Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 14

முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதிகளும்.

முல்லா மகான்களே!

உங்களின் அறபு “பத்வா” 5ம் பக்கத்தில்,


كما عليه الأئمّة الأربعة أبو حنيفة ومالك والشافعي وأحمد ومن تبعهم كأبي منصور الماتريدي وأبى الحسن الأشعري وأبى منصور البغدادي والغزّالي والنّووي وابن عربي والشّعراني وابن حجر والسيوطي وغيرهم، ممّن جمع بين المنقول والمعقول وبين الشّريعة والطّريقة والحقيقة والمعرفة رضي الله عنهم،

என்று எழுதியுள்ளீர்கள்.

இதன் சாரம் என்னவெனில் மேலே கூறப்பட்ட 13 இமாம்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா ஆகிய நான்கு வழிகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிடுகிறீர்கள். அது போதாதென்று அவர்கள் அனைவருக்கும் رضي الله عنهم என்று “துஆ” கேட்டும் இருக்கிறீர்கள்.

இவ்வாறெல்லாம் எழுத்து மூலம் பகிரங்கமாக கொடுத்துவிட்டு இவர்களில் இன்னார் எல்லாம் அவனே என்று இன்ன கிதாபில் இன்ன பக்கத்தில் சொல்லியுள்ளார் என்று நாங்கள் நிறுவும் போது இவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம், இவர்களெல்லாம் வழிகேடர்கள் என்று சொல்ல வந்தீர்களானால் உங்களுக்கு எதிராகச் சட்;ட நடவடிக்கை எடுக்க இருப்பவர்களில் நான் முதலாளாக இருப்பேன் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறேன்.

நான் 42 வருடங்கள் உங்களின் அட்டூழியங்களையும், காத்தான்குடி சம்மேளனம், உலமா சபையின் அட்டூழியங்களையும் சகித்தும், பொறுத்தும் வாழ்ந்து வந்துள்ளேன்.

நான் தீவிரவாதியுமல்ல, போராளியுமல்ல, பயங்கரவாதியுமல்ல. நான் ஓர் அத்வைதி, ஆன்மீகவாதி, ஸூபிஸ கொள்கை வழி நடக்கும் ஒரு ஸூபீ, நான் அறிந்ததை, நான் கற்றதை, அல்லாஹ் எனக்கு அறிவித்து தந்ததைக் கூறினேன், கூறுகிறேன். இது உண்மை. கடமையை செய்துள்ளேன்.

மறுமையில் அல்லாஹ்வின் திருச் சமுகத்தில் நடந்தவற்றையெல்லாம் முறையிடுவேன். அவன் என்னை அடித்தாலும், அணைத்தாலும் நான் அவனின் அடிமைதான்.

நீங்கள் ஏற்றுக் கொண்ட 13 இமாம்களில் இமாம் ஙஸ்ஸாலீ, இமாம் இப்னு அறபீ, இமாம் ஷஃறானீ றழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களை உங்களிடம் முன்வைத்து பல கேள்விகள் தொடர விரும்புகிறேன். எனது கருத்துக்கள் மூலம் நீங்கள் பயன் பெறாவிட்டாலும் பொது மக்கள் பயன் பெறுவார்கள் என்பதற்காகவும், அவர்களின் கருத்தை நீங்கள் மறுக்கும் பட்சத்தில் நீங்கள் யாரென்று அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதற்காகவுமே எழுதுகிறேன்.

இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் இமாமும், ஸூபீயுமாவார்கள். சட்டக்கலை, வரலாறு, தர்க்கவியல், மற்றும் ஹதீதுக்கலை யாவிலும் தன்னிகரற்ற சகல கலா வல்லவவனாக விளங்கினார்கள். அவர்களின் காலத்தில் அவர்களை வென்ற எந்த ஓர் அறிஞனும் இருக்கவில்லை என்று வரலாறு கூறுகின்றது.

அல்லாஹ் அவர்களுக்கு நல்லதை நாடிவிட்டான் போலும். ஆரம்ப காலத்தில் ஸூபிஸம் என்றாலே சீறி எழுந்த ஙஸ்ஸாலீ தங்களின் பிந்தின காலத்தில் ஸூபிஸ ஞானத்தால் கவரப்பட்டு அனைத்து அறிவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு ஸூபிஸக் கலையில் முழுமையாகவே இறங்கிவிட்டார்கள். இறுதியில் “இஹ்யாஉ உலூமித்தீன்” எனும் நூலை ஸூபிஸக் கலையில் எழுதினார்கள். இது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும். இது போல் “மிஷ்காதுல் அன்வார்” எனும் நூலையும் எழுதினார்கள். இவை தவிர இன்னும் பல நூல்கள் எழுதினார்கள்.

இவர்கள் ஸூபிஸக் கலையில் கால் பதித்த பின் இவ்வுலக வாழ்வு அவர்களுக்கு வெறுப்பாயிற்று. அனைத்தையும் துறந்துவிட்டு திரு மதீனா நகர் சென்று அண்ணலெம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் தஞ்சம் அடைந்து அழுக்கான, கிழிந்த ஆடைகளை உடுத்து யாசகன் போல் வீதிகளில் அலைந்து திரிந்தார்கள்.

இவர்கள் “பிக்ஹ்” எனும் சட்டக் கலையில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் பெண்களுக்கு மாதாந்தம் ஏற்படுகின்ற “ஹைழ்” மாத்தீட்டு தொடர்பான ஆய்வில் இறங்கி அதில் மூழ்கிப் போய் இருந்த கால கட்டத்தில் தனது முழுச் சிந்தனையையும் அதிலேயே செலுத்திச் செயல்பட்டார்கள்.

அவ்வேளை அவர்கள் ஒரு பள்ளிவாயலில் “இமாம்” தொழுகை நடத்துபவராகவும் இருந்தார்கள். ஊர் மக்கள் ஙஸ்ஸாலீ அவர்களின் பின்னால் தொழுவதை – அவர்களைப் பின்பற்றித் தொழுவதை பெரும் பாக்கியமாகக் கருதிச் செயல்பட்டார்கள்.

அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார். அவரின் பெயர் அஹ்மத். இவர்களின் பெயர் முஹம்மத். சகோதரன் அஹ்மத் பள்ளிவாயலுக்குச் சென்றாலும் கூட இமாம் ஙஸ்ஸாலீ அவர்களைத் தொடர்ந்து – பின்பற்றித் தொழாமல் தனிமையாக தொழுதுவிட்டு வந்துவிடுவார்கள்.

இதை அவதானித்த ஊர் மக்கள் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களிடம் முறையிட்டார்கள். இமாம் ஙஸ்ஸாலீ இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்து வந்தார்கள்.

ஒரு நாள் இமாம் தாயாரிடம் வந்து, தாயே! எனது தம்பி அஹ்மத் எனக்குப் பின்னால் தொழுகையில் என்னைப் பின்பற்றாமல் – ஜமாஅத்தோடு தொழாமல் தனிமையாகத் தொழுது வருகிறார். இது எனக்குப் பெரும் அவமானமாக உள்ளது. அவருக்குப் புத்திமதி கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

தாயார் மகன் அஹ்மதை அழைத்து புத்திமதி கூறினார். தம்பி அஹ்மத், அவரைப் பின்பற்றி என்னால் தொழ முடியாதென்று கூறிவிட்டார். தாயார் விபரம் கேட்டதற்கு அவர் தொழுகையில் இரத்த சிந்தனையிலேயே இருக்கிறார். இரத்தம் அசுத்தமானது. இதனால் என்னால் அவரைப் பின்பற்றித் தொழ முடியாதென்று கூறிவிட்டார்.

இமாம் ஙஸ்ஸாலீ வீட்டுக்கு வந்த போது, மகனே ஙஸ்ஸாலீ! நீங்கள், தம்பி உங்களைப் பின்பற்றித் தொழுவதில்லை என்று முறைப்பட்டீர்கள். அது பற்றி அவரிடம் கேட்ட போது அவர் இவ்வாறு சொன்னார் என்று தம்பி சொன்ன காரணத்தை தாயார் ஙஸ்ஸாலீயிடம் சொன்னதும் ஙஸ்ஸாலீ தம்பி சொன்னது சரிதான். நான் பெண்களின் மாத்தீட்டு தொடர்பான ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தம்பியோ என்னை விட ஸூபிஸ வழியில் கடும் போக்குடையவராக இருக்கிறார் என்று கூறிவிட்டு பள்ளிவாயலில் தொழுகை நடத்துவதை இமாம் ஙஸ்ஸாலீ நிறுத்திவிட்டு முழுமையான ஸூபிஸத்தில் இறங்கிவிட்டார்.

இமாம் ஙஸ்ஸாலீ வரலாறு மிகப் பெரியது. அதை எழுதத் தொடங்கினால் எனது குறிக்கோள் தவறிவிடுமாகையால் இதோடு அவர்களின் வரலாறை நிறுத்திக் கொண்டு அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் தொடர்பாக கூறிய கருத்துக்களை எழுதுகிறேன்.

முற்றும் கற்று முழு மடையர்களான முல்லாக்களுக்கு மட்டும்.


أيّها العلماء المنكرون لوحدة الوجود والقائلون بكفرها وكفر من صدّقها واعتقد بها، ما قولكم وما فتواكم عن الإمام المشهور حجّة الإسلام أبي حامد محمد الغزّالي الطُّوسي رحمه الله، وما رأيكم عن المعانى التي جاء بها فى كتابه ‘ إحياء علوم الدين ‘ وفى كتابه أيضا ‘مشكاة الأنوار ‘، هل هو مرتدّ وخارج عن دين الإسلام أو لا؟ وهل يجوز التّرحُّمُ عليه إن سُمع اسمُه؟ أو لا؟وما قولكم عن العلماء والأئمّة والأولياء الّذين مدحوا كتابه هذا وكتابه الآخر وأثنوا عليه وعليها؟ واستدلّوا بها وَدَرَسُوْهَا وَدَرَّسُوْهَا فى المدارس والكليّات العربيّة؟

وها أنا أوجّهكم إلى بعض العبارات الّتي أتى بها الغزّالي فى إحياء علوم الدين ومشكاة الأنوار وأكتبها مع صفحات الكتاب وأجزائه، فابحثوا قبل الإفتاء – قبل وضع القلم بالإفتاء – بحثا عميقا مع مشاورة بعض العلماء والمشائخ الّذين لهم دخلٌ تامّ وعلم عميق فى علم الباطن وعقائد الصوفيّة الصافية،

أجيبوا بأجوبة صحيحة مناسبة للكتاب والسنّة، ومن أقوال والأئمّة الّذين يعتمد على أقوالهم ويُعمل بفتواهم،

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கும் உலமாஉகளே! இந்த ஞானம் “குப்ர்” என்றும், “ரித்தத்” மத மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதைச் சொன்னவன், சரி கண்டவன், நம்பினவர்களனைவரும் மதம் மாறியவர்கள் என்றும் நீங்கள் “பத்வா”வும் கொடுத்துவிட்டீர்கள்.

இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற தத்துவஞானியும், மார்க்க அறிஞரும், ஸீபிஸ நூல்களை – குறிப்பாக இஹ்யாஉ உலூமித்தீன், மிஷ்காதுல் அன்வார் முதலான ஞான நூல்களை எழுதியவரும், உலக அறிஞர்களால் “ஹுஜ்ஜதுல் இஸ்லாம்” இஸ்லாமின் ஆதாரம் என்று அழைக்கப்படுபவருமான அஷ்ஷெய்கு, அல்ஆரிபு பில்லாஹ் முஹம்மத் அல்ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி உங்களின் ”பத்வா” மார்க்கத் தீர்ப்பு என்ன?

அவர்கள் தனது இஹ்யாஉ உலூமித்தீன் என்ற நூலிலும், மிஷ்காதுல் அன்வார் என்ற நூலிலும் எழுதியுள்ள ”வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஞானத்தை தெளிவாகக் கூறும் பிரதான வசனங்களை உங்களின் ஆய்வுக்காக இதில் எழுதியுள்ளேன்.

குறித்த ஞானம் “குப்ர்” என்றும், “ரித்தத்” என்றும் கூறி வருகின்ற நீங்கள் – பத்வா வழங்கிய நீங்கள் இந்த ஞானத்தை தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ள இமாம் ஙஸ்ஸாலீ பற்றி என்ன சொல்வீர்கள்? காபிர், முர்தத் என்று சொல்வீர்களா? இல்லையா?

அவர்களின் குறித்த ஞான நூலை அறபுக் கல்லூரிகளில் மார்க்க ஞானம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாமா? இல்லையா?

அவர்களின் குறித்த நூல்களைப் புகழ்ந்தும், பாராட்டியும், சரி கண்டும், பிறருக்கு கற்றுக் கொடுத்தும் வாழ்ந்து மறைந்த பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட இமாம்கள், உலமாஉகள் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் வசனங்களை பாகம், பக்கம் முதலான விபரங்களுடன் இதில் குறிப்பிட்டுள்ளேன். “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மறுக்கும் உலமாஉகளான நீங்கள் இந்த ஞானத்தில் ஆழமான அறிவுள்ளவர்களின் ஆலோசனையுடன் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

முர்தத் பத்வாவும், முல்லாக்களின் சதியும் என்ற தலைப்பில் நான் எழுதிவருகின்ற தொடர் கட்டுரைகள் யாவும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் முதல் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கும், மற்றும் சட்டமா அதிபர், புலனாய்வுத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

ஆதாரங்கள் தொடரும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments