தொடர் 21
எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்கிய நாசமும், தோஷமும் நிறைந்த “பத்வா”வில் பொய்யும், புரட்டும், ஊடுருவல்களும் இருப்பதாக எழுதிய நான் தொடர்ந்து அந்த பத்வாவிலுள்ள பொய், புரட்டுக்களையும், ஊடுருவல்களையும் தொடர்ந்து எழுதி வருகிறேன். அதோடு தேவைக்கேற்ற, அதோடு தொடர்புள்ள வேறு குறிப்புக்களையும் எழுதி வருகிறேன்.
இதுவரை அவர்களின் புரட்டல்களையும், மன முரண்டுகளையும், “பத்வா”வில் அவர்கள் செய்த சதிகளையும் வாசகர்கள் புரிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அன்பிற்குரியவர்களே! நான் உலமாஉகளை சூடாகவும், காரமாகவும் சாடி எழுதுவது உங்களில் சிலருக்கு வேதனையாக இருக்கலாம். ஏனெனில் நானும், நீங்களும் பொதுவாக உலமாஉகளை சிறு வயதிலிருந்தே கண்ணியம் செய்து வருகிறோம். