தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.
ஸூபீகளில் ஒவ்வொருவரும் மனிதர்களின் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவர்களாவர். ஆயினுமது மனிதர்களால் தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்றதல்ல. எனினுமது ஏகமாய் நின்றிலங்கும் றப்புல் ஆலமீன் தயாரித்த அற்புதக் கண்ணாடி.
அந்தக் கண்ணாடியில் எவன் தனது முகம் பார்த்தாலும் அதில் அவன் முகம் தோற்றாமல் அவனுள்ளத்தில் எந்த மிருகத்தின் குணம் மிகைத்துள்ளதோ அந்த மிருகமே தோற்றும். இதை இன்னும் எந்த ஒரு விஞ்ஞானியும் கண்டு பிடிக்கவுமில்லை. கண்டு பிடிக்கவும் முடியாது.
ஸூபீ என்ற அந்தக் கண்ணாடியில் ஒருவன் தனது முகம் பார்த்து அதில் தன்னிலுள்ள தீக்குணத்தின் உருவத்தில் கறடி, புலி, சிங்கம், நாய், பன்றி போன்றவனாக தன்னைக் காணும் போது அவனுக்கு நடுக்கத்தோடு கூடிய கடுங் கோபம் ஏற்பட்டு அதனால் அவன் மூளை நரம்பு தாக்கப்பட்டு அது சில நிமிடங்கள் செயலிழந்து போவதும் உண்டு.
அந்நேரம் அவன் தன்னை அறியாமலேயே தான் கண்ட மிருகமாக மாறி கண்ணாடிக்கு ஏசவும், அடிக்கவும், உதைக்கவும் செய்து விடுவான்.
இவ்வாறுதான் ஸூபிஸத்தையும், ஸூபீகளையும் எதிர்ப்பவர்களின் நிலையுமாகும். இதனால்தான் எதிரிகளால் ஸூபீகளிற் பலர் கொல்லப்பட்டதும், அடிக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும், உயிருடன் மிருகத்திற்கு உணவாக்கப்பட்டதுமாகும்.
இதேபோல் ஸூபீகள் ஒருவனின் முகத்தைப் பார்க்கும் போது அவனின் உள்ளத்திலுள்ள குணத்திற்கேற்ற உருவத்தில் அவனைக் கண்டு அவர்களை விட்டும் தூரமாகிவிடுவார்கள்.
கடந்த காலங்களில் ஸூபீகளை பலர் எதிர்த்ததற்கும், தற்போது எதிர்த்துக் கொண்டிருப்பதற்கும் இதுவே காரணமாகும்.
ஆகையால் ஸூபீகள் தமது எதிரிகளால் – வனவிலங்குகளால் எந்த உருவத்தில் தாக்கப்பட்டாலும் பொறுமை செய்து கொள்வதே சிறந்தது. ஸூபீகள் இவ்வாறுதான் வாழ்ந்துள்ளார்கள்.
வலீகட்கரசர் குத்புல் அக்தாப் “அல்பாஸுல் அஷ்ஹப்” இராஜாளிப் பறவை மக்கள் பெருங்கூட்டமாக ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள்.
ஒரு சமயம் அவர்கள் காலத்தில் “பக்தாத்” நகரில் பெரும் பள்ளிவாயல் ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தன. பழைய பள்ளிவாயலில் பல்லாண்டுகளாக தொழுகை நடாத்தி வந்த இமாம் இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து பிரசித்தி பெற்ற ஒருவர் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டு வந்தார்.
திறப்பு விழாவுக்கு வந்த இமாம் மாலை போட்டும், பொன்னாடைகள் போர்த்தியும் வரவேற்கப்பட்டார். பக்தாத் நகர் மக்கள் அவரின் கை, கால்களை முத்தமிட்டனர். அவருக்கு அரச விருந்து வழங்கப்பட்டது. அரச மாளிகையில் தங்கும் வாய்ப்பும் அவருக்கு கிட்டியது.
அவர் தன்னை மறந்து அவரின் உள்ளத்தில் தங்க நாணயங்கள் அள்ளித் தருவார்கள் என்ற பண மோகம் தலைக்கேறியது.
اَلْعَظَمَةُ إِزَارِيْ وَالْكِبْرِيَاءُ رِدَائِيْ فَمَنْ نَازَعَنِيْ فِيْهِمَا قَصَمْتُهُ فِى النَّارِ
வலுப்பம் – கண்ணியம் என்பது எனது வேஷ்டி, பெருமை என்பது ஷேட், இவ்விரண்டும் தனக்குள்ளதென்று நினைத்தவனை நான் நரகில் தூக்கியெறிவேன். அது பற்றி நான் கவலை கொள்ள மாட்டேன் என்ற ஹதீதுக் குத்ஸீக்கு அந்த இமாம் இலக்கானார்.
ஊர் மக்கள் அனைவரும் ஆண்களும், பெண்களும் கடலலை பெருக்கெடுத்தாற்போல் அங்கு வந்து குவிந்தனர். ஆயினும் அங்கு அவ்வேளை “குத்புஸ்ஸமான்” ஆன்மீகப் பெருந்தலைவராக விளங்கிய வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் மட்டும் வரவில்லை.
பக்தாத் நகரில் பிரசித்தி பெற்ற சீர் திருத்த அமைப்பின் இளைஞர்கள் அவசரமாக ஒன்று கூடி குத்பு நாயகத்தை அழைக்கச் சென்று பள்ளிவாயலுக்கு வருமாறு அழைத்தனர்.
குத்பு நாயகம் வந்தவர்களிடம் “ஷரீஆ” வுக்கு மாறு செய்யக் கூடாதென்பதற்காகவே நான் வரவில்லை என்று கூறி அமைப்பின் தலைவரின் கையில் தங்களின் கைக் கோலைக் கொடுத்து இதைக் கையில் எடுத்துச் சென்று பள்ளிவாயலுக்குள் என்ன நடக்கிறதென்று பார்த்து வருமாறு வந்த இளைஞர் குழுவை அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் பள்ளிவாலுக்குள் வந்து பார்த்த போது பள்ளிவாயலில் கறடி, புலி, சிங்கம் போன்ற பயங்கர மிருகங்களும், வன விலங்குகளும், பல்லி, ஓனான் போன்ற சிறிய உயிரினங்களும் நிறைந்திருந்தன. யானையொன்று “மின்பர்” பிரசங்க மேடையில் தும்பிக்கையை அசைத்துக் கொண்டு நின்றது.
இதைக் கண்ட சீர் திருத்த அமைப்பினர் பயந்து நடுங்கியவர்களாக குத்பு நாயகம் அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினர். குத்பு நாயகம் அவர்களையும் அழைத்துக் கொண்டு பள்ளிவாயலுக்கு வந்து இமாம் தொழுகை நடத்திய இடம் எதுவென்று கேட்டார்கள். பள்ளிவாயலில் இடத்தைக் காட்டி கொடுத்த போது அவ்விடத்தில் அவர்களின் காலால் அடித்தார்கள். அங்கே இருந்து தங்கப் பாளைகள் வெளி வந்தன. குத்பு நாயகம் வெளிநாட்டு இமாமைப் பார்த்து “தேரே குதா மேரே பாவோங்க நீச்சே” ربك تحت قدمي உனது றப்பு – இறைவன் என் காலின் கீழ் உள்ளான். இதுவே நாடி வந்த கடவுள். உன்னைப் பின் தொடர்ந்து என்னால் தொழ முடியாதென்று வெளியேறிவிட்டார்கள்.
குத்பு நாயகத்தின் கைக்கோலுக்கு இப்படியொரு சக்தியென்றால் அவர்களின் அபார சக்தியை சொல்லவா வேண்டும்?
ஆகையால் ஸூபிஸ வழி செல்லாமலும், அதை எதிர்த்துக் கொண்டும் இருப்போர் ஸூபஸம் என்பதே இஸ்லாம் மார்க்கத்தின் உயிர் என்பதைக் கவனத்திற் கொண்டு செயல்பட வேண்டும்.
