இஸ்லாம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையில் மிகவும் அமைதியான மார்க்கமாக இருந்து வருகின்றது. வஹ்ஹாபிஸமும், ஸலபிஸமும் ஏனைய வெளிநாட்டு சித்தாந்தங்களும் எமது அமைதியையும் நல்லிணக்கத்தையும் சேதப்படுத்தியுள்ளன. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மதத் தீவிரவாதத்தின் நேரடியான விளைவாகும்.
ஸலபி, வஹ்ஹாபி மற்றும் அதனையொத்த குழுக்களை தடைசெய்வதற்கு அனுமதி வழங்கியமைக்காக இலங்கையின் சட்டமா அதிபர் அவர்களுக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
முஸ்லிம்கள், பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவரும் எமது நேசத்திற்குரிய இலங்கையை அந்நிய சித்தாந்தங்களில் இருந்து பாதுகாப்பதற்கு ஒன்றிணைவோம்.
அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ – பஹ்ஜீ)
தலைவர்,
அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா
08.04.2021
ஊடக அறிக்கை
இலங்கையில் ஸலபி, வஹ்ஹாபி மற்றும் ஏனைய தீவிரவாத குழுக்களை தடை செய்வதற்கு அனுமதி அளித்தமைக்காக இலங்கையின் சட்டமா அதிபர் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஸலபி, வஹ்ஹாபி சிந்தனைகளின் அறிமுகத்தின் விளைவாக இஸ்லாமிய மார்க்கத்தினுடைய அழகிய தோற்றம் சேதமாக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (ACJU) ஸலபி, வஹ்ஹாபி ஆகியவற்றின் சிந்தனை பரவலை சீரமைக்கவில்லை.
ஸலபி, வஹ்ஹாபி குழுக்கள் 1990களிலிருந்து ஸூபிகளையும் அதன் பின்னர் பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களையும் தாக்கினர். ஸலபி மற்றும் வஹ்ஹாபி சித்தாந்தங்களும் அமைப்புக்களும் இலங்கை மண்ணிலிருந்து அகற்றப்படாவிட்டால் பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் தொடரும்.
தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் உருவாகிய சூழலை அகற்றுவதற்கு இலங்கை அரசு எடுத்த பல நடவடிக்கைகளில், வஹ்ஹாபி மற்றும் ஸலபி குழுக்களை தேசத்திலிருந்து துரத்துவதற்கு எடுத்த நடவடிக்கை முதன்மையானதாகும்.
மேலும் 2017-2018ம் ஆண்டுகளில் பாடசாலைகளின் இஸ்லாமிய பாடத்திட்டத்தில் ஸலபி மற்றும் வஹ்ஹாபிய உள்ளடக்கத்தை நீக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.
பாரம்பரிய மற்றும் உள்நாட்டு முஸ்லிம்களுக்கு முடிவில்லாத துயரங்களை ஏற்படுத்திய இந்த தீவிரவாத குழுக்களின் சித்தாந்தங்கள் மற்றும் செயற்பாடுகள் மீது தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்குமாறும் இலங்கை அதிகாரிகளை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
2019ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலை இலங்கை கண்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாஅத் 269 அப்பாவி இலங்கையர்களையும், வெளிநாட்டவர்களையும் படுகொலை செய்ததை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
இத்தாக்குதலின் நேரடி விளைவாக முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த நல்லிணக்கம் – சமாதானம் பாதிக்கப்பட்டது.
ஸலபி மற்றும் வஹ்ஹாபிகளின் பிரத்தியேகவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம்; ஆகியவற்றை எதிர்த்து நாம் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ (BBA. Hons.)
அகில இலங்கை சமாதான நீதவான்,
செயலாளர்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ்
நம்பிக்கைப் பொறுப்பு.
08.04.2021