அதி மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு
24.03.2021
நாடாளுமன்றில் இறை வாழ்த்து ஒலித்தல் தொடர்பாக…
நமது தாய்த்திரு நாட்டின் நாடாளுமன்றில் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். நமது நாடு இன, மத பாகுபாடின்றி அனைவருக்கும் சகல உரிமைகளும் வழங்கப்படும் ஜனநாயக நாடாகும். அனைத்து இன மக்களும் இறை பக்தி, இறை நம்பிக்கை உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
நமது நாட்டின் நாடாளுமன்றில் மட்டுமன்றி அனைத்து அலுவலகங்கள், பாடசாலைகளிலும் காலை நேரம் கடமை ஆரம்பிக்கப்படு முன் நம் நாட்டு தேசிய கீதம் இசைத்து நாட்டுப் பற்றுடன் ஆரம்பிக்கும் வழக்கம் காணப்படுகின்றது. இது அனைவருக்கும் நம் தேசத்தின் மீது பற்றை ஏற்படுத்தி வைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
மேலும் அவர்களின் தேச பக்தியையும், நாட்டின் மீதான விசுவாசத்தையும் தொனிக்கும் வகையில் அனைத்து மதங்களின் நம்பிக்கைகளையும் உள்ளடக்கிய வகையில் அல்லது எல்லோருக்கும் பொதுவான வகையில் இறை பக்தியை ஏற்படுத்தி ஆன்மிக உணர்ச்சியை தூண்டும் வகையில் தேசிய கீதத்துக்கு மேலதிகமாக ஒரு ஆன்மிக கீதம் இசைத்தால் அனைவரினது செயற்பாடுகளுக்கும் அது புத்துணர்ச்சியாக அமையும் என்பதை எதிர்பார்த்து இவ் ஆலோசனையை தங்கள் முன் ஸூபிஸ சமுகம் சார்பாக சமர்ப்பிக்கிறேன்.
நன்றி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
ஸூபிஸ சமுகத்தின் தலைவர்
காத்தான்குடி.