَسْرَارِ ஒருவன் இன்னொருவனுடன் தனது மனதிலுள்ள இரகசியங்களை இரகசியமாகச் சொன்னான் என்று பொருள் வரும். انتحى என்றால் القوم تسارُّوا ஒரு கூட்டம் இரகசியம் பேசினார்கள் என்று பொருள் வரும். பொதுவாக இச் சொல் இரகசியம் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை நேரில் கண்ட ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாருடன் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். நீங்கள் இருவரும் நீண்ட நேரமாக என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்காமல் لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ இன்று முழு நாளும் அலீ அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று நாகரீகமாக சொன்னார்கள்.
ஸெய்யிதுனா அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வாறு கூட சொல்லியிருக்கத் தேவையில்லை. இது அவர்களுக்கு அவசியமில்லாத ஒன்றாகும். எனினும் அவர்கள் அவ்வாறு சொன்னது பெருமானார் அலீ நாயகத்துடன் பேசிக் கொண்டிருந்த செய்தி தன்னிடத்திலும் சொல்லக் கூடியதாக இருந்தால் சொல்லட்டும் என்பதற்காக அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்புண்டு.
அந்த நோக்கத்தில் அபூ பக்ர் நாயகம் சொல்லியிருந்தால் அவர்களின் அந்த நோக்கத்தை பெருமானார் அறியவில்லை என்று சொல்லவும் முடியாது. பெருமானார் அலைஹிஸ்ஸலாம் அபூ பக்ர் நாயகத்தின் மனதிலுள்ளதை விளங்கியதினால்தான் அவர்களுக்கு
مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ
நான் அவருடன் பேசவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான். இந்த வசனத்தில் தனக்கு செயலில்லை என்பதையும், நான் இல்லை பேசினவன் அல்லாஹ்தான் என்ற தத்துவத்தையும் எடுத்துரைத்தார்கள் ஏந்தல் எம்பிரான் அவர்கள். இந்த வசனத்தில் “அல்லாஹ்” என்ற சொல் வந்துள்ள இடத்தில் வரவேண்டிய சொல் முஹம்மத் என்ற சொல்லேயாகும்.
இதன் சுருக்கம் என்னவெனில் நானில்லை, என் தோற்றத்தில் பேசியவன் அல்லாஹ்தான் என்ற “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை இந்தப் பாணியில் கூறியுள்ளார்கள் நபீகள் நாயகம் அவர்கள்.
ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் அலீயுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்ன போது நபீ பெருமான் சிரித்துவிட்டுப் போயிருக்கலாம். அல்லது வேறொரு பதில் சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை கூறியதிலிருந்தும், அலீ அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததிலிருந்தும் அவர்கள் இறை போதையில் அன்றெல்லாம் இருந்துள்ளார்கள் என்ற உண்மை விளங்குகிறது.
வஹ்ஹாபிகளிடம் நரிப்புத்தி இல்லையாயினும் அதன் தந்திரம் இருப்பதைக் காண முடிகிறது. அவர்களின் கொள்கைக்கு முரணான திருக்குர்ஆன் வசனங்களையும், நபீகளாரின் அருள் மொழிகளையும் தமது கொள்கைக்கு ஏற்றமாதிரி வளைத்தெடுப்பதில் மிகவும் சிரமத்தைச் சுமப்பார்கள். இந்த நாதாக்கள் ஸூபிஸத்திற்கு ஆதரவான திரு வசனங்களையும், நபீ மொழிகளையும் எப்பவோ வளைத்திருப்பார்கள். சொற்பகாலமாவது உயிர் வாழ்ந்து சொத்துக்கள் தேட வேண்டுமே! கல்லெறியும் வேண்டாம். பொல்லடியும் வேண்டாம். மப்புலியில் கண்ணாயிருந்து மரணிப்போம் என்று மௌனிகளாயுள்ளார்கள். இன்னோர் ஞான மழையில் சற்றேனும் நனைந்தால் முதலில் சந்தோஷமடைவது நான்தான்.
மேலே எழுதிக் காட்டிய ஹதீதை “ழயீப்” பலம் குறைந்ததென்று வஹ்ஹாபிகள் சொல்வர். அவர்களை முந்தி ரிஸ்வி முப்தியே சொல்வார்.
“ழயீப்” என்றால் அந்த ஹதீதை எடுப்பது “ஷிர்க்” என்ற அளவிற்கு வஹ்ஹாபிகளின் பிரச்சாரம் தலை தூக்கியுள்ளது. சலம் கழித்துவிட்டு சுத்தம் செய்யத் தெரியாதவன் கூட ழயீபுக் கதை சொல்லத் தொடங்கிவிட்டான்.
“ழயீப்” பலம் குறைந்த நபீ மொழியின் படி அமல் செய்யலாம் என்று சட்டமேதை இமாம் நவவீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்அத்கார்” என்ற நூல் 29ம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.
சுருக்கமாக சில வரிகள் மட்டும்.
يَنْقَسِمُ الْحَدِيْثُ مِنْ حَيْثُ الْقَبُوْلِ إِلَى صَحِيْحٍ وَحَسَنٍ وَضَعِيْفٍ
மேற்கண்ட மூன்று வகை ஹதீதுகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். அவை ஸஹீஹ், ஹஸன், ழயீப் என்பவையாகும். ஹதீதுக் கலை மேதைகள் மட்டும் எதை ஸஹீஹ் அல்லது ஹஸன் என்று சொல்கின்றார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன்படி அமல் செய்யவும் முடியும். “பத்வா” கொடுக்கவும் முடியும்.
