Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 18

“வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய “பத்வா”வில் அவர்கள் ஏற்றுக் கொண்ட 13 இமாம்களில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாகவும், விளக்கமாகவும், தெளிவாகவும் பேசியும் எழுதியும் வரலாறு படைத்த பின்வரும் இமாம்களும் அடங்குவர்.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு. அஷ் ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ, இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ் ஷஃறானீ, இமாம் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோர்.

இந்த மூவரும் “வஹ்ததுல் வுஜூத்” “கிங்”கள் என்பதும், எவராலும் அசைக்க முடியாத ஞான மலைகள் என்பதும், இஸ்லாமிய ஸூபிஸம் பேசியும், எழுதியும் அதற்கு உயிர் கொடுத்த அலையெழுப்பும் ஆழ் கடல்கள் என்பதும் இறையியலும், ஸூபிஸமும் கற்றறிந்த மேதைகள் நன்கறிந்த விடயமே!

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை கரைத்து வயிறு நிரம்பக் குடித்தவர்கள் மட்டுமே தமது கருத்தை நிறுவுவதற்கு இவர்களையும், இவர்களின் பேச்சுக்களையும் சான்றுகாளக எடுப்பார்கள். மாறாக குறித்த இந்த ஞானத்தை எதிர்ப்பவர்கள் இவர்களையும், இவர்களின் கருத்துக்களையும் சாக்கடையில் தூக்கி எறிவார்கள். இதுவே இன்று நடைமுறையில் இருந்து வருகின்ற ஒன்றாகும்.

உலக அதிசயங்களில் ஒன்று என்னவெனில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் பேசிய எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுப்பதற்கு “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் சரியென்று பேசிய ஞான மகான்களை ஆதாரமாக எடுத்துள்ளதேயாகும். ஸுப்ஹானல்லாஹ்! இப்படியும் ஒரு மூளைக் கோளாறா?

இது அறியாமை, மன நோய், பைத்தியம் மூன்றில் ஒன்றாகவே இருக்கும்.
அறியாமை காரணமாயின் அவர்களுக்கு பின்வருமாறு சொல்வேன்.
إِنْ أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَعْرِفَ هَذِهِ الْمَسْئَلَةَ ذَوْقًا فَلْيُسَلِّمْ قِيَادَهُ لِيْ، أُخْرِجْهُ عَنْ وَظَائِفِهِ وَثِيَابِهِ وَمَالِهِ وَأَوْلَادِهِ، وَأُدْخِلْهُ الْخَلْوَةَ وَأَمْنَعْهُ النَّوْمَ وَأَكْلَ الشَّهْوَاتِ، وَأَنَا أَضْمَنُ لَهُ وُصُوْلَهُ إِلَى هَذِهِ الْمَسْئَلَةِ ذَوْقًا وَكَشْفًا،
உங்களில் யாராவது இந்த ஞானத்தை – அறிவை அனுபவித்து அறிய விரும்பினால் அவர் தன்னை என்னிடம் முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும். அவ்வாறு அவர் செய்தால் அவரின் உடை, பணம் – சொத்துக்கள், மற்றும் உடைமைகள், அவரின் பிள்ளைகள், அவரின் பழக்க வழக்கங்களிலிருந்து அவரை வெளியேற்றுவேன். அதேபோல் அவரை “கல்வத்” தனித்திருக்குமாறு செய்து அளவுக்கு அதிகமாக உறங்குதல், மன ஆசைப்படி உண்ணுதல் அனைத்தையும் தடை செய்வேன். அவர் இவற்றுக்கு உடன்பட்டு வந்தால் இந்த அறிவு ஞானத்தை அவருக்கு அனுபவமாக கிடைப்பதற்கு நான் பொறுப்பாயிருப்பேன்.

இதன் சுருக்கம் என்னவெனில் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தெரியாத ஒருவர் அதை அறிவு ரீதியாக அறிய விரும்பினால் அதற்கு ஒரு வழியும், அனுபவ ரீதியில் அறிய விரும்பினால் அதற்கு வேறொரு வழியும் உண்டு.

அறிவு ரீதியாக அறிய விரும்புகின்ற ஒருவர் என்னுடன் தொடர்பாக இருக்க வேண்டும். நான் இவ்வூரில் எங்கு உரை நிகழ்த்தினாலும் அதைச் செவியேற்க வேண்டும். நான் இதுகாலவரை பேசிய பேச்சுக்களை CD மூலம் தொடர்ந்து கேட்க வேண்டும், நான் எழுதிய நூல்கள் அனைத்தையும் வாசிக்க வேண்டும். இவ்வாறு ஆறு மாத காலம் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் அல்லாஹ் அவருக்கு இறைஞான விளக்கத்தை எப்படியாவது கற்றுக் கொடுப்பான். இது அறிவு ரீதியாக மட்டும் இறைஞானம் கிடைப்பதற்கான வழியாகும்.

இன்னுமொரு வழியுண்டு. இது முந்தின வழியை விடக் கடுமையான, கஷ்டமான, மிகச் சிரமப்பட்டும், பத்தியம் காத்தும், சகல இன்ப சுகங்களையும் இழந்தும் பெறுகின்ற வழியாகும். இவ்வழி முந்தின வழியை விடச் சிறந்ததாகும்.

இந்த வழி பற்றியே மேலே நான் அறபியில் எழுதி தமிழிலும் தந்துள்ளேன். ஒருவர் இரு வழிகளில் தனக்குத் தேவையான வழியை தெரிவு செய்து வாழ வேண்டும்.

ஒருவர் அல்லாஹ்வை அறியும் முறைப்படி அறியாமல், அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று மட்டும் நம்பினவனாக எத்தனையாண்டுகள் தொழுதாலும், தலை கீழாய் நின்று வணங்கினாலும், எத்தனை ஹஜ்ஜுகள் செய்தாலும், எவ்வளவு தான தர்மம் செய்தாலும் அவன் சுவர்க்கம் போனாலும் கூட சுவர்க்கத்தில் அடுக்கு மாடி மாளிகையின் கீழ்த்தட்டிலேயே இருப்பான். என்னதான் இன்ப சுகங்களை அவன் அனுபவித்தாலும், “ஹூறுல் ஈன்” சுவர்க்கத்து அழகிகளோடு சிற்றின்ப வெள்ளத்தில் நீந்தி விளையாடினாலும் அவனால் அல்லாஹ்வின் திரு “லிகா” அவன் திரு முகக் காட்சியைப் பெறுதல் என்ற பாக்கியம் கிடைக்கவே மாட்டாது. ஏனெனில் எதற்காக அல்லாஹ் அவரைப் படைத்தானோ அதை அவர் நிறைவேற்றவில்லை.

அல்லாஹ் திருக்குர்ஆனில் وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ மனிதர்களையும், ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை என்று இரு சாராரையும் படைத்த நோக்கத்தை தெளிவாகவே சொல்லியுள்ளான்.

மனிதர்களையும், ஜின்களையும் தன்னை வணங்குவதற்காக மட்டுமே படைத்தான் என்ற திரு மறை வசனத்தின் படி ஒருவன் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு மட்டுமே இருக்க வேண்டும், வேறு எந்தவொரு வேலையும் செய்தலாகாது என்ற கருத்து வரும். இதை விளக்கமாகச் சொல்வதாயின் தொழில் செய்யலாகாது, சந்தைக்குச் சென்று கறி சாமான் வாங்கலாகாது, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருத்தலாகாது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு மனிதன் இவ்வாறு வாழ்வது எவ்வாறு? ஒருவனால் கூட இவ்வாறு வாழ முடியாதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேலே கூறிய திருக்குர்ஆன் வசனத்தின்படி ஒரு மனிதன் துன்யாவுடைய விவகாரங்களில் கவனம் செலுத்துவது பாவமாகிவிடும்.

இதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி? ஒருவன் பாவத்திலிருந்து தப்பவும் வேண்டும், துன்யாவுடைய வேலைகளைச் செய்யவும் வேண்டும் என்பதால் அதற்கு என்ன வழியென்பதை அறிந்து செயல்பட வேண்டும். இன்றேல் அவன் வாழ்வு முழுவதும் பாவம் செய்தவனாகவே கணிக்கப்படுவான்.

இதோ அதற்கான வழியை கூறுகிறேன். இந்த வழிதான் வலீமார், ஞான மகான்கள் சென்ற வழி. அவர்கள் இந்த வழியை தமக்கு மிக நெருங்கிய விசுவாசமானவர்களுக்கு மட்டுமே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சொல்லியும் கொடுப்பார்கள். சொல்லிக் கொடுப்பதாயினும் கூட அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை பிரதான நிபந்தனையாகக் கூறுவார்கள்.
காணும் பொருளையெல்லாம்
கர்த்தன் மள்ஹரென்று
பேணி ஷுஹூது செய்து
பிலப்படுவதெந் நாளோ!

இது அந்த வழிக்கு ஓர் அடிப்படையாகும். ஓர் அத்திவாரமுமாகும். அத்திவாரமிட்ட பிறகுதான் அதன் மேல் கட்டிடம் எழுப்ப வேண்டும். அந்த அத்திவாரம் பலமான அத்திவாரமாயிருத்தல் வேண்டும்.

எனவே, முதலில் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான கருத்துக்களையும், அதற்கான ஆதாரத்தையும் கூறி அத்திவாரத்தைப் பலப்படுத்தும் பணியையே நான் செய்து கொண்டிருக்கிறேன். ஆகையால் இறை வழி நடக்க விரும்பும் ஒவ்வொருவரும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இறைஞானிகளில் இரு பிரிவினர் உளர். ஒரு பிரிவினர் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை பகிரங்கமாக பேசமாட்டார்கள். எல்லோர் மத்தியிலும் சொல்லமாட்டார்கள். தமக்கு மிக நெருங்கிய, இரகசியம் பேணக் கூடியவர்களிடம் மட்டுமே கூறுவார்கள். ஆயினும் பலர் மத்தியில் சொல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டால் மட்டும் ஜாடையாக பேசுவார்களேயன்றி தெளிவாகப் பேசமாட்டார்கள். இந்த சாராரை சேர்ந்தவர்கள்தான் எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள்.

ஒரு நாள் காத்தான்குடி 05 பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் சுமார் 1970ம் ஆண்டளவில் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “மௌலித்” நடைபெற்றது. அந்நேரம் எமது இப்பள்ளிவாயல் சிறிய பள்ளியாகவே இருந்த காலம். தந்தை அவர்கள் 15 நிமிடங்கள் மட்டும் பேசினார்கள். அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் ஓர் உதிப்புக் கிடைத்தால் மட்டுமே பேசுவார்கள். இன்றேல் வாய் திறக்கவே மாட்டார்கள். அன்று அவர்கள் பேசும் போது
وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا
என்ற திரு வசனத்தை ஓதிக் காட்டி இதற்கு விளக்கம் கொடுக்கும் போது (அல்லாஹ்வுக்கு கடன் கொடுக்குமாறு அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான். அவனுக்கு எவ்வாறு கடன் கொடுப்பது? இது உங்களுக்குப் புரிகிறதா?) என்று மட்டும் கூறிவிட்டு பேச்சை முடித்துவிட்டார்கள். இத்திரு வாசகத்தின் எதார்த்தமான விளக்கம் கூறவில்லை.

இதற்குக் காரணம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாகச் சொல்ல அவர்கள் பயந்ததேயாகும். ஏன் பயந்தார்களென்றால் இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஞானம் பேசியவர்கள் பலர் உலமாஉகளில் பொறாமைக் காரர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், தண்டிக்கப்பட்டுள்ளார்கள், நாடு கடத்தப்பட்டுள்ளார்கள், வன விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரலாறுகள் என் தந்தைக்கு தெரியும். இதனால்தான் அவர்கள் அத்திருவசனத்திற்கு உரிய விளக்கம் கொடுக்காமல் பேச்சை முடித்தார்கள்.

இவ்வாறு நான் மேலே குறிப்பிட்டது போல் இந்த ஞானத்தை மறைத்துப் பேசிய மகான்களும், வெளிப்படையாகப் பேசிய மகான்களும் வாழ்ந்துள்ளார்கள் என்பது எமக்கு விளங்குகிறது. பேசியவர்கள் ஒரு சாரார், மறைத்தவர்கள் ஒரு சாரார்.

இந்த ஞானம் பகிரங்கமாக பேசக் கூடாதென்பது அல்லாஹ் கூறிய சட்டமோ, கண்மணி நாயகம் கூறிய சட்டமோ அல்ல. அவ்வாறு ஒரு சட்டம், ஒரு விதி இருக்குமாயின் அந்த விதியை ஞான மகான்கள் அனைவரும் பேணியே வந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் அவ்வாறு பேணி வந்திருந்தால் காத்தான்குடிக்கு இந்த ஞானம் வந்திருக்க முடியாது.

எனவே, மறைத்த மகான்கள் எதிரிகளின் தொல்லைகளைப் பயந்துதான் மறைத்தார்களேயன்றி வெளிப்படையாக எவரும் பேசக் கூடாதென்று ஒரு விதி இஸ்லாம் மார்க்கத்தில் இல்லை. அவ்வாறிருந்தால் இந்த ஞானம் உலகளாவிய ரீதியில் பரந்திருக்க, பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

எனவே, இந்த ஞானம் தெரிந்தவர்களில் எதிர்ப்பைச் சமாளிக்க, அதற்கு முகம் கொடுத்து நிற்க சக்தி பெற்றவர்கள் பேசினார்கள். சக்தியற்றவர்கள் மௌனிகளாயினர்.

இந்த பகீர் அப்துர் றஊபை பொறுத்தவரை அறிவால் எதிர்ப்பை சமாளிக்க முடியுமென்பதினால்தான் பகிரங்கமாகப் பேசிய, எழுதிய மகான்களைப் பின்பற்றி அவரும் செய்தார்.

“பத்வா” வழங்கிய முல்லாக்களை தகாத சொற்கள் கொண்டு அவர் எழுதுவதும், பேசுவதும் நியாயமானதா? அது எப்படி நியாயம் என்று முல்லாக்கள் கேட்டால்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments