(اَلصَّحَابَةُ)
بفتح الصاد، في الأصل مصدر، والصّحابة بمعنى الأصحاب، واحده صاحبٌ، بمعنى الصحابيّ، وهو مَن اِجْتَمَعَ مؤمنا بالنَّبِيّ صلّى الله عليه وسلّم وَلَوْ لَحْظَةً، ومات على الإيمان وإن لَمْ يَرَهُ، كإبن أُمِّ مكتوم، ولو لم يَرْوِ عنه، وسواء كان مُمَيِّزًا او غيرَ مُمَيِّزٍ ، كمحمد بن الصديق رضي الله عنهما وعن أمثاله،
(الفتوحات ٣٤-١، الإصابة ١٠-١ ، الأذكار ٣٠)
நபீ தோழர் என்றால் யார்? என்பது தொடர்பான சிறிய, சுருக்கமான ஓர் ஆய்வு.
தொகுப்பு: மௌலவீ அலஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
اَلصَّحَابَةُ –
“அஸ்ஸஹாபது” என்ற சொல் اَصْحَابْ – அஸ்ஹாப் தோழர்கள் என்ற பொருளைக் கொண்டதாகும். இதன் ஒருமைச் சொல் صَاحِبْ – ஸாஹிப் என்று வரும்.
“ஸஹாபீ” நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர் என்று யாருக்கு சொல்ல முடியுமென்றால் அவர்களை நேரில் அவர் கண்டிருக்க வேண்டும். இது பிரதான நிபந்தனையாகும்.
பெருமானார் உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் மக்காவில், அல்லது மதீனாவில், அல்லது வேறு ஊர்களில் இருந்தும் அவர்களை நேரில் காணவில்லையாயின் அவர் “ஸஹாபீ” நபீ தோழர் ஆகமாட்டார்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் மக்கா, மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் ஸஹாபா – நபீ தோழர்கள் என்று சிலர் கருதுகிறார்கள். இது தவறு. மக்கா, மதீனா உள்ளிட்ட எந்த நாட்டில் உள்ளவராயினும் அவர்களை நேரில் காணாதவர் “ஸஹாபீ” நபீ தோழராக முடியாது.
மக்கா, மதீனாவில் உள்ளவராயினும், அல்லது வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் அவர்களின் திரு முகத்தை மட்டுமாவது ஒரு நொடி நேரம் கண்டிருந்தால் அவர் நபீ தோழர்தான். பக்கத்தில் இருந்து கண்டாலும், தூரத்திலிருந்து கண்டாலும் சரியே. அவர் தோழர்தான்.
எனினும் ஒருவர் காணக் கூடிய தூரத்திலிருந்தும் குருடு காரணமாக அவரால் காண முடியாமற் போனாலும் அவரும் “ஸஹாபீ” நபீ தோழர்தான்.
உதாரணமாக إبن اُمِّ مَكْتُوْم இப்னு உம்மி மக்தூம் என்பவர் போன்று. இவர் பெருமானாருக்கு அருகில் இருந்தவராயினும் கண் பார்வை முழுமையாக இழந்தவராதலால் அவர்களை அவர் காணமுடியாமற் போயிற்று. இவரும், இவர் போன்றவர்களும் ஸஹாபாக்கள்தான்.
ஸஹாபாக்களில் – ஹதீதுகளை அறிவித்தவர்களும் இருந்தனர். ஒரு ஹதீதை கூட அறிவிக்காதவர்களும் இருந்தனர். நபீ தோழர் என்பதற்கு ஹதீதை அறிவித்த “றாவீ” அறிவிப்பாளராக இருக்க வேண்டுமென்பது விதியல்ல.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் மக்கா, மதீனாவில் இருந்தவர்களில் அவர்களைக் கொண்டு “ஈமான்” நம்பிக்கை கொண்டும் கூட அவர்களைக் காணாதவர்கள் இருந்திருக்க சாத்திய முண்டா? என்ற கேள்விக்கு என்னால் திட்டவட்டமாக பதில் கூற முடியவில்லை.
எனினும் நான் ஹதீதுகளை ஆய்வு செய்த வகையில் அதற்கு சாத்தியமுண்டு என்று சொல்ல முடியும்.
அதெவ்வாறெனில் மக்கா, மதீனா நகர்களின் எல்லைக்குள் வாழ்ந்தவர்களில் பலர் ஈத்த மரத் தோட்டத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் முஹம்மத் அவர்கள் நபீயாக வந்துள்ளார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஒரே வீட்டிலுள்ள பலரில் ஒருவர் அவர்களைப் பார்த்து வருவோம் என்று நபீயவர்களிடம் வந்து அவர்களிடம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு தனது தோட்டத்திற்குச் சென்று நடந்த செய்தியை வீட்டிலுள்ளவர்களுக்குச் சொன்ன போது அவர்கள் அனைவரும், அல்லது அவர்களில் விரும்பியவர்கள் அவரிடம் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு எதிரிகளின் பயத்தால் வெளியே சொல்லாமல் இருந்திருப்பதற்கு சாத்தியமுண்டு.
இதற்கு மாறான கருத்துள்ளவர்கள் தமது கருத்தை ஆதாரத்தோடு எமக்கு அறிவித்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.
அக்காலத்தில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைக் காணாமல் அவர்களை நபீ என்று நம்பின பலர் மக்கா, மதீனாவிலோ, வேறு பிரதேசங்களிலோ இருந்திருப்பதற்கு சாத்தியமுண்டு என்பதற்கு மறுக்க முடியாத, என்னால் கூற முடிந்த ஆதாரம் பின்வருமாறு,
பெருமானாரின் காலத்தில் சிரியாவில் வாழ்ந்த ஸூபீ மகான் இமாம் உவைஸுல் கர்னீ றஹிமஹுல்லாஹ் அவர்களைக் கூறலாம். தாயின் பராமரிப்பில் இருந்த காரணத்தால் பெருமானார் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களைக் காண அவர்களால் வர முடியாமற் போனது. ஆனாலும் உவைஸுல் கர்னீ பற்றி நபீ அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் ஸஹாபாக்களுக்கு அறிவிப்புச் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பெருமானாரின் காலத்தில் வாழ்ந்தவர்களாயினும் “தாபியீன்”களிலேயே சேர்க்கப்படுகிறார்கள்.
அதேபோல் எனக்கு தற்போது 77 வயது முடிகிறது. இன்னும் சில நாட்களில் – 05-02-2021 அன்று 78ம் வயதில் கால்பதிக்கவுள்ளேன். காத்தான்குடியில் இத்தனை வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். ஆயினும் நான் கூறிய ஞானக் கருத்துக்களை முழு மனதோடு ஏற்றுக் கொண்ட சிலர் இதுவரை என்னை ஒரு வினாடி நேரமேனும் காணாதவர்களாக உள்ளார்கள். இதுவே நம்பமுடியாத உண்மை எனப்படும். இதை நிறுவ பல ஆதாரங்கள் உள்ளன. அம்பட்டன் (ஐம்பட்டன்) குப்பையை கிளறினால் அத்தனையும் மயிரே என்று முதியவர் சொல்வர். அதனால் கிளறவில்லை.
தாம் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாது போனாலும் அதை ஏற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கும், ஏற்றுக் கொண்டவர்களுக்கும் சதி செய்யும் “பிர்அவ்ன்” வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். இறுதி நாள் வரை இருப்பார்கள். “எதார்த்த வாதி பொது சன விரோதி” இதுவே தத்துவம்.
அந்தகர்கள் தவிர பெருமானாரை நேரில் கண்ட விசுவாசிகள் அனைவரும் ஸஹாபாக்கள் – நபீ தோழர்கள்தான். இதற்கு வயதெல்லை விதியல்ல.
இனிய இஸ்லாம் என்றும், இலகு இஸ்லாம் என்றும் சொல்லப்படுகின்ற இஸ்லாம் மார்க்கம் இரக்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனிய மார்க்க மட்டுமன்றி இரக்க மார்க்கமுமேயாகும்.
நபீயின் ஒளி முகத்தை, அவர்களின் திரு முகத்தை, அருள் முகத்தை கண்டவர்கள் அனைவரும் பாக்கியவான்களாக வேண்டும் என்ற பரந்த நோக்கத்திற்காக காண்பவருக்கு வயதெல்லையை இஸ்லாம் விதிக்கவில்லை. “பாலிக்غ” வயது வந்தவராயிருக்க வேண்டுமென்றோ, “தம்யீஸ்” எதையும் பிரித்தறியும் வயதெல்லையை அடைந்திருக்க வேண்டுமென்றோ கூறவில்லை.
நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “மாரிய்யதுல் கிப்திய்யா”வின் மகன் ஆவார். இவர் மதீனா நகரில் பிறந்தார். மரணிக்கும் போது 16 மாதம் தான். இவரும் ஸஹாபாக்கள் – நபீ தோழர்களில் சேர்ந்து விடுகிறார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை கனவில் காண்பதும், அவர்களின் மறைவுக்குப் பின் விழிப்பில் காண்பதும் பெரும் நற்பாக்கியமேயாகும். ஆயினும் அவர்களை கனவில் கண்டவர்கள் நற்பாக்கியமுள்ளவராயினும் அவர் நபீ தோழராவாரா என்ற கேள்விக்கு ஆவார் என்று நான் பதில் கூற விரும்பினாலும் கூட என்னால் அவ்வாறு எழுத்து மூலம் கூற முடியாமைக்கு வருந்துகிறேன்.
ஸெய்யிதுனா அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
لَوْ حُجِبَ عَنِّيْ رَسُوْلُ اللهِ طَرْفَةَ عَيْنْ
مَا كُنْتُ مِنْ زُمْرَةِ الْإِسْلَامِ زُمْرَةِ زَيْنْ
(கண் இமைக்கும் நேரமேனும் றஸூலுல்லாஹ் அவர்களை நான் காணவில்லையாயின் – எனக்கும், அவர்களுக்கும் இடையில் திரை ஏற்பற்பட்டால் நான் அழகிய இஸ்லாம் மார்க்கத்தில் இருக்க மாட்டேன்.)
இது மிகவும் காரசாரமான கவி. நபீயின் காதல் சொன்ன கவி. மனக் கண் செயல் படாத “ஷரீஆ”வின் உலமாக்கள் – உலக மக்கள் – பிழை என்றும் கூறும் கவி. காதல் பொங்கி அவர்களை அறியாமல் வெளிவந்த கவி. நபீ பெருமான் மறைந்த பின் அவர்களை நேரில் கண்டு, “இஷ்க்” என்ற பேரின்பக் காதலை கட்டுப்படுத்த முடியாமற் போன பல நபீ காதலர்கள் “ஆஷிகுர் றஸூல்”கள் அவர்களைக் கண்ட கண்கள் இன்னொன்றைக் காணக் கூடாதென்ற ரோசத்தால் தமது கண்களைப் பிடுங்கி எறிந்த நபீ காதலர்கள் உலகில் உள்ளனர். இதே நேரம் இதற்கு எதிராக அவர்களைக் கனவில் கண்டவர்களுக்கு முர்தத் – காபிர் என்று தீர்ப்பு வழங்கும் அந்தகர்களான உலமாக்களும் உள்ளனர்.
இதே போல் பணக்காரனுக்கும், பதவியிலுள்ளவர்களுக்கும் ஒரு நீதியும், ஏழைகளுக்கு இன்னொரு நீதியும் சொல்பவர்களும் உள்ளனர். இவ்வாறு பலருளர். இதே நேரம் நீதி மீறாது, பாரபட்சம் காட்டாத, எவருக்கும் துரோகம் செய்யாத, தமது உயிரை விடப் பெருமானாரை நேசிக்கின்ற உலமாஉகளும் உள்ளனர்.
اَللّهم أَعْمِ عَيْنَيْ من اَفْتَى بِرِدَّةٍ من رأى حبيبَك سيّدَ الوجود محمدا صلى الله عليه وسلّم في منامه وهو في مدينة حبيبك المدينة المنورة المقدسة، وأطفِئْ ياجبّار ياقهّار نارا تُحرق قلب الْمُبَشّرِ بِبُشْرى الرّسولِ ”من رآني في المنام فقد رآني حقّا”، فإنّ الشيطان لا يَتَمَثّل بي، وطُوْبَى لمن رآني في المنام، بإظهار معجزة من معجزاتِ أوّل قابل لِلتّجلّي من الحقيقة الكلّيّة ضدّ المُفتي لكي يعتبر به غيره، من العلماء الذين يلعبون بالأولياء كما يلعب الصّبيان بالكرة، والشيطان بمن لم يتشرّع ولم يتحقّق منهم، وأنت أحكم الحاكمين وخير الماكرين، وقولك حقٌّ ”إنّ بطش ربّك لشديد” وإنّ الله لَأَغْيَرُ،
واللهِ واللهُ يُعمِي عينَ مَنْ حَكَمَا
بالكُفْرِ لِي ولِقَوْمٍ آمَنُوا مَعَنَا