தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
சர்வதேச மடையர்கள் நால்வர். அவர்களில் ஒருவர் “ஹபன்னகா” என்பவர். இவர் கைஸ் இப்னு தஃலபா என்பவரின் மகன்களில் ஒருவர். அவரின் மடத்தனங்கள் பின்வருமாறு.
هو أحد بني قَيس بن ثَعْلَبَة، مِن حَمَقِه أنّه كان يَرْعَى غَنَمَ أهلِه، فَيَرْعَى السِّمانَ فى العُشْبِ ويُنحى المهازِيلَ، فقِيْلَ له وَيْحَكَ ما تَصْنَعُ؟ قال لا أُفسِدُ ما أُصلَحهُ الله، ولا اُصْلِحُ ما أَفْسَدَه،
ஒன்று – அவன் தனது குடும்பத்தவர்களின் ஆடுகளில் கொழுத்தவற்றை புல்லுள்ள இடத்தில் மேய்ப்பான். மெலிந்தவற்றை புல் சாப்பிட விடாமல் அழைத்துச் செல்வான். அவனிடம் நீ என்ன செய்கிறாய் என்று கேட்கப்பட்டதற்கு அல்லாஹ் நல்லாக வைத்திருப்பவற்றை நான் கெடுத்துவிட மாட்டேன். அவன் கெடுத்தவற்றை நான் நல்லாக்கமாட்டேன் என்று கூறினான்.
وَمِن حَمَقِه أيضا أنّه جَعَلَ فى عُنقِه قِلادَةً، مِن وَدَعٍ وعِظامٍ وخزَفٍ، فسُئل عن ذلك، فقال لِأَعْرِفَ بِهَا نَفْسِيْ وَلِئَلَّا أَضِلَّ، فبات ليلَةً، وَأَخَذَ أَخُوْهُ قِلَادَتَهُ فَتَقَلَّدَهَا، فَلَمَّا أَصْبَحَ وَرَأَى الْقِلَادَةَ فِى عُنُقِ أَخِيْهِ قَالَ يَا أَخِيْ أَنْتَ أَنَا فَمَنْ أَنَا؟
அவனின் மடத்தனத்தில் மற்றொன்று. அவன் தனது கழுத்தில் கடல் மட்டி, எலும்பு, கல் போன்றவற்றால் ஒரு மாலை அணிந்து கொண்டான். அவனிடம் ஏன் இவ்வாறு அணிந்து கொண்டாய்? என்று கேட்கப்பட்டதற்கு நான் என்னை அறிந்து கொள்வதற்காகவும், நான் மரணிக்காமல் இருப்பதற்காகவும் (அல்லது நான் தொலைந்துவிடாமல் இருப்பதற்காகவும்) அணிந்துள்ளேன் என்றான். ஒரு நாளிரவு அவனின் சகோதரன் மாலையை எடுத்து தனது கழுத்தில் அணிந்து கொண்டான். காலையில், மாலை சகோதரனின் கழுத்தில் இருந்தது கண்டு சகோதரா! நீதான் நான். நான் யார்? என்று கேட்டான்.
மடத்தனமுள்ளவனுக்கு அறபிகள் أَحْمَقُ مِنْ هَبَنَّقَةْ ஹபன்னகா என்ற மடையனை விடப் பெரிய மடையன் என்று சொல்வார்கள்.
இன்னொருவர் “ஷறன்பத்” என்பவர்.
َمِن حَمَقِ شَرَنْبَتْ أنّه دَفَنَ ما لَه فى فَلاةٍ وأَعْلَمَ مَوْضِعَ المالِ بِظِلِّ سَحابَةٍ كان مُمْتَدًّا عليه، فلمّا عاد لِيَأْخُذَ المالَ كان الظِّلُ قَدْ انْجَلَى، فَضَلَّ المكانَ وأضاع مالَه،
“ஷறன்பத்” என்பவனின் மடத்தனம் பின்வருமாறு. அவன் தனது பணத்தை திறந்த வெளியொன்றில் மணலில் புதைத்து அதற்கு அடையாளமாக ஆகாயத்திலுள்ள மேகத்தின் நிழலை வைத்திருந்தான். பின்னர் அதை எடுக்க வந்த நேரம் மேகம் கலைந்து நிழலில்லாமல் இருந்ததால் தேடியலைந்து தனது பணத்தை இழந்தான்.
மடத்தனமுள்ளவனுக்கு அறபிகள் أَحْمَقُ مِن شَرَنْبَتْ ஷறன்பதை விடப் பெரு மடையன் என்று சொல்வார்கள்.
இன்னொருவர் “துஙா” என்ற பெண். இவளின் மடத்தனம் பின்வருமாறு.
مِن حَمَقِها أنّها نَظَرتْ إلى يَافُوحِ ولدِها يضطربُ وكان قَلِيلَ النَّومِ وكثيرَ البُكاءِ، فقالت لِضَرَّتِها أعطِنِي سِكِّينا، فَنَاوَلَتْهَا وهي لا تعلم ما انْطَوَتْ عليه، فَمَضَتْ وشقَّتْ به يافُوحَ ولدِها، فأخرجتْ دِماغَهُ، فلَحِقَتْها الضَّرَّةُ فقالت ما الّذي تصنعين؟ فقالت أخرجتُ هذه المِدَّةَ من رأسِهِ ليأخُذَهُ النومُ، فقد نام الآن،
அவள் ஒரு நாள் தனது பிள்ளையின் உச்சிப் பதப்பு துடித்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அந்தக் குழந்தை உறங்காமல் அழுது கொண்டுமிருந்தது. தனது மடத்தனம் காரணமாக குழந்தையின் தலையில் ஏதோ ஒன்று நுழைந்து விட்டது என்று நினைத்து தனது வீட்டிலுள்ள பெண்ணை அழைத்து கத்தி கொண்டு வா என்றாள். அவள் விடயம் தெரியாமல் கத்தியைக் கொடுத்தாள். குழந்தையைப் பெற்ற “துஙா” என்ற தாய் குழந்தையின் உச்சிப் பதப்பை பிளந்து குழந்தையின் மூளையை வெளியே எடுத்தாள். அங்கு சென்ற அந்தப் பெண் நீ என்ன செய்கிறாய் என்று தாயிடம் கேட்டாள். அதற்கவள் பிள்ளை தூங்காமலும், அழுது கொண்டுமிருந்ததாலும் அந்த இடத்தை வெட்டி அங்கு இருந்ததை எடுத்துவிட்டேன். இப்போது பிள்ளை, அழாமல் நிம்மதியாக உறங்குகிறது என்றாள்.
மடத்தனமுள்ளவர்களுக்கு அறபிகள் أحمق من دُغَةْ என்று சொல்வார்கள்.
இன்னெரு மடையன் உள்ளான். அவன் அறபு நாடுகளிலுள்ள மடையன் அல்ல. அவன் யாரெனில் رَجُلٌ لَا يَدْرِيْ أَنَّهُ لَا يَدْرِيْ தான் மடையன் என்பதைக் கூட அறியாத மடையன்.
حاكم أحمق يحكم بين الناس بغير ما أنزل الله، أي يحكم برأيه وفكره وظنّه، وهذا جاهل محض، لا يحكم بالقرآن ولا بالأحاديث النّبويّة ولا بالأحكام التي استنبطها الفقهاء كالأعلام من الشافعيّة والحنفيّة والحنبليّة والمالكيّة، وهذا الحاكم كالحمقى المذكورين والبله الّذين لا يعلمون الفرق بين زوجاتهم وأمّهاتهم، يحكمون للأغنياء بحكم ويحكمون للفقراء والغرباء بحكم آخر مخالف لحكم الأغنياء فى مسئلة واحدة، فإذا بسط الرجل يده فله حكم وإذا قبض فله حكم آخر،
رأيت أكثر الحاكمين المسلمين قد مالوا إلى من عنده مال، ومن لا عنده مال وعنه الحاكمون قد مالوا، والله أحكم الحاكمين، ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون، وأولئك هم الفاسقون، وأولئك هم الظالمون، صدق الله العظيم،