எனவே, ஸூபீகள் வழி நடக்கும் ஸூபிஸ சமூகத்தின் உறுப்பினர்கள் எதிரிகளால் எந்த வடிவத்தில் எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் அதே வடிவத்திலோ அல்லது வேறு வடிவத்திலோ அவர்களுக்கு எதிர்ப்புக் கூறி மறுப்புக் காட்டாமல் பொறுமை வழி சென்று ஸூபீகளான முன்னோர் எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ வேண்டுமென்று அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். ஸூபிஸம் என்பது உங்கள் வாயில் மட்டும் இருக்காமல் உங்களின் செயலிலும் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஐவேளை தொழுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியவற்றை விடாமல் செய்யுங்கள். அண்ணல் நபீ அவர்கள் மீது அதிகம் ஸலாவத் சொல்லுங்கள். திக்ர் செய்யுங்கள். நற்குணங்களை எடுத்து நடங்கள். தீக்குணங்களை குழி தோண்டிப் புதைத்து விடுங்கள். நற்குணங்களை கழுத்தில் மாலையாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பார்ப்பவற்றையெல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடுகளாகப் பாருங்கள். ஹலால் முறையில் தொழிற் செய்யுங்கள். ஸூபீகளை வாழ வையுங்கள் ஸுன்னீகளை ஸூபிஸத்திற்கு அழையுங்கள். முடியுமானவரை பின்வரும் “துஆ”வை ஓதிக் கொள்ளுங்கள்.
يَا رَبِّيْ وَيَا إِلَهِيْ! يَا أَرْحَمَ الرَّاحِمِيْنْ! يَا حَيُّ يَا قَيُّوْمْ، يَا بَدِيْعَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، يَا اَللهُ يَا هُوْ يَا وَاحِدُ يَا أَحَدُ يَا صَمَدُ يَا وِتْرُ يَا دَائِمْ يَا قَائِمْ!
أَنَا عَبْدُكَ الْحَقِيْرُ الْفَقِيْرُ الضَّعِيْفُ، أَرْفَعُ يَدَيَّ إِلَيْكَ وَأَسْأَلُكَ بِمَحْضِ فَضْلِكَ وَجُوْدِكَ وَكَرَمِكَ وَإِحْسَانِكَ، وَأَسْئَلُكَ بِاسْمِكَ الْأَعْظَمِ الَّذِيْ إِذَا دُعِيْتَ بِهِ أَجَبْتَ، وَأَسْئَلُكَ بِأَسْعَدِ الْمَخْلُوْقَاتِ وَأَفْضَلِ الْمَوْجُوْدَاتِ سَيِّدِ الْوُجُوْدِ وَالشُّهُوْدِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ، وَأَسْئَلُكَ بِبَرَكَاتِ الْأَقْطَابِ الْأَرْبَعَةِ وَالْأَوْلِيَاءِ كُلِّهِمْ، أَنْ تَهْدِيَ قَوْمًا يُعَادُوْنَنِيْ وَيُنْكِرُوْنَنِيْ وَعَقِيْدَةَ وَحْدَةِ الْوُجُوْدِ الَّتِيْ هِيَ أَسَاسُ التَّوْحِيْدِ وَرُوْحُ الْإِسْلَامِ وَالْإِيْمَانِ، وَيَقُوْمُوْنَ ضِدِّيْ فِى أُمُوْرِ الدِّيْنِ وَالدُّنْيَا، وَيُكَفِّرُوْنَنِيْ بِجَهَالَتِهِمْ وَحَمَاقَتِهِمْ وَبَلَادَتِهِمْ، وَيُبِيْحُوْنَ دَمِيْ وَيَحُثُّوْنَ الشُّبَّانَ لِقَتْلِ عُنُقِيْ، وَاهْدِهِمْ سَبِيْلَ الرَّشَادِ، وَعَلِّمْهُمْ مَا لَمْ يَعْلَمُوْا وَأَلْهِمْهُمْ مَا لَمْ يَفْهَمُوْا، وَنَقِّ قُلُوْبَهُمْ وَطَهِّرْ أَفْئِدَتَهُمْ وَحَوِّلْهَا إِلَى هَذِهِ الْعَقِيْدَةِ وَحْدَةِ الْوُجُوْدِ، صَفِّهَا مِنَ الْغَيْرِيَّةِ الَّتِيْ هِيَ الْكُفْرُ الصَّرِيْحُ، وَالْحُلُوْلِ وَالْاِتِّحَادِ، وَمِنَ الْأَنِّيَّةِ وَالْأَنَانِيَّةِ، إِنْ كَانَ لَهُمْ نَصِيْبٌ مِنْ شَرَابِ الْقَوْمِ، وَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ فِى عِلْمِكَ نَصِيْبٌ فَذَرْهُمْ فِى خَوْضِهِمْ يَلْعَبُوْنْ، وَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُوْنْ، وَإِلَّا فَعَاقِبْهُمْ بِعِقَابٍ شِئْتَ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرْ، وَبِالْإِجَابَةِ جَدِيْيْرْ، نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيْرْ، وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِيْنْ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنْ،