Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஷரீஆ”வின் பார்வையிலும், “தரீகா”வின் பார்வையிலும் “அலீம்” என்ற சொல் பற்றி ஓர் ஆய்வு.

“ஷரீஆ”வின் பார்வையிலும், “தரீகா”வின் பார்வையிலும் “அலீம்” என்ற சொல் பற்றி ஓர் ஆய்வு.

தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
وما معنى قوله تعالى ‘ وَهُوَ بِكُلِّ شَيْئٍ عَلِيْمٌ ‘ هل عليمٌ بمعنى عالم أو بمعنى معلوم؟
قال الشّيخ الأكبر فى الباب الحادي والسّتّين وثلاثمأة إنّ بِنْيَةَ فَعِيْلٍ تَرِدُ بمعنى الفاعل وبمعنى المفعول كقَتِيْلٍ وجَرِيْحٍ، وأما قوله تعالى هُنا عليمٌ فهو بمعنى عالمٍ وبمعنى معلوم معًا، فإنّ الباءَ فى قوله تعالى بكل شيئ بمعنى فِيْ ، فهو تعالى فى كلّ شيئ معلومٌ وبكلِّ شيئ محيطٌ،
“வஹுவ பிகுல்லி ஷையின் அலீம்” என்ற திரு வசனத்தில் வந்துள்ள عليم “அலீம்” என்ற சொல் “ஆலிம்” என்ற பொருள் உள்ளதா? அல்லது معلوم “மஃலூம்” என்ற பொருள் உள்ளதா?

அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 361ம் பாடத்தில் பின்வருமாறு மேற்கண்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார்கள். பதில் என்றாலும் பதில்தான். ஸுப்ஹானல்லாஹ்! வலீமாரின் நேசத்தோடு நாம் வாழ்ந்தால் இறை ஞானம் தானாக வரும். இறைஞானம் நம்மைத் தேடி வருமேயன்றி நாம் அதைத் தேடத் தேவையில்லை.
 
27.03.2021 சனி பின்னேரம் ஞாயிறு இரவு பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் கந்தூரி நிகழ்வு நடந்தது. அந்த நிகழ்வில் நான் பேசிய போது
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ أَنَّكُمْ دَلَّيْتُمْ بِحَبْلٍ إِلَى الأَرْضِ السُّفْلَى لَهَبَطَ عَلَى اللَّهِ. ثُمَّ قَرَأَ {هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ} رواه الترمذي
“எவன் கையில் முஹம்மத் ஆகிய என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக – சொல்கிறேன். உங்களில் ஒருவன் ஒரு கயிறை எடுத்து அதன் ஒரு தொங்கலைப் பிடித்துக் கொண்டு மறு தொங்கலை பூமியை நோக்கி தொங்கவிட்டானாயின் அத் தொங்கல் அல்லாஹ்வில் விழும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் கூறினார்கள். அதைத் தொடர்ந்து هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே, அவன் அனைத்து வஸ்த்துக்களையும் அறிந்தவன் என்ற திருக்குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்” என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தேன்.
 
ஆயினும் அதைத் தொடர்ந்து பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஓதிய திரு வசனத்திற்கு விளக்கம் கூற நேரமில்லாமற் போயிற்று. அதனால் அன் சுருக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
 
ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள விளக்கத்தை சற்று விரிவாக எழுதுகிறேன்.
 
وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
இதுவே அவர்கள் ஓதிய திரு வசனம். இதில் “அலீம்” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு “அறிந்தவன்” என்று பொருள். அதாவது அவன் சகல வஸ்த்துக்களையும் அறிந்தவன் என்பதாகும்.
 
இவ்வசனத்தில் வந்துள்ள بكل என்ற சொல்லில் வந்துள்ள பி – B என்ற எழுத்துக்கு “பீF” உடைய பொருள் கூறியுள்ளார்கள். இதன்படி அல்லாஹ் சகல வஸ்த்துவிலும் அறிந்தவன் என்று பொருள் வரும். அதாவது சுருக்கமென்னவெனில் எந்த வஸ்த்துவாயினும் அது தன்னை அவனென்று காட்டும். இப்பொருள் எல்லாம் அவனே என்ற சாரத்தை கொண்டதாக உள்ளது.
 
“அலீம்” என்ற சொல் فَعِيْلٌ என்ற அமைப்பில் வந்துள்ளதால் மொழியிலக்கணச் சட்டப்படி இச் சொல்லுக்கு مَعْلُوْمٌ அறியப்பட்டவன் என்று பொருள் கொள்ள சட்டத்தில் இடமுண்டு.
 
இதன்படி அவன் – அல்லாஹ் சகல வஸ்த்துக்களிலும் அறியப்பட்டவன் என்று பொருள் வரும். அதாவது وَهُوَ مَعْلُوْمٌ فِيْ كُلِّ شَيْءٍ அவன் சகல வஸ்த்துவிலும் அறியப்பட்டவன் என்று சுருக்கம் வரும். அவன் சகல வஸ்த்துவிலும் அறியப்பட்டவனாகவும், சகல வஸ்த்துவையும் சூழ்ந்தவனாகவும் உள்ளான்.
 
இந்த வசனம் தொடர்பாக இதுவரை நான் எழுதிய கருத்தின் படி அவன் சகல வஸ்த்துவாயும் உள்ளான் என்று விளங்கிவிடும்.
 
அவன் சகல வஸ்த்துக்களைக் கொண்டு அறியப்பட்டவன் என்றும், சகல வஸ்த்துக்களிலே அறியப்பட்டவன் என்றும் கருத்து வரும்.
இந்த ஹதீது முழுமையாக எல்லாமாயுமிருப்பவன் அல்லாஹ் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
 
இதே கருத்தை உணர்த்தும் திரு வசனங்கள் திருக்குர்ஆனில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. இன்ஷா அல்லாஹ் எனது “அல் கிப்ரீதுல் அஹ்மர்” எனும் 2000 த்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட நூல் வெளியானால் “முர்தத் பத்வா” மூளைப்புற்றால் செத்துப் போகுமென்றும், “பத்வா”வை இது கால வரை அமுல் படுத்தி வந்தவரும், தற்போது அவர் எங்கே என்ற கேள்விக்குள்ளானவருமான சாம்பல் முப்தீ அவர்களும், “பத்வா” குழுவில் சிலருக்கும் சி.எச் வரும். இன்ஷா அல்லாஹ். وهو أحكم الحاكمين
RELATED ARTICLES

Most Popular

Recent Comments