தொடர் 20
கடந்த தொடரில் முஸ்லிம்கள் அல்லாதவர்களின் இறை நம்பிக்கை தொடர்பாக சுட்டிக் காட்டி அடுத்த தொடரில் எழுதுவதாக குறிப்பிட்டிருந்தேன்.
முல்லாக்கள் முழு முட்டாள்கள்.
நான் “முல்லாக்கள்” என்ற சொல்லால் சுட்டிக் காட்டுவது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவையும், அதன் தலைவரையும், அவர்கள் வழங்கிய “பத்வா”வைச் சரி கண்டு இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் வாழ்கின்ற பரம்பரை ஸூபிஸ முஸ்லிம்களை – “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் குரைத்து வருகின்றவர்களை மட்டும் குறிக்குமேயன்றி பொதுவாக உலமாஉகள் சமுகத்தைக் குறிக்காது.
மதி கெட்ட முல்லாக்கள் பௌத நாட்டில் வாழ்ந்து கொண்டு இந்நாட்டை இஸ்லாமிய நாடெனக் கற்பனை செய்து இந்நாட்டின் முழு அதிகாரமும் தமது கைகளிலேயே உள்ளதென்ற பாணியில் ஸூபிஸ முஸ்லிம்களுக்கு “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று ஒரு “பத்வா”வும் வழங்கிவிட்டு எங்களைக் கொல்ல வேண்டுமென்றும் சட்டம் சொல்கிறார்கள்!
இந்த விபரம் அவர்கள் வழங்கிய “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற இரத்த நிற அட்டை போட்ட நூலில் “முர்தத்” என்றால் என்ன? என்ற தலைப்பில் தமிழ் பகுதி 20ம் பக்கத்திலும், அறபுப் பகுதி 8,9ம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது.
தலையில்லாதவர்களின் தலைப்பே பிழை. இவர்கள் தலை இல்லாதவர்கள் என்பதற்கு இத்தலைப்பே ஆதாரமாகும். ஏனெனில் “முர்தத்” என்றால் யார்? என்றுதான் வசனம் அமைய வேண்டும். “முர்தத்” என்ன என்று வசனம் அமைதல் நாகரீகமல்ல. அவ்வாறு அமைவதாயின் “ரித்தத்” என்றால் என்ன? என்றே அமைய வேண்டும்.
நமது இலங்கைத் திரு நாடு இங்கு வாழும் அனைவருக்கும் மத உரிமை, பேச்சு, எழுத்து உரிமைகள் வழங்கப்பட்ட நாடு.
இஸ்லாம் மார்க்கத்தில் ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா என நான்கு வழிகள் உள்ளன. ஷரீஆ வழி தவிர மற்ற வழிகள் யாவும் ஆன்மிகத்தோடு தொடர்புள்ள வழிகளாகும்.
“ஷரீஆ” வழி செல்வோர் சட்டம் பேசுபவர்களும், சட்டத்தின் படி செயல்படுபவர்களுமாவர். மற்ற மூன்று வழிகளிற் செல்வோர் ஸூபீகளாவர். தத்துவம், இறையியல், மனோ தத்துவம் போன்ற உயர் கருத்துக்கள் சொல்பவர்களும், அவ்வழிகளில் செயல்படுபவர்களுமாவர்.
இந்நாட்டில் வாழும் எந்த ஒரு மதத்தினரும் மற்ற மதத்தினரை வற்புறுத்தி தமது மதத்திற்கு அழைக்கவும் முடியாது. ஒரு மதத்திலுள்ளவரை பலாத்காரமாக இன்னொரு மதத்திற்கு மாற்றவும் முடியாது. எவர் எந்த மதத்தை பின்பற்ற விரும்புகிறாரோ அவர் எந்த ஓர் ஆட்சேபனையுமின்றி பின்பற்ற அனுமதியுண்டு.
இன்று இலங்கை நாட்டில் எத்தனையோ முஸ்லிம்கள் – ஆண்கள் பௌத மதப் பெண்ணை, அல்லது இந்து மதப் பெண்ணை, அல்லது கிறத்துவ மதப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து வாழ்கிறார்கள்.
இது இஸ்லாமிய சட்டத்திற்கு முரணானது. அவர்களின் திருமணத்தை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் விபச்சாரத்தில் பிறந்த குழந்தைகளாகவே கணிக்கப்படுவார்கள். இதனால் முஸ்லிம்கள் ஒன்று கூடி அல்லது உலமா சபைதான் ஒன்று கூடி அந்த முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது.
இவ்வாறு திருமணம் செய்யும் முஸ்லிம்களிற் சிலர் அந்நிய மதப் பெண்ணுடன் கணவன், மனைவியாக வாழ்ந்தாலும் மார்க்க வணக்க வழிபாடுகளில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்தின் படி செயல்படுகிறார்கள். கணவன் பள்ளிக்குப் போய் தொழுவான். மனைவி தனது விருப்பத்தின் படி விகாரைக்குச் செல்வாள். அல்லது கோவிலுக்குச் செல்வாள், அல்லது தேவாலயத்திற்குச் செல்வாள்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவாலும் ஒன்றும் செய்ய முடியாது. அரசாங்கத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.
இன்னும் முஸ்லிம்களிற் சிலர் தனது காதலி எந்த மதமோ அந்த மதத்திற்கு அவனும் மாறி மனைவியோடு விகாரை செல்பவனும், கோவில் செல்பவனும், தேவாலயம் செல்பவனும் உள்ளார்கள். இவர்கள் இஸ்லாமிய சட்டப்படி மதம் மாறிய “முர்தத்”களேயாவர். இவ்வாறு செய்பவர்களில் படித்தவர்கள், பட்டதாரிகள், லோயர்கள் என்று பலர் உள்ளனர்.
மேற்கண்ட இவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எப்போதாவது “பத்வா” கொடுத்ததற்கு வரலாறுண்டா? அல்லது அவ்வாறு திருமணம் செய்து மதம் மாறி வாழ்பவர்களை கொலை செய்யவேண்டுமென்று “பத்வா” தானும் கொடுத்ததுண்டா?
ஒரு முஸ்லிம் அந்நிய மதப் பெண்ணை திருமணம் செய்வதால் அவன் மதம் மாறியவன் என்று இஸ்லாமிய சட்டம் கூறவில்லை. அவன் பௌத மதப் பெண்ணோடு, அல்லது இந்து மதப் பெண்ணோடு, அல்லது கிறித்துவ மதப் பெண்ணோடு வாழ்ந்தாலும் அவன் முஸ்லிம்தான். அவன் செய்த செயல்தான் தவறேயன்றி அவன் மதம் மாறியவனாக மாட்டான்.
இதற்கு மாறாக கணவனும் தனது மனைவியோடு இணைந்து அவளின் வணக்க வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் மட்டுமே அவன் மதம் மாறியவனாவான்.
“முர்தத்”துகள் கொல்லப்பட வேண்டுமென்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவின் படி சிங்கள, தமிழ் ஊர்களுக்குச் சென்று அவ்வாறு செய்த முஸ்லிம்களைக் கொலை செய்தால் என்ன நடக்கும்? பத்வா வழங்கும் முல்லாக்களே! உங்களால் செய்ய முடியுமா? செய்யுங்கள் பார்க்கலாம்? நீங்கள் இச்சட்டத்தை அமுல் படுத்தினால் இலங்கை ஒரு போர்க்களமாகவே மாறும்.
நீங்கள் “பத்வா” வழங்கிவிட்டு உங்களின் அட்டூழியத்தை காத்தான்குடியில் மட்டும்தான் காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். மார்க்கம் தெரியாத சம்மேளனமும், காத்தான்குடி உலமா சபையும் உங்களுக்குப் பின்னால் நின்று புதினம் பார்க்கிறார்கள்.
காத்தான்குடி ஜாமிஉள்ளாபிரீன் பள்ளிவாயலில் ஸூபிஸ முஸ்லிம்களின் மரண அறிவித்தல் கூடச் செய்யத் தடை. காரணம் “முர்தத்”.
சம்மேளனத்தில் ஏழைகளுக்கு காணி – வளவு பங்கிட்டுக் கொடுப்பதில் பாரபட்சம். “முர்தத்”துகளுக்கு காணி தர முடியாது. ஒருவர் சீற்றம். இவ்விரண்டிற்கும் சாட்சிகள் உள்ளன. விசாரணை வந்தால் அவர்கள் நீதி மன்றில் தோன்றுவார்கள்.
“பத்வா” கொடுப்பதாயின் மார்க்கத்திற்கு முரணாக நடப்பவர்கள் அனைவருக்கும் பத்வா கொடுங்கள். பத்வா கொடுத்தால் அதை அமுல் படுத்துங்கள். இன்றேல் பத்வா வழங்குவதை நிறுத்துங்கள். மதம் மாற்றி “பத்வா” வழங்க உங்களுக்கு அனுமதித்தது யார்? பகிரங்கமாக நாடறிய, நாட்டு மக்களறிய சொல்ல உங்களால் முடியுமா?
முல்லா மகான்களே! உங்களின் “பத்வா” மலடி பிரசவித்தது போன்ற கதைதான். “பத்வா” வழங்கிவிட்டு மகிழ்ச்சி மேலீட்டால் துள்ளிப் பாய்ந்துள்ளீர்கள். உண்மையான முஸ்லிம்களை மதம் மாற்றிவிட்டு மகிழ்ச்சியடைபவன் யஹூதிகளை விடக்கேவலமானவன் என்பது உங்களின் அறிவுக்கு விளங்கவில்லையா?
மொட்டை கடிதம் போன்றதே உங்களின் மொட்டை “பத்வா”
குழந்தை பிறந்தால் அதன் தகப்பன் யாரென்று தெரிய வேண்டும். பத்வா வழங்கினால் “பத்வா” எழுதிய “முப்தீ” யாரென்று தெரிய வேண்டும். ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிவானின் ஒப்பம் தீர்ப்பில் இருக்க வேண்டும். இன்றேல் அது ஹறாங்குட்டி தீர்ப்பு போலாகிவிடும். உங்கள் “பத்வா” மொட்டைக் கடிதம் போல் மொட்டை பத்வாதான். கையெழுத்தே கிடையாது. சட்டம் சொல்லத் தெரியும். கையெழுத்துப் போடத் தெரியாதா? கையொப்பமில்லாத பத்வா செல்லுபடியற்றதாகும். பெரும் பெரும் அறிஞர்கள் சேர்ந்து “பத்வா” வழங்கியதாக பத்வாவில் எழுதியுள்ளீர்கள். ஆனால் ஒருவரின் கையெழுத்துக் கூட இல்லை. சட்டம் சொல்லத் தயக்கமில்லை. கையெழுத்திட மட்டும் தயக்கமோ? என்றாவதொரு நாள் “பத்வா” எழுதிய முல்லா நீதி மன்றில் குற்றவாளிக் கூண்டில் நிற்கத்தான் போகிறார். நாங்கள் பார்க்கத் தான் போகிறோம்.
ரிஸ்வீ ஸாஹிபுவின் சத்தமே இல்லையே! அவர் எங்கு போனாரோ?
அவருக்கு என் வாழ்த்துக்களை எத்தி வையுங்கள் முல்லாக்களே!