தொகுப்பு: ஞானபிதா, ஷெய்குனா மௌலானா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
قال الغزالي: فمن عرف الحقَّ رآه فى كل شيئ، إذ كلُّ شيئ فهُو منه وإليه وبه وله، فهو الكلُّ على التحقيق، (الإحياء 1-254)
وقال أيضا – العارفون بعد العُروج إلى سماء الحقيقة اتَّفَقُوا على أنّهم لم يَرَوا فى الوجود إلّا الواحد الحقّ، ولكن منهم من كان له هذه الحالةُ عِرفانا علميًّا، ومنهم من صارَ له هذه ذوقا وحالا، وانْتَضَتْ منهم الكثرةُ بالكليّة، واسْتَغْرَقُوا بالفردانيّة المحضة، فَلَمْ يبقَ عندهم إلّا الله، فسُكرُوا سكرا وقَعَ دُونه سلطانُ عقولهم، فقال بعضُهم أنا الحقُّ، وقال الآخَرُ سُبحاني ما أعظم شأني، وقال الآخرُ ما فى الجبّة إلا الله، (مشكاة الأنوار للغزالي، ص 122)
ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(எவர் அல்லாஹ்வை அறிந்தாரோ அவர் சகல வஸ்த்துக்களிலும் அவனைக் கண்டு கொள்வார். ஏனெனில் அனைத்து வஸ்த்துக்களும் அவனில் நின்றும் உள்ளவையே! அவனளவில் செல்பவையே! அவனைக் கொண்டு நிலைபாடனவையே! அவனுக்காக உள்ளவையேயாகும். எதார்த்தத்தில் அனைத்தும் அவனே!)
ஆதாரம்: இஹ்யாஉ உலூமித்தீன் 01-254
ஆசிரியர்: இமாம் ஙஸ்ஸாலீ
மேலும் இமாம் ஙஸ்ஸாலீ பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(இறை ஞானிகள் “ஹகீகத்” எதார்த்தம் என்ற வணக்கத்திற்குச் சென்றபின் அவர்கள் இவ்வுலகில் அல்லாஹ் தவிர வேறொன்றையும் காணமாட்டார்கள் என்ற விடயத்தில் ஒரே கருத்துள்ளவர்களாகவே உள்ளனர். அவர்களில் சிலருக்கு இந்நிலை அறிவு, ஞான அடிப்படையில் கிடைக்கும். இன்னும் சிலருக்கு அனுபவ ரீதியில் கிடைக்கும். அவர்களிடம் அதிகம் அல்லது பலது என்பது இல்லாமற் போய்விடும். அவர்கள் சுத்தமான தெளிவான “ஒன்று” என்ற தத்துவத்தில் மூழ்கி விடுவார்கள். அல்லாஹ் மட்டுமே அவர்களுக்கு தோற்றுவான். அவன் தவிர வேறொன்றையும் அவர்கள் காணமாட்டார்கள். “அக்ல்” என்ற அரசனை விட்டும் அவர்கள் மெய்ஞ்ஞான போதையில் மூழ்கிவிடுவார்கள். அப்போது அவர்களிற் சிலர் “அனல் ஹக்” நானோ மெய்ப் பொருள் என்றும், இன்னும் சிலர்
سُبْحَانِيْ مَا أَعْظَمَ شَأْنِيْ
நானே துய்யவன். என் விஷயம் என்னே வலுப்பமானது என்றும், வேறு சிலர்
مَا فِى الْجُبَّةِ إِلَّا الله
எனது “ஜுப்பா”வில் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றுமில்லை என்றும் சொல்வார்கள்) என்று கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: மிஷ்காதுல் அன்வார்
பக்கம்: 122
ஆசிரியர்: இமாம் ஙஸ்ஸாலீ
இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு ஞான மகான் ஆவார்கள். அறிவுலகில் அவர்களை அறியாத எவரும் இருக்க முடியாது. ஸூபிஸக் கலையில் மிகப் பிரசித்தி பெற்ற ஒரு மகானாக மலர்ந்தார்கள். இவர்களால் “இஹ்யாஉ உலூமித்தீன்” என்ற ஸூபிஸக் கலையில் எழுதப்பட்ட நூலை வாசிக்காத எந்த ஓர் அறிஞனும் உலகில் இருக்க முடியாதென்றே சொல்ல வேண்டும்.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை தங்களின் “இஹ்யா” என்ற நூலிலும், “மிஷ்காதுல் அன்வார்” என்ற நூலிலும் தெளிவாகவும், هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்று துணிச்சலாகவும் எழுதிய ஒரு மகான் ஆவார்கள்.
ஒரு காலத்தில் இவர்களின் “இஹ்யா” என்ற நூல் இலங்கை நாட்டிலும், வெளிநாடுகளிலுமுள்ள அறபுக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு கற்றுக் கொடுக்கப்பட்ட நூலாகும்.
வஹ்ஹாபிஸக் கொள்கையுள்ள மகான்கள் வந்த பிறகுதான் அவர்களைப் பற்றி தவறான கருத்துக்கள் மக்களின் உள்ளங்களில் விதைக்கப்பட்டன.
1949ம் ஆண்டு நான் அரசாங்கப் பாடசாலையில் முதலாம் வகுப்பு மாணவனாக காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் தினமும் காலையில் நடைபெறுகின்ற காலைக் கூட்டத்தில் பின்வரும் பாடல் பாடப்பட்ட பின்புதான் வகுப்புகள் ஆரம்பமாகும்.
نَوِّرْ إِلَهَ السَّمَا قَلْبَ الْغَرِيْبِ كَمَا – نَوَّرْتَ قَلْبَ إِمَامِ النَّاسِ غَزَّالِيْ
يَا رَبِّ أَعْطِ لَنَا عِلْمًا وَفَهْمًا كَمَا – أَعْطَيْتَ يَا رَبَّنَا لِلشَّيْخِ غَزَّالِيْ
வானத்தின் நாயனே! இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் உள்ளத்தை அறிவு ஞானம் மூலம் நீ ஒளிரச் செய்தது போல் இந்த ஏழையின் உள்ளத்தையும் ஒளிரச் செய்வாயாக!
இறைவா! இமாம் ஙஸ்ஸாலீ அவர்களுக்கு அறிவு ஞானத்தையும், விளக்கத்தையும் வழங்கியது போல் மாணவர்களான எங்களுக்கும் வழங்குவாயாக!
என்ற இந்த பக்திப் பாடல் பாடப்படாமல் எந்த ஓர் அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளிலும் வகுப்பு ஆரம்பிக்கப் படாத ஒரு காலம் இருந்தது.
வழி கெட்ட வஹ்ஹாபிகளின் திரு விஜயத்தின் பின் இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு போயிற்று. இதற்கான காரண கர்த்தாக்கள் வஹ்ஹாபிகளும், அவர்களுக்குப் பயந்து வாழும் “லேபல் ஸுன்னீ”களுமேயாவர். இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் விடயத்தில் வஹ்ஹாபிகளின் “பத்வா” அவர்கள் “காபிர்” – “முர்தத்” என்பதேயாகும்.
இதற்குக் காரணம் அவர்கள் தங்களின் மேற்கண்ட நூல்களில் நானும், என்னுடனுமுள்ள மௌலவீமார்களும் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எழுதியிருப்பதேயாகும். குறிப்பாக هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதேயாகும்.
அன்புக்குரிய பொது மக்களே!
“ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்று அறிஞர்களால் பாராட்டப்பட்ட, பட்டம் சூட்டப்பட்ட இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை காபிர், முர்தத் என்று சொல்லி நீங்கள் காபிர்களாகியும், நரக வாதிகளாகியும் விடாதீர்கள். ஸூபிஸ ஞானத்தை தேடிப்படித்து இறை நம்பிக்கையை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ
அவர்களுக்கு “கல்பு” உள்ளங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு சத்தியத்தை விளங்கமாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு எதார்த்தத்தைப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றைக் கொண்டு சரியானதைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவர்களாவர். இல்லை. அவற்றைவிட வழிகேடர்களாவர். (திருமறை 7-179)