தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
رؤية النبي فى اليقظة،
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விழிப்பில் காணுதல்.
هل يُصدَّق من ادَّعَى رؤيةَ النبي صلى الله عليه وسلّم فى اليقظة الآن، فالجوابُ نعم يُصَدَّقُ، وقد أخبَرَني الشّيخُ الصّالح عطيةُ الأبْنَاسِيُّ، والشّيخ الصالح قاسم المغربي المقيم فى تربة الإمام الشافعي رضي الله عنه والقاضي زكريا الشافعي رضي الله عنهم، أنّهم سمعوا الشّيخَ جلالَ الدين السيوطي رحمه الله يقول: رأيتُ رسولَ الله صلّى الله عليه وسلّم فى اليقظة بضعًا وسبعين مرّةً، وقُلْتُ له فى مرَّةٍ منها هل أنا من أهلِ الجنّة يا رسول الله! فقال نعم، فقلتُ مِن غيرِ عذابٍ يَسْبِقُ؟ فقال لك ذلك،
قال الشّيخ عطيةُ وسَئَلْتُ الشّيخَ جلالَ الدين مرّةً أن يجتمع بالسلطان الغوري فى ضرورة وَقَعَتْ لي، فقال لي يا عطية أنا أجتمع بالنبي صلى الله عليه وسلّم يقظةً وأخشى إن اجتمعت بالغوري أن يحتجب صلى الله عليه وسلّم عنِّيْ،
ثم قال: إنّ فلانا من الصحابة كانت الملائكة تُسَلِّمُ عليه، فَاكْتَوَى فى جَسَدِهِ لِضَرُوْرَةٍ فلَمْ يَرَ الملائكةَ بعد ذلك، عقوبةً له على اكتوائِه،
சுருக்கம் தமிழில்:
கேள்வி: நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விழிப்பில் கண்டதாக ஒருவர் வாதிட்டால் அவரை உண்மைப்படுத்தலாமா? அதாவது அவர் சொல்வதை நம்பலாமா?
விடை: ஆம், நம்பலாம். உண்மைப்படுத்தலாம்.
அஷ் ஷெய்குஸ்ஸாலிஹ் அதிய்யா அவர்களும், அஷ் ஷெய்குஸ்ஸாலிஹ் காஸிம் அவர்களும், (இவர்கள் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் இடத்தில் தங்கியிருப்பவர்கள்) அல்காழீ இமாம் ஸகரிய்யா அவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
நாங்கள் மூவரும் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டோம்.
(நான் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விழிப்பில் 70 தடவைகளுக்கு மேல் கண்டிருக்கிறேன். அவ்வாறான சமயங்களில் ஒரு சந்திப்பின் போது, அல்லாஹ்வின் றஸூலே! நான் சுவர்க்கவாதியா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என்றார்கள். தண்டனை பெற்றபின் சுவர்க்கமா? அல்லது தண்டனையின்றியே சுவர்க்கமா? என்று கேட்டேன். அதற்கவர்கள் தண்டனையின்றியே சுவர்க்கம் என்றார்கள்)
இங்கு சிறியதோர் நுட்பம் உண்டு. அது யாதெனில் இமாம் ஸுயூதீ அவர்கள் தண்டனை பெற்றபின் சுவர்க்கமா? தண்டனையின்றிச் சுவர்க்கமா? என்று கேட்ட கேள்விக்கு கண்மணி நாயகம் சொன்ன பதில் لَكَ ذَلِكَ என்பதாகும். இதன் சரியான பொருள் “உங்களுக்கு அது உண்டு” என்பதே. இந்த பதில் இரண்டுக்கும் சாத்தியமானதேயாகும். (அதாவது தண்டனை பெற்ற பின் அல்லது தண்டனையின்றி)
இரண்டுக்கும் சாத்தியமானதாயினும் இந்த இடத்தைப் பொறுத்தும், கேள்வி கேட்ட இமாம் ஸுயூதீ அவர்களின் ஆன்மீகத் தரத்தைப் பொறுத்தும் வேதனையின்றியே சுவர்க்கம் கிடைக்கும் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும்.
ஏனெனில் 70 தடவைகளுக்கும் அதிகமாக கண்மணி நாயகம் அவர்களை விழிப்பில் கண்ட இமாம் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் என்னதான் பாவம் செய்திருந்தாலும் ஒரு தரம் திரு நபீயின் ஒளி முகத்தைக் கண்டதோடு அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்குமென்பதில் நான் சந்தேகம் கொள்ள மாட்டேன். சந்தேகம் கொள்பவர்கள் இருப்பார்கள் என்பதிலும் நான் சந்தேகம் கொள்ளமாட்டேன். அத்தகையோர் இருப்பார்களாயின் அவர்கள் வஹ்ஹாபீகளாகவே இருப்பார்கள்.
இமாம் ஸுயூதீ அவர்களின் இந்த வரலாறு பெருமானாரை விழிப்பில் காண முடியுமென்று கூறுகிறது.
மேற்கண்ட மூவரில் ஒருவரான அஷ் ஷெய்கு அதிய்யா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
(அவர்களுக்கு ஏற்பட்ட முக்கிய தேவை காரணமாக அந்நாட்டு அரசன் ஙவ்ரீ என்பவரைச் சந்திக்க வேண்டிய தேவை இருந்ததாம். தனியே அவரிடம் சென்று தனது தேவையை முடித்துக் கொள்வதை விட இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்கள் அந்நாட்டில் பிரசித்தி பெற்ற ஓர் அறிஞனாயிருந்ததால் அவர்களையும் அழைத்துச் சென்றால் தனது காரியம் மிக இலகுவாக முடியுமென்று கருதிய இமாம் அதிய்யா அவர்கள் இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்களிடம் தனது விருப்பத்தைக் கூறினார்கள்.
அப்போது இமாம் ஸுயூதீ அவர்கள் அதிய்யா அவர்களிடம், நான் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அடிக்கடி விழிப்பில் சந்திப்பவனாக உள்ளேன்., நான் அரசர் ஙவ்ரியை சந்திப்பதால் பெருமானாரின் சந்திப்பு கிடைக்காமற் போய்விடவும் கூடுமென்று நான் அஞ்சுகிறேன் என்று காரணம் கூறி மறுத்துவிட்டார்கள்.
தான் மறுத்ததை நியாயப்படுத்தி அதற்கான சம்பவமொன்றையும் சொல்லிக் காட்டினார்கள்.
(நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்களில் ஒருவருக்கு மலக்குகளிற் சிலர் ஸலாம் சொல்லி வந்துள்ளார்கள். ஒரு சமயம் குறித்த நபீ தோழர் ஏதோ தனக்கு ஏற்பட்ட காரணம் ஒன்றிற்காக தனது உடலில் சூடு வைத்துக் கொண்டார். அதன் பிறகு வழமையாக வந்து ஸலாம் சொல்லிக் கொடிருந்த மலக்குகள் அவரிடம் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். இது அந்த நபீ தோழர் செய்த வேலைக்குத் தண்டனையாக வழங்கப்பட்டதாகும்)
இவ்வாறு ஒரு வரலாறுண்டு என்பதை இமாம் ஸுயூதீ அவர்கள் சொல்லிக் காட்டி தனது தோழர் அதிய்யாவை திருப்திப் படுத்தினார்கள்.
அறபு மொழியில் كَوَى اِكْتَوَى என்றால் أَحْرَقَ جِلْدَهُ بِحَدِيْدَةٍ ஒருவன் இரும்பை நெருப்பில் காய்ச்சி – சூடாக்கி தனதுடலை சுட்டுக் கொண்டான் என்று பொருள்.
இமாம் ஸுயூதீ அவர்கள் சுட்டிக் காட்டிய நபீ தோழர் அவ்வாறு செய்துள்ளார் என்று மட்டும்தான் சொன்னார்களே தவிர ஏன் செய்தார்கள் என்று குறிப்பிடவில்லை. எதற்காக அந்த நபீ தோழர் செய்திருந்தாலும் அது விரும்பத்தகுந்த ஒரு செயலில்லை என்பது இந்த நிகழ்வின் மூலம் விளங்கப்படுகின்றது.
மார்க்கப்பற்று அதிகமான சில நல்லடியார்கள் தம்மால் ஒரு பாவம் நிகழ்ந்தால் தம்மைத் தாமே தண்டித்திருக்கின்றார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். திருமணம் செய்து தனது மனைவி மக்களுடன் வாழ்ந்த ஒரு பெரியார் இரவில் உறங்குவதற்கென்று தனியான ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு உறங்கி வந்துள்ளார். அவர் அமைத்திருந்த அந்த இடத்திற்கு இரவில் எவரையும் அனுமதிக்கமாட்டார். ஒரு நாள் அவர் மரணித்து விட்டார். குளிப்பாட்டியவர்கள் அவரின் முதுகில் அதிகமான கசையடிக் காயங்கள் இருந்தது கண்டு அவரின் மனைவியிடம் அதுபற்றி வினவியுள்ளார்கள். அவர் அது பற்றி தனக்குத் தெரியாதென்று கூறியுள்ளார். பின்னர் அவர்தான் தனக்கு கசையால் அடித்து வந்துள்ளார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
இவர்போல் இன்னும் பல ஞானிகளும், துறவிகளும் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. ஸுப்ஹானல்லாஹ்! நாம் எங்கே? அவர்கள் எங்கே?!
இவ்வாறு மகான்களிற் பலர் தம்மால் வெளியான பாவங்களை நினைத்து தம்மைத் தாமே அடித்தும், சூடு வைத்தும், தமது “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு வழிபடாமலிருக்க பட்டினி பசியில் கிடந்தும் வாழ்ந்தும் வந்ததற்கு ஆதாரமிருந்தாலும்கூட என்னைப் பொறுத்தவரை இவ்வாறு செய்யாமல் நாம் நமது “நப்ஸ்” என்ற மனவெழுச்சிக்கு வழிப்படாமல் வாழ்வதே சிறந்ததென்று நான் கருதுகிறேன்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தம், அவனின் அன்பு கிடைப்பதற்காக இறைஞானிகளும், ஸூபீகளும் அனுபவித்த கஷ்டங்களையும், துயரங்களையும் நினைத்துப் பார்க்கும் போது இவ்வுலக வாழ்வு கசந்து போகிறது. இதனால்தான் பல மகான்கள் காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்துள்ளார்கள் போலும். இவர்களின் வாழ்வோடு நாம் இன்று வாழும் வாழ்வை ஒப்பிடுகையில் எமக்கு சுவர்க்கம் கிடைக்குமா? அல்லாஹ்வின் திருப் பொருத்தம் கிட்டுமா? என்பது சந்தேகமே!
எனவே, கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை கனவில் மட்டுமாவது கண்டு பேரின்பம் பெற நாம் முயற்சிப்போம். அல்லாஹ்வினால் வழங்கப்படும் சோதனைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் மன நிறைவோடு ஏற்று வாழ்வோம்.
பல நாள் முயற்சி ஒரு நாள் பயன்தரும்.
رؤية النبي فى اليقظة،
قال الشّيخ قاسم المذكور، وأكثر ما تقع رؤيةُ النبي صلى الله عليه وسلّم يقظة بالقلب، ثم تترقى إلى رؤية البصر،
قال: وليست رؤية النبي صلى الله عليه وسلم كرؤية الناس بعضهم بعضا، وإنّما هي جمعيّة خياليّة وحالة برزخيّة، وأمر وجداني، لا يدرك حقيقته إلا من باشره،
மேலே கூறப்பட்ட அஷ் ஷெய்கு காஸிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விழிப்பில் காண்பதானது முதலில் – அதாவது ஆரம்ப படியிலுள்ளவர்களுக்கு “கல்பு” மனதினால்தான் நிகழும். பிறகுதான் வெளிப் பார்வைக்கு – கண் பார்வைக்கு வரும்.
நபீ பெருமானாரை கண்ணால் விழிப்பில் காண்பதானது மனிதர்களிற் சிலர் சிலரைக் காண்பது போன்றதன்று. அது ஒரு வகை “கயால்” உடன் தொடர்பான ஒன்று சேர்தலாகும். ஒரு “பர்ஸகிய்யத்” بَرْزَخِيَّةٌ ஆன நிலையுமாகும். அனுபவரீதியானதுமாகும். கண்டவனுக்கே இதன் எதார்த்தம் தெரியும்)
وقد ألّف الشيخ جلال الدين السُّيوطي كتابا سمّاه ‘ تنوير الحلك فى إمكان رؤية النبي والملك ‘، وذكر فيه من كان يجتمع بالنبي صلى الله عليه وسلّم وبالملائكة يقظةً من الصحابة والأولياء والعلماء، ولم يذكر عن نفسه شيئا،
فيصدَّقُ من قال رأيتُ رسولَ الله صلى الله عليه وسلّم يقظةً مطلقًا،
இமாம் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “தன்வீறுல் ஹல்க் பீ இம்கானி றுஃயதின் நபிய்யி வல் மலக்” என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார்கள். அதில் ஸஹாபாக்கள், வலீமார், உலமாஉகளில் யார் யார் நபீ பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடனும், மலக்குகளுடனும் ஒன்று சேரக் கூடியவர்கள் என்ற விபரங்கைள எழுதியுள்ளார்கள்.
நான் கடந்த காலங்களில் இந்நூலை ஆதாரமாகக் கொண்டு தமிழில் ஓர் நூல் எழுதி “நனவாகும் ஒரு கனவு” என்று பெயரிட்டு அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கியுள்ளேன். அதில் இப்பதிவில் நான் எழுதும் விடயங்களில் பல விடயங்களை குறிப்பிட்டும் உள்ளேன். அந்த நூல் தற்போது எமது களங்சியத்தில் இல்லை. அனைத்தும் முடிந்துவிட்டன. இருந்தாலும் எமது “ஷம்ஸ் மீடியா” இணையத்தில் சென்று “டவ்ன்லோட்” செய்து கொள்ளலாம்.
அந்த நூலை இன்னும் சில விபரங்களுடன் சேர்த்து தமது செலவில் வெளியிட விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
وكان الشّيخ محمد المغربي رحمه الله يقول: (بين العبد وبين مقام رؤية رسولِ الله صلّى الله عليه وسلّم يقظةً مئتا الفِ مقامٍ وسبعةٌ وأربعون الفِ مقام وتسعمأةٍ وتسعة وتسعون مقاما، لا بدّ للسالك من قطعِها كلّها، حتّى يصحَّ له مقام الرؤية فى اليقظة)
அஷ் ஷெய்கு முஹம்மத் அல் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(மனிதனுக்கும், கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விழிப்பில் காண்பதற்கான தராதரத்தை அடைவதற்குமிடையில் இரண்டு இலட்சத்து நாற்பத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது படித்தரங்கள் உள்ளன. (247,999). ஒருவன் விழிப்பில் நபீகட்கரசர் அவர்களைக் காண்பதாயின் குறித்த (மகாம்கள்) படிகள் அனைத்தையும் அவன் கடக்கவே வேண்டும்.
ஸுப்ஹானல்லாஹ்! பெருமானாரை விழிப்பில் காணும் தகுதியை ஒருவன் அடைவதாயின் அவன் குறித்த படிகள் அனைத்தையும் தாண்ட வேண்டுமென்றால் பெருமானாரை நேரில் கண்டு அவர்களோடு இராப்பகலாய் வாழ்ந்த ஸஹாபாக்களின் ஆன்மீக படித்தரங்களை யாரால்தான் கணக்கெடுக்க முடியும்?
இதனால்தானோ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்கள் பற்றிக் கூறுகையில்,
الله الله فى أصحابي
எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்றும்,
إذا ذكر أصحابي فأمسكوا
எனது தோழர்கள் பேசப்பட்டால் உங்களின் நாவுகளை தடுத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள்.
அதாவது எனது தோழர்கள் பற்றி தரக் குறைவாகப் பேசப்பட்டால் அவ்வாறு பேசுவோருடன் நீங்களும் சேர்ந்து பேசிவிடாமல் உங்கள் நாவை தடுத்துக் கொள்ளுங்கள் என்று அருளினார்கள்.
இக்காலத்தில் மக்களை வழி கெடுக்கும் கூட்டங்கள் பல தோன்றியுள்ளன. அவர்களில் வஹ்ஹாபீகளை விஷேடமாக குறிப்பிடலாம்.
வஹ்ஹாபீகள் எந்தளவு நபீ தோழர்களைப் புறக்கணிக்கின்றார்கள், தரக் குறைவாகப் பேசுகின்றார்களென்றால் வெள்ளிக்கிழமை ஜும்ஆப் பிரசங்கம் நிகழ்த்தும் வஹ்ஹாபீகள் இரண்டாவது “குத்பா”வில் நபீ தோழர்களின் பெயர்களைக் கூடக் கூறாமாட்டார்கள். இவர்கள் போல் மனிதாபிமானமற்ற உயிரினம் உலகில் இருக்குமோ என்று எண்ணத் தோணுகின்றது.
மனிதாபிமானம் மட்டுமல்ல. மனச் சாட்சி கூட இல்லாத ஒரு கூட்டமே வஹ்ஹாபீகளின் கூட்டமாகும். இக் கூட்டத்தை விடக் கேவலமானவர்கள் தான் இவர்களை வளர்த்த ஸுன்னீ உலமாஉகளென்றால் அது மிகையாகாது. சிலருக்கு வஹ்ஹாபிஸம் முத்தி பைத்தியமாகிவிட்டது.
ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் பள்ளிவாயலில் இருந்து தனது தலையை அசைத்தவராய் அல்லாஹ் என்று “திக்ர்” செய்து கொண்டிருந்தார். இவரைக் கண்ட வஹ்ஹாபீ அவரிடம் விரைந்து சென்று அவரின் கன்னத்தில் வேகமாக அறைந்துள்ளான். அதோடு அந்த நல்லடியாரின் கன்னத்திலுள்ள சிறு நரம்புகள் தாக்கப்பட்டு சில மாதங்கள் நோயுடன் போராடி மரணித்துவிட்டார்.
இந்த அறிவற்ற வஹ்ஹாபீ அவரைக் கொன்றதுடன் “திக்ர்” செய்யும் போது தலையசைத்தல் “ஷிர்க்” என்று விளக்கமும் கொடுத்துள்ளான். ஸுப்ஹானல்லாஹ்! அறிவு எங்கே? இந்த வஹ்ஹாபீ எங்கே?
அன்புக்குரியவர்களே!
கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விழிப்பில் காண்பது மிகக் கடினமான விடயம்தான். எனினும் பல ஞானிகள், ஸூபீகள், நல்லடியார்கள் கண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவின்மையால் மறுத்துவிடக் கூடாது.
ஆயினும் அவர்களைக் காண்பது நேரில் காண்பது போல் கடினமானதல்ல. முயற்சி செய்தவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.
அவர்களைக் கனவில் காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் பிரதானமான முயற்சிதான் ஒரு நாளில் 100 ஸலவாத் சொல்லிவருவதாகும்.
அதோடு தினமும் இரவிலோ, பகலிலோ உறங்குமுன், குறிப்பாக இரவில் உறங்குமுன் 10 தரம் ஸலவாத் சொல்லிவிட்டு أعوذ بالله من الشيطان الرجيم என்று ஐந்து தரமும், بسم الله الرحمن الرحيم என்று ஐந்து தரமும்,
اللهم بِحَقِّ مُحَمَّدٍ أَرِنِيْ وَجْهَ مُحَمَّدٍ حَالًا وَمَآلًا
என்று ஐந்து தரமும் ஓதிக் கொண்டு உறங்க வேண்டும்.