தொடர் – 10
32 பக்கங்கள் கொண்ட அறபு “பத்வா”வில் எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் கூறப்படவில்லை. மாறாக யாரோ ஒருவர் சொன்னால், யாரோ ஒருவர் பேசினால் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இது பாராட்டுதற்குரியதேயாகும்.
ஏனெனில் உலமாஉகளிடம் “பத்வா” கேட்டவர்கள் பிரச்சினைக்குரியவர் எவராயினும் அவரின் பெயர் குறித்து கேட்காமல் பொதுவாகவே கேட்க வேண்டும். பதில் சொல்பவரும் பெயர் கூறாமலேயே ”பத்வா” வழங்க வேண்டும். இதுவே நடைமுறை. இது மட்டுமல்ல. இவ்வாறு செய்தல் பல தீமைகளைத் தடுப்பதற்கும், பல நன்மைகளை உருவாக்குவதற்கும் துணை செய்யும்.
இந்த நடைமுறை அறபு “பத்வா”வில் பேணப்பட்டுள்ளது. ஆயினும் 28 பக்கங்கள் கொண்ட தமிழாக்கத்தில் பல இடங்களில் என் பெயர் கூறப்பட்டுள்ளது. அறபு மொழியில் இல்லாத ஒன்று தமிழாக்கத்தில் எவ்வாறு வந்தது? ஏன் வந்தது? என்பது ஆராயப்பட வேண்டியதாகும். இதிலும் ஒரு சூட்சி, சதி உண்டு. சிந்திப்பவர்கள் ரகசியத்தைச் சந்திப்பார்கள்.
தமிழ் பகுதியின் முகப்பில் (காத்தான்குடி றஊப் மௌலவீ போன்றோரின் மார்க்க விரோதக் கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய “பத்வா” மார்க்கத்தீர்ப்பு) என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கொட்டெழுத்தில் எழுதப்பட்டது கூட நயவஞ்சகத்தின் வடிவமே.
உலமா சபையின் “பத்வா” குழுவிடம் – உலமா சபை நீதிவான்களிடம் நான் கேட்கும் கேள்வி என்னவெனில் அறபு பகுதியில் இல்லாத ஒரு செய்தி தமிழில் எவ்வாறு வந்தது? இதற்கான காரணம் என்ன? என்னுடைய இக்கேள்விகள் இரண்டிற்கும் உலமா சபை கலப்பில்லாத சரியான விடை கூற வேண்டும்.
இவர்கள் விடை கூறட்டும் அல்லது கூறாமல் இருக்கட்டும். ஏன் இவர்கள் செய்தார்கள்? அதிலுள்ள இரகசியம் என்னவென்பதை பொது மக்களுக்கு விளக்கி வைத்து இது இவர்களின் சதி என்பதை நிறுவுகிறேன்.
இதுதான் இவர்களின் சதி. அறபு மொழியில் உள்ளதை மௌலவீமார் மட்டுமே வாசித்துப் புரிந்து கொள்வார்கள். தமிழில் எழுதினால் அதிகமானோர் வாசிப்பார்கள். றஊப் யாரென்று மக்கள் விளங்கி அவரைக் கொலை செய்வார்கள். அல்லது நாடு கடத்திவிடுவார்கள் என்ற இவ்வாறான கள்ளத்தனமான சதிகளை மனதில் வைத்துக் கொண்டே இவ்வாறு செய்துள்ளார்கள். இப்போது உலமாஉகளின் சதியும், தந்திரமும் பொது மகக்ளுக்கு புரிகிறதல்லவா? உண்மையான இஸ்ரேல் யஹூதிகள் கூட சில விடயங்களில் மனச் சாட்சியுடன் செயல்படுவார்கள். ஆயினுமிந்த யஹூதிகளோ மனச்சாட்சியே இல்லாத கடும் எதிரிகளாவர். அல்லது யஹூதிகளைவிடக் கீழ்த்தரமானவர்களாவர். கேவலமானவர்களுமாவர்.
இந்த நாட்டில் பௌத மதத்தை பின்பற்றுவோரும், இந்து மதத்தைப் பின்பற்றுவோரும், கிறித்துவ மதத்தைப் பின்பற்றுவோரும் உள்ளனர். அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, மற்றும் மனித உரிமைகள் யாவும் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மதத்திலும் மத குருக்கள் இருக்கின்றார்கள். இதேபோல் ஷெய்குகுமார், சுவாமிகள், துறவிகள் உள்ளார்கள். ஆயினும் இவர்களில் எவரும் எவரையும் எதிர்த்துப் பேசவுமில்லை, அவர் வழி கெட்டவர், இவர் வழி கெட்டவர் என்று சொல்லவுமில்லை. தீர்ப்புக்கள் வழங்குவதுமில்லை. பொறாமை, பித்தலாட்டம் போன்றவையும் அவர்களிடம் இருக்கவில்லை.
எனினும் இஸ்லாமிய மத குருக்களிடமே ஒருவரையொருவர் பேச்சாலும், எழுத்தாலும் தீண்டும் வழக்கமும், மார்க்கத்தை விட்டும் வெளியேற்றும் வழக்கமும் இருந்து வருகிறது. இன்னும் சில காலம் கழித்து இஸ்லாமிய மதகுரு ஒருவர் மற்ற மத குரு ஒருவரை சாப்பிட்டு ஏப்பமிடுவார் போல் தெரிகிறது.
ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவர்களும் தமது மதத்தவர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும், நல்ல பண்பாடும், பழக்க வழக்கங்களும் மலர வேண்டும், பொருளாதாரம் பெருக வேண்டும், சனத் தொகை அதிகமாக இருக்க வெண்டுமென்றே விரும்புவார்கள். அதற்காக முயற்சியும் செய்வார்கள். கிறித்துவ மதத்தினர் தமது மதத்திற்கு ஆட்கள் சேர்ப்பதில் கண்ணுங்கருத்துமாக இருப்பார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் இவ்வாறான எண்ணம் இருக்கவே செய்யும்.
ஆனால் இஸ்லாமிய மத குருக்கள் என்று அழைக்கப்படுகின்ற உலமாஉகள் மட்டுமே தமது மதத்திலுள்ளவர்களை மதம் மாற்றிக் கொண்டிருப்பதைக் காணும் போது இரத்தக் கண்ணீர் வடித்து அழ வேண்டியுள்ளது. இராப்பகலாக அழுதழுது கண்கள் ஈரமின்றி காய்ந்துவிடுகின்றன.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு முன்தோன்றிய நபீமாரும், றஸூல்மாரும் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்துக் கொண்டும், அணைத்துக் கொண்டுமே இருந்தார்கள்.
ஆயினும் முஸ்லிம் மத குருக்களோ இஸ்லாம் மார்க்கத்தில் இருப்பவர்களை அதை விட்டும் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? இவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது இவர்கள் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அல்லது யஹூதிகளினதும், வஹ்ஹாபீகளினதும் கைக்கூலிகளாகிவிட்டார்களா? இதை ஆய்வு செய்வதற்கென்று ஒரு குழு நியமிக்கப்பட்டு மதம் மாற்றும் உலமாஉகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு எந்த ஒரு மதத் தலைவர்களுக்கும் எவரையும் மதம் மாற்றும் அதிகாரம் வழங்குவதை சட்டப்படி தடை செய்ய வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு இந்த அதிகாரம் வழங்கியவர் யாரென்று அறிந்து அவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை மதம் மாற்றி உலகளாவிய மட்டத்தில் அவமானப்படுத்திய மதம் பிடித்த குருக்களை எமது இறுதி மூச்சி வரை எதிர்ப்போம்.
இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் தொகையை குறைப்பதற்காக யஹூதிகள் எடுக்கும் நடவடிக்கைக்கு ரிஸ்வீ முப்தீ துணை போகிறாரோ என்று எண்ணத் தோணுகிறது. இதற்கு ரிஸ்வீ إن بعض الظن إثم எண்ணங்களிற் சில பாவம் என்று பதில் தந்து அவர் நல்ல மனிதராக நினைக்கலாம். நாங்கள் இவருக்கு إن بعض الظن طاعة இன்னும் சில எண்ணங்கள் வணக்கம் என்று பதில் கொடுப்போம். எண்ணங்களிற் சில பாவமாயின் அவற்றில் மறு சில நன்மையாகத்தானே இருக்கும்.
ரிஸ்வீயும், அவரின் “பத்வா” குழுவினரும் நாங்கள்தான் காட்டு ராஜாக்கள், காட்டில் எங்களைத் தவிர ராஜாக்கள் இல்லையென்று நினைக்கிறார்கள் போலும். இவர்கள் இன்னும் காட்டைக் கூட ஒழுங்காக சுற்றிப் பார்க்கவில்லை போலும். காட்டில் கௌரவத்திற்குரிய ராஜாக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் விஷேட நிகழ்வுகளுக்கு மட்டுமே வெளிவருவார்கள். அவர்கள் வெளியே வந்தால்தான் இந்த ராஜாக்களுக்கு ஞானம் பிறக்குமென்று நினைக்கிறேன்.
எம்மை “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய முல்லாக்கள் எந்த மதத்திற்கு நாங்கள் மாறியுள்ளோம் என்பதையும் தெளிவாகச் சொல்ல வேண்டும். இவர்கள் இரவு பகலாக எங்களை முர்தத் முர்தத் என்று குரைத்தாலும் நாங்கள் இலங்கை முஸ்லிம்கள் என்று இந்நாட்டு அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களின் ஊடுருவல் “பத்வா” அறபுப் பகுதியில் எந்த ஓர் இடத்திலும் எனது பெயர் கூறப்படாமல் தமிழ் பகுதியில் மட்டும் பல இடங்களில் எனது பெயர் கூறப்பட்டிருப்பது இவர்களின் சதி என்பதை பொது மக்கள் விளங்கி இவர்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
அன்புப் பொது மக்களே! உலமாஉகளின் சதிகள் சங்கிலித் தொடராக ஒன்றன் பின் ஒன்றாக வருவதைக் கவனியுங்கள். அடுத்த சதி