தொகுப்பு: ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)
قال الشّيخ الأكبر ابن عربي رضي الله عنه فى الباب السابع عشر وثلاثمأةٍ من الفتوحات المكيّة،
(ومن أراد أن يعرفَ حقيقةَ أنّ الله تعالى هو الفاعلُ مِن خَلْفِ حِجابِ الخلق، فَلْيَنْظُرْ فى خيال السِّتارة وصوَرِها، ومن هو الناطقُ فى تِلك الصُّور عند الصبيان الصِّغَارِ، الّذين بَعُدُوا عن حِجابِ الستارة المضرُوْبَة بينهم، وبين اللّاعبِ بتلك الصُّور، والنّاطق فيها،
فالأمر كذلك فى صُور العالَمِ كلّه، والنّاس أكثرُهم أولئك الصِّغارُ الّذين فَرَضْنَاهم، فهُناك يعرف من أين أتى عليهم، فالصِّغارُ فى ذلك المجلس يَفْرَحُوْنَ ويطربُون، والغافلون يتَّخِذون ذلك هُزُوا ولعبا، والعلماء بالله يعتَبِرون ويعلمون أنّ الله تعالى ما نَصَبَ هذا إلّا مَثَلًا لعباده، لِيَعلَمُوا أنّ هذا العالم مع الله تعالى مَثَلُ هذه الصُّوَرِ مع مُحَرِّكِها، وأنّ هذه السِّتارة هي حجابُ سِرِّ القدر الّذي لا يجوز لأحد كشفُه،
அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் “புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூல் 317ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
(அல்லாஹ்தான் படைப்பு எனும் திரைக்குப் பின்னால் நின்று, அல்லது படைப்பு எனும் “மள்ஹர்” பாத்திரம் மூலம் எதார்த்தத்தில் அனைத்து வேலைகளையும் செய்கிறான். இதுவே உண்மையும், எதார்த்தமுமாகும். இவ் உண்மையை யாராவது அறிய விரும்பினால், ஓர் உதாரணம் மூலம் தெளிவு காண விரும்பினால் “வெருளி”யை அவர் பார்க்கட்டும். “வெருளி” என்றால் அதன் மறு பெயர் மிரட்டும் பொம்மை என்பதாகும்.
அதாவது துணியால் அல்லது றப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றால் கோமாளி அமைப்பில் ஓர் உருவம் செய்து, அதற்கு அற்புதமான தாடி, மீசை வைத்து, மற்றும் சிறுவர்களைக் கவரும் பாணியில் அதை அலங்கரித்து பெரிய ஹோட்டல்கள், கம்பனிகள் திறப்பு விழாவின் போதும், வேறு களியாட்ட நிகழ்வுகளின் போதும் பிரதான நுழைவாயலில் நிறுத்தப்பட்டிருக்கும் பொம்மைகள் “வெருளி” என்றும், மிரட்டும் பொம்மை என்றும் சொல்லப்படும்.
இத்தகைய பொம்மைகள் சுயமாகச் செயல்படுபவையல்ல. இயங்குபவையல்ல. இவற்றுள் ஒரு மனிதன் இருந்து கொண்டுதான் இவற்றை இயக்குகிறான். உள்ளே இருப்பவன் தான் பேசுவான். பொம்மை பேசுவதில்லை. ஆயினும் உள்ளே உள்ளவன் பேசும்போது பொம்மை தனது வாயை அசைத்து தானே பேசுவது போல் நடிக்கிறது. அபிநயம் செய்கிறது.
பொம்மையினுள்ளே ஒழிந்திருப்பவன் தான் சிரிப்பான். பொம்மை சிரிப்பதில்லை. ஆயினுமது தானே சிரிப்பது போல் நடிக்கிறது. அபிநயம் செய்கிறது.
இந்த நிகழ்வை புதிதாகக் காணும் சிறுவர்கள் இதிலுள்ள தந்திரோபாயம் தெரியாமல் அந்த பொம்மையே பேசுகிறதென்றும், சிரிக்கிறதென்றும், கை கால்களை அசைக்கிறதென்றும் விளங்கி மகிழ்வார்கள்.
இவர்களைக் காணும் வயது வந்தவர்கள், எதார்த்தம் தெரிந்தவர்கள் நையாண்டி செய்து நையப்புடைத்து நிற்பார்கள். ஆயினும் அறிவுள்ளவர்களும், புத்தி சாலிகளும், இறைஞானிகளும் இந்நிகழ்வைக் கண்டு ஏமாந்து போகாமல் எதார்த்தம் புரிந்து இவ்வாறுதான் அல்லாஹ்வின் செயல்கள் படைப்பின் மூலம் அல்லது மனிதன் மூலம் வெளியாகிறதென்ற எதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள்.
பொம்மை விடயத்தை அல்லாஹ்வுக்கு ஓர் உதாரணமாகக் கூறினேனேயன்றி அவனுக்கு நிகராக நான் கூறவில்லை. எனது நோக்கம் படைப்புக்களில் எதற்கும் எதையும் சுயமாகச் செய்ய முடியாதென்பதையும், படைப்புக்கள் யாவும் அவனாக இருப்பது போல் அவை மூலம் வெளியாகும் எச்செயலாயினும் அது அவன் செயலே என்பதையும் நிறுவுவதேயாகும்.
இந்த பொம்மைகள் போன்றவையே படைப்புக்கள். குறிப்பாக மனிதர்களாவர். எதார்த்தத்தில் படைப்புக்களுக்கோ, குறிப்பாக மனிதர்களுக்கோ எச்செயலும் கிடையாது. படைப்புக்களாலோ, மனிதர்களாலோ சுயமாக எச் செயலும் செய்ய முடியாது. இதுவே ஈமான். இதுவே விசுவாசம். இதற்கு மாறாக மனிதனுக்கு சுயமாக எதையும் செய்ய முடியுமென்று நம்புதல் வடி கட்டிய “ஷிர்க்” என்று எத்தனை தரம் வேண்டுமானாலும் சொல்லலாம். புரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். புரியாதவர்கள் “பத்வா” வழங்குவதற்கு பேப்பர், போனாவுடன் ரெடியாக இருப்பார்கள். அறிவுக்கும், இவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. இவர்களுக்கு “நஸீப்” இருந்தால் நல்வழி பெறுவார்கள். இல்லையெனில் “ஙெய்ரிய்யத்” எனும் நரகமே அவர்கள் ஒதுங்குமிடமாகும்.
படைப்புக்கள் யாவும், குறிப்பாக மனிதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் செயல்கள் வெளியாகும் அவனுக்கு வேறாகாத مَظَاهِرْ பாத்திரங்களேயாவர். இதுவே திருக்குர்ஆனினதும், நபீ பெருமானினதும் முடிவுமாகும்.
இவ்வாறு உதாரணம் கூறி நான் விளக்கம் கூறுவதால் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை இந்தப் பாணியில் சொல்கிறேன் என்று எவரும் நினைத்துவிடக் கூடாது. விளங்கிக் கொள்ளவும் கூடாது. நான் எல்லாம் அல்லாஹ்வின் வெளிப்பாடு என்று சொல்பவனேயன்றி ஹுலூல் – இத்திஹாத் பேசுபவனல்லன்.
நான் கூறி வரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை “ஹுலூல் இத்திஹாத்” என்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையைச் சேர்ந்தவர்கள் விளங்கிக் கொண்டதால் தான் எனக்கும், எனது கருத்தை சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தீர்ப்பு வழங்கினார்கள். இவர்கள் “பத்வா” வழங்கிய நேரம் இவர்களுக்கு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரிந்திருக்கவுமில்லை. “ஹுலூல் இத்திஹாத்” தெரிந்திருக்கவுமில்லை.
ஆயினும் தற்போது அவர்களுக்கு ஞானக்கண் ஓரளவு திறந்து விட்டது போலும். இன்று அவர்கள் ஆப்பிழுத்த குரங்காகி செய்வதறியாது இஞ்சி தின்ற குரங்குகள் போல் மேலும், கீழும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் தனது தலைமேல் எல்லாத் தண்டனைகளும் வந்திறங்கிவிடுமென்று பயந்ததினால் சாம்பல் முப்தியும், வட்டிலப்பம் முப்தியுமான ரிஸ்வி முகவரி தெரியாமல் மறைந்துள்ளார். குற்றவாளி என்றாவதொரு நாள் குற்றவாளிக் கூண்டில் நிற்கவே வேண்டும்.
أقسم بالله الّذي أظْهَرَ الأشياءَ وهو عينُها، وخلق السموات والأرض وهو عينها، وأعطى الأشياء حقوقها وهو عينها، وخلق كلّ ذرّة من ذرّات الكائنات وهو عينها، وأنطق الإنسان وسائر مخلوقاته وهو عينها لا غيرها، تعالى الله وتقدّس وتنزَّهَ عَن أن يحُلَّ فى شيئ أو على شيئ، أو عن أن يتّحد به أو عن ينزل من السماء إلى الأرض، أو عنْ يجلس على العرش كما يجلس الملك عليه،
وأنزّهُه سبحانه وتعالى عن كلّ عيب ونقص، وهو مُحيطٌ بكلّ شيئ إحاطة الذّهب بالخاتم، وإحاطة القطن بالثوب، وإحاطة الخشب بالكرسيّ، والله موجودٌ وما سواه مفقودٌ، والذّهب موجود والخاتم مفقود، والقطن موجود والثوب مفقود، والخشب موجود والكرسيّ مفقود، والله أعلم بالصواب،
எனது கருத்துக்களை வாசிப்பவர்கள் எனக்காக, எனது ஆரோக்கியத்துக்காக ஒரு நொடி நேரம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.