தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ينقسم الحديثُ من حيث القبول إلى صحيح وحسن وضعيف، أمّا الصّحيح: فهو ما اتَّصَلَ سنده بنَقْلِ الْعَدْلِ الضّابط عن مثله من أوّله إلى مُنتهاه، من غير شُذوذ ولا عِلّةٍ قادحة،
وأمّا الحَسَنُ فهو ما جَمَعَ شُروطَ الصحيح إلّا أنّه قد خفَّ فيه الضّبط عند بعض رُواته، وكلٌّ من الصحيح والحسن حُجّةٌ فى مختلف الأحكام الشّرعيّة ومُوجبٌ للعمل به،
وأمّا الضّعيفُ فهو كلُّ حديث لم تَجْتَمِعْ فيه صفاتُ الحديث الصحيح ولا صفاتُ الحديث الحَسَنِ من اتّصال سندٍ وعدالةٍ وضَبطٍ وعدمِ شذوذ وعدم علّة قادحة، وهو أقسام كثيرة، وبالجملة هو على قسمين، ما يجوز روايتُه والعملُ به فى فضائل الأعمال دون الأحكام الشـرعيّة، من حلالٍ وحرامٍ وغيرهما، وما لا يجوز العملُ به ولا روايتُه لمن عَلِمَ حالَه إلّا مَقرُونًا بنعته وصفته، وهو الحديث المُختلقُ الموضوع المنسوب إلى رسول الله صلّى الله عليه وسلّم، وهو شرُّ أقسام الضّعيف،
சுருக்கம்:
ஹதீதுகளில் ஏற்றுக் கொள்ளத்தகுதியானவை மூன்று. அவை ஸஹீஹ், ஹஸன், ழயீப் என்பன.
“ஸஹீஹ்” ஆன ஹதீதும், “ஹஸன்” ஆன ஹதீதும் எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஹலால் – ஹறாம் என்று தீர்ப்புச் செய்வதற்குக் கூட இவ்விரு ஹதீதுகளையும் ஆதாரமாக எடுக்க முடியும். ஆயினும் ஹலால் – ஹறாம் என்று தீர்பபுச் செய்யும் விடயத்தில் “ழயீப்” ஆன ஹதீதை எடுக்க முடியாது போனாலும் “பழாயிலுல் அஃமால்” கடமையல்லாத நல்லமல்களுக்கு அதை ஆதாரமாக எடுக்கலாம். அதைக் கொண்டு நல்லமல் செய்யலாம். குற்றமில்லை. எனினும் அதிலொரு வகையான “மவ்ழூஉ” நபீ பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதை கொண்டு “அமல்” செய்தல் கூடாது.
ஆதாரம்: அத்கார், ஆசிரியர்: இமாம் நவவீ
இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரின் மணம் பட்ட ஒருவர் “பறாஅத்” தினம் செய்யப்படுகின்ற “அமல்”களுக்கு ஸஹீஹான ஹதீதில் ஆதாரம் கிடையாது என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இவரின் நோக்கம் “ழயீப்” ஆன ஹதீதைக் கொண்டு அமல் செய்யலாகாது என்பதாகும். மிகவும் தந்திரமாக வசனங்கள் அமைத்திருந்தார். இவரின் வசன அமைப்பில் இவர் பயந்த சுவாபத்தோடு அதை எழுதியிருந்தார் என்பதை அறிய முடிகிறது. காட்டில் சிங்கம் இல்லையென்று நினைத்துக் கொண்டான் போலும். ஸஹ்றானின் குண்டு வெடிப்பால் இவரின் மனமே வெடித்திருப்பதை உணர முடிகிறது.