தொகுப்பு – மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)
جبل سرنديب (بالإنجليزية: Adam’s Peak) ويُطلق عليه أيضاً اسم جبل الرحون أو جبل آدم. جبل في سريلانكا يبلغ ارتفاعه 2243 متر فوق مستوى سطح البحر ، يقع تحديداً في المرتفعات الوسطى في مقاطعة نوارا اءليا في جنوب غرب سريلانكا، حيث يبعد هذا الجبل حوالي ثمانية عشر كيلومتراً شمال شرق راتنابورا.
المقصود هنا ليس جبلاً بل هي سلسلة جزر وجبال تتكون منها جمهورية سيرلانكا، وتأتي أهمية هذا الجبل أو الجبال الموجودة في سيرلانكا أو سرنديب – كما كان يسمونها العرب في ذلك الوقت – لأن بعض المرويات المسيحية والإسلامية تذكر أن آدم عندما هبط من الجنّة هبط فوق تلك الجبال.
يتميز جبل سرنديب بامتلاكه غطاء نباتي كثيف مع أشجار كبيرة وأزهار بارزة وبساتين فاكهة نادرة، ومعظم المنطقة المحيطة به هي بمثابة محمية جبلية ينتشر فيها العديد من الفهود والفيلة، كما وتمتاز المنطقة باحتوائها على العديد من الأحجار الكريمة مثل الياقوت الأزرق والزمرد.
كما يمتاز جبل سرنديب بأن قمته المخروطية تنتهي بمنصة مستطيلة الشكل تبلغ مساحتها 22×7 متراً تقريباً، حيث يوجد فجوة كبيرة تشبه القدم البشرية، ويتم زيارة هذه القمة من قبل العديد من الزوار كل عام، وهنالك سلاسل ثقيلة على جهة الجبل الجنوبية الغربية والتي يُعتقد بأنه تم وضعها من قبل الإسكندر الأكبر.
وصف ابن بطوطة جبل سرنديب وصفاً دقيقاً جميلاً في كتابه (تحفة النظار في غرائب الأمصار) حيث قال: “هو من أعلى الجبال الموجودة في الدنيا، ولقد رأيناه من البحر ونحن في السفن، وكان بيننا وبينه الكثير ومسيرة تسعة أيام. ولما صعدنا على قمة الجبل كان السحاب تحتنا وقد حال بيننا وبين إمكانية رؤية أسفل ذلك الجبل، وكان مغطىً باللون الأخضر لما فيه من أشجار دائمة الخضرة، وكان يملؤه الكثير من الأزهار والورود وخصوصاً اللون الأحمر، فيه الكثير من الماء النقي العذب البارد المثلج، وتستمتع عيناك عند الصعود لهذا الجبل”. من هنا نعرف أن سرنديب اسم عربي أطلقه العرب على تلك الدولة بمكوناتها من الجبال والجزر.
அன்பிற்குரிய இலங்கை வாழ் சகோதர, சகோதரிகளே!
இன்று நமது நாடான இலங்கை நாட்டின் 73வது சுதந்திர தினமாகும். இத் தினத்தைக் கொண்டாடும் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் நாட்டுப் பற்றுடைய பலர் இலங்கை நாட்டின் தேசியக் கொடி – சிங்கக் கொடியேற்றி நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் நன் நாளாகும்.
இலங்கை நாடு உலக நாடுகளில் மிகச் சிறந்த வளமிக்க, மனதுக்கு அமைதி தருகின்ற அருள் நிறைந்த நாடாகும். இந் நாட்டில் எது இல்லையென்ற கேள்விக்கே இடமில்லை.
சில வருடங்களுக்கு முன் இலங்கை நாட்டிலிருந்து குடும்ப சகிதம் இறாக் நாட்டின் தலை நகர் பக்தாத் நகருக்குச் சென்ற பெரும் கோடீஸ்வரர் ஒருவர் அங்கு இலங்கை நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த மதிப்பிற்குரிய தூதுவர் பாறூக் அவர்களுக்கு ஜோர்தானில் இருந்து போன் பண்ணி நான் தற்போது பக்தாத் நகருக்கு வாகனத்தில் – கார் – வந்து கொண்டிருக்கிறேன். இன்றிரவு உங்கள் வீட்டிலேயே நானும், எனது குடும்பமும் சாப்பிட வேண்டும் என்று கூற தூதுவர் அவரிடம் என்ன கறி செய்து வைக்க வேண்டும் என்று கேட்க எனக்கு ஒரு கறியும் தேவையில்லை. முருங்கலைச் சுண்டல் மட்டும் இருந்தால் போதும் என்று சொல்லியுள்ளார்.
தூதுவர் முருங்கை இலை தேடி பக்தாத் நகரை வடித்துப் பார்த்தார். எங்குமே முருங்கை இலை கிடைக்கவில்லை. பக்தாதில் இருந்து சிரியா செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்து சுமார் 52 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து எடுத்து வந்து சுண்டல் செய்து வைத்தார். அன்று நானும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், இன்னுமொரு நண்பரும் தூதுவர் இல்லத்தில் தங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குட்டிக் கதையை நான் இங்கு ஏன் எழுதினேன் என்றால் நமது இச்சிறிய நாட்டில் எல்லா வளமும் உண்டு என்பதை பெருமையுடன் எடுத்துக் காட்டுவதற்கேயாகும். முருங்கை இலை நமது நாட்டில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். நடு நிசியில் கூட பெற்றுக் கொள்ளலாம். இந்நாட்டின் வளத்தை என்னென்று வருணிப்பது?
ஆதிபிதா ஆதம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் காற்பாதம் கல்லில் பதிந்துள்ள நாடல்லவா? பத்று ஸஹாபாக்களிற் சிலர் அடக்கம் பெற்றுள்ள அருள்மிகு நாடல்லவா? நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வலீமாரின் திருவுடல்களைத் தாங்கி நிற்கும் நாடல்லவா? வலீகட்கரசர் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அருட்பார்வைக்கு இலக்கான நாடல்லவா? உலகம் போற்றும் ஹதீஸ் கலை மேதை இமாம் புகாரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பேரில் மௌலித் எழுதிய மகான் பிறந்து வாழ்ந்த நாடல்லவா? அற்புதமான சுடு நீர் கிணறுகளை இரு இடங்களில் கொண்ட நாடல்லவா? “கறாமாத்” கடல் ஷாஹுல் ஹமீத் பாதுஷா றஹிமஹுல்லாஹ் அவர்களின் காலடி பதிந்த நாடல்லவா? உலக நாடுகளில் தரமான ஏலம், கராம்பு, கறுவா, தேயிலை முதலான மணப் பொருட்கள் விளையும் நாடல்லவா? விலையுயர்ந்த பல் வகை இரத்தினக்கற்கள் விளையும் நாடல்லவா? உலக நாடுகளில் மிக அரிதாக கிடைக்கின்ற அன்னாசி, றம்புட்டான், துரியன் பழங்கள் தாராளமாக கிடைக்கும் நாடல்லவா? எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், ஆய்வாளர்கள், ஆன்மீகவாதிகளைக் கொண்ட நாடல்லவா? இஸ்லாமிய ஸூபிஸ தத்துவத்தை பகிரங்கமாக கூறி பல்லாயிரம் பேர்களை ஸூபீகளாக மாற்றிய நாடல்லவா?
இத்தனை சிறப்புக்களையும், இன்னுமிவை போன்ற சிறப்புக்களையும் தன்னகத்தே வைத்திருக்கும் இந்நாட்டின் சிறப்பை என்னென்று சொல்வது? இத்தகைய சிறப்புகளைக் கொண்ட நாடு எமது நாடாக இருப்பது எமக்கு இறைவன் அருளிய பெரும் பாக்கியமாகும்.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட இந்நாட்டில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்களின் சுதந்திரத்திலோ, உரிமைகளிலோ அரசாங்கமே கை வைக்காமல் இருக்கும் நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மட்டும் ஸூபிஸ சமூகத்திற்கு காபிர்கள் – மதம் மாறியவர்கள் என்று பத்வா வழங்கி ஸூபிஸ சமூகத்தின் மத, பேச்சு, எழுத்து சுதந்திரங்களுக்கும், உரிமைகளுக்கும் தடை விதித்திருப்பதும், ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய வேண்டுமென்று எழுத்து மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்திருப்பதும் கண்ணீர் வடிக்க வேண்டியவையாகும்.
இன்று ஸூபிஸ சமூகம் தேசியக் கொடியேற்றி இன்றைய தினத்தை கொண்டாடினாலும் உள்ளம் அழுதவர்களாகவே கொண்டாடுகிறார்கள். மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தி மனித உரிமைகளை மீறிச் செயல்படும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமமென்றும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகளும், தரீகா, அவ்லியாஉகள், ஷெய்குமார்களுக்கு ஆதரவானவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டுமென்றும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றேன்.