Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூறதுல் இக்லாஸ்

ஸூறதுல் இக்லாஸ்

(سورة الإخلاص)
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
سُئل الإمام ابن حجر الهيتمي عن قرائة سورة الإخلاص مأة مرّة، هل وَرَدَ لِقِرائة ذلك القدر ثوابٌ بخصوصه أم لا؟
الجواب لهذا السؤال – نعم، وَرَدَ في ذلك ثوابٌ بخُصُوصه، منه أخرَجه ابن عَدِيٍّ والبيهقيُّ عن أنس بن مالك رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم أنَّه قال ”من قرأ قل هو الله أحد مأَة مرّةٍ غفر الله له خطيئةَ خمسين عاما ما اجْتَنَبَ خِصالًا أربعًا، الدِّمَاءَ وَالأموالَ والفُروجَ والأشربَةَ،
ومنها ما أخرجه الطبراني عن فيروز عن النّبيّ صلّى الله عليه وسلم أنّه قال ‘ من قرأ قل هو الله أحد مأَة مرّةٍ في الصلاة وغيرها كَتَبَ الله براءةً من النّار،
وأخرجه البيهقي عن أنس مرفوعا”من قرأ قل هو الله أحد في يوم مأَتَي مرّةٍ غفر الله ذنوبَ مأتَيْ سَنَةٍ،
وأخرجه ابن عديٍّ والبيهقيُّ عن أنس مرفوعا أيضا ” من قرأ في يوم قل هو الله أحد مأتَيْ مرّةٍ كتَبَ اللهُ اَلْفًا وخَمْسَمِأَةِ حسنةٍ، إلّا أن يكون عليه دينٌ،
وأخرجه الخرائطي في فوائده عن حذيفة مرفوعا ‘ من قرأ قل هو الله أحد اَلفَ مرّةٍ فقد اشْتَرَى نفسَه من الله،
”ஸூறதுல் இக்லாஸ்” என்று அழைக்கப்படுகின்ற “குல்ஹுவல்லாஹு அஹத்” என்ற அத்தியாயத்தை குறிப்பிட்டு 100 தரம் ஓதுவதற்கு விஷேட நன்மை உண்டா? என்று இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது பின்வருமாறு அவர்கள் பதில் கூறினார்கள்.

ஆம். அவ்வாறு குறிப்பிட்டு ஓதினால் அதற்கு விஷேட நன்மை உண்டு.
01. யாராவது “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை 100 தரம் ஓதுவானாயின் அவன் ஐம்பதாண்டுகள் செய்த பாவத்தை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அவன் நான்கு விடயங்களை கட்டாயம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அவை கொலை செய்தல், பிறர் சொத்தை அபகரித்தல், விபச்சாரம் செய்தல், மது பானம் அருந்துதல். என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம் – இப்னு அதிய், பைஹகீ
அறிவிப்பு – அனஸ் றழியல்லாஹு அன்ஹு
02. யாராவது “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை தொழுகையில் அல்லது மற்ற நேரம் 100 தரம் ஓதுவானாயின் அவனுக்கு நரகிலிருந்து விடுதலையை அல்லாஹ் வழங்குகிறான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம் – தபறானீ
அறிவிப்பு – பைறூஸ் றழியல்லாஹு அன்ஹு
03. யாராவது ஒரு நாளில் 200 தரம் “குல்ஹுவல்லாஹு அஹத்” அத்தியாயத்தை ஓதுவானாயின் அவன் 200 வருடங்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – பைஹகீ
அறிவிப்பு – அனஸ் றழியல்லாஹு அன்ஹு
04. யாராவது “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை 200 தரம் ஓதுவானாயின் அல்லாஹ் அவனுக்கு 1500 நன்மைகளை பதிவு செய்கிறான். அவன் கொடுக்க வேண்டிய கடன் இருந்தால் தவிர என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – இப்னு அதிய்யா, பைஹகீ
அறிவிப்பு – அனஸ் றழியல்லாஹு அன்ஹு
05. யாராவது 50 தரம் “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை ஓதுவானாயின் அல்லாஹ் அவனின் ஐம்பது வருட பாவங்களை மன்னித்து விடுகிறான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – இப்னு நஸ்ர்
அறிவிப்பு – அனஸ் றழியல்லாஹு அன்ஹு
06. யாராவது “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை 1000 தரம் ஓதுவானாயின் அவன் அல்லாஹ்விடமிருந்து தன்னை வாங்கிக் கொண்டான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம் – அல்கறாயிதீ
அறிவிப்பு – ஹுதைபா றழியல்லாஹு அன்ஹு
“குல்ஹுவல்லாஹ்” அத்தியாயம் ஓதுவது தொடர்பாக ஆறு ஹதீதுகள் கூறப்பட்டுள்ளன. இவையாவும் ஹதீதுகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இவற்றில் சில “ழயீப்” பலம் குறைந்தவையாக இருப்பதற்கும் சாத்தியமுண்டு. அவ்வாறு இருந்தாலும் கூட அவற்றின் படி “அமல்” செய்வது ஆகுமென்றே இமாம்கள் குறிப்பாக இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
குறித்த ஹதீதுகள் யாவும் ஒரே நேரத்தில் சொல்லப்பட்டவையல்ல. இதனாலேயே சொல்லப்பட்ட எண்ணிக்கைகளில் மாற்றம் காணப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஒன்றுமே இல்லை.
இவை பல சந்தர்ப்பங்களின் போது நபீ பெருமானிடம் கேள்வி கேட்ட பலரின் மன நிலைகளைக் கவனித்துச் சொல்லப்பட்ட பதில்களாக இருப்பதற்கு சாத்தியமுண்டு. ஆகையால் நபீ பெருமானின் ஒரு ஹதீது இன்னொரு ஹதீதுக்கு முரணாகிறதென்று யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் ஒருவர் வந்து اَيُّ الْاَعْمَالِ اَفْضَلُ வணக்கங்களில் எது சிறந்தது என்று கேட்ட போது ஒருவருக்கு தொழுகையை அதற்குரிய நேரத்தில் – اَلصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا ஆரம்ப நேரத்தில் தொழுவதென்றும், அதே கேள்வியை கேட்ட இன்னொருவருக்கு بِرُّ الْوَالِدَيْنِ பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றும், அதே கேள்வியை கேட்ட இன்னொருவருக்கு اِطْعَامُ الطَّعَامْ உணவளித்தல் என்றும் நபீ பெருமான் அவர்கள் ஒரே கேள்விக்கு மாறுபட்ட பதில்கள் சொன்னதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
நபீ பெருமானின் அகமியம், அவர்களின் அந்தரங்கம் புரியாத வஹ்ஹாபிகள் போன்றவர்கள் ஒரே கேள்விக்கு ஒரே பதில் தானே சொல்ல வேண்டும், ஒன்றுக்கு மற்றது முரணான பதில் கூறுவது எவ்வாறு பொருத்தமாகும் என்று யோசித்துவிட்டு “ஹதீது” ழயீப் பலம் குறைந்ததென்று கூறிவிட்டு போய் விடுவார்கள். இதற்கு சரியான பதில் உண்டு. “ஹயாத்” இருந்தால் பதில் வராமல் போகாது. இன்ஷா அல்லாஹ்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments