”طاعُون عِمْوَاسْ” وهو وباء وقع في بلاد الشام في أيّام خلافة عمر بن الخطاب، سنة 18 هجرية ، 640 ميلادية، بعد فتح بيت المقدس، ومات فيه كثير من المسلمين ومن صحابة النبي محمد صلى الله عليه وسلم،
“தாஊன் இம்வாஸ்” என்ற பயங்கர நோய் தொற்று நோயென்று கருதப்பட்ட நோயாகும். இது (ஹிஜ்ரீ 18ல் – கி-பி 640ல்) இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் “ஷாம்” சிரியா நாட்டுப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நோய் என்று வரலாறு கூறுகின்றது.
இந்தச் சம்பவம் “பைத்துல் மக்திஸ்” வெற்றிக்குப் பின் நிகழ்ந்ததாகும். இந் நோயால் அநேக முஸ்லிம்களும், குறிப்பாக நபீ தோழர்களும் “ஷஹீத்” ஆயினர்.
இந் நோய் “தாஊன் இம்வாஸ்” என்று அழைக்கப்பட்டது. இதற்கான காரணம் பின்வருமாறு கூறப்படுகின்றது.
وإنّمَا سُمِّيَ ”بطاعون عمواس” نسبةً إلى بلدة صغيرة في فلسطين، بين الرملة وبيت المقدس، وذلك لأنّ الطاعون نَجَمَ بهَا أوّلاً ثم انتَشَر في بلاد الشام، فنُسب إليها، وبلدة عمْواس هدمتها إسرائيل عام 1967م وشردت أهلها وزرعت مكانَها غابةً بأموالِ المُتَبَرِّعين اليهود.
இந் நோயின் “இம்வாஸ்” என்ற பெயர் பலஸ்தீனிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராகும். இது றம்லா என்ற ஊருக்கும், “பைதுல் மக்திஸ்” ஊருக்கும் இடையில் உள்ளது. இக்கிராமத்திலேதான் முதலில் இம்வாஸ் நோய் உருப்பெற்று طَلَعَ َ نَجَمَ – வெளியாகி பின்னர் “ஷாம்” சிரியப் பிரதேசங்களில் பரவியது. இக் கிராமத்தின் நினைவாக இந் நோய்க்கு இம்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்து.
இந்த “இம்வாஸ்” கிராமத்தை இஸ்ரவேலர்கள் 1967ம் ஆண்டு தகர்ந்தழித்து தரைமட்டமாக்கி அவ்வூர் வாசிகளை வெளியேற்றி விட்டு யூதர்களின் நன்கொடை நிதியால் ஒரு பெரும் காட்டை வளர்த்துள்ளனர்.
قال الواقديّ تُوُفِّي في ”طاعون عِمْواس” من المسلمين في الشام خمسة وعشرُون ألفاً، وقال غيره ثلاثون ألفاً،
இந்த நோயால் “ஷாம்” சிரியா முஸ்லிம்களில் 25 ஆயிரம் பேர் அல்லது 30 ஆயிரம் பேர் மரணித்தனர்.
இம்வாஸ் பயங்கர நோயால் உயிர் துறந்து “ஷஹீத்” ஆன நபீ தோழர்களின் பெயர்கள்.
01) அபூ உபைத் இப்னுல் ஜர்றாஹ் – أبو عبيدة بن الجرّاح
02. அல் பழ்ல் இப்னுல் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப் – الفضل بن العبّاس بن عبد المطلب
03. ஷுறஹ்பீல் ஹஸனா – شُرحبيل حسنة
04. முஆத் இப்னு ஜபல் அல் கஸ்றஜீ – معاذ بن جبل الخزرجي
05. அப்துர் றஹ்மான் இப்னு முஆத் இப்னு ஜபல் – عبد الرحمان بن معاذ بن جبل
06. அல் ஹாரித் இப்னு ஹிஷாம் அல்மக்ஸூமீ – الحارث بن هشام المخزومي
07. அம்ர் இப்னு ஸுஹைல் அல் ஆமிரீ – عمرو بن سُهيل العامري
08. அபூ ஜந்தல் இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – أبو جندل بن عمر بن سهيل
09. உத்பா இப்னு அம்ர் இப்னு ஸுஹைல் – عتبة بن عمرو بن سهيل
10. ஆமிர் இப்னு ஙய்லான் அத்தகபீ – عامر بن غيلان الثقفي
11. அம்மார் இப்னு ஙய்லான் அத்தகபீ – عمّار بن غيلان الثقفي
12. நஸ்ர் இப்னு ஙானிம் அல் அதவீ – نصر بن غائم العدوي
13. ஹுதாபத் இப்னு நஸ்ர் அல் அதவீ – حذافة بن نصر العدوي
14. ஸலமத் இப்னு நஸ்ர் அல் அதவீ – سلمة بن نصر العدوي
15. ஸக்ர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صخر بن نصر العدوي
16. ஸுகைர் இப்னு நஸ்ர் அல் அதவீ – صُخير بن نصر العدوي
17. ஹம்தத் இப்னு ஷுரைக் அல் அதவீ – حَمْطَطْ بن شريق العدوي
18. வாயில் இப்னு ரிதாப் – وائل بن رثاب
19. மஃமர் இப்னு ரிதாப் – معمر بن رثاب
20. ஹபீப் இப்னு ரிதாப் – حبيب بن رثاب
21. யஸீத் இப்னு அபீ ஸுப்யான் – يزيد بن أبي سفيان
22. ஸுஹைல் இப்னு அம்று – سُهيل بن عمرو
23. ழிறார் இப்னு அல்அஸ்வர் – ضرار بن الأزور
இவர்களும், இன்னும் பலரும் “இம்வாஸ்” நோயால் பாதிக்கப்பட்டு “ஷஹீத்” ஆயினர்.
ஷஹீத் ஆன நபீ தோழர்களில் தந்தையும், அவரின் மக்களும் உள்ளனர். பெயர்களை உன்னிப்பாக அவதானித்தால் இவ்வுண்மை துலங்கும். இவர்கள் அனைவரும் நபீ தோழர்களே! சிறிய நோயோ, பெரிய நோயோ எதுவாயினும், அல்லது தொற்று நோயென்று வைத்தியர்களால் கூறப்படுகின்ற நோயாயினும் அது நல்லவர்களுக்கும் வரும். கெட்டவர்களுக்கும் வரும். இந்நோயால் மரணிப்பதற்கு மக்கள் பயந்தாலும் இது ஒரு பாக்கியமேயாகும். ஏனெனில் இவ்வாறான நோய்களால் உயிர் துறப்போர் ஷஹீத்களாவர். இது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். கிடைத்தவர்கள் பாக்கியம் பெற்றவர்களே!
“இம்வாஸ்” பயங்கர நோயால் மக்கள் பாதிக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக மரணம் தொடர்ந்த போது நபீ தோழர்களிற் பலர் மனமொடிந்து கவலைக்குள்ளானார்கள். என்ன செய்வது? எங்கு போவதென்று அழுதார்கள். சலித்தார்கள்.
அப்போது நபீ தோழர்களில் பலர் மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அமைதிப்படுத்தினார்கள். மக்களை அமைதிப்படுத்தியவர்களும் இறுதியில் “ஷஹீத்” ஆனார்கள்.
அவர்கள் அபூ உபைதா இப்னுல் ஜர்றாஹ் (இவர்கள்தான் தலைவராக இருந்தார்கள்), முஆத் இப்னு ஜபல், யஸீத் இப்னு அபீ ஸுப்யான், ஹாரித் இப்னு ஹிஷாம், ஸுஹைல் இப்னு அம்று, உத்பத் இப்னு ஸுஹைல் ஆகியோர்.
அவர்கள் கூறிய உபதேசம்,
أيّها النّاس! إنّ هذا الوجع رحمة بكم، ودعوة نبيّكم محمد ، وموت الصالحين قبلكم،
இந்த நோய் உங்களுக்கு அருளாகும். உங்களின் நபீ முஹம்மத் அவர்களின் பிரார்த்தனையின் வெளிப்பாடாகும். உங்களுக்கு முன் வாழ்ந்த நல்லடியார்களின் மரணமுமாகும்.
“இம்வாஸ்” பயங்கர நோய் திடீர் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. ஒருவர் நடந்து கொண்டிருப்பார். கீழே விழுந்து உயிர் துறப்பார். ஒருவர் சந்தோஷமாக மனைவி மகக்ளுடன் பேசிக் கொண்டிருப்பார். உடனே விழுந்து உயிர் துறப்பார். இந்நோயால் மரணித்தவர்கள் அனைவரும் இவ்வாறே மரணித்தார்கள்.
நபீ தோழர்களிற் சிலர் அபூ மூஸா என்ற நபீ தோழரைச் சந்தித்து அவர்களுடன் இந்நோய் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக “கூபா” நகரிலிருந்த அவர்களின் வீட்டுக்கு வந்து அமரப் போன போது நீங்கள் இங்கு அமர வேண்டாம். இவ்வீட்டிலும் இம்வாஸ் நோயாளி ஒருவர் இருக்கிறார் என்று வந்தவர்களின் நலன் கருதி அனுப்பி வைத்தார்கள் என்பதற்கும் வரலாறு உண்டு.
இந்நோய் இரு முறை வந்ததாகவும் கூறப்படுகின்றுது. நபீ தோழர்களிற் சிலர் “இம்வாஸ்” நோயோ அல்லது இது போன்ற பயங்கர நோய்களோ மலைப் பிரதேசங்களில் வாழ்பவர்களைத் தாக்காதென்றும் கூறியுள்ளார்கள். அவர்கள் காரணமின்றிக் கூறியிருக்கமாட்டார்கள். ஆகையால் டொக்டர்மார் குறிப்பாக உயிரியலோடு தொடர்புள்ள ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்தார்களாயின் இதிலுள்ள தத்துவத்தையும், இரகசியத்தையும் அறிய முடியும்.
சில தாவரங்கள் உள்ளன. அவை மலைப் பகுதிகளிலேயே முளைக்கும். அவையுள்ள இடங்களுக்கு மனிதர்களுக்குத் தீமை செய்யும் கிருமிகள் வராதென்று சில முனிவர்கள் கூறியுள்ளார்கள். ஆபிரிக்க காட்டில் சில தாவரம் இருப்பதாகவும், அவை மனிதர்களைக் கண்டால் அவர்களின் உடலைச் சுற்றி வளைத்து அவர்களின் உடலிலுள்ள குருதியை உறுஞ்சிக் குடிப்பதாகவும் கானகம் வாழ் முனிவர்கள் கூறியுள்ளார்கள்.
ولكل داء دواء
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறியதாகவும், ஸெய்யிதுனா லுக்மான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாகவும் ஒரு செய்தி உண்டு. எந்தவொரு நோயாயினும் அதற்கு மருந்தில்லை என்று சொல்வதைத் தவிர்த்து அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்வதே பொருத்தமானதாகும்.
خلق لكم ما فى الأرض جميعا
உங்களுக்காகவே – மனிதர்களுக்காகவே பூமியிலுள்ள அனைத்தையும் அல்லாஹ் படைத்தான் என்ற இறை தத்துவத்தைக் கருவாகக் கொண்டு விஞ்ஞான, மருத்துவ அடிப்படையில் ஆய்வு செய்தால் கொசுவிலும், கொசுவின் இறகிலும் நோயுமுண்டு, மருந்துமுண்டு என்ற தத்துவம் புரியும். ஒரு திரவத்தில் கொசு – ஈ – விழுந்தால் அந்தக் கொசுவை அதே திரவத்தில் அமுக்கி எடுத்தால் அதனால் தீமையில்லை என்றும், அதன் ஓர் இறகில் நோய் இருப்பதாகவும், அதன் மறு இறகில் அதற்கான மருந்து இருப்பதாகவும், அதை உள்ளே அமுக்கி எடுப்பதால் அதன் இறகிலுள்ள நோயால் தீமை ஏற்படாதென்றும் பல செய்திகள் உள்ளன. மலத்திலும் மருந்துண்டு. சலத்திலும் மருந்துண்டு. இவ்விரண்டும் அசுத்தமானவையாயிருப்பதால் வெளிப்பாவனைக்கும், உள்பாவனைக்கும் முஸ்லிம்கள் எடுக்கக் கூடாதென்றிருந்தாலும் அவற்றை ஒரு நோய்க்கு மருந்தாகப் பாவிக்க வேண்டிய அவசியம் யாருக்காவது ஏற்பட்டால் அவர் ஸுன்னீயான சட்ட மேதையிடம் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள், ஒருவன் சாப்பிடு முன்னும், சாப்பிட்ட பின்னும் உப்பில் ஒரு சொட்டு பாவிப்பதை வழக்கமாக்கிக் கொண்டானாயின் அவனை எந்த ஒரு நோயும் தீண்டாது என்று கூறியுள்ளார்கள். 90 வீத நோய்களுக்கு அது மருந்தாகும் என்றும் அருளியுள்ளார்கள்.