ஸூபிஸ சமூகத்தின் உறுப்பினர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்றிரவு – திங்கள் இரவு “பறாஅத்” இரவாகும். இன்றிரவு செய்ய வேண்டிய அதி விஷேடமான வணக்கம் உண்டு. இதை “இக்லாஸ்” உடன் செய்தவர் தனது இலட்சியத்தை அடைந்து கொள்வார். இது நிச்சயம். இன்ஷா அல்லாஹ்!
உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இன்றிரவு மக்ரிப் தொழுகை முடிந்த மறு நிமிடமே இந்த வணக்கம் நமது பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தொடங்கு முன்னேயே நீங்கள் “வுழூ” வோடு தயாராக இருக்க வேண்டும். தவறினால் பாக்கியம் இழந்தவர்களாகிவிடுவீர்கள் என்பதை கவலையுடன் அறியத்தருகிறேன்.
சித்திரைச் சந்தை அன்மித்து நீங்கள் மூச்சு விடக் கூட நேரமின்றி உழைப்பில் ஊறிப் போயுள்ள இக்கட்டத்தில் 45 நிமிடங்கள் மட்டும் இந்த விஷேட நிகழ்வுக்காக ஒதுக்கி உங்களின் இலட்சியங்களை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
வெளியூரிலுள்ள ஸூபிஸ உறுப்பினர்கள் நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து “வுழூ”வுடன் நாற்பது தரம் “பாதிஹா ஸூறா” ஓதி பின்வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும். பக்தி நிலை பிரதான நிபந்தனையாகும்.
உங்களில் யாருக்காவது அல்லது ஊரிலுள்ளவர்களில் யாருக்காவது குறித்த நேரம் செய்யத் தவறின் இன்றிரவு “ஸுப்ஹ்” தொழுகைக்கு முன் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(துஆ)
‘إِلَهِيْ عِلْمُكَ كَافٍ عَنِ السُّؤَالْ، اِكْفِنِـيْ بِـحَقِّ الْفَاتِحَةِ سُؤَالًا، وَكَرَمُكَ كَافٍ عَنِ الْمَقَالْ، أَكْرِمْنِـيْ بِـحَقِّ الْفَاتِحَةِ مَقَالًا، وَحَصِّلْ مَا فِى ضَمِيْرِيْ،
இதை திரும்பத் திரும்ப முடிந்தவரை ஓத வேண்டும். இறுதியில் உங்கள் தேவையை அன்புடையோனிடம் கேட்டுக் கொள்ளவும்.
ஸூபிஸ சமூகத்தின் உறுப்பினர்களே!
இன்றிரவு நீங்கள் கேட்கவுள்ள “துஆ”வில் “முர்தத்” பத்வா வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதும், “பத்வா” வழங்கியோர் மனித உரிமைகள் மீறல் சட்டத்திற்கு உட்பட வேண்டும் என்பதும் முக்கிய அம்சமாக இடம்பெற வேண்டுமென்பது எனது தனியாத தாகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
28.03.2021