Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“விலாயத்” ஒலித் தனம் பெற்றவர் வலீதான்! “வலீ” என்பது அல்லாஹ்வின் திரு நாமமாகும்.

“விலாயத்” ஒலித் தனம் பெற்றவர் வலீதான்! “வலீ” என்பது அல்லாஹ்வின் திரு நாமமாகும்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
 
يقول أبو العباس المرسي رضي الله عنه تلميذُ أبى الحسن الشّاذلي رضي الله عنه، (قال لي الشّيخ أبو الحسن، يا أبا العبّاس! ما صحبتُك إلّا لتكون أنت أنا، وأنا أنت، ) طبقات الشعراني، ص 2-14،
ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அபுல் ஹஸன் அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் மாணவரும், கலீபாவுமான அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களை (யா அபல் அப்பாஸ் என்றழைத்து நீங்கள் நானாகவும், நான் நீங்களாகவும் இருப்பதற்காகவே உங்களை நேசித்தேன்) என்று கூறியதாக அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: தபகாதுஷ்ஷஃறானீ, 02-14)

هذا الكلام إعتراف من المرسي بأنّه يسيرُ على قدمِ أستاذه، فهُما من عقيدة واحدة، وهذا بَدَهِيٌّ،
இமாம் அபுல் ஹஸன் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாதுலிய்யா தரீகாவின் தாபகராவார்கள். தலை சிறந்த பிரசித்தி பெற்ற அறிஞரும், அவர்களின் காலத்து குத்பும் ஆவார்கள்.
 
வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை கிள்ளித் தராமல் அள்ளித் தந்த ஞான மகான். ஞானத்தின் பெருங்கடல். ஒரு நொடி நேரம் கூடத் தவறாமல் “ஸெய்யிதுல் வுஜூத்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை மனக்கண்ணாலன்றி தலைக் கண்ணால் தரிசித்து வாழ்ந்த மகான். الفناء فى الرسول – றஸூல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களில் “பனா” லயித்துப் போன ஒரு கட்டத்தில்
لَوْ حُجِبَ عَنِّيْ رَسُوْلُ اللهِ طَرْفَةَ عَيْنٍ – مَا كُنْتُ مِنْ زُمْرَةْ الْإِسْلَامِ زُمْرَة زَيْنٍ
ஒரு நொடி நேரமேனும் எனக்கும், நபீ பெருமானுக்குமிடையில் திரை ஏற்பட்டால் நான் புனித இஸ்லாம் மார்க்கத்தில் இருக்க மாட்டேன் என்று கூறிய இறை ஞானியும், இறை நேசருமாவார்கள்.
 
இவர்கள் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் போல் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பயமின்றி பட்டவர்த்தனமாக கூறிய பெரும் மேதையாவார்கள்.
 
இவர்களின் வரலாறையும், இவர்கள் பேசிய “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களையும் தனியான நூல் ஒன்றில் எழுத வாசக நேயர்கள் எனக்காக “துஆ” செய்ய வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். إن شاء الله
 
இந்த மகான் தங்களின் முரீதும், கலீபாவுமாகிய ஸெய்யிதுனா அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் மேற்கண்டவாறு சொன்னது அவர்கள் மீது இவர்களுக்கு இருந்த மஹப்பத்தை – ஆன்மீக அன்பை வெளிப்படுத்திக் காட்டுகிறது.
அபுல் அப்பாஸ் முர்ஸீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொள்கையில் தங்களின் ஞானகுரு அவர்களை நூறு வீதமும் பின்பற்றியவர்கள் என்பதை அவர்களின் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. நீங்கள் நான்தான், நான் நீங்கள்தான் என்று குரு நாதர் சிஷ்யனுக்குச் சொன்ன இந்தச் சுபச் செய்தியை சிஷ்யர் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் மூலம் அறிய முடிகிறது.
 
சிஷ்யன் குருவை வென்ற பாணியில் ஞானக் கருத்துக்களை கூறியிருப்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. உள்ளத்தில் கோடை கால இடி முழக்கம் போல் உணர்த்துகிறது. பின்வரும் வசனங்களைப் பாருங்கள். இன்றிருக்கும் உலமாசபை இந்த நாதாக்களின் காலத்தில் இருந்திருக்குமாயின் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவர் தனது காலத்தில் வாழ்ந்த ஆயிரக் கணக்கான ஸூபீகளை கொன்றொழித்தது போல் இவர்களின் பத்வா பல மகான்களை கொன்று குவித்திருக்கும்.
 
قال الإمام أبو العباس المرسي، لوكان الحقُّ سبحانه وتعالى يُرضيه خِلافُ السُّنّة لَكَانَ التَّوجُّهُ فى الصلاة إلى القطب الغوث أولى من التوجُّهِ إلى الكعبة) طبقات الشعراني 2-14،
(வழமைக்கு மாறான ஒன்றை அல்லாஹ் பொருந்திக் கொள்வான் என்றிருந்தால் தொழுகையில் காலத்தின் “குத்பை” முன்னோக்குவது மக்காவில் உள்ள “கஃபா”வை முன்னோக்குவதை விட சிறந்ததாகிவிடும்) என்று கூறியுள்ளார்கள்.
 
ஸுப்ஹானல்லாஹ்! ஒரு “குத்பு”டைய மகிமையை எவ்வாறு எடுத்தியம்பியுள்ளார்கள் ஒரு மகான் என்றால் இதைப் பார்க்கும் போது உள்ளம் நடுங்குகிறதல்லவா? மகான் அபுல் அப்பாஸ் அவர்களை சாம்பல் முப்தியின் காலத்தில் தோன்றாமல் அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான்.
 
இமாம் முர்ஸீ நாயகம் அவர்கள் “கஃபா” வை முன்னோக்கித் தொழாமல் காலத்தின் குத்பை முன்னோக்கித் தொழுவது சிறந்தது என்றதால் ஷரீஆவை தூக்கியெறிந்துவிட்டு வாழவேண்டுமென்று சொல்லவில்லை. எனினும் இவ்வாறு சொன்னதன் மூலம் ஒரு “குத்புஸ்ஸமான்” அவர்களின் சிறப்பையே எடுத்துக் கூறியுள்ளார்கள்.
 
وَقَالَ أَيْضًا لَوْ كُشِفَ عَنْ حقيقةِ وَلِيٍّ لَعُبِدَ مِنْ دُوْنِ اللهِ، لأنّ أوصافه من أوصافه، ونُعوته من نعوته، (إيقاظ الهمم، ص 199، الطبقات الكبرى – 132)
(ஒரு வலீயின் திரை நீக்கப்பட்டால் அல்லாஹ் வணங்கப்படாமல் அந்த வலீதான் வணங்கப்பட்டிருப்பார். ஏனெனில் அவரின் தன்மைகள் அல்லாஹ்வின் தன்மைகளாகும்) ஆதாரம்: ஈகாழுல் ஹிமம், பக்கம் 199, தபகாதுல் குப்றா – பக்கம் 132,
ஸுப்ஹானல்லாஹ்! ஒரு வலீயின் மகத்துவம் இத்தகையதா? தலையில் கை வைத்து ஒப்பாரி வைப்பார்கள் ஒன்றுமே புரியாத புல்லுருவிகள். பத்தாயிரம் பத்வா இதுவரை பறந்திருக்கும்.
 
வலீமாரில் கை போடவோ, வாய் போடவோ வேண்டாம். நோயாளி வைத்தியனைச் சந்திப்பது கடமை.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments