Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மட சாம்பிராணியும், அறிவுலக மேதை இமாம் ஙஸ்ஸாலீ அவர்களும்!

மட சாம்பிராணியும், அறிவுலக மேதை இமாம் ஙஸ்ஸாலீ அவர்களும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ 
 
ஹிஜ்ரீ 450ம் ஆண்டு ஈரான் நாட்டின் “குறாஸான்” பட்டணங்களில் ஒன்றான “தூஸ்” என்ற ஊரில் பிறந்து அங்கும், “ஜர்ஜான்” நகரிலும் கல்வி கற்று பின்னர் “நைஸாப்பூர்” வந்து நிழாமிய்யா அறபுக் கல்லூரியின் மேதை “இமாமுல் ஹறமைன்” அபுல் மஆலீ ஜுவனீ அவர்களிடம் கல்வி கற்ற இமாம் ஹுஜ்ஜதுல் இஸ்லாம் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை கிண்டல் செய்யும் மட சாம்பிராணி கலாநிதி அவர்கள் பின்வருமாறு இமாம் ஙஸ்ஸாலீ அவர்களை குற்றம் காண்கிறார்.
 

قال أبو حامد: للتّوحيد أربع مراتب، فذكر ثلاث مراتب، ثمّ قال، والرابعة أن لا يرى فى الوجود إلّا واحدا، وهي مشاهدة الصِّدِّيقين، وتُسَمِّيه الصوفية الفناء فى التوحيد،
 
இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அதாவது படைப்புகளில் – இருப்பவற்றில் ஒன்றைத் தவிர வேறு எதையும் காணாமல் இருப்பதாகும். இதுவே “ஸித்தீகீன்”களின் காட்சி எனப்படும். ஸூபீ மகான்கள் இது “அல் பனாஉ பித் தவ்ஹீத்” ஏகத்துவத்தில் அழிதல் என்று கூறுவதாக இமாம் ஙஸ்ஸாலீ கூறுகின்றார்கள்.
 
இந்தக் கொள்கைதான் கலாநிதி “மட சாம்பிராணி”க்கு பிடிக்கவில்லை. இதுவே உண்மையில் சரியான கொள்கையாகும்.
 
لِأَنَّهُ لَا يَرَى إِلَّا وَاحِدًا فَلَا يَرَى نَفْسَهُ أَيْضًا، وَإِذَا لَمْ يَرَ نَفْسَهُ لِكَوْنِهِ مُسْتَغْرِقًا بِالتَّوْحِيْدِ كَانَ فَانِيًا عَنْ نَفْسِهِ فِى تَوْحِيْدِهِ، بِمَعْنَى أَنَّهُ فَنَى عَنْ رُؤْيَةِ نَفْسِهِ وَالْخَلْقِ، ஒ
 
ஏனெனில் ஒன்றைத்தவிர வேறொன்றையும் காணவில்லையென்றால் தன்னையும் அவன் காணமாட்டான் என்பதே உண்மை. அவன் “தவ்ஹீத்” என்ற ஏகத்துவத்தில் “பனா” அவன் அழிந்து போனானாயின் அவன் தன்னை மட்டுமன்றி எதையுமே காணமாட்டான். இதுவே توحيد الذات என்று சொல்லப்படும். அதாவது தன்னையும் காணாமல், மற்றுமுள்ள எந்தவொரு வஸ்த்தையும் காணாமல் அல்லாஹ்வை மட்டும் காணுதலாகும். சுருங்கச் சொன்னால் தனக்கும் “வுஜூத்” உள்ளமை இல்லை, வேறெந்த ஒரு வஸ்த்துவுக்கும் உள்ளமை இல்லையென்று உணர்வதாகும். لا وجود إلا وجوده அல்லாஹ்வின் “வுஜூத்” அல்லது “தாத்” தவிர வேறெவனுக்கும், வேறெந்த வஸ்த்துவுக்கும் உள்ளமை இல்லை என்று முடிவு செய்து அந்த முடிவிலேயே லயித்துப் போவதாகும். الفناء فى الوجود كالسمك فى الماء அல்லாஹ்வின் உள்ளமையில் இரண்டறக் கலந்தவன் நீரில் வாழும் மீன் போன்றவனாவான்.
 
நீரின் உள்ளே வாழ்கின்ற மீன் கண்ணைத் திறந்து எத்திசையை அது நோக்கினாலும் அதன் கண்ணுக்கு நீரைத் தவிர வேறொன்றும் தெரியாதது போல் உள்ளமை என்ற அல்லாஹ்வில் “பனா” அழிந்து போனவனுக்கு அவனைத் தவிர வேறொன்றுமே தெரியாது.
 
இந்த நிலை ஒரு மகத்தான நிலையாகும். அது மட்டுமல்ல இப்படியொரு நிலை ஒரு நொடி நேரம் ஏற்படுவது மனு, ஜின்களின் வணக்கத்திற்கு நிகரான வணக்கமாகவும் ஆகிவிடும்.
 
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَذْبَةٌ مِنْ جَذَبَاتِ الرَّحْمنِ تُوَازِيْ عَمَلَ الثَّقَلَيْنِ،
 
ஒரு நொடி நேரம் ஏற்படுகின்ற “ஜத்பு” அல்லது “பனா” மனு, ஜின்களின் “அமல்”களுக்கு சமமானதென்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: அவாரிபுல் மஆரிப் – 02 – 91
 
இந்த விபரம் தெரியாத மட சாம்பிராணி கலாநிதி அவர்கள் வானம், பூமி, மலை, கடல் என்று பல கோடி படைப்புகள் இருக்கும் நிலையில் ஒன்றைத் தவிர வேறொன்றையும் காணவில்லை என்று சொல்வது எப்படி என்று கேட்கிறார். பாவம் அந்தோ!
 
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களைக் குறை கூறுபவர் கலாநிதி மட சாம்பிராணி மட்டுமல்ல. ஒட்டு மொத்த உலகிலுள்ள வஹ்ஹாபிஸ வழிகேடர்கள் அனைவரும் குறை கூறிக் கொண்டே இருக்கின்றனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட வஹ்ஹாபிஸக் கருத்துக்களை ஆதரிக்கின்ற அனைவரும் அவர்களை குறை கூறிக் கொண்டும், “காபிர்”, “முர்தத்” என்று சொல்லிக் கொண்டுமே இருக்கின்றனர்.
 
ஒரு வகையில் “மட சாம்பிராணி”யை பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” கருத்தைச் சொன்னதற்காக அவர்களை உலகமறிய பகிரங்கமாக எதிர்த்து எழுதியுள்ளார். ஆயினும் அவரின் நிழலான வஹ்ஹாபிகளும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இமாம் ஙஸ்ஸாலீ “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு நூறு வீதம் ஆதரவானவர்கள் என்பதை அறிந்திருந்தும் கூட அவர்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மௌனிகளாயிருப்பது கல்லெறிகள், பொல்லடிகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கேயாகும். கல்லெறிக்கும், பொல்லடிக்கும் பயந்து ஹக்கை – சத்தியத்தை பேசாமலிருப்பது மார்க்கமாகுமா? இவர்கள் عَالِمْ களா? آلِمْ களா? عَالِمْ என்ற சொல் عِلْمٌ என்ற சொல்லடியிலுள்ளது. آلِمْ என்ற சொல் أَلَمٌ என்ற சொல்லடியிலுள்ளது. இதன்படி عَالِمْ என்றால் அறிஞன். آلِمْ என்றால் சீக்காளி. என்னைப் பொறுத்தவரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எவனாவது “ஷிர்க்” என்றோ, “குப்ர்” என்றோ சொன்னால் அவன் பல்கலை கற்ற கலாநிதியாயினும், ஆகாயத்திற் பறப்பவனாயினும், நீர் மேல் நடப்பவனாயினும் “மட சாம்பிராணி”தான்.
 
21.12.2020 அன்று கல்ஹின்ன என்ற ஊரிலிருந்து கைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்ட ஒருவர் “மட சாம்பிராணி” என்று ஏற்கனவே நான் பதிவு செய்தது தொடர்பாக பேசிவிட்டு அதன் விளக்கம் என்னவென்று கேட்டார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை எனது கடந்த பதிவை வாசித்தவர்களின் நன்மை கருதி இங்கு எழுதுகிறேன்.
 
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எனது ஊரான காத்தான்குடியில் வாழ்ந்த மக்கள் புத்தி, அறிவு குறைந்தவனுக்கு “மடச் சாம்பிராணி” என்று சொல்வார்கள். இதே கருத்தை மனதிற் கொண்டுதான் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை “அறிவிலி” என்று தனது நூல் ஒன்றில் எழுதியிருந்த கலாநிதியை நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.
 
அது தொடர்பாக நான் அறிந்த ஓர் உண்மையை இங்கு எழுதுகிறேன். இது பற்றி இந்தியா தமிழகத்திலுள்ள சம்சம் சாம்பிராணிக் கடைக்காரனிடம் கேட்டாற் கூட தெரியும்.
 
சாம்பிராணியில் பல் வகை மணமுள்ளவை உள்ளன. அவற்றில் மட சாம்பிராணி என்ற பெயரிலும் ஒரு வகை உண்டு. அது கண் கவர் நிறமுள்ளதாய் தங்க நிறத்தில் இருக்கும். 50 பைசாவுக்கும் வாங்கலாம். அதை தீயில் போட்டதும் “ஹுப்” என்ற ஒலியுடன் புகை எழும்பி அந்த ஏரியாவையே புகை காடாக்கிவிடும். அதன் மணமோ பல நாட்களுக்குமுன் செத்துப் போன நாய் நாறுவது போல் நாறுமே தவிர நுகர்வோருக்கு மன அமைதியை கொடுக்கும் மணமாயிருக்காது. இதுவே மட சாம்பிராணி எனப்படும். இந்தச் சாம்பிராணி போன்றவன்தான் நான் கூறும் க(ல்)லாநிதியாவார். இதனால்தான் அவரை மட (ச்) சாம்பிராணி என்று எழுதினேன்.
 
இவர் நம்பர் “வன்” வஹ்ஹாபியாவார். வஹ்ஹாபிகளில் எவரும் “தஸவ்வுப்” என்ற ஸூபிஸ ஞானத்தை சரி கண்டதில்லை. அவர்களில் ஒருவர்தான் நான் குறிப்பிடும் வஹ்ஹாபீ மகான் ஆவார். வஹ்ஹாபிகளோ இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை நா கூசாமல் காபிர், ஸிந்தீக் என்று சொல்வார்கள். இவர்கள் வளர்ப்பு இறால் போன்றவர்கள். பார்ப்பதற்கு பளிச்சென்று இருப்பார்கள். அவ்வளவுதான். ருசியின் வாடை கூட இருக்காது.
 
நான் குறிப்பிடும் கலாநிதி நிழலை நிஜம் என்று கண்ட ஓர் ஏமாளிதான். இவர் இமாம் ஙஸ்ஸாலீ சொன்ன இறை தத்துவத்தை இழித்துரைக்கிறார். அவர்களின் தத்துவம் இதோ.
 
يقول الغزالي فى كتابه ‘ إحياء علوم الدين ‘ 4 ஃ 245 – 247 (لَيْسَ فِى الْوُجُوْدِ تَحْقِيْقًا إِلَّا اللهُ وَأَفْعَالُهُ )
 
இருக்கின்றவை யாவும் “அல்லாஹ்வும், அவனின் செயல்களுமேயாகும். அதாவது சிருட்டியாக – படைப்பாகத் தோற்றுவது அல்லாஹ் தானேயன்றி வேறொன்றும் இல்லையென்றும், அந்தப் படைப்புக்கள் மூலம் வெளியாகும் அனைத்துச் செயல்களும் அவனின் செயல்களேயன்றி படைப்புக்கு செயலெதுவும் இல்லை என்றும் திட்டமாகக் கூறியுள்ளார்கள் ஈரான் நாட்டின் “தூஸ்” நகரில் வாழ்கின்ற இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்.
 
இவ்வாறு இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னதால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டார்கள் என்று சாரைக் கண்ணர்களான வஹ்ஹாபிகள் நினைத்துக் கொண்டார்கள். ஒரேயொரு வஸ்த்தை இரண்டாக அல்லது பலதாகக் கண்டு கொண்டார்கள். ஒன்றைப் பலதாகக் கண்ட கூட்டமே வஹ்ஹாபிஸக் கூட்டமும், அவர்களின் நிழல் போன்ற அவர்களுக்கு வால் பிடிக்கும் கூட்டமுமாகும்.
 
“சாரை” என்றால் மேல் பகுதி வெளிர் கறுப்பாகவும், அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும் விஷமற்ற ஒரு வகைப் பாம்பு. இவ்வகைப் பாம்புக்கு கண்ணும் உண்டு. பார்வைப் புலனும் உண்டு. ஆயினும் இதற்கு ஒரேயொரு பொருள் இரண்டாகவே தெரியும். இதனால்தான் இத்தன்மையுள்ள பாம்பு சாரை எனப்படும். இது ஏனைய பாம்புகள் போல் கடுமையான விஷம் உள்ளதல்ல. காடுகளில் வாழ்கின்ற சிறுவர்கள் இதோடு விளையாடுவதுமுண்டு. இது கடித்தால் எந்த வகையிலும் மரணம் சம்பவிக்காது. ஆயினும் இதனால் தீண்டப்பட்டவர் முதுமையடையும் போது உயிருடன் இருந்தாராயின் அவருக்கு உடல் நடுக்கம் ஏற்படச் சாத்தியமுண்டு. ஒரு பொருள் இரண்டாகத் தெரிவதினாலேயே அது உடலை வளைத்து வளைத்து ஓடுகிறதென்று நாய்க் குறவர்கள் கூறுவர்.
خَلْقٌ
படைப்புக்களில் ஒரேயொரு பொருளையும், அதன் செயல்பாடுகளையும் தவிர வேறொன்றும் இல்லையாதலால் ஒன்றை இரண்டென்று – இரண்டாகப் பார்ப்பவன் சாரைக் கண்ணன் என்று சொல்லப்படுகின்றான். அறபு மொழியில் இவனுக்கு أَحْوَلْ “அஹ்வல்” என்றும் சொல்வர்.
 
ஒன்றை ஒன்றாகவே காணுதல் تَوْحِيْدُ الذَّاتِ – “தவ்ஹீத் – தாத்” எனப்படும். تَوْحِيْدُ الذَّوَاتِ பல பொருட்களை ஒன்றாகப் பார்த்தல்….
 
“கலாநிதி மட சாம்பிராணி” இறை ஞானிகளும், ஸூபீ மகான்களும் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” ஞான தத்துவத்திற்கு எதிரானவர். ஆயினும் திறமையுள்ளவர். திறமையுள்ளவராயிருந்தும் இந்த ஞானம் விளங்காமல் போனதற்கான காரணம் அவருக்கு அதில் “நஸீப்” விதியில்லாமற் போனதேயாகும். ரோஷம், மானம், பக்தியுள்ள ஒரு பெண் தனது கணவனுக்கு மட்டுமே எதையும் காட்டுவாள். ஆயினும் கண்டவர்களுக்கெல்லாம் காட்டமாட்டாள்.
 
கல்விகளில் சிறந்தது இறை ஞானமே. شَرَفُ الْعِلْمِ بِشَرَفِ الْمَعْلُوْم ஓர் அறிவின் சிறப்பு அதன் கருவைப் பொறுத்ததேயாகும். இறை ஞானத்தின் கரு அல்லாஹ்தான். அவனை விடச் சிறந்த கரு வேறொன்றுமில்லை.
 
கடந்த பதிவுகளின் போது உலகப் பிரசித்தி பெற்ற ஸூபீ ஞான மகான் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களில் “மட சாம்பிராணி” கையடித்தது தொடர்பாக எழுதியிருந்தேன். இந்தப் பதிவில் இன்னோர் இறை ஞானியில் அவர் கையடித்தது தொடர்பான விடயங்களை எழுதுகிறேன்.
 
ابن الفارض
هو عمر بن عليّ مرشد الحموي، حمويّ الأصل، مصـريّ المولد والمنشأ والوفاة، عرف بابن الفارض، لأنّ والده يُثبت الفروض للنّساء على الرجال عند القُضاة،
 
وُلد بالقاهرة سنةَ 576 هـ، واشتغل فى أوّل حياتِه بطلب العلم، فَدَرَسَ الحديث والفقه الشافعيّ وعُلوما أخرى،
ثمّ سلك طريق الصوفيّة، وسافر بإشارةٍ مِنْ أحدِ شُيوخه إلى مكّة المكرّة، فأقام فيها خمسةَ عشـر عاما، مروضا نفسَه على طريقة الصوفية، فكان يخرجُ إلى الأماكن النّائية والخَرِبة، ويَسيح فى شِعاب مكّة المكرّمة وأوديتها، وكان يبقى أيّاما لا يأكل ولا ينام،
 
وبعد أنْ بلغ ابن الفارض دَرجة الكمال الصوفي، بوُصوله إلى ذَروةِ الإعتقاد بوحدة الوجود، عاد إلى القاهرة سنة 628 هـ، فاشتهر أمرُه عند العامّة والحُكّام، وعظّمه الصوفيّة وغلوا فيه، حتّى عدَّوْه قُطبَ زمانه، ولقَّبُوه سلطانَ العاشقين، وإمامَ المُحبِّين، وتوفّي سنة 632 هـ ،
இப்னுல் பாரிழ்
 
இவரின் பெயர் உமர். தந்தையின் பெயர் அலீ. பாட்டன் பெயர் முர்ஷித். இவர் ஹமவீ குடும்பத்தைச் சேர்ந்தவர். மிஸ்ர் நாட்டில் பிறந்து அங்கேயே வாழ்ந்து அங்கேயே மரணித்தார். இவர் தனது சொந்தப் பெயர் கொண்டு பிரசித்தி பெறாமல் இவர் “இப்னுல் பாரிழ்” என்று அழைக்கப்பட்டு வந்தார். தந்தையின் பெயர் அலீ என்றிருந்தாலும் அவரின் காரணப் பெயர் “பாரிழ்” என்றிருந்ததால் “இப்னுல் பாரிழ்” என்று பிரபல்யமடைந்தார். இதற்கான காரணம் அவர் நீதிவான்களிடம் ஆண்கள் மீதுதான் அதிக கடமை பெண்களுக்கு உண்டு என்று சொல்லி வந்ததாகும்.
 
இவர் கெய்ரோவில் – மிஸ்ர் நாட்டின் தலைநகர் – ஹிஜ்ரீ 576ல் பிறந்தார். இவர் தனது சிறு வயதிலேயே கல்வி கற்பதில் கவனம் செலுத்தி ஹதீதுக்கலை, “ஷாபிஈ மத்ஹப்” சட்டக்கலை, மற்றும் பல அறிவுகளையும் கற்றுக் கொண்டார்.
 
அதன் பின் “தஸவ்வுப்” ஸூபிஸ வழி வாழத் தொடங்கினார். தனது ஞான குரு ஒருவரின் வழிகாட்டலின் படி திரு மக்கா நகர் சென்று அங்கு 15 ஆண்டுகள் தங்கி ஸூபிஸ வழியில் தனக்கு பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார். திரு மக்கா நகரிலிருந்து தூரமான, மனித நடமாட்டமில்லாத இடங்களிலும், அங்குள்ள புதர்களிலும், நீரோடைகளிலும் தங்கியிருந்தார். பல நாட்கள் உண்ணாமலும், பருகாமலும் இருப்பார்.
 
15 ஆண்டுகள் திரு மக்கா நகரில் தங்கியிருந்து தனக்குத் தானே ஸூபிஸ வழிப் பயிற்சி கொடுத்து உண்ணாமலும், உறங்காமலும், பருகாமலுமிருந்து “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தில் ஓர் இலக்கை அடைந்த பின் தனது தாயகமான கெய்ரோவுக்கு ஹிஜ்ரீ 628ல் வந்து சேர்ந்தார். அவரின் கீர்த்தி பொது சனங்களிடமும், ஆட்சியாளர்களிடமும் பரவிப் பிரபல்யம் அடைந்தார். அந்த நாட்டில் வாழ்ந்த மக்களும், ஏனைய ஸூபீ வழி செல்வோரும் அவரைக் கண்ணியப்படுத்தி அவரை அக்கால “குத்பு” என்றும் கூறினர். அவருக்கு “ஸுல்தானுல் ஆஷிகீன்” இறை காதலர்களின் அரசர் என்றும், காதலர்களின் நேசர் என்றும் பட்டம் சூட்டினார்கள். இவர் ஹிஜ்ரீ 632ல் “வபாத்” ஆனார்.
 
وديوان الشّعر هو الإنتاجُ الوحيد لابن الفارض، فلم يُؤلّف كتابا، ولمْ تُرْوَ عنه أقوالٌ فى علوم الصوفيّة، ولكن مع هذا فإنّ أثره على الصوفيّة – كان – ولا يزال عظيما، وذلك يرجع إلى أنّه أشعرُ المُتصوّفين، وحاملُ لِواء الشّعر بينهم،
 
இறைஞானி இப்னுல் பாரிழ் “அத்தாஇய்யா” என்ற பெயரில் ஒரு ஞான கவித் தொகுப்பு எழுதியுள்ளார். இது தவிர வேறு நூல் ஒன்றும் அவர் எழுதவில்லை. அவரின் கவித் தொகுப்பு நூல் “தீவான் இப்னுல் பாரிழ்” என்று அழைக்கப்படும். ديوان ابن الفارض என்றும், تائية ابن الفارض என்றும் சொல்லப்படும். அவரின் பாடல் ஒவ்வொன்றும் “தே” என்ற எழுத்தில் முடிவதால் அது “தாஇய்யா” என்று அழைக்கப்படுகின்றது. அவர் ஏனைய ஸூபீகள் போல் ஞானக் கருத்துக்கள் பேசியதாக தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வாறிருந்தும் அவரின் புகழ் ஓங்கிய வண்ணமே இருந்தது. ஸூபீகளின் பெரும் கவிஞர் என்று வாழ்த்தப்படுகின்றார்.
 
وَلِهَذَا فَقَدْ أَكْثَرَ مُؤَلِّفُوا الصُّوفيّة مِنَ الإستدلالِ بِشِعره على مَسَائِلِ التَّصَوُّفِ، وكانت قَصَائِدُه زادَ الصُّوْفِيَّةِ فِى مَجَالِسِ السَّماعِ، وكان الطُّلّابُ يَدْرُسُون ديوانَه، بل ويَحْفَظُوْنَهُ عن ظَهْرِ قَلْبٍ،
 
ஸூபீகளான எழுத்தாளர்கள் தமது ஸூபிஸ கருத்துக்களை நிறுவுவதற்கு அவரின் பாடலை ஆதாரமாக எடுக்கின்றார்கள். ஞான கீதங்கள் பாடும் சபைகளுக்கு அவரின் பாடல்கள் உணவு போல் ஆகிவிட்டது.

ஸூபீ மகான்களில் ஆரம்பப் படியிலுள்ளவர்களும், உயர் படியிலுள்ளவர்களும் مَجْلِسُ السَّمَاعِ என்ற பெயரில் ஒரு சபை நடத்துவார்கள். அங்கு ஸூபீகள் கூடி இறை காதல் தொடர்பான கவிதைகள் பாடுவார்கள். அந்த சபையில் பாடுவதற்கு “இப்னுல் பாரிழ்” எழுதிய கவிதைகளையும் பாடி பேரின்ப பரவசம் அடைவார்கள்.

இப்னுல் பாரிழ் அவர்களின் கவிகளுக்கு பலர் விரிவுரை எழுதியுள்ளார்கள். அவர்களில் ابن الفارض والحبُّ الإلهي என்ற பெயரில் முஹம்மது முஸ்தபா ஹில்மீ என்பவரும், كشفُ السِّرِّ الغامضِ فى شرح ديوان ابن الفارض என்ற பெயரில் இமாம் அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பலரும் விரிவுரை எழுதியுள்ளார்கள்.

وشعر ابن الفارض شعر رائقٌ، عذْبٌ، ولكنّه يَنْعق بوحدة الوجود، ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘
மேலே நான் இப்போது எழுதிய வசனம் “மட சாம்பிராணி”யின் வசனமாகும். அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். “இப்னுல் பாரிழ் அவர்களின் பாடல் மிக அழகானதும், தரமானதும், இனிமையானதுமாகும். (ஆயினுமவர் காகம் கரைவது போல் கரைகிறார்)” என்று கூறியுள்ளார் மட சாம்பிராணி.

نَعَقَ என்றால் காகம் கரைந்தது என்று பொருள் வரும். இந்தச் சொல்லை அவர் பாவித்தது “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை – கொள்கையை – நையாண்டி பண்ணுவதற்கேயாகும்.

لا أدري أنّه حيّ إلى الآن أو مات، فإن كان حيّا فهو يموت كما يموت الغراب، لأنّه استهزأ بابن الفارض وعقيدة وحدة الوجود،
இவ்வாறு நையாண்டி பண்ணிய மட சாம்பிராணி பின்னால் எவ்வாறு சொல்கிறார் என்பதையும் கவனியுங்கள்.

ولهذا فقد شبّهَهُ الذّهبي بـ ‘الْفَالُوْذَج المسموم ‘
இதனால்தான் இமாம் தஹபீ என்பவர் இப்னுல் பாரிழ் அவர்களின் இறை காதல் பாடலை விஷம் கலந்த பாலூதாவுக்கு ஒப்பாக்கினார் என்று சொல்கிறார். இதற்கு ஆதாரமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய لِسَانُ المِيْزَانِ என்ற நூல் நாலாம் பாகம் 317ம் பக்கத்தை (4-317) ஆதாரமாக கூறியுள்ளார்.

இமாம் தஹபீ விஷம் கலந்த பாலூதா என்று இப்னுல் பாரிழ் அவர்களின் பாடலைக் குறிப்பிட்டிருந்தால் அவர் வஹ்ததுல் வுஜூத் ஞானத்திற்கு எதிரானவராக இருந்திருக்க வேண்டுமென்று விளங்குகின்றது.

இமாம் தஹபீ யார்?
هو محمد بن أحمد بن عثمان بن قائمان الذّهبي، مؤرّخ الإسلام، وُلد بدمشق سنة 673 هـ ، بَرِعَ فى علمي الحديث والتاريخ، له مؤلفات كثيرة، منها تذكرة الحفّاظ، وميزان الإعتدال، والعُلو للعليّ العظيم، تُوفّي بدمشق سنة 748 هـ،

இவர் – தஹபீ – முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு உத்மான் இப்னு காயிமான் அத்தஹபீ ஆவார். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்;. ஹிஜ்ரீ 637ல் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் நகரில் பிறந்தார். ஹதீதுக்கலை, வரலாற்றுக் கலை இரண்டிலும் நிபுணத்துவம் பெற்றவர். இவர் அதிக நூல்கள் எழுதியுள்ளார்.

தஹபீ அவர்களுக்கும், இப்னுல் பாரிழ் அவர்களுக்கும் சுமார் 60 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. சந்தித்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இப்னுல் பாரிழ் முந்தியவர்.

மட சாம்பிராணி சொல்வது போல் இப்னுல் பாரிழ் அவர்களின் பாடலை இமாம் தஹபீ நையாண்டி பண்ணியிருந்தால் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் لسان الميزان லிஸானுல் மீஸான் நூலைப் பாரக்க வேண்டும். அந்த நூல் தற்போது எம்மிடமில்லை.

எனினும் இமாம் தஹபீ அவ்வாறு சொல்லியிருப்பாரா? என்று நான் சந்தேகப்படுகின்றேன். அவ்வாறு அவர் சொல்லியிருந்தால் அவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரியாதவராக இருந்திருப்பதற்குச் சாத்தியமுண்டு. அல்லாஹ் மிக அறிந்தவன். விபரம் தெரியாமல் நான் எவரையும் எடை போட விரும்பவில்லை.
وأشهر قصائد ابن الفارض : التّائيّة الكبرى والميميّة فأمّا التّائيّة فهي أطولُ قصائده ، إذْ تبلغ 761 بيتا، وقد زعم أنّ النّبي صلّى الله عليه وسلّم أمره أن يُسمّيها ‘نظم السُّلوك ‘ (كشف السرِّ الغامض فى شرح ديوان ابن الفارض) للنابلسـي 1-56،
وأمّا الميميّة فهي الّتي تُسمّى ‘ الخمريّة ‘ وعدد أبياتها 41 بيتا، وهاتان القصيدتان أصرَح قصائده، وأوضحُها فى الدّلالة على مذهبه فى وحدة الوجود،
இமாம் இப்னுல் பாரிழ் றஹிமஹுல்லாஹ் அவர்களின் பாடல்களில் மிகப் பிரசித்த பெற்ற பாடல் “அத்தாஇய்யதுல் குப்றா”, “அல்மீமிய்யா” என்ற இரு பாடல்களுமேயாகும். “தாஇய்யா” என்றால் ஒவ்வோர் பாடலும் “தே” என்ற எழுத்தில் முடிவதையும், “மீமிய்யா” என்றால் ஒவ்வோர் பாடலும் “மீம்” என்ற எழுத்தில் முடிவதையும் குறிக்கும்.

“தாஇய்யா” என்ற பாடல் மிக நீளமான பாடலாகும். 761 பாடல்கள் உள்ளன. அல் ஆரிப் பில்லாஹ் இப்னுல் பாரிழ் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் கனவில் கண்டதாகவும், அவர்கள் “தாஇய்யா” பாடல் தொகுப்புக்கு نَظْمُ السُّلُوك என்று பெயரிடுமாறு அவர்களைப் பணித்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. இது பற்றிய தெளிவான தகவல் எனக்கு கிடைக்கவில்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

இந்த விபரம் இமாம் அப்துல் ஙனீ அந்நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “கஷ்புஸ்ஸிர்ரில் ஙாமிழ் பீ ஷர்ஹி தீவானில் பாரிழ்” என்ற நூல் பாகம் 01, பக்கம் 56ல் உள்ளதாக அறிகிறேன். இந்த நூல் தற்போது என்னிடமில்லை.

இப்னுல் பாரிழ் அவர்களின் “மீமிய்யா” என்ற பாடல் தொகுப்பு 41 பாடல்களேயாகும். இத்தொகுப்பு خَمْرِيَّةْ – கம்ரிய்யா என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது. அவர்களின் இவ்விரு பாடல் தொகுப்புகளும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பானதாகவே உள்ளன.

சிறிய குறிப்பு:

அறிவுகளில் தேடிப் பெறுவது – கற்றுக் கொள்வது – கடமையான அறிவு “ஷரீஆ”வின் அறிவும், “மஃரிபா”வின் அறிவுமேயாகும்.

ஒரு மனிதன் இவ்விரு அறிவையும் தேடியேனும் பெற்றுக் கொள்வது அவனின் “பர்ழ்” கட்டாயக் கடமையாகும்.
قال النبي صلى الله عليه وسلّم طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ وَمُسْلِمَةٍ
அறிவைத் தேடுவது – கற்றுக் கொள்வது முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும். “பரீழதுன்” என்ற சொல் கடமை என்பதைக் குறிக்கும்.

நாம் மிக ஆழமாகவும், விரிவாகவும் ஆய்வு செய்யாது போனாலும் மிகவும் சுருக்கமாக ஆய்வு செய்தால் “ஷரீஆ” உடைய அறிவையும், “மஃரிபா” இறை ஞான அறிவையும் தேடிப் படிப்பது கடமையாகும். கடமை என்ற அடிப்படையில் இவ்விரு அறிவுகளையும் கற்றுக் கொள்ளாமலிருப்பது மேற்கண்ட நபீ மொழியின்படி குற்றமாகும்.

“ஷரீஆ”வின் அறிவை எல்லை கடந்து கற்றுக் கொள்வது அவசியமில்லை. ஒரு முஸ்லிம் என்ன வணக்கம் செய்ய விரும்புகிறானோ அந்த வணக்கம் வீணாகாத படி அதற்கான பர்ழ், ஷர்த்து என்பவற்றை மட்டும் அறிந்தாலே போதும். அத்துடன் கடமை முடிந்து விடும்.

ஒன்றுக்கும் வழியில்லாத ஒரு முஸ்லிம் “ஹஜ்” செய்வது தொடர்பான அறிவையோ, “ஸகாத்” கொடுப்பது தொடர்பான அறிவையோ அறவே கற்றுக் கொள்ளத் தேவையில்லை. அது அவனுக்கு கடமையுமில்லை.

தொழுகையைப் பொறுத்த மட்டில் அதற்கான விதி முறைகளை வயது வந்த ஆண், பெண் அனைவரும் கற்றுக் கொள்வது அவசியம்தான்.

ஆயினும் “மஃரிபா” இறைஞானம், “தவ்ஹீத்” ஏகத்துவம், “தஸவ்வுப்” ஸூபிஸம் முதலான அறிவுகளை கற்பதும் “ஷரீஆ”வின் அறிவு போல் கடமைதான். ஆயினும் அதற்கு கட்டுப்பாடு, எல்லை என்பது கிடையாது. தாகம் தீரும் வரை குடிக்கவே வேண்டும். பசி தீரும் வரை உண்ணவே வேண்டும்.

இக்காலத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களில் 90 வீதமானோர் மேலே குறித்த இந்த அறிவுகளில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இந்நிலை மாறினால் மட்டும்தான் அவன் மனிதனாக முடியும். இன்றேல் அவன் இரண்டுகால் மிருகமேதான்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments