தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
رؤية النّبي صلّى الله عليه وسلّم للذّات العليّة،
قد أجمع جميع السادات الصوفيّة أولو المكاشفات القُدسيّة على أنّ سيّد البشر رأى ربّه بعَين البصـر، وهو المُختارُ عند المحقّقين من الصحابة والتّابعين، والمتقدّمين والمتأخّرين،
قال الإمام النّووي رحمه الله فى شرح صحيح مسلم والحاصلُ أنّ الرّاجح عند أكثر العلماء أنّ رسول الله صلّى الله عليه وسلّم رأى ربّه بعَيْنَيْ رأسِه ليلة الإسراء لحديث ابن عبّاس رضي الله عنهما، وهذا قول أنس وعكرمة والحسن والربيع بن سليمان وجماعةٍ من المفسّرين،
பரிசுத்த “கஷ்பு” ஞானங்களுடைய ஸூபீ மகான்கள் அனைவரும் ஒன்று பட்டும், கருத்து வேறுபாடின்றியும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் “றப்பு” அல்லாஹ்வை முகக் கண்ணால் கண்டார்கள்” என்று.
ஸஹாபாக்களான நபீ தோழர்கள், தாபியீன்கள், முன்னோர், பின்னோர்களில் உறுதியானவர்களிடம் இந்தப் பேச்சே தெரிவான பேச்சாகும்.
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஷர்ஹு முஸ்லிம்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“சாராம்சம் என்னவெனில் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ள ஹதீதின்படி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “இஸ்றா” விண்ணுலக யாத்திரையின் போது தங்களின் தலைக் கண்ணால் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்பதே அதிக அறிஞர்களின் கருத்தாகும்.
இவ்வாறுதான் அனஸ், இக்ரிமா, ஹஸன், அர்றபீஉப்னு ஸுலைமான் றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களும், இன்னும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலரும் கூறியுள்ளார்கள்.”
والرواية المشهورة عن ابن عبّاس رَوى عكرمة عن ابن عبّاس رضي الله عنهما قال: إنّ الله اصطفى إبراهيم بالخُلّة، واصطفى موسى بالكلام، واصطفى محمدا صلّى الله عليه وسلّم وعليهم أجمعين بالرّؤية،
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் உலகப் பிரசித்தி பெற்ற அறிவிப்பு பின்வருமாறு.
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
“அல்லாஹ் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “கலீல்” என்ற பட்டம் கொடுத்து அவர்களைத் தெரிவு செய்தான். நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை “கலீம்” என்ற பட்டம் கொடுத்து அவர்களைத் தெரிவு செய்தான். நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு தன்னைக் காணும் பாக்கியம் கொடுத்து அவர்களைத் தெரிவு செய்தான்.
وَعَنْ كَعْبٍ، قَالَ: إِنَّ اللَّهَ قَسَمَ رُؤْيَتَهُ وَكَلَامَهُ بَيْنَ مُوسَى وَمُحَمَّدٍ عَلَيْهِمَا الصَّلَاةُ وَالسَّلَامُ، وَكَلَّمَهُ مُوسَى عَلَيْهِ السَّلَامُ مَرَّتَيْنِ، وَرَآهُ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ.
கஃப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ் அவனைக் காண்பதையும், அவனுடன் பேசுவதையும் நபீ முஹம்மத், நபீ மூஸா அலைஹிமஸ்ஸலாது வஸ்ஸலாம் இருவருக்குமிடையில் பங்கு வைத்தான். அவன் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் இருமறை பேசினான். நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருமுறை அவனைக் கண்டார்கள்”
قال القرطبي عند تفسير سورة الأنعام اجْتَمَعَ ابنُ عبّاس وأُبيُّ بن كعب، فقال ابن عبّاس أمّا نحنُ بنُو هاشم فنقول إنّ محمدا رأى ربّه مرّتين، ثمّ قال أتعجبون أنّ الخُلَّةَ لإبراهيم والكلام لموسى والرّؤية لمحمد صلّى الله عليه وسلّم فَكَبَّرَ اُبيُّ بنُ كعب تكبيرةً حتّى جاوبتْهُ الجبالُ،
“அன்ஆம்” அத்தியாயத்திற்கு விளக்கம் எழுதும் போது இமாம் குர்துபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இப்னு அப்பாஸ், உபய்யுப்னு கஃப் றஹிமஹுமல்லாஹ் இருவரும் ஒன்று சேர்ந்தனர். அப்போது இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், நாங்கள் பனூ ஹாஷிம் குடும்பத்தவர்கள். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இருமுறை அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று சொல்வோம் என்று கூறிவிட்டு நபீ இப்றாஹீம் அவர்கள் கலீலுல்லாஹ் என்பதிலும், நபீ மூஸா கலீமுல்லாஹ் என்பதிலும், நபீ முஹம்மத் அலைஹிமுஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்பதிலும் நீங்கள் வியப்படைகிறீர்களா? என்று கூறினார்கள். அதைக் கேட்ட உபய்யுப்னு கஃப் அவர்கள் சொன்ன “தக்பீர்” சத்தத்தில் மலைகளும் பதிலளித்தன.
நபீமார் சந்திப்பு
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலக யாத்திரையின் போது ஏழு வானங்களில் நபீமார்களில் பலரைச் சந்தித்து உரையாடினார்கள்.
முதலாம் வானத்தில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், இரண்டாம் வானத்தில் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், நபீ யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், மூன்றாம் வானத்தில் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், நாலாம் வானத்தில் நபீ இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஐந்தாம் வானத்தில் ஹாறூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஆறாம் வானத்தில் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஏழாம் வானத்தில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் கண்டு உரையாடியும், உறவாடியும் மகிழ்ந்தார்கள். வரலாறை விபரமாகவும், விரிவாகவும் எழுத இங்கு வாய்ப்பில்லை.
ஆயினும் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களோடு மட்டும் நீண்ட நேரம் உரையாட வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. சுருக்கமான விபரம் பின்வருமாறு.
ثمّ أتى على موسى فقال يا محمد! ما فَرَضَ ربُّك عليك وعلى أمّتك؟ قال خمسين صلاة كلّ يوم وليلة، قال ارجع إلى ربّك فاسئله التّخفيفَ فإنّ أمّتك لا تُطيق ذلك، فرَجَعَ حتّى انتهى إلى حيثُ تَغْشاهُ السّحابةُ فَغَشِيَتْهُ، فرأى ربّه وخرَّ ساجدا، ثمّ قال ربّ خفِّفْ عن أمّتي، فإنّها أضعفُ الأُمَمِ، قال قد وضعتُ عنهم خمسا، ثمّ انجلت السحابةُ ورجع إلى موسى، فقال وضع عنّي خمسا، فقال ارجع إلى ربّك فاسئله التّخفيفَ، فإنّ أمّتك لا تطيق ذلك، فلم يزل يرجع بينَ موسى وربّه، وربُّه يحطُّ عنه خمسا خمسا، حتّى قال الله تعالى يا محمد قال لبّيك وسعديك، قال هُنَّ خمسُ صلوات كلّ يوم وليلة، كلّ صلاةٍ بعشر، فتلك خمسون صلاةً، لا يُبدّل القولُ لَدَيَّ، ولا يُنسخُ كتابي، ومن همَّ بحسنةٍ فلم يعملها كُتبت له حسنةٌ، فإن عملها كتبت له عشـرةٌ، ومن همّ بسيّئة فلم يعملها لم يُكتب عليه شيئٌ، فإن عملها كُتبت عليه سيّئةٌ واحدة، وانجلت السحابة فنزل، حتّى انتهى إلى موسى، فأخبره، فقال ارجع إلى ربّك، فاسئله التخفيفَ، فإنّ أمّتك لا تطيق ذلك، فقال راجعت ربّي حتّى استَحْيَيْتُ منه، ولكن أرضى وأسلم، فنادى مُنادٍ أن قد أمضيتُ فَرِيضَتي وخفّفتُ عن عبادي،، فقال له موسى اهْبِطْ بسم الله،
நபீ முஹம்மத் அவர்கள் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த போது, முஹம்மதே! உங்களின் நாயன் உங்களுக்கும், உங்களின் சமுகத்துக்கும் எதைக் கடமையாக்கினான் என்று அவர்கள் கேட்டார்கள். ஒரு நாளைக்கு ஐம்பது நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்று கூறினார்கள். நீங்கள் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று குறைத்துக் கேட்டு வாருங்கள். ஏனெனில் உங்களின் சமுகத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள் என்று நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூற, நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மீண்டும் சென்று அவனைப் பார்த்து இறைவா! எனது சமூகம் இதற்கு சக்தி பெறமாட்டார்களாகையால் மீண்டும் குறைத்து தருவாயாக! என்று வேண்டி நின்றார்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள். ஐந்தைக் குறைத்தேன் என்றான் அல்லாஹ். நபீ பெருமான் மீண்டும் நபீ மூஸா அலைஹிமஸ்ஸலாம் அவர்களிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். மீண்டும் அவ்வாறே அவர்கள் சொன்னார்கள். இவ்வாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அல்லாஹ்விடம் போவதும், மூஸா நபீ அவர்களிடம் வருவதுமாக இருந்தார்கள். அல்லாஹ் ஒவ்வொரு தரமும் ஐந்தைந்தாக குறைத்து 45 நேரத் தொழுகையை குறைத்து ஐந்தோடு நிறுத்திக் கொண்டு ஐந்தில் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மை வீதம் ஐந்துக்கும் ஐம்பதென்று கூறியதோடு என்னிடம் இரண்டு பேச்சுக்கு இடமே இல்லையென்று உறுதியாகவும், அறுதியாகவும் கூறி ஒருவன் ஒரு நல்ல காரியம் செய்ய நினைத்து அதைச் செய்யவில்லையானால் அதற்கு ஒரு நன்மையும், ஆயினும் அதைச் செய்தானாயின் அவனுக்கு பத்து நன்மைகளும் எழுதப்படும் என்றும், ஒருவன் ஒரு தீய காரியம் செய்ய நாடி அதைச் செய்யவில்லையானால் அவனுக்கு எதுவும் எழுதப்படமாட்டாது. அதை அவன் செய்தானாயின் அவனுக்கு ஒரு பாவமே எழுதப்படும் என்றும் அல்லாஹ் கூறினான்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் மீண்டும் நபீ மூஸா அவர்களிடம் வந்து கூற அவர்கள் மீண்டும் முதற்கூறியவாறே கூற நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நான் பல தரம் சென்று குறைத்துக் கேட்டுவிட்டேன். மீண்டும் சென்று குறைத்துக் கேட்க என்னால் முடியாது, எனக்கு வெட்கமாக உள்ளது என்றார்கள் எம்பிரான் அவர்கள். நபீ மூஸா அவர்களுக்கு வேறு வழி இல்லாமற் போனதால் பிஸ்மில்லாஹ் பூமிக்கு இறங்குங்கள் என்று வழியனுப்பி வைத்தார்கள்.
மூஸா நபீயின் நாடகம் பொது நலப் பாவனையில் சுயநலம்.
عن سيّدنا الإمام الشّافعي وغيره أنّه صلّى الله عليه وسلّم رأى الله تعالى فى كلّ مرّةٍ مِن مرّات المُراجعة، وكان السِّرُّ فى ترجيع موسى له صلّى الله عليه وسلّم ليلةَ الإسراء إقتباسُ الأنوار من وجهه الشـريف، وإن كان الحاملُ ظاهرا طَلَبَ التخفيف،
ஸெய்யிதுனா இமாம் ஷாபிஈ றழியல்லாஹு அன்ஹு அவர்களும், இன்னும் பலரும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் அறிவுறுத்தலின்படி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் போவதும், நபீ மூஸா அவர்களிடம் வருவதுமாக இருந்தது வெளிக் கண்ணோட்டத்தில் தொழுகையின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இருந்தாலும் கூட நபீ மூஸா அவர்களின் அந்தரங்க குறிக்கோள் அதுவல்ல.
அல்லாஹ்வை நேரில் தலைக் கண்ணால் கண்டு அவனின் பேரொளி அழகின் பிரகாசத்தைப் பெற்று வந்த பெருமானாரின் திருமுகத்தில் தவழ்ந்த அவனின் பேரழகைப் பருகுவதே நபீ மூஸாவின் குறிக்கோளாக இருந்தது. இதுவே எதார்த்தம். இவ்வாறுதான் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பலரும் கருத்துக் கூறியுள்ளார்கள்.
இச் செய்தியை வாசிப்பவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக நான் ஓர் உதாரணம் கூறுகிறேன். இது எனது கருத்தேயன்றி இமாம் ஷாபிஈ அவர்களின் கருத்தல்ல.
ஒருவன் குளிரால் தாக்கப்பட்டு போர்த்துவதற்கு போர்வையும் இல்லாத நிலையில் நடுங்கியவனாக இருக்கும் போது நெருப்பு அனல் – சூடு பட்ட ஒருவன் தனது சூடான உடலோடு அவனை நெருங்கினால் குளிரால் நடுங்கியவனுக்கு சொல்லொணா சுகம் – இன்பம் கிடைத்தவன் அனல்பட்டு வந்தவனை மீண்டும் மீண்டும் அனல் பட்டு வரச் செய்து தான் சுகம் பெறுவது போன்றதே மூஸா நபீயின் கதையுமாகும். நபீ மூஸா அவர்கள் பெருமானாரின் மூலம் இன்பம் பெற்றார்கள் என்பது இக்கதையின் மறை பொருளாகும்.
இந்த நிகழ்வின் மூலம் ஓர் உண்மை விளங்கப்படுகின்றது. அதாவது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேரின்பம் பெறுவதைக் கருத்திற் கொண்டு ஒரு நாடகம் நடத்தியுள்ளார்கள். இதுவே உண்மை. அதேவேளை அவர்கள் சொன்ன காரணமும் நியாயமானதே.
ஒரு நல்ல காரியத்தைக் கருத்திற் கொண்டு அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் வேறொரு காரணத்தை வெளியில் காட்டி அந்த நல்ல காரியத்தை அடைந்து கொள்ளச் செயல்படுவது பிழையாகாதென்பது இந்த வரலாறின் மூலம் தெளிவாகின்றது.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ‘ إِنَّمَا حُبِّبَ إِلِيَّ مِنْ دُنْيَاكُمُ النِّسَاءُ وَالطِّيبُ وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ ‘
உங்களின் “துன்யா” உலகிலிருந்து மூன்று விடயங்கள் எனக்கு விருப்பமாக்கப்பட்டுள்ளது. அவை மணம், பெண்கள், தொழுகையில் என் கண் குளிர்வது என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
இந்த நபீ மொழி பல பாடங்களைக் கற்றுத் தருகின்றது. அவற்றில் ஒன்று حُبِّبَ إِلِيَّ என்ற வசனம் தருகின்ற பொருளாகும். இதன் பொருள் எனக்கு விருப்பமாக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதாகும். அதாவது இவ்வசனம் நபீ அவர்கள் விரும்பாமல் அல்லாஹ் அவர்களுக்கு விருப்பமாக்கித் கொடுத்தான் என்ற பொருளைத் தருகின்றது. அவர்கள் விரும்பினார்கள் என்ற பொருளைத் தரவில்லை. இப்பொருளைத் தருவதாயின் أَحْبَبْتُ என்று வசனம் வந்திருக்க வேண்டும். இதன் மூலம் நபீ மொழியில் கூறப்பட்ட மூன்று விடயங்களையும் பெருமானார் அவர்கள் சுயமாக விரும்பவில்லை என்பது விளங்கப்படுகின்றது.
இதன் மூலம் ஓர் உண்மை தெளிவாகின்றது. அதாவது ஒருவன் பாவமில்லாத காரியத்தை சுயமாக விரும்புதல் தண்டனைக்குரிய குற்றமாகாது. மணம் பாவித்தல், பெண்களை விரும்புதல், தொழுகையில் கண் குளிர்தல் இம்மூன்றில் எதுவும் பாவமான காரியமல்ல. இது யாவரும் அறிந்ததே. ஆகையால் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் أَحْبَبْتُ நான் விரும்பினேன் என்று சொல்லியிருக்கலாம். அவ்வாறு சொல்லாமல் حُبِّبَ إِلَيَّ எனக்கு விருப்பமாக்கப்பட்டதென்று சொன்னதற்கான காரணம் இவற்றில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுவதல்ல.
ஏனெனில்
تَنَاكَحُوْا وَتَوَالَدُوْا وَتَكَاثَرُوْا فَإِنِّيْ أُبَاهِيْ بِكُمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَوْ بِالسِّقْطِ
நீங்கள் திருமணம் செய்யுங்கள், குழந்தைகளைப் பெறுங்கள், இவ்விரண்டையும் அதிகமாக்குங்கள். (மனைவியர்களையும், பிள்ளைகளையும்) ஏனெனில் மறுமையில் எனது சமுகம் மற்ற நபீமாரின் சமுகத்தை விட அதிகமாயிருப்பது எனக்குப் பெருமை தரும். அது விழு கட்டியாயினும் சரியே! என்று கூறியவர்கள் நபீ பெருமானார் அவர்கள்தான். அதிக திருமணம் செய்து காட்டியவர்களும் அவர்கள்தான். ஆகையால் திருமணத்தை أَحْبَبْتُ நான் விரும்பினேன் என்று சொல்வதில் எந்த ஒரு தவறுமில்லாத நிலையில் حُبِّبَ إِلَيَّ எனக்கு விருப்பமாக்கப்பட்டதென்று அவர்கள் கூறியதேன்? இது சிந்திக்க வேண்டிய ஒன்றுதான்.
இன்று உலகில் நபீகள் நாயகம் அவர்களைக் குறை கூறுபவர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் பல பெண்களைத் திருமணம் செய்யக் காரணம் அவர்களிடம் காம இச்சை கட்டுக்கடங்காமல் இருந்ததென்று சொல்பவர்கள் பலர் உள்ளனர். இவர்களின் வாய்க்குப் பூட்டுப் போடுவதற்காகவே அவ்வாறு சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட நபீ மொழியில் இன்னுமொரு நுட்பம் உண்டு. அது دُنْيَاكُمْ உங்களின் உலகத்தில் என்ற பொருளுக்குரிய சொல்லாகும். நபீ பெருமான் حُبِّبَ إليَّ من الدُّنْيَا துன்யாவில் என்று பொதுவாகச் சொல்லாமல் “கும்” உங்களின் துன்யா என்று சொன்னது நம்மைக் கிண்டல் பண்ணுவது போல் அமைந்துள்ளது. இது அவர்களுக்கு துன்யாவில் பற்றில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
நபீ மொழி தருகின்ற பாடங்களில் மற்றொன்று مِنْ دُنْيَاكُمْ “உங்களின் “துன்யா”விலிருந்து” என்று அவர்கள் கூறியிருப்பதாகும். இதிலிருந்து அவர்கள் மற்றவர்கள் போல் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர் என்பது விளங்கப்படுகிறது.
நபீ மொழி தருகின்ற பாடங்களில் இன்னொன்று பெண்களை அவர்கள் சுயமாக விரும்பவில்லை என்பதாகும். இது கூட அவர்களுக்கு விருப்பமாக்கப்பட்டதேயாகும்.
நபீ மொழியில் கூறப்பட்ட மூன்று விடயங்களும் நபீ பெருமான் அவர்கள் சுயமாக விரும்பாமல் அல்லாஹ்வால் அவர்களுக்கு விருப்பமாக்கி கொடுக்கப்பட்டவையாகும்.
மணம் அவர்களுக்கு விருப்பமாக்கி வைக்கப்பட்ட ஒன்று. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பிரதான காரணம் ஆன்மீக வழியிற் செல்வோர் ஸூபீ மகான்களோடும், வலீமாரோடும், மலக்குகளோடும், அல்லாஹ்வோடும் தொடர்புள்ளவர்களாவர். இன்னோருடன் தொடர்புள்ளவர்களாயிருப்போர் எப்போதும் உடல், உடை சுத்தமானவர்களாகவும், மணமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமென்பது இஸ்லாம் கூறும் நல்லுபதேசமாகும். இஸ்லாம் விரும்பும் நற்செயலாகும். மணப் பொருட்களில் மணம் கூடியதும், நிறம் குறைந்ததும் ஆண்களுக்கும், மணம் குறைந்ததும், நிறம் கூடியதும் பெண்களுக்கும் விரும்பத்தக்கதாகும். இத்தத்துவம் சந்திகளில் நின்று பெண்களைக் கண்டு சேட்டை செய்யும் இளைஞர்களுக்காக – பொடியன்மார்களுக்காக சொல்லப்பட்டதெனலாம்.
இதற்கு இன்னுமொரு காரணம் கூறலாம். பொதுவாக நறுமணமென்பது றூஹ் – என்ற ஆன்மாவையும், கல்பு – என்ற உள்ளத்தையும் பலமாக்கும் சாதனமாகும். மணம் பாவிப்பதால் உள்ளம் உறுதி பெறுமென்பது பொதுவான ஒரு தத்துவமாகும்.
மூன்று அம்சங்களில் மற்ற ஒன்று பெண்கள். அதாவது திருமணம் செய்து கொள்ளுதல்.
ஸூபீ மகான்களின் தத்துவத்தின்படி பெண் என்ற இறைவனின் வெளிப்பாட்டின் மூலம் – அதாவது பெண் என்ற இறைவனின் “மள்ஹர்” பாத்திரத்தின் மூலம் அல்லாஹ்வின் காட்சி மிக எழிதாகவும், வலுவாகவும் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இதனால்தான் நபீமார், வலீமார், ஆன்மீகவாதிகள் ஒரு மனைவியோடு மட்டும் நின்று கொள்ளாமல் பல பெண்களை மனைவியர்களாக கொண்டிருந்தனர். ஒரு செல்வந்தன் நான்கு திருமணம் செய்தால் அது சந்திக்கு வராது. ஆயினும் ஓர் ஆலிம் அவ்வாறு திருமணம் செய்தால் அது கைபேசிகளில் பேசும் பொருளாகிவிடும்.
ஒருவன் தனது மனைவியை தனது காம இச்சையென்ற மலம் கழிக்கும் மல கூடமாக நோக்காமல் அவளை இறை காட்சி கிடைக்கும் கண்ணாடியாக நோக்க வேண்டும். இது பற்றி மெய்ஞ்ஞான மகான் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புஸூஸுல் ஹிகம்” எனும் நூலிலும், அவர்களின் வேறு நூல்களிலும் விளக்கமாக எழுதியுள்ளார்கள். இது தொடர்பான மேலதிக விபரம் தேவையானோர் மனத்திரையகன்ற மகான்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை ஆறாம் வானத்திலிருந்து அல்லாஹ்விடம் அனுப்பிவைத்தது எமக்குத் தரும் பாடத்தின்படி பெண் மூலம் அல்லாஹ்வின் “ ஷுஹூத்” காட்சியைப் பெறும் நோக்கத்தில் ஓர் அழகிய பெண்ணை ஒருவன் தனக்கு மனைவியாக தெரிவு செய்வதில் எந்தக் குற்றமும் இல்லை என்பது தெளிவாக விளங்கப்படுகின்றது. எல்லா மலர்களையும் எல்லோரும் நுகர்வதில்லையென்பது தெரிந்ததே! விளக்கம் தேவையில்லை. அழகியைப் பார்க்க ஆயிரம் கண்களுண்டு. பெருச்சாளி போன்றவளைப் பார்க்க எத்தனை கண்கள்?
فقد عُلم ممّا تقدّم أنّ الصّحيح ثُبوت الرؤية، وهو ما جَرَى عليه ابنُ عبّاس حِبْرُ الأمّة، وهو الّذي يُرجع إليه فى المعضلات، وقد راجعه أبو عمرو، فأخبره أنّه رآه، وأرسل إليه ابن عمر يسئله هل رأى محمد صلّى الله عليه وسلّم ربّه فقال نعم،
மேலே சொன்ன விபரங்கள் மூலம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் விண்ணுலக யாத்திரையின் போது அல்லாஹ்வைத் தங்களின் தலைக் கண்ணால் கண்டார்கள் என்பதே ஆதாரபூர்வமான விடயமாகும். இஸ்லாமிய சமுகத்தின் பெரும் பண்டிதர் இமாம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், கண்டார்கள் என்பதே சரியானதாகும் என்று கூறியுள்ளார்கள். மார்க்கத்தில் ஏற்படுகின்ற அனைத்து சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குபவர்களில் இவர்கள் முக்கியமான ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபூ அம்ர் என்பவர் கூட அவர்களிடம் கேட்டபோது பெருமானார் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்ற செய்தி உண்மையானதே என்று அவர்களும் உறுதி செய்துள்ளார்கள். இப்னு உமர் அவர்களும் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டனுப்பியதற்கு ஆம் என்றே அவர்களும் பதில் கூறி அனுப்பியுள்ளார்கள்.
ولا يَقْدَحُ فى رؤية الرسول صلّى الله عليه وسلّم ربَّه إنكارُ السّيِّدة عائشة رضي الله عنها للرّؤيةِ مُحتجَّةً بقوله تعالى ‘لا تدركه الأبصار ‘ لأنّها لم تخبر أنّها سَمِعت من رسول الله صلّى الله عليه وسلّم أنّه قال لمْ أَرَ ونحوَه، ولو كان معها حديث يدلّ على نفي الرؤية عن رسول الله صلّى الله عليه وسلّم لَذَكَرَتْهُ، وإنّما اعتمدتْ على الإستنباط من الآية المذكورة،
وجوابُه أنّ الإدراكَ هو الإحاطةُ والله تعالى لا يُحاط به، وإذا ورد النصُّ بنفي الإحاطة لا يلزم منه نفيُ الرؤية بغير إحاطةٍ معها،
அன்னை ஆயிஷா ஸித்தீகா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்பதை மறுப்பது ஆதாரமாகாது. ஏனெனில் ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபீ பெருமான் அவர்கள் நான் அல்லாஹ்வை காணவில்லை என்று அவர்களிடம் கூறியதாகச் சொல்லவில்லை. ஆயினும் لا تدركه الأبصار பார்வைகள் அவனை அடைந்து – எட்டிக் கொள்ளாதென்ற திரு வசனத்தை அவர்கள் ஆதாரமாகக் கொண்டு ஆய்வு செய்துதான் அவ்வாறு சொல்லியுள்ளார்களேயன்றி தன்னிடம் நபீகள் நாயகம் அவ்வாறு சொன்னதாகச் சொல்லவில்லை. இன்று வஹ்ஹாபிகளே திருக்குர்ஆனை ஆய்வு செய்யும் போது ஆயிஷா நாயகி எம்மாத்திரம்?
அவனைப் பார்வைகள் எட்டிக் கொள்ளாது – அடைந்து கொள்ளாது என்று வந்துள்ள மேற்கண்ட வசனத்தின் விளக்கம் என்னவெனில் அவனைப் பார்வைகள் சூழ்ந்து கொள்ளாது என்பதாகும். “அல் இத்றாக்” என்ற சொல் “அல் இஹாதத்” சூழ்ந்து கொள்ளுதல் என்ற பொருளுக்குரியதாகும். அல்லாஹ்வைக் காணத்தான் முடியுமேயன்றி அவனை சூழ்ந்து கொள்ள எவராலும் முடியாது. அவனை சூழ்ந்து கொள்ளத்தான் முடியாதேயன்றி அவனைப் பார்க்க முடியாதென்ற கருத்து வராது. அவனை சூழ்ந்து கொள்ளாமல் பார்க்க முடியும் என்பதே முடிவாகும்.
وما رُوي عنها مِن أنّها قالت ما فقدتُ جسدَه صلّى الله عليه وسلّم ليلةَ الإسراء وفى رواية ما فُقد جسدُه بالبناء للمجهول فهو حديث مكذوبٌ عليها،
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்வெளிக்குச் சென்ற இரவு அவர்களின் திருவுடல் எங்கேயும் போகவில்லை என்று ஆயிஷா நாயகி அவர்கள் சொன்னதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியேயாகும்.
وقال إمام الشّافعيّة أبو العبّاس سُريج هذا حديث لا يصحّ، وإنّما وُضِع ردًّا للحديث الصحيح، وقولُ عائشةرضي الله عنها بعدم وُقوع الرؤية له صلّى الله عليه وسلّم لا يُوازي ما أثبتَهُ غيرُها، فإنّها إذْ ذَاكَ لمْ تكنْ وُلدتْ أو لم تبلغ حدَّ التّمييز على أنّ غيرها كابن عبّاس مُثبتٌ، والقاعدة أنّ المثبتَ مقدّمٌ على النّافي، حتّى قال معمر بن راشد ما عائشةُ عندنا بأعلمَ من ابن عبّاس، فالحقّ أنّه صلّى الله عليه وسلّم رأى ربّه تلك اللّيلةَ بِعَيْنَيْ رأسه، وهما فى محلّها، فلا ينبغي العدول عن هذا،
ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த அபுல் அப்பாஸ் இப்னு ஸுறைஜ் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மேலே குறித்த ஹதீது ஸஹீஹ் அல்ல. அது ஸஹீஹான ஹதீதுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்டது. நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வைக் காணவில்லை என்று ஆயிஷா நாயகி சொன்ன பேச்சு மற்றவர்கள் சொன்ன பேச்சுக்கு முரணானது.
ஏனெனில் அந்நேரம் அவர்கள் பிறக்கவில்லை என்று அல்லது பிறந்திருந்தாலும் ஏழு வயதை அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபீ பெருமான் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று சொன்னதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். மஃமர் இப்னு றாஷித் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில் ஆயிஷா நாயகி இப்னு அப்பாஸ் அவர்களை விட அறிந்தவர்கள் அல்ல என்று கூறியுள்ளார்கள்.
எனவே, சரியான முடிவு என்னவெனில் மிஃறாஜ் இரவில் நபீ பெருமான் தங்களின் “றப்”பை தலைக் கண்ணால் கண்டார்கள் என்பதேயாகும். இதை விடுவது கூடாது.
அல்லாஹ்வைக் கனவில் காணுதல்.
رؤية الله فى المنام،
اعلم أنّ الأصل فى صحّة الرؤية ما رواه الطبراني وغيره مرفوعا ‘رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمْرَدَ قَطِطٍ له وفرةٌ من شعر، وفى رجليه نعلان من ذهب، الحديث، قال الحافظ السيوطي رحمه الله وهو حديث صحيح، (اليواقيت والجواهر للشعراني، ج – 1 ، ص – 115 )
கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்பதற்கு இமாம் தபறானீ அவர்களும், இன்னும் பலரும் அறிவித்த பலமான ஹதீது ஆதாரமாக உள்ளது.
“நான் எனது “றப்”பை – அல்லாஹ்வை முகத்தில் முடி முளைக்காத இளைஞனின் “ஸூறத்” உருவத்தில் கண்டேன். அவன் உடற் கட்டானவனாயிருந்தான். அவனின் தலையில் அடர்த்தியான முடி இருந்தது. அவன் காலில் தங்கத்திலான இரு செருப்புக்கள் இருந்தன.
ஆதாரம்: தபறானீ
அல்யவாகீத் வல் ஜவாஹிர்
பாகம் 01,
பக்கம் 115
ஆசிரியர் அல் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ
மேலே குறித்த ஹதீது ஸஹீஹ் – பலமானதென்று இமாம் ஜலாலுத்தீன் ஸூயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
قال الشيخ محي الدين ابن عربي فى الباب الأحد وثمانين وثلاثمأة فى الفتوحات المكيّة قد اضطربت عقول العلماء فى معنى هذا الحديث وفى صحّته، فَنَفَاهُ بعضُهم،وأثبته بعضُهم، وتوقّفَ فى معناه وأوّله، ولا يحتاج الأمر إلى تأويل،
அஷ் ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் அல்புதூஹாதுல் மக்கிய்யா எனும் நூல் 381ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
“இந்த ஹதீதின் பொருளிலும், இது சரியான ஹதீதா? இல்லையா? என்பதிலும் மார்க்க அறிஞர்களின் புத்திகள் தடம் புரண்டு தடுமாறிவிட்டன. அது சரியான ஹதீது இல்லை என்று சிலரும், அது சரியான ஹதீது என்று இன்னும் சிலரும், அந்த ஹதீதுக்கு உரிய பொருளைக் கூறமுடியாமல் தடைபட்டு நின்றவர்கள் சிலரும், அதற்கு பொருத்தமான வலிந்துரை கூறி பொருள் சொல்பவர்கள் இன்னும் சிலரும் உள்ளனர். ஆயினும் அதற்கு எந்தவொரு வலிந்துரையும் கொள்ளாமல் அதற்கான நேரடிப் பொருள் கொண்டு விளக்கம் கூற முடியும் என்று இப்னு அறபீ அவர்கள் கூறுகின்றார்கள்.
فإنّه صلّى الله عليه وسلّم إنّما رأى هذه الرؤية فى عالم الخيال، الّذي هو النّوم، ومن شأن الخيال أنّ النائم يَرى فيه تجرُّدَ المعاني فى الصُّور المحسوسة، وتجسُّدَ ما ليس من شأنه أن يكون جسدًا، لأنّ حضـرته تُعطي ذلك، فما ثَمَّ أوسع من الخيال، قال : ومن حضرته أيضاظهرَ وجودُ المُحال، فإنّك ترى فيه واجب الوجود الّذي لا يقبل الصُّورَ فى صورة ، ويقول لك مُعبّرُ المنام صحيحٌ ما رأيتَ، ولكنّ تأويلها كذا وكذا، فقد قَبِلَ المُحالَ الوجودُ، فى هذه الحضـرة، فإذا كان الخيالُ بهذه القوّةِ من التّحكّم فى الأمور من تجسُّدِ المعاني وجعلِه ما ليس قائما بنفسه وهو مخلوقٌ، فكيف بالخالق؟ وكيف يقول بعضهم إنّ الله تعالى غيرُ قادرٍ على خلق المُحال، وهو يشهد من نفسه قدرة الخيال على المحال، وأطال الشيخ الكلام على ذلك فى الباب الثامن والتّسعة ومأة،
ஏனெனில் நபீ அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் இவ்வாறு கண்டது “ஆலமுல் கயால்” எனும் கனவுலகிலாகும். விழிப்பிலல்ல.
கனவுலகின் தன்மை யாதெனில் உறங்குபவன் அவ்வுலகில் உருவமில்லாத வெறும் கருத்துக்களை புலன்களால் உணரப்படும் உருவங்களில் காண்பான். அதோடு சடமில்லாதவற்றையும் அவ்வுலகில் சடமுள்ளவையாகக் காண்பான் என்பதாகும். இந்தச் சக்தி கனவுலகிற்கு அல்லாஹ் வழங்கிய சக்தியாகும்.
“ஆலமுல் கயால்” எனும் கனவுலகைவிட விசாலமான உலகமே இல்லை. அவ்வுலகில் அசாத்தியமானவை கூட சாத்தியமானவையாக வெளியாகும். ஏனெனில் “வாஜிபுல் வுஜூத்” என்று சொல்லப்படுகின்ற, உருவமில்லாத இறைவனை ஏதேனும் ஓர் உருவத்தில் உன்னால் காண முடியும்.
இவ்வாறு நீ கனவில் கண்டு அதற்கு விளக்கம் சொல்லும் ஒருவரிடம் சென்று கேட்டால் நீ கண்டது சரிதான். ஆயினும் அதற்கான வலிந்துரை – விளக்கம் இவ்வாறுதான் என்று சொல்வார். இந்த இடத்தில் “வுஜூத்” எனும் உள்ளமை – அதாவது அல்லாஹ் அசாத்தியமான ஒன்றை ஏற்றுக் கொண்டான். அந்த உள்ளமை ஏற்றுக் கொண்டது.
“கயால்” எனும் கனவுலகம் அல்லாஹ்வின் படைப்பாக இருக்கும் நிலையில் அதற்கு சடமற்ற கருத்துக்களை சடமாக காட்டும் சக்தியும், தன்னைக் கொண்டு நிலைபாடான உள்ளமையை அவ்வாறில்லாத நிலையில் காட்டும் சக்தி இருக்குமாயின் படைத்தவனின் சக்தி எவ்வாறிருக்கும்? இவ்வாறிருக்கும் நிலையில் “முஹால்” எனும் அசாத்தியமானதை படைக்க அல்லாஹ்வால் முடியாதென்று சிலர் கூறுவது எவ்வாறு? “கயால்” என்ற கனவுலகுக்கு முடிந்தது அதைப் படைத்தவனுக்கு முடியாதென்று எவ்வாறு சொல்வது?
இது தொடர்பாக ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 198ம் பாடத்தில் விரிவாக விளக்கியுள்ளார்கள்.
قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدي والضّلال والحياة الدنيا ونحو ذلك،
அஷ் ஷெய்கு அபூ தாஹிர் அல்கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
உருவமில்லாத ஒன்றை கனவுலகில் உருவத்தில் காணமுடியாதென்று சொல்ல முடியாது. ஏனெனில் உருவமும், சடமும் இல்லாத எத்தனையோ வஸ்த்துக்கள் கனவுலகில் ஏதோ ஒரு வகையில் அவற்றுக்குப் பொருத்தமான உருவத்திலும், சடத்திலும் தோற்றுகின்றன. காட்சியளிக்கின்றன. இதனால் ஒன்று இன்னொன்றுக்கு ஒப்பாகிவிடுகின்றதென்றோ, நிகராகிவிடுகின்றதென்றோ கொள்ள முடியாது. சொல்லவும் முடியாது.
மேலே கூறப்பட்டவை உருவம், சடமில்லாத வெறும் கருத்துக்களேயாகும். உதாரணமாக “ஈமான்” விசுவாசம், “குப்ர்” நிராகரிப்பு, “ஷறப்” சிறப்பு, “குர்ஆன்” திருக்குர்ஆன், “ஹுதா” நல்வழி, “ழலால்” வழிகேடு, “ஹயாதுத் துன்யா” உலக வாழ்க்கை என்பன போன்று. இன்னுமிவை போன்றவை போன்று.
وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان،
முதல் அம்சம் “ஈமான்” விசுவாசம். பின்வரும் ஹதீது போன்று.
(நான் கனவில் சில மனிதர்களைக் கண்டேன். அவர்களின் ஒருவரின் ஷேட் அவரின் கரண்டைவரை நீளமாயிருந்தது. அவர்களில் இன்னொருவரின் ஷேட் அவரின் கணுக்கால் நடுவிலிருந்தது. இரண்டாம் கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “ஷேட்” நிலத்தில் இழுபட்ட நிலையில் வந்தார்கள் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்ன போது இதன் விளக்கம் என்னவென்று தோழர்கள் கேட்டார்கள். “ஈமான்” விசுவாசம் என்று பெருந்தகை பெருமானார் அருளினார்கள்)
فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالُ بالعَمَى، اليواقيت ، ج – 1 ، ص – 108 )
“ஈமான்” விசுவாசத்திற்கு உருவமுமில்லை. அமைப்புமில்லை. ஆயினும் அது கனவுலகில் “ஷேட்” உருவத்திலும், அமைப்பிலும் தோற்றுகின்றது. “குப்ர்” எனும் நிராகரிப்பும் இவ்வாறுதான். இதற்கு உருவமுமில்லை, தோற்றமும் இல்லை. ஆயினும் கனவில் இருளின் உருவத்திலும், தோற்றத்திலும் தோற்றுகின்றது. சிறப்பு, கௌரவம் என்பதும் இவ்வாறுதான். இதற்கும் உருவமுமில்லை. தோற்றமுமில்லை. ஆயினும் கனவுலகில் குதிரை உருவத்திலும், அமைப்பிலும் தோற்றுகிறது. இவ்வாறுதான் திருக்குர்ஆன் எனும் அல்லாஹ்வின் பேச்சு. இதற்கும் உருவமுமில்லை. தோற்றுமுமில்லை. எனினுமிது முத்து உருவத்திலும், வடிவத்திலும் கனவுலகில் தோற்றுகின்றது. இவ்வாறுதான் நேர்வழியுமாகும். இதற்கு உருவமுமில்லை, தோற்றமுமில்லை. ஆயினுமிது கனவுலகில் ஒளியுருவத்திலும், வடிவத்திலும் தோற்றுகிறது. இவ்வாறுதான் வழிகேடுமாகும். இதற்கும் உருவமுமில்லை. வடிவமுமில்லை. எனினுமிது கனவுலகில் குருடு உருவத்திலும், தோற்றத்திலும் தோற்றுகிறது.
ولا شكَّ أنَّ بين هذه الأشياء مُضاهاةً لِتِلْكَ المعاني المرئيَّةِ، وتَجَسُّدُ المعاني لا ينكره العلماءُ بالله تعالى، قال: وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ، قال تعالى’إنّما مثل الحياة الدنيا كماء أنزلناه من السّماء ‘ والحياةُ لا صورةَ لها ولا شكلَ، والماء ذُو شكلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ‘مثلُ نوره كمشكاةٍ فيها مصباحٌ ‘ وغيرُ ذلك،
மேலே நான் கூறிய உதாரணங்களுக்கும், காணப்பட்ட அக்கருத்துகளுக்குமிடையே ஒப்பும், பொருத்தமும் உண்டு. உருவமும், சடமுமில்லாத வெறும் கருத்துக்கள் உருவம் பெறுவதையும், சடம் பெறுவதையும் இறை ஞானிகள் ஒருபோதும் மறுக்கவோ, நிராகரிக்கவோமாட்டார்கள்.
அல்லாஹ்வை கனவில் ஏதேனும் ஓர் உருவத்தில் காண்பதை மறுப்பவன் தடுமாறுமிடம் எதுவென்றால் ظَنُّهُ أَنَّ الْمَثَلَ بِفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بِكَسْرِ الْمِيْمِ وَسُكُوْنِ الْمُثَلَّثَةِ “மதல்” என்ற சொல்லுக்கும், “மித்ல்” என்ற சொல்லுக்குமிடையிலுள்ள (مِثْلْ – مَثَلْ) வேறுபாடு தெரியாமற் போவதேயாகும். مِثْلْ – مَثَلْ மதலும், மித்லும் – உதாரணமும், நிகரும்.
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலக யாத்திரையின் போது அல்லாஹ்வை தலைக் கண்ணால் கண்டார்கள் என்பது தொடர்பாக நான் தொடர்ந்து எழுதி வருகின்ற விடயங்கள் யாவும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” எனும் நூல் முதலாம் பாகத்திலிருந்தும், இமாம் அஷ்ஷெய்கு முஹம்மத் அமீன் அல்குர்தீ அல்இர்பலீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் ضَوْءُ السِّراجْ எனும் நூலில் இருந்தும் பெறப்பட்ட தகவல்களாகும். விபரம் தேவையானோர் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
ولا شكَّ أنَّ بين هذه الأشياء مُضاهاةً لِتِلْكَ المعاني المرئيَّةِ، وتَجَسُّدُ المعاني لا ينكره العلماءُ بالله تعالى، قال: وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ، قال تعالى’إنّما مثل الحياة الدنيا كماء أنزلناه من السّماء ‘ والحياةُ لا صورةَ لها ولا شكلَ، والماء ذُو شكلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى ‘مثلُ نوره كمشكاةٍ فيها مصباحٌ ‘ وغيرُ ذلك،
உருவமும், சடமும் இல்லாத ஒன்றை கனவுலகில் உருவமுள்ளதாயும், சடமுள்ளதாயும் காண முடியும் என்பதற்கு ஏழு உதாரணங்கள் கூறப்பட்டுள்ளன. இவை மட்டும்தான் உதாரணங்கள் என்பது கருத்தல்ல. பல உதாரணங்கள் உள்ளன. விளக்கத்திற்காக ஏழு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
لا يقبله إلا العلماء بالله
உருவமும், சடமும் இல்லாதவற்றை உருவமுள்ளவையாகவும், சடமுள்ளவையாகவும் கனவில் காண முடியும் என்பதை இறை ஞானிகள் மட்டுமே ஏற்றுக் கொள்வர். இதன் கருத்து என்னவெனில் “ளாஹிர்” உடைய உலமாஉகள் அதாவது துணிக்கு மேல் சொறிவோர், அல்லது “தீன்” என்ற கடலில் வெளி நீச்சலடிப்போர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாகும்.
இவ்விடயத்தில் சறுகுதலும், தவறும் ஏற்படுமிடம் என்வெனில் مَثَلٌ، مِثْلٌ என்ற இரண்டு சொற்களுக்குமிடையிலுள்ள வித்தியாசமும், வேறுபாடும் புரியாமற் போவதேயாகும். அதாவது “மதல்” مَثَلٌ என்பதை “மித்ல்” مِثْلٌ என்று விளங்கிக் கொண்டதேயாகும். இது பெருந்தவறாகும்.
مَثَلٌ
– மதலுன் என்பது வேறு. مِثْلٌ மித்லுன் என்பது வேறு. முதலில் مِثْلٌ என்பதை அறிவோம்.
مِثْلٌ என்றால் நிகர் என்று பொருள். அல்லது போன்று என்று பொருள். உதாரணமாக இது இதற்கு நிகரானது, இது அது போன்றது என்பது போல். அதாவது ஏதோ ஒன்று இன்னொன்றுக்கு அதன் எல்லா அம்சங்களிலும் அது போன்றிருத்தல். உதாரணமாக இரண்டு கருப்பு நிறங்கள் போன்றும், ஒரே அச்சில் பதிவான, வார்த்தெடுக்கப்பட்ட இரண்டு பொருட்கள் போன்றும். ஒன்றிலுள்ள அம்சங்களில் ஓர் அம்சங்கூட விடுபடாமல் மற்ற ஒன்றில் இருத்தல். இதுவே “மித்ல்” நிகர் எனப்படும். இன்னொரு சொல்லில் சொல்வதாயின் كُفْوٌ – குப்வுன் என்றும் சொல்லலாம். இச் சொற்களை படைப்புக்களில் எதற்கும் பாவிக்கலாம். ஆயினும் அல்லாஹ்வுக்கு மட்டும் பாவிக்க முடியாது. உதாரணமாக اللهُ مِثْلُ الشَّجَرَةِ அல்லது الشَّجَرَةُ مِثْلُ الله என்பது போன்று. “ஸூறதுல் இக்லாஸ்” எனும் قُلْ هُوَ الله أَحَدٌ என்ற அத்தியாயத்தில் وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ அவன் போன்று – அவனைப் போல – அவனுக்கு நிகராக யாருமில்லை என்பது போன்றும், ஷூறா அத்தியாயத்தில் வருகின்ற لَيْسَ كَمِثْلِهِ شَيْئٌ அவன் போன்று – அவன் போல – அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்பது போன்றுமாகும். அல்லாஹ்வுக்கு நிகராக – அவன் போன்று எதுவுமில்லை. மேற்கண்ட விபரங்கள் மூலம் مِثْلٌ – “மித்ல்” நிகர் என்பதை அறிந்து கொண்டோம்.
இரண்டவாது அம்சம் مَثَلٌ “மதலுன்” என்பதாகும். இதற்கு உதாரணம் என்றுதான் பொருள் வருமேயன்றி மேலே சொன்னது போல் பொருள் வராது. நிகர் என்று பொருள் கூறுவதற்கு இச் சொல் பயன்படுத்தப்படுவதில்லை.
உதாரணமாக مُزَمِّلٌ مَثَلُ الثَّعْلَبِ முஸம்மில் நரி போன்றவன். مُنَاسٌ مَثَلُ هُوْجِنْ (المصارع) முனாஸ் மல்யுத்த வீரன் ஹோகன் போன்றவன் என்பது போன்று. இங்கு இன்னுமொரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது ‘ك’ “காப்” என்ற எழுத்தும் مَثَلٌ என்ற பொருளுக்குப் பயன்படுத்தப்படும். உதாரணமாக إِسْمَاعِيْلُ كَالْأَسَدِ என்பது போன்று. இதன் பொருள் இஸ்மாயீல் சிங்கம் போன்றவன் என்பதாகும்.
“மதல்” என்பது உதாரணம் என்ற பொருளுக்கு பயன்படுத்தும் போது எதற்கு உதாரணமாக சொல்லப் படுகிறதோ அதில் மற்றதிலுள்ள ஏதாவது ஓர் அம்சம் இருந்தால் மட்டும் போதும். அதிலுள்ள முழு அம்சமும் இதில் இருக்க வேண்டுமென்பதில்லை.
மேலே கூறிய உதாரணங்களை கவனிப்போம். مزمل مَثَلُ الثَّعْلَبِ முஸம்மில் நரி போன்றவன் என்பது போன்று. இவ்வாறு சொல்லுதல் உதாரணமேயன்றி இது நிகர் அல்ல. நரியின் தந்திரப் புத்தி முஸம்மிலிடம் இருந்தால் இவ்வாறு உதாரணம் சொல்லலாம். நரியிலுள்ள ஏதேனுமொரு அம்சம் அவனில் இருந்தால் போதும். நரியின் அனைத்து அம்சங்களும் அவனில் இருக்க வேண்டுமென்பதில்லை. இது مِثْلٌ என்ற நிகருக்கு மாற்றமானது. முஸம்மில் நரி போன்றவன் என்பதைச் செவியேற்ற ஒருவன் நாலு காலும், ஒரு வாலும் இல்லாதிருக்கும் நிலையில் அவ்வாறு சொல்ல முடியாதென்று சொன்னால் அவன் اَبْلَهْ மடையனாகவே இருப்பான். அவனுக்கு أَنْتَ مَثَلُ جَامُوسْ என்று சொல் வேண்டியதுதான்.
மேலே நான் எழுதிய مِثْلٌ ، مَثَلٌ என்பதற்கான விளக்கத்திற்கு நான் சாதாரண நடைமுறையிலுள்ள உதாரணங்களை எழுதினேன். இதற்கு இமாம் ஷஃறானீ கூறிய உதாரணங்களை இங்கு எழுதுகிறேன்.
அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களில் இரண்டு உதாரணங்கள் கூறியுள்ளார்கள். ஒன்று.
إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنْزَلْنَاهُ مِنَ السَّمَاءِ
உலக வாழக்கை வானிலிருந்து இறக்கப்பட்ட நீர் – மழை போன்றதென்று கூறியுள்ளார்கள். உலக வாழ்வு என்பதற்கு உருவமுமில்லை, சடமுமில்லை. எனினும் உருவமும், சடமும் மழைக்கு உதாரணமாக கூறப்பட்டுள்ளது. இது “மதல்” உதாரணமேயன்றி “மித்ல்” நிகரல்ல.
மற்ற உதாரணம்
مَثَلُ نُورِهِ كَمِشْكَاةٍ فِيهَا مِصْبَاحٌ
அல்லாஹ்வின் ஒளிக்கு உதாரணம் விளக்குள்ள மாடம் போன்று. இவ்வுதாரணத்தில் உருவமும், சடமும் இல்லாத அல்லாஹ்வின் ஒளிக்கு உருவமுள்ள ஒரு மாடம் உதாரணமாக கூறப்பட்டுள்ளது.
فَعُلِمَ أَنَّهُ لَا مِثْلَ للهِ تَعَالَى، وَلَكِنْ لَهُ الْمَثَلُ الْأَعْلَى فِى السَّمَوَاتِ وَالْأَرْضِ، قَالَ: وَمِنْ هُنَا جَوَّزَ الْأَكْثَرُوْنَ مِنَ السَّلَفِ الصَّالِحِ جَوَازَ تَجَلِّيْهِ تَعَالَى لِعَبْدِهِ فِى الْمَنَامِ كَمَا مَرَّ فِى الْأَمْثَالِ،
رؤية النبي للذات العلية
நபீ மணி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலக யாத்திரையின் போது தங்களின் தலைக் கண்ணால் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்ற தலைப்பில் இதுவரை நான் எழுதிய கருத்துக்கள் என்னுடையவையல்ல.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” முதலாம் பாகத்திலிருந்தும், இமாம் அஷ்ஷெய்கு முஹம்மத் அமீன் அல்குர்தீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ளவ்உஸ்ஸிறாஜ்” என்ற நூலிலிருந்தும் எடுக்கப்பட்ட விடயங்களாகும்.
இவ்விபரங்கள் மூலம் அல்லாஹ்வுக்கு مِثْلْ – “மித்ல்” நிகர்தான் இல்லையே தவிர அவனுக்கு مَثَلْ “மதல்” உதாரணம் உண்டென்பது தெளிவாகிவிட்டது. இவற்றை ஆதாரங்களாக வைத்தே முன்னோர்களான நல்லடியார்கள் அல்லாஹ்வை கனவில் உயர்வான உருவத்தில் காண முடியும் என்பதை நிறுவியுள்ளார்கள்.
இவ்விரு நூல்கள் தவிர இன்னும் பல நூல்களில் விரிவான விபரங்கள் உள்ளன. எமக்கு வாய்ப்புக் கிடைத்தால் அவற்றையும் நூல் வடிவில் தருவோம். வாசக நேயர்களின் “துஆ”வை வேண்டுகிறோம்.
நான் பாணந்துறை அல் மத்றஸதுத் தீனிய்யா அறபுக் கல்லூரியில் மதிப்பிற்குரிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹழ்றத் பலகீ அவர்களின் மத்றஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் (1965ம் ஆண்டு) என்னுடன் ஓதிக் கொண்டிருந்த இன்றும் உயிரோடுள்ள அட்டாளைச்சேனை மௌலவீ அஸ்ஸெய்யித் ஸெய்யித் அஹ்மத் மௌலானா அவர்களும், நானும் அக்கால கட்டத்தில் வெலிகாமத்திலிருந்த மர்ஹூம் அதி சங்கைக்குரிய அஷ் ஷெய்கு அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா அவர்களைச் சந்திப்பதற்காக அங்கு சென்று அவர்களை சந்தித்தோம்.
அவர்கள் ஒரு பெரிய மகானாக இருந்தும் கூட எங்களை மிகவும் கண்ணியப்படுத்தி உபசரித்து தேனீரும் தந்து ஆதரித்தார்கள்.
ஏன் வந்தீர்கள்? என்று கேட்டார்கள். தாங்கள் மிஃறாஜ் சென்றதாகவும், அதை உலமாஉகள் எதிர்த்ததாகவும் கேள்விப்பட்டு அது பற்றிய விபரமறிந்து கொள்ளவே வந்தோம் என்றோம். அதற்கவர்கள் ஆம், நான் மிஃறாஜ் சென்றது உண்மைதான். எனது “றூஹ்” மட்டும் போனதேயன்றி எனது உடல் செல்லவில்லை. உடலோடும், உயிரோடும் சென்றவர்கள் பெருமானார் மட்டுமே. எனினும் வலீமார், இறைஞானிகள் உடலோடன்றி உயிரோடு மட்டும் போயிருக்கிறார்கள். இப்போதும் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் நமது நாட்டு உலமாஉகளுக்கு இந்த விடயம் தெரியாததால் அவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என்று சுருக்கமாகக் கூறிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக பேசத் தொடங்கினார்கள்.
إِنْ تَغَيَّبْتُ بَدَا وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்துவிடுவான் என்ற இப்னு அறபீ நாயகம் அவர்களின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்தார்கள்.
அந்நேரம் நாங்கள் இருவரும் வயது குறைந்தவர்களாக இருந்ததாலும், ஞானம் பற்றிய விபரம் ஒன்றும் தெரியாதவர்களாயிருந்ததாலும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அரை குறை அறிவோடு விடை பெற்று வந்தோம்.
அவர்கள் போல் “வஹ்ததுல் வுஜூத்” தெரிந்தவர்கள்தான் எனது மரியாதைக்குரிய தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள். அவர்களுக்குப் பின் இந்த ஞானம் தெரிந்தவர்கள் இப்போதும் உள்ளார்கள். ஆயினும் அவர்கள் இலைமறை காய் போல் மறைந்தே வாழ்கிறார்கள். இதற்கான காரணம் வாய் திறந்தால் “பத்வா” வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் “முர்தத்” பத்வா வழங்கிவிடுவார்கள் என்பதற்காகவேயாகும்.
யாராவதொருவர் எனக்கு ஆதரவாகப் பேசினாற் போதும். அல்லது என்னைச் சந்தித்தால் போதும். அவர் யாரென்று இனங்கண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் சம்மேளனத்தினது புலனாய்வுப் பிரிவு விசர் நாய் ஓட்டம் ஓடி அவரைக் கண்டுபிடித்து அவரின் வயிற்றிலடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்வார்கள். பலருக்கு இவ்வாறு செய்துள்ளார்கள். அவர்கள் மறுத்தால் பட்டியல் போட்டுக் காட்ட முடியும்.
“பத்வா” வழங்கிய மார்க்க மேதைகளும், அவர்களின் கூற்றுக்கு ஆமாசாமி போடும் சில்லறைகளும் என்னையும், எனது ஆதரவாளர்களையும் யஹூதீ – யூதர்களை விட மிகக் கீழ்த்தரமாக கணித்தார்கள். அவர்களின் பள்ளிவாயல்களில் ஒன்றான ஜாமிஉள்ளாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் எங்களின் ஜனாஸா மரண அறிவித்தல் செய்வதற்கும் தடை செய்தார்கள். அல்லாஹ் இவர்களை எவ்வாறு தண்டிக்க விரும்புவானோ அவ்வாறு தண்டிப்பான். அவனைப் பற்றிப் பேசிய எனக்கு இந்தக் குருடர்கள் வழங்கிய கண் மூடித்தனமான தீர்ப்புக்காக அதியுயர் பீட தண்டனை வழங்குவதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்குகளில் குடலைக் கிழித்து மாலை போடும் இராணுவ வீரர்களைக் கொண்டு தண்டிப்பான். நாங்கள் பார்த்து وجزاء سيئة سيئة مثلها என்று கோஷமிட்டவர்களாகக் குதிப்போம்.
“முர்தத்” பத்வாவை தொடர்ந்து அமுல்படுத்தி வந்த முப்தி இன்று சமுகத்தின்முன் தலை நிமிர்ந்து வர முடியாமல் முடங்கிக் கிடப்பது இவருக்கான முதற் தண்டனை என்றால் அது மிகையாகாது.
மித்லுன் – மதலுன் – مَثَلٌ – مِثْلٌ
கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை தலைக்கண்ணால் கண்டார்கள் என்ற தலைப்பில் தொடர் 03, 04 களில் அல்லாஹ்வைக் கனவில் காண்பது தொடர்பாக விளக்கம் எழுதினேன். அந்த விளக்கம் சரியான விளக்கமாயினும் கூட அது வாசித்தவர்கள் அனைவருக்கும் தெளிவை வழங்கியிருக்குமா? என்று எனக்கோர் எண்ணம் தோன்றியதால் அதே விளக்கத்தை சற்று விபரமாக எழுத விரும்பி இதை எழுதுகிறேன். வாசிப்பவர்கள் இத்தலைப்பில் எழுதப்பட்ட தொடர்கள் அனைத்தையும் வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். எனது நோக்கம் விடயத்தை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதேயன்றி வேறில்லை.
நான் எழுதும் இவ்விபரம் படிப்பறிவும், ஆய்வுத்திறனும், சிந்தனை ஆற்றலும் இல்லாதவர்களுக்கு விளங்குவது கடினமாக இருக்குமென்று நினைக்கிறேன். அத்தகையோர் ஒரு தரம் மட்டும் வாசித்து எந்த ஒரு முடிவும் செய்துவிடாமல் தொடர்ந்து வாசிக்குமாறும், அல்லது விடயம் விளங்கிய ஒருவரிடம் கேட்டறிந்து கொள்ளுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். எவரும் தவறாக விளங்கிக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.
مَثَلٌ
மதலுன் என்றால் உதாரணம். مِثْلٌ – மித்லுன் என்றால் நிகர். இவ்விரண்டிற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒன்றல்ல.
அல்லாஹ்வுக்கு “மதல்” உண்டு. உதாரணம் உண்டு. “மித்ல்” இல்லை. நிகர் இல்லை.
قال الله تعالى ولله المَثَلُ الْأَعْلَى
அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு. (திருக்குர்ஆன்: 16-60)
இதன் விளக்கமென்னவெனில் அல்லாஹ்வுக்கு உதாரணம் சொல்லலாம் என்பதாகும். ஆயினும் அவ் உதாரணம் உயர்வானதாயும், கண்ணியமானதாயும் இருக்க வேண்டும். கீழ்த்தரமானதாக இருத்தல் கூடாது. அல்லாஹ்வைப் பொறுத்த வரை கண்ணியம், “அதபு” ஒழுக்கம் பேணுதல் வேண்டும்.
அவனுக்கு உதாரணம் சொல்வதாயின் ஒரு நாட்டின் அரசன், ஜனாதிபதி போன்ற உதாரணங்கள் சொல்லலாம். குறித்த வசனத்திலுன்ன “அல்அஃலா” என்ற சொல் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.
இது எது போலெனில் அல்லாஹ் எல்லாமாயும் வெளியாகியுள்ளான் என்பது தத்துவமாகும். எதார்த்தமாகவும், சரியானதாகவும் இருந்தாலும் கூட மலமாகவும், சலமாகவும், நாயாகவும், பன்றியாகவும் வெளியானவனும் அவன்தான் என்று மட்டும் குறித்துப் பேசுவதைத் தவிர்ப்பது “அதப்” ஒழுக்கமும், பேணுதலுமாகும். இது போன்றதே அவனுக்கு உதாரணம் சொல்வதுமாகும்.
இதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்து விட்டது. அதை இங்கு எழுதுவது வாசக நேயர்களுக்கு மேலும் தெளிவைத் தருமென்பதற்காக அதை எழுதுகிறேன்.
1981ம் ஆண்டு அல்லது 82ம் ஆண்டு நொச்சிமுனை என்ற கிராமத்தில் ஒரு மீலாத் விழா நடந்தது. இக்கிராமம் காத்தான்குடிக்கும், கல்லடிக்கும் இடையில் அக்காலத்தில் இருந்தது. மிகவும் சிறிய பள்ளிவாயலொன்றும் இருந்தது. அங்கு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தில் என்னிடம் படித்த மாணவர் ஒருவர் இருந்தார். அவரின் பெயர் என் நினைவில் இல்லை. இவர் இப்போது 55 வயதைக் கடந்தவராக இருப்பாரென்று நினைக்கிறேன். அவர்தான் அந்த மீலாத் விழாவை ஒழுங்கு செய்திருந்தார்.
நான் எல்லாம் இறைவனின் வெளிப்பாடும், அவனின் தோற்றமும் என்று பேசிக் கொண்டிருக்கையில் ஒருவர் ஒரு கேள்வி கேட்டு ஒரு துண்டு அனுப்பியிருந்தார். அவர் அதில் “எல்லாம் அவன் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் நாயும், பன்றியும் அவனா?” என்று கேட்டிருந்தார்.
நான் மேடையில் அதை மக்களுக்கு வாசித்துக் காட்டி இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. கேட்டவரே பதில் கூறிவிட்டார் என்று கூறினேன். எல்லாம் அவன் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அவர் எழுதியிருந்ததே அவரின் கேள்விக்கான பதில் என்று கூறினேன்.
எல்லாமாயும் அவன்தான் வெளியாகியுள்ளான் என்றால் அவன் படைத்த அனைத்தும் அதில் அடங்கிவிடும். “களா கத்ர்” விதி என்று சொல்கின்றோமே இது கூட அவனில் நின்றுமுள்ளதென்றுதானே நம்ப வேண்டும். இவ்வாறு நம்புவதுதானே “ஈமான்” விசுவாசமென்று இஸ்லாம் கூறுகிறது. விதியில் நல்லதுமுண்டு. கெட்டதுமுண்டு. இரண்டுமே அவன் செயல்தானே! இவ்வாறு நம்பாமல் நல்லதை மட்டும் அவன் படைத்தான் என்றும், கெட்டதை அவன் படைக்கவில்லை என்றும் நம்ப முடியுமா? அப்படியானால் கெட்டதைப் படைப்பதற்கு வேறொருவன் உள்ளான் என்றல்லவா கருத்து வரும். அவ்வாறாயின் கடவுள் – இறைவன் இருவரா?
وَالْقَدْرُ خَيْرُهُ وَشَرُّهُ مِنَ اللهِ تَعَالَى
விதியில் நல்லதும், கெட்டதும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்று நம்புமாறு நாம் ஏவப்பட்டுள்ளோம். தொழுகை என்ற செயலுக்குரியவனும் அல்லாஹ்தான். விபச்சாரம் என்ற செயலுக்குரியவனும் அல்லாஹ்தான். எல்லாம் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்றாலும், எல்லாம் அல்லாஹ் இடத்தில் நின்றுமுள்ளவை என்றாலும் ஒன்றேதான். ஆயினும் قُلْ كُلٌّ مِنَ اللهِ எல்லாம் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதே என்று அல்லாஹ் சொல்லாமல் قُلْ كُلٌّ مِنْ عِنْدِ اللهِ எல்லாம் அல்லாஹ் இடத்தில் நின்றுமுள்ளவை என்றுதானே சொல்லியுள்ளான். இதிலுள்ள இரகசியம் புரிகிறதல்லவா? عِنْدَ என்ற சொல் ஒன்றை மூடிக் காட்டுவது போன்றதும், مِنْ என்ற சொல் ஒன்றை மூடாமல் திறந்து காட்டுவது போன்றதுமாகும்.
قُلْ كُلٌّ مِنَ اللهِ
என்ற வசனத்தின் எதார்த்தம் قُلْ كُلٌّ اَلله என்பதேயன்றி வேறென்ன? “மின்” என்பது ஒரு மூடி போன்றதே!
“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகின்றவர்களிலேயே சில குறை குடங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூற முடியாதென்று சொல்வதையும், அதற்கு ஆதாரமாக فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ என்ற திரு வசனத்தை ஆதாரமாகக் கூறுவதையும் பார்க்கும் போதும், கேட்கும் போதும் வியப்பாக உள்ளது. இவர்களின் கண்களுக்கு ولله المثل الأعلى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்ற திருக்குர்ஆன் வசனம் தெரியாமற் போனதேனோ? அல்லது தெரிந்தும் புரியாமற் போய்விட்டதோ?
இன்னோர் பின்வரும் தகவலை திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். اَلْأَمْثَالْ “அல் அம்தால்” என்ற பன்மைச் சொல் مِثْلْ நிகர் என்பதற்கு மட்டுமுள்ள பன்மைச் சொல் அல்ல. அது مَثَلٌ உதாரணம் என்ற பொருளுக்குரிய பன்மைச் சொல்லுமேயாகும். இச் சொல்லை எவ்வாறு எடுத்துக் கொள்வது مِثْلٌ என்ற சொல்லுக்குரிய பன்மைச் சொல்லாக எடுத்துக் கொள்வதா? அல்லது مَثَلٌ என்ற சொல்லுக்குரிய பன்மைச் சொல்லாக எடுத்துக் கொள்வதா?
“மதல்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாக எடுத்துக் கொண்டால் இவ்வசனம் ولله المثل الأعلى அல்லாஹ்வுக்கு உயர்வான உதாரணம் உண்டு என்ற திருவசனத்திற்கு முரணாகிவிடுமல்லவா? ஒரு திரு வசனம் இன்னொரு திரு வசனத்திற்கு முரணாகுமா?
ஆகையால் அல்லாஹ்வுக்கு உயர்வான உதரணம் உண்டு என்றுரைக்கும் இத்திரு வசனத்தின் ஆதாரத்தின் மூலம் فلا تضـربوا لله الأمثال என்ற வசனத்தில் வந்துள்ள “அல் அம்தால்” என்ற பன்மைச் சொல் مِثْلٌ நிகர் என்ற பொருளுக்குரிய பன்மைச் சொல்லேயன்றி مَثَلٌ உதாரணம் என்ற சொல்லுக்குரிய பன்மைச் சொல் அல்ல என்று நிரூபணமாகின்றதல்லவா? இதை விட விளக்கமாகச் சொல்ல தமிழில் சொற்களில்லை.
أمثال
என்ற பன்மைச் சொல் مِثْلٌ ، مَثَلٌ என்ற ஒருமைச் சொற்களுக்கான பன்மைச் சொல் என்பதையும், فلا تضربوا لله الأمثال என்ற திரு வசனத்தில் வந்துள்ள “அம்தால்” என்ற சொல் مِثْلٌ நிகர் என்ற பொருளுக்குரிய சொல்லின் பன்மைச் சொல் என்பதையும் புரிந்து கொண்டால் எந்தவொரு தடுமாற்றத்திற்கும் இடமில்லாமற் போகும்.
நிகர் என்ற பொருளுக்கு مِثْلٌ என்ற சொல் பயன்படுத்தப்படுவது போல் كُفْوٌ – குப்வுன் نِدٌّ – நித்துன் , نَظِيْرٌ – நளீறுன், مَثِيْلٌ – மதீலுன் என்ற சொற்களும் பயன்படுத்தப்படும்.
المثل يستدعي المساواة فى جميع الصفات، كالسوادين والجوهرين ويقوم كل واحد منهما مقام الآخر من جميع الوجوه
மேலும் இதையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது ஒன்று இன்னொன்றுக்கு நிகரானதென்று சொல்வதாயின் ஒன்றிலுள்ள முழுத்தன்மைகளும், அமைப்புக்களும் ஓர் அணுவும் மாறுபடாமல் மற்றதிலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருக்காது போனால் நிகர் கூற முடியாது. இது அதற்கு நிகரானதென்று சொல்ல முடியாது. இந்த வரைவிலக்கணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவன் அல்லாஹ்வுக்கு – கடவுளுக்கு – இறைவனுக்கு நிகர் இல்லையென்ற நிகரற்ற தத்துவத்தை இமய மலை மீது ஏறி நின்று கோடி கோடி ஒலிபெருக்கிகளில் முழங்குவான்.
இந்த விளக்கத்தின் படி இறைவனுக்கு நிகராக எதுவுமே இருக்க முடியாது. அது அசாத்தியத்தினும் அசாத்தியம். “ஷிர்க்” என்ற சொல்லுக்கு விளக்கமும், வரை விலக்கணமும் தெரியாதவர்களே அல்லாஹ்வுக்கு இணை வைப்பார்கள். உலகிலுள்ள 800 கோடி மக்களும் இறைவனுக்கு இணை வைத்து வணங்கினாலும் கூட அவனுக்கு இணை – நிகர் ஒருபோதும் வந்துவிடாது. இது கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.
ஏனெனில் “ஷெய்உன்” வஸ்த்து என்று சொல்லப்படுகின்ற எதை எடுத்துக் கொண்டாலும் அது ஒன்றோ தனக்குத் தானானதாக – தானாக உண்டானதாக இருக்க வேண்டும். அல்லது இன்னொருவனால் உண்டாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மூன்றாவதொன்று இல்லை. தனக்குத் தானானது ஒன்றுதான். ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அதுபோல் இன்னொன்று உண்டென்று நம்பினவன் அவ்விடயத்தில் இணை வைத்துவிட்டான். நம்பினவன் தனது நம்பிக்கையில்தான் இணை வைத்தானேயன்றி அவன் இணையுண்டு என்று சொல்வதால் அல்லது நம்புவதால் இறைவனுக்கு இணை வந்து விடாது.
இறைவன் படைத்த ஒரு படைப்பை வைத்துக் கொண்டு அதைக் கடவுளென்று இவன் சொல்வதால் அது கடவுளாகி விடாது. இதேபோல் இவன் ஒன்றைச் செய்து வைத்துக் கொண்டு அதை வணங்குவதால் அதுவும் கடவுளாகிவிடாது.
கடவுள் – அல்லாஹ் என்பவன் இன்னொருவனால் படைக்கப்படாதவனாக – உருவாக்கப்படாதவனாக இருக்க வேண்டும். இன்னொருவனால் உருவாக்கப்பட்டதற்கு கடவுள் அதை உருவாக்கியவனேயாவான். கடவுள் என்பவன் எப்போதும் قائم بنفسه தானானவனும், தன்னைக் கொண்டு நிற்பவனுமேயன்றி இன்னொருவனால் உண்டாக்கப்பட்டவனாகவும், இன்னொருவனைக் கொண்டு நிற்பவனாகவும் இருக்க முடியாது.
மனிதன் எந்த ஒரு சிருட்டியை வணங்கினாலும் அது பெயரளவில் வணங்கப்பட்டதாகுமேயன்றி எதார்த்தத்தில் வணக்கத்திற்கு உரியதாகாது. ஒருவன் கல்லையும், மண்ணையும் எடுத்து அவனே ஓர் உருவத்தை செய்து வணங்கினால் அது எவ்வாறு அவனைப் படைத்த கடவுளாகும்?
ஒருவன் எந்தவொரு குறித்த சிருட்டி – படைப்பை வணங்கினாலும் அது இறைவனை வணங்கியதாகாது. அவனுக்கு குறித்த உருவம் அல்லது தோற்றம் மட்டுமிருந்து அதை வணங்கினால்தான் அது ஓரளவேனும் பொருத்தமானதாகும். அது கூட எதார்த்தத்தில் பிழைதான். ஒருவன் கடவுளால் படைக்கப்பட்ட படைப்புக்களில் – உயிரினங்களிலும், உயிரில்லாதவைகளிலும் அனைத்தையும் ஒரே நேரத்தில் முன்னிறுத்தி வணங்குவதென்பது அசாத்தியத்தினும் அசாத்தியமானதே. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகும். இதனால்தான் இஸ்லாம் சிருட்டி வணக்கம், சிலை வணக்கம் என்பவற்றை தடை செய்துள்ளது. அது பெருங்குற்றமென்று கூறுகிறது.
அல்லாஹ்வை – இறைவனை வணங்குமாறுதான் மனிதன் பணிக்கப்பட்டுள்ளான். அவனை பல துண்டுகளாக்கி ஒரு கூட்டம் ஒரு துண்டையும், இன்னொரு கூட்டம் இன்னொரு துண்டையும் வணங்குமாறு பணிக்கப்படவில்லை.
சிலைகளையும், சிருட்டிகளையும் வணங்குபவர்களிடம்
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்து சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தியவன் யார்? என்று நபீயே நீங்கள் அவர்களிடம் கேட்டால் அல்லாஹ் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் அவனை வணங்குவதை விட்டும் எங்கு திருப்பப்படுகின்றார்கள். (2961)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ
மேலும் நபீயே! வானத்திலிருந்து மழையை இறக்கி அதனைக் கொண்டு பூமியை அது இறந்தபின் உயிர்ப்பித்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீர்களாயின் அல்லாஹ் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். அதற்கு புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது என்று நீங்கள் கூறுவீர்களாக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிந்து கொள்ளமாட்டார்கள். (29-63)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ
நபீயே! அவர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீங்கள் கேட்டால் அவன் மிகைத்தவன், நன்கறிந்தவன் ஆகிய அல்லாஹ்தான் படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (43-09)
وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّى يُؤْفَكُونَ
மேலும் நபீயே! அவர்களைப் படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் அல்லாஹ்தான் என்று நிச்சயமாக கூறுவார்கள். அவ்வாறாயின் அவர்கள் எங்கு திருப்பப்படுகின்றார்கள்? (43 -87)
மேற்கண்ட நான்கு திரு வசனங்கள் போல் இன்னும் பல வசனங்கள் உள்ளன. விஷயம் நீண்டுவிடுமென்று அவற்றைக் குறிப்பிடவில்லை.
எனவே, “ஷிர்க்” இறைவனுக்கு இணை இல்லவே இல்லை. ஒருவன் இருப்பதாக நினைத்தானாயின் அந்த நினைவால் அவன்தான் “ஷிர்க்” இணை வைத்தவனாவானேயன்றி அவன் நினைப்பதால் எதார்த்தத்தில் இணைக்கு இடமே இல்லை.
அவன் “அஹத்” ஏகன். அதாவது ஏகமுமானவன். அவனுக்கு இடமுமில்லை, தலமுமில்லை என்றும், திசையில்லை என்றும் சொல்வதற்குக் காரணம் எல்லாமாயும் அவனே இருந்தால் அவனிருப்பது எங்கே? இருமையறு. அதுவே “ஷிர்க்” எனும் கயிறு. வேறென்ற வேற்றுமையை வெட்டி வீழ்த்து. அதுவே உனது நரகம்.
எல்லாமயும் “தஜல்லீ”யாகி – வெளியாகி ஏகமுமாயுள்ள கடவுளுக்கு எத்தனை தோற்றமென்று – உருவமென்று – “மள்ஹர்” பாத்திரமென்று எவனால் மட்டிட முடியும்? அவனே வெளியானவன், அவனே உள்ளானவன், அவனே முந்தினவன், அவனே பிந்தினவன் என்றால் இடையிலுள்ளவர் யார்? அவன் வேறா? எப்படி வேறாவான்?
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ}.
நீங்கள் ஒரு கயிற்றைக் கையிலெடுத்து அதன் ஒரு தொங்கலை நீங்கள் பிடித்துக் கொண்டு அதன் மறு தொங்கலை பூமியை நோக்கி தொங்கவிட்டால் அது அல்லாஹ்வில் விழும் என்று சொன்னார்களே! ஏன் சொன்னார்கள்? சிந்தியுங்கள். சிந்தியுங்கள். இவ்வாறு சொன்ன பெரு மகனார் பெருமானார் முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற திரு வசனத்தை ஓதிக் காட்டினார்களே அது ஏன்? முன்னால் சொன்ன தத்துவத்தை நிறுவுவதற்காகவே பின்னால் அதற்கான ஆதாரத்தைக் கூறிக் காட்டினார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? மெய்ஞ்ஞானம், மெய்யறிவு உங்களுக்குப் புரியவில்லையா? ஓடி ஒழியுங்கள். ஒதுங்குங்கள். சத்தியத்தை புரட்ட சதி செய்யாதீர்கள்.
ஹதீது பின்வருமாறு:
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ}.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து அதன் ஒரு தொங்கலை கையால் பிடித்துக் கொண்டு அதன் மறு தொங்கலை பூமியை நோக்கி தொங்க விட்டால் அத் தொங்கல் அல்லாஹ்வில் விழும் என்று கூறிய திங்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே, அவன் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவன் என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
ஆதாரம்: துர்முதீ
பாகம்: 05
பக்கம்: 257
இந்த ஹதீது எல்லாம் அவனே என்ற ஸூபிஸ தத்துவத்தை நிறுவுவதற்காக நபீகளார் அருளிய அருள் மொழியென்று நான் நம்புகிறேன். இந்த நபீ மொழி நான்கு வரியில் எழுதக் கூடியதாக இருந்தாலும் கூட மிக ஆழமான இறையியல் தத்துவங்களை உள் வாங்கிய, நாம் பேரின்பம் சுவைக்க வேண்டிய தத்துவ மொழியாகும்.
ஒரு மனிதன் ஒரு கயிறை எடுத்து அதன் மறு தொங்கலை பூமியை நோக்கி தொங்கவிட்டால் அது பூமியில்தான் விழும். இதை எவரும் மறுக்கமாட்டார்கள். இது சொல்ல வேண்டிய ஒன்றுமல்ல. இது சிறு பிள்ளையுட்பட அனைவரும் அறிந்த விடயமாகும்.
ஆனால் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வில் விழுமென்று சத்தியம் செய்து சொல்லியுள்ளார்கள். ஒருவர் ஒரு விடயத்தைச் சொல்லும் போது சத்தியம் செய்யாமல் சாதாரணமாகச் சொல்வதே வழக்கம். ஆயினும் ஒருவன் தான் சொல்லப்போவதை மற்றவர்கள் நம்பமாட்டார்கள் என சொல்பவன் அறிந்தால் மட்டும்தான் சத்தியம் செய்து சொல்வான். அவ்வாறுதான் சொல்லவும் வேணடும். அதே பாணியில் எம்பெருமான் ஏந்தல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் சத்தியம் சொன்னதிலிருந்து அவர்கள் சொன்ன செய்தி மக்கள் எழிதில் நம்ப முடியாத ஒன்றென்பதும், அது மட்டுமன்றிச் செய்தி உண்மையானதென்பதும் தெளிவாகின்றது.
ஒரு விடயம் இவ்வாறுதான் என்று நீண்ட காலம் நம்பி வாழ்ந்த ஒருவனின் நம்பிக்கையை எழிதாக மாற்றி அதற்கு மாறான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதாயின் கடும் பாடு பட வேண்டும். ஒரு சத்தியமல்ல பல சத்தியங்களும் செய்ய வேண்டும்.
தொன்று தொட்டு பன்னெடுங்காலமாக அல்லாஹ் வானத்திலுள்ளான் என்றோ, எல்லாவற்றிலும் உள்ளான் என்றோ, அல்லது அவன் எங்கோ இருக்கின்றான் என்றோ அறிந்தும், நம்பியும் வாழ்ந்த மக்களின் மனதை மாற்றுவது மிகவும் கடினம். இவ்வாறு நம்பி அந்த நம்பிக்கையில் வாழ்ந்த ஒருவனிடம் அல்லாஹ் எல்லாமாயும் உள்ளான், பூமியாகவும் உள்ளான், வானமாகவும் உள்ளான் என்று சொல்வது அவன் தலையில் ஓர் இடி விழுந்தாற் போன்றே இருக்கும்.
1979ம் ஆண்டு இக்கருத்தை மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேசிய போது எனது பேச்சை பதிவு செய்த வெளியூர்வாசி ஒருவர் தனது ஊருக்கு அதை எடுத்துச் சென்று ஒரு மௌலவீயிடம் கொடுத்த போது அவர் அதை தனது நண்பர்களோடும், மனைவி மக்களோடும் செவியேற்றுக் கொண்டிருந்த வேளை கதிரையிலிருந்த அவர் மயங்கி கீழே விழுந்து தலை வெடித்து தையல் போட்ட வரலாறும் உண்டு.
இதனால்தான் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் والله، وبالله، وتالله என்று கூட சத்தியம் செய்யாமல் இந்த வசனங்களை விட சிறந்த, கருத்தாழமுள்ள வசனங்களைக் கூறி மேற்கண்டவாறு சத்தியம் செய்து சொன்னார்கள்.
குறித்த ஹதீதில் هَبَطَ عَلَى اللهِ அல்லாஹ்வில் விழும் என்று வசனம் வந்துள்ளது. இந்த வசனத்தைக் கண்டு பயந்த மார்க்க மேதைகளிற் பலர் – நீரின் மேல் நீச்சலடிப்பவர்களும், துணிக்கு மேல் சொறிவோரும் குறித்த அந்த வசனத்துக்கு தமது சுய விருப்பத்தின்படி விளக்கம் கூறுகிறார்கள். அதாவது “தஃவீல்” வலிந்துரை கூறுகின்றனர். வலிந்துரை என்பது இவ்விடத்தில் மட்டுமன்றி வலிந்துரை கூற வேண்டிய இடத்தில் கூறவே வேண்டும். அதை நான் மறுக்கவில்லை. எனினும் வலிந்துரை கூறத் தேவையற்ற இடத்தில் கூறுதல் கூடாது. குறிப்பாக இவ்விடத்தில் – அதாவது அல்லாஹ்வில் விழும் என்ற இடத்தில் வலிந்துரை கொள்வது கூடாது. ஏனெனில் வலிந்துரை கொள்ளாமல் நேரடிப் பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலும், முரண்பாடும் வருவதற்கு வழியே இல்லை. பின்னால் வரும் விளக்கம் அதற்கான வழியை அடைத்துவிடும்.
திருக்குர்ஆன் வசனத்திற்கு, அல்லது ஒரு மகானின் பேச்சுக்கு வலிந்துரை கொள்ளாமல் நேரடிப் பொருள் கொள்வதால் அந்தப் பொருள் திருக்குர்ஆனின் வேறொரு வசனத்திற்கோ, நபீ மொழிக்கோ முரணாகுமாயின் மட்டும்தான் வலிந்துரை கொள்ள வேண்டும். இன்றேல் வலிந்துரை கொள்ள வேண்டிய எந்த ஓர் அவசியமும் இல்லை. வெளிப்படையான பொருள் சரியாக இருந்தால் வலிந்துரை எதற்கு? தேவையில்லையல்லவா?
இவ்வாறுதான் திருக்கலிமா என்ற “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதற்கு வலிந்துரை வைத்து பொருள் கொள்வதுமாகும். இக்கலிமா திருக்குர்ஆனின் “முஹ்கமாத்” வசனங்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் – அதாவது வலிந்துரை கொள்ளாமல் பொருள் கொள்ள வேண்டிய வசனமாயிருக்கும் நிலையில் அதற்கும் வலிந்துரை வைத்து பொருள் கூறி திருக்கலிமா எதற்காக அருளப்பட்டதோ அதன் குறிக்கோளைக் கூட கெடுத்துவிடுகின்றார்கள். இவ்வாறு கண்டது நிண்டதுகளுக்கெல்லாம் வலிந்துரை செய்து இஸ்லாமிய தத்துவத்தை வெறும் சக்கையாக்கி, தத்துவமற்ற மார்க்கமாக ஆக்கும் வலிந்துரை காரர்களை எண்ணி என் மனம் புண்ணாகின்றது.
இந்த இடத்தில் வலிந்துரை கொள்வதால்தான் பிரச்சினையும், முரண்பாடும் ஏற்படுமேயன்றி வலிந்துரை கொள்ளாமல் அந்த ஹதீதுக்கு நேரடிப் பொருள் கொள்வதால் எந்த ஒரு சிக்கலும், முரண்பாடும் ஏற்படமாட்டாது.
வலிந்துரை கொள்வதால் எந்த வகையில் சிக்கலும், முரண்பாடும் ஏற்படுமென்பதை இங்கு விளக்கி எழுதுகிறேன்.
تعالوا أيّها العلماء المؤوِّلُون إلى فناء التوحيد مسرعين بقصد الفناء فى الله، وكيف تصلون إلى حضـرته المقدّسة وأنتم جاهلون به، وكيف تذوقون حلاوة التوحيد والإيمان وأنتم غافلون عنه، وكيف تدخلون حضـرته وأنتم جنب بحبّ دنياكم، وأهلكم وعيالكم وإخوانكم وعشيرتكم وأسرتكم، وأموال اقترفتموهاوتجارة تخشون كسادها، فتطهّروا أوّلا من جنابتكم بغسل الغيريّة التي نجّستكم وأبعدتكم عنه، وتعلّموا علم التصوّف والحقيقة والطّريقة والمعرفة وعلم الحكمة التي أمركم ربّكم بتعلّمها، بقوله ادع إلى سبيل ربّك بالحكمة والموعظة الحسنة، وكيف تدعون النّاس إلى ربّكم بالحكمة وأنتم جاهلون بها، لأنّ الحكمة علم يعرف به سبيل الله ما هو؟ ويبحث فيها عن حقيقة كلّ شيئ، لا العلم الذي يُلَقْلِقُ به العلماء المحجوبون بالحُجب الظلمانيّة، قال سيّد الوجود والشّهود، سيّد الكونين والثقلين والفريقين، سيّدنا محمد صلّى الله عليه وسلّم ‘ إنّ من العلم كهيئة المكنون لا يعلمه إلّا العلماء بالله، وهو علم الله، وعلم القوم، الذين عاشوا لله وماتوا لله ونطقوا لله وسكتوا لله وصاموا لله وأفطروا،
أيّها العلماء المؤوّلون! تدبّروا قوله تعالى وتفكّروا فيه، ‘ وفى أنفسكم أفلا تبصـرون؟ وهل تفكّرتم فى عمركم وعيشكم أين مفعول تبصـرون؟ وما هو؟ وهل تفكّرتم أيضا فى قوله تعالى جلّ شأنه ‘ واذكر ربّك إذا نسيت ‘ وهل تفكّرتم فى الأيّام التي قضيتموها فى التعلّم والتّعليم أين مفعول نسيت؟ وما هو؟
أفلا تتدبّرون القرآن؟ أفلا تتدبّرون أقوال آلاف آلاف آلاف العارفين الّذين ذاقوا طعم الإيمان، وهل ذقتم طعمه؟ ولو مرّة فى عيشكم؟ فإن كنتم ذقتم فلا ترقدون على سطح قصوركم، فالعجب منكم ومن أمثالكم ومن أتباعكم تتمثّلون أنّكم العلماء والفقهاء والعرفاء، ولكن لا تعلمون شيئا من المعرفة والحقيقة والطّريقة، ولا تسيئوا ظنونكم بهذا العبد الذي يدعوكم لإحياء كلمة التوحيد، ولا تشتموه، لأنّ شتم الخلق فى الحقيقة شتم الله كما دلّت الأحاديث النبويّة، ولا تقوموا ضدّه، لأنّه مأمور بما يقول، والمستعان، وهو المطلوب،
هبط على الله
அந்தக் கயிறு அல்லாஹ்வில் விழுமென்று கூறினால் பூமி அல்லாஹ் என்ற கருத்து வருகிறதென்று பயந்த “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் புரியாதவர்கள் அதற்கு வலிந்துரை கூற முன் வந்துள்ளார்கள்.
“அர்ழ்” என்ற பூமி அல்லாஹ்வின் படைப்பு. அதாவது அது அல்லாஹ்வின் சக்தியால் படைக்கப்பட்டது. அந்த வகையில் கயிறின் தொங்கல் அதில் விழுந்தால் அவனின் சக்தியில் விழுகிறது என்று கருத்து வரும். இதனால் هَبَطَ على الله என்ற வசனத்தில் “குத்றத்” என்ற சொல்லை சேர்க்க வேண்டும். هَبَطَ على قُدْرَةِ الله அல்லாஹ்வின் சக்தியில் விழுகிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும். வலிந்துரை கூறுவோர் இவ்வாறு கூறுகிறார்கள். இவர்களின் கூற்று அறியாமையல்ல. மாறாக பேத்தனமேயாகும். இது முற்றிலும் தவறு. விளக்கத்தை கவனியுங்கள்.
சக்திக்கு அறபியில் “குத்றத்” என்று சொல்லப்படும். “சக்தி” என்பது தன்மை. அது ஒருபோதும் தனியே நிற்காமல் ஏதாவதொன்றிலேயே நிற்கும். உதாரணமாக மனிதனில் நிற்கும். அல்லது கத்தியில் நிற்கும். அல்லது நெருப்பில் நிற்கும். நிற்குமென்றால் இருக்குமென்று பொருள்.
மனிதனில் நிற்கின்ற ஒன்று அவனில்தான் நிற்குமேயன்றி அவனை விட்டும் பிரியாது. உதாரணமாக சக்தி, நாட்டம் போன்று. இப்றாஹீமுடைய சக்தியையும், நாட்டத்தையும் அவனை விட்டும் பிரித்தெடுக்க முடியாதது போல் கத்தியின் வெட்டும் சக்தியையும், நெருப்பின் சுடும் சக்தியையும் அவற்றை விட்டும் பிரித்தெடுக்க முடியாது.
இவ்வாறுதான் “ஸிபத்” என்ற தன்மை எதில் நிற்கிறதோ அதைவிட்டும் பிரியவுமாட்டாது. பிரித்தெடுக்கவும் முடியாது.
இந்த விபரத்தின்படி அல்லாஹ்விலிருந்து அவனின் தன்மைகள் எதையும் பிரித்தெடுக்க முடியாது. பிரித்தெடுக்க முடியுமென்று ஒரு மடையன் சொன்னால் நீ மடையானாயிருக்கின்றாய், ஆகையால் உனது மடத்தனத்தை உன்னிலிருந்து எறிந்து விட்டு புத்திமானாய் வாழலாமல்லவா? என்று நாம் அவனுக்கு கூற வேண்டும்.
எனவே, அல்லாஹ்வில் விழுமென்று அண்ணல் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்னதை அது அவனில் விழாது அவனின் சக்தியில் விழுமென்று கூறியவனின் கருத்து பிழையானது. அது எடுபடாது.
அவனின் கருத்து பிழை என்பதற்கு இன்னுமொரு காரணம் சொல்லலாம். கயிறு என்பது ஒரு சடப்பொருள். அது விழுவதாயின் ஒரு சடப் பொருளிலேயே விழ வேண்டும். சக்தி என்பது சடமில்லாத ஒன்று. அதில் சடமில்லாத ஒன்று விழுவதானது அசாத்தியமேயாகும்.
மேற்கண்ட இரண்டு காரணங்களும் هبط على الله அல்லாஹ்வில் விழும் என்ற வசனத்திற்கு அல்லாஹ்வின் هَبَطَ عَلَى قُدْرَةِ الله சக்தியில் விழுமென்று வலிந்துரை கொள்ள வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்பவன் முழு முட்டாளேயன்றி அரை முட்டாள், கால் முட்டாள் அல்ல.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வில் விழுமென்று கூறியதை அடுத்து முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஓதிக் காட்டியதற்கான காரணம் என்னவென்று நாம் ஆய்வு செய்தால் அக்கயிறு அல்லாஹ்வில்தான் விழுகின்றதென்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவேயாகும்.
இந்த நபீ மொழியை கூறிய எம் பெருமகனும், பெருமகானுமான அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதைத் தொடர்ந்து ஓதிய திரு வசனம் وَهُوَ بَكُلِّ شَيْئٍ عَلِيْم என்று முடிகிறது. இது பற்றியும் நமது புத்திக்கு வேலை கொடுத்து அது என்ன கூறுகின்றதென்று பார்ப்போமா?
இதன் பொருள் அல்லாஹ் சகல வஸ்த்துக்களையும் மிக அறிந்தவனாவான் என்பதாகும். இந்த வசனம் பின்வருமாறும் வரலாம். وهو عليم بكل شيئ எவ்வாறு வந்தாலும் பொருள் ஒன்றுதான். ஆயினும் இதில் ஒரு நுட்பம் உண்டு.
அதாவது عَلِيْمٌ என்ற சொல்லுக்கு مَعْلُوْمٌ அறியப்பட்டவன் என்ற பொருள் உண்டு. இந்த அடிப்படையில் அல்லாஹ் சகல வஸ்த்துகள் கொண்டு – அவை மூலம் அறியப்பட்டவன் என்ற கருத்து வந்துவிடும்.
(தொடரும்…)