ஆனால் “ழயீப்” என்று அவர்கள் சொன்ன ஹதீதை முழுமையாக புறக்கணித்தல் கூடாது. இதிற்சில விபரமுண்டு. அதன்படி செயல்பட வேண்டும்.
وَأَمَّا الضَّعِيْفُ فَهُوَ كُلُّ حَدِيْثٍ لَمْ تَجْتَمِعْ فِيْهِ صِفَاتُ الحديثِ الصّحيحِ، ولا صفاتُ الحديثِ الحَسَنِ، مِنِ اتِّصَالِ سَنَدٍ وعَدَالَةٍ وَضَبْطٍ وعَدَمِ شُذُوْذٍ وعَدَمِ عِلَّةٍ قَادِحَةٍ، وهو أقسامٌ كثيرةٌ، وبالجملة هو على قِسْمَيْنِ، ما يجوزُ روايتُه والعَمَلُ به فى فضائلِ الأعمالِ دون الأحكام الشرعيّة، من حلال وحرام وغيرهما، وما لا يجوزُ العملُ به ولا روايتُهُ لِمَنْ عَلِمَ حالَهُ إلا مقرونا بنعته وصِفَتِهِ، وهو الحديث المُخْتَلَقُ الْمَوضوعُ المنسُوب إلى رسول الله صلى الله عليه وسلّم، وهو شَرُّ أقسام الحدسث،
“ஸஹீஹ்” ஆன ஹதீதுக்கும், “ஹஸன்” ஆன ஹதீதுக்கும் கூறப்பட்ட நிபந்தனைகள் இல்லாத ஹதீது பலம் குறைந்ததென்று சொல்லப்படும். பலம் குறைந்த ஹதீதில் பல வகையுண்டு. ஒன்று. அதை “ஹதீது” என்று சொல்லவும் முடியும். அது கொண்டு “பளாயிலுல் அஃமால்” கடமையில்லாத விடயங்களில் “அமல்” செய்யவும் முடியும். ஆனால் ஹலால், ஹறாம் என்று “பத்வா” கொடுக்கும் விடயத்திற்கு அதை ஆதாரமாக எடுக்க முடியாது. மற்றது றஸூலுல்லாஹ் சொன்னதாக எவனாவது ஒருவனால் சொல்லப்பட்டதாகும். இதுவே ஹதீதின் வகைகளில் மிக்க கெட்டதாகும். இதை ஆதாரமாகக் கொண்டு “பத்வா” கொடுக்கவும் முடியாது. கடமையில்லாத அமல்களும் செய்யவும் முடியாது.
அக்காலத்தில் கேரளாவில் உள்ள ஒரு கருவாட்டு வியாபாரியிடம் “மத்தி” என்ற கருவாடு விலை போகாமல் தேங்கிவிட்டதாம். அவன் ஒரு மௌலவீயிடம் சொல்லி ஒரு வசனம் அமைத்து அதை நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் சொன்னதாக விளம்பரம் செய்துவிட்டானாம். ஒரே நாளில் தேங்கிக் கிடந்த கருவாடு பறந்து போய்விட்டதாம். அந்த வசனம் இதோ.
مَنْ لَمْ يَأْكُلْ مَتِّ فَلَيْسَ مِنْ أُمَّتِيْ
மத்திக் கருவாடு சாப்பிடாதவன் எனது உம்மத் அல்ல.
இன்னொரு அஸா – கைக் கோல் வியாபாரி ஒரு வசனம் அமைத்து அதை “ஹதீது” என்று பிரகடனம் செய்தான். அந்த வசனம் இதோ.
مَنْ بَلَغَ أَرْبَعِيْنَ سَنَةً وَلَمْ يَأْخُذِ الْعَصَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمْ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ
ஒருவன் நாற்பது வயதை அடைந்து அவன் அஸா – கைக் கோல் எடுக்கவில்லையானால் “அபுல் காஸிம்” காஸிமின் தந்தையான பெருமானாருக்கு மாறு செய்து விட்டான்.
இவையெல்லாம் பெருமானார் மீது இட்டுக் கட்டப்பட்டவையாகும். இவற்றைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால் வஹ்ஹாபிகள் “ழயீப்” என்று சொல்லும் ஹதீதுகளையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அவை பற்றி ஆய்வு செய்த பின்னரே ஒரு முடிவு செய்தல் வேண்டும். ழயீப் – பலம் குறைந்த ஹதீதை பலம் குறைந்ததென்றே சொல்ல வேண்டும். அதற்காக வஹ்ஹாபிகள் “ழயீப்” என்று சொல்வதையெல்லாம் நாமும் அவ்வாறு சொல்லக் கூடாது.
பொதுவாக வஹ்ஹாபிகள் ஸூபிஸம், இறை ஞானம் தொடர்பாக வந்துள்ள ஹதீதுகளை முற்றாக மறுப்பார்கள். அது அவர்களின் குருமாரின் குணம். எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
குறிப்பு: கருவாட்டு வியாபாரிக்கும், கைக் கோல் வியாபாரிக்கும் அறபு வசனம் எழுதிக் கொடுத்த மௌலவீ எப்படியானவராயிருப்பார்? நமது நாட்டு மௌலவீமார்களில் அவர் போன்ற ஒருவர் இருப்பாராயின் அவர் யாராக இருப்பார்?