தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பாம்பு, தேள், மற்றும் விஷஜந்துக்களின் தீமைகளிலிருந்தும், கொலை காரர்கள், சூனியக் காரர்கள், மற்றும் சதி காரர்களின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவற்கான ஓதல்கள்.
இதன் கீழ் எழுதப்படுகின்ற “அவ்றாத்” ஓதல்களை “ஸுப்ஹ்” தொழுகையின் பின்னும், மக்ரிப் தொழுகையின் பின்னும் ஓதி வருபவர்களுக்கு மேற்கண்டவற்றின் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
01.
اللهم إِنِّيْ أَسْئَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ فَتْحَهُ وَنَصْرَهُ وَنُوْرَهُ وَبَرَكَتَهُ وَهُدَاهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْهِ وَشَرِّ مَا بَعْدَهُ،
மூன்று தரம்.
இரவில் ஓதும் போது هَذَا الْيَوْمِ என்ற வசனத்தை هذا اللَّيْلِ என்று ஓத வேண்டும்.
02.
بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئٌ فِى الْأَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ،
மூன்று தரம்.
03.
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ كُلِّهَا مِنْ شَرِّ مَا خَلَقَ
மூன்று தரம்.
04.
اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِيْ وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ، أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا، إِنَّ رَبِّيْ عَلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ،
மூன்று தரம்.
05.
اَللهم يَا فَارِجَ الْهَمِّ وَيَا كَاشِفَ الْغَمِّ، يَا مَنْ لِعَبْدِهِ يَغْفِرُ وَيَرْحَمُ،
மூன்று தரம்.
06.
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الظَّالِـمِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّالْحَاسِـدِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الْمَاكِـرِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الْكَائِـدِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الْخـَائِنِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الْمُنَافِقِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ السَّاحِرِيْنَ،
يَا قَوِيُّ يَا مَتِيْنُ اِكْفِ شَرَّ الْأَعْدَاءِ كُلِّهِمْ أَجْمَعِيْنَ،
மூன்று தரம்.
07.
اَللهم عَافِنِيْ فِى بَدَنِيْ، اَللهم عَافِنِيْ فِى سَمْعِيْ، اَللهم عَافِنِيْ فِى بَصَرِيْ، اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ، اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إلهَ إِلَّا أَنْتَ،
மூன்று தரம்.
08. விஷஜந்துக்கள் அதிகமாக உள்ள இடத்தில் உறங்க வேண்டி ஏற்பட்டால் பின்வரும் ஓதலை 3 தரம் ஓதி தலைப்பக்கம், கால் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம் ஊதிவிட்டு உறங்க வேண்டும்.
سَلَامٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِيْنْ، إِنَّا كَذَلِكَ نَـجْزِى الْمُحْسِنِيْنَ،
09. நீதிவான், பொலீஸ் அதிகாரி, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் யாராவது ஓர் அதிகாரியால் ஒரு வேலை முடிய வேண்டியிருந்தால் அவரின் வீட்டில் அல்லது அறையில் நுழையும் போது பின்வரும் ஓதலை ஓதி அவரின் முகத்திற்கு நேரில் ஊதிவிட்டு அவரை நெருங்க வேண்டும்.
اَللهم إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا جَبَلْتَهُ عَلَيْهِ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا جَبَلْتَهُ عَلَيْهِ،
10. துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், உலோபித்தனம், மனப்பயம், கடன் தொல்லை, பிறரின் அடக்குமுறை போன்றவைக்காக தினமும் பின்வரும் ஓதலை ஓதுவது நல்லது.
اَللهم إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلْ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخُلْ، وَأَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالْ،
மூன்று தரம்.
11. மின் அடிக்கும் போதும், வானம் முழங்கும் போதும் பயந்தால்…
سُبْحَانَ مَنْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيْفَتِهِ،
மூன்று தரம்.
12. பயங்கர வியாதிகளால் சோதிக்கப்பட்ட ஒருவனைக் கண்டு அச்சப்பட்டு அந்த நோய் தனக்கு வரக்கூடாதென்று விரும்பினால் பின்வரும் ஓதலை மூன்று தரம் ஓத வேண்டும்.
اَلْحَمْدُ للهِ الَّذِيْ فَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِنْ خَلْقِهِ، وَمَا ابْتَلَانِيْ بِشَيْئٍ،
13. கடும் மழை பெய்து இனி மழை தேவையில்லை என்று விரும்பினால்…
اَللهم حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا
மூன்று தரம்.
وَالسُّنَّةُ لِلصَّائِمِ إِذَا شَتَمَهُ غَيْرُهُ أَوْ تَسَافَهَ عَلَيْهِ فِى حَالِ صَوْمِهِ أَنْ يَقُوْلَ إِنِّيْ صَائِمٌ، إِنِّيْ صَائِمٌ، مَرَّتَيْنِ أَوْ أَكْثَرَ،
நோன்பு நோற்றிருக்கும் ஒருவனுடன் இன்னொருவன் சண்டைக்குப் போனால் அல்லது மடையன் போல் நடந்து கொண்டால் நோன்பாளி மற்றவனிடம் “நான் நோன்பாளி – நான் நோன்பாளி” என்று இரண்டு தரம் சொல்ல வேண்டும். அல்லது அதைவிட அதிகமாகச் சொல்ல வேண்டும்.
இதன் கருத்து என்னவெனில் நோன்பாளியுடன் மற்றவன் சண்டைக்குப் போனால் அதாவது அவனை ஏசினால் அவன் நோன்பாளி என்று இரண்டு தரம் சொல்ல வேண்டும். அதோடு அவன் விலகிச் செல்ல வேண்டும். மீண்டும் அவன் தொடர்ந்தால் நான் நோன்பாளி என்று மீண்டும் அவன் சொல்ல வேண்டும். எத்தனை தரம் தேவையானாலும் அவன் சொல்ல வேண்டும்.
அவ்வாறு சொன்னால் மற்றவன் அதோடு நோன்பை மதித்து சென்று விட வேண்டும். அவன் மன முரண்டாக மீண்டும் ஏசிக் கொண்டு நின்றால் அவனோடு சண்டைக்குப் போகாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அல்லது காவல் நிலையம் சென்று நீதி கேட்க வேண்டும்.
நான் நோன்பாளி என்று சொல்பவன் ஏசுகின்றவனுக்கு கேட்கும் அளவும் சொல்லலாம். அல்லது அவனுக்கு கேட்குமளவு சொல்லாமல் தனக்குத் தானே மனதுள் சொல்லி பொறுமை செய்தல் வேண்டும். அல்லது காவல் துறையில் புகார் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனது கட்டுரைகளை நுகர்கின்ற எவராயினும் எனக்காக ஒரு நொடி நேரம் இரு கரமேந்துமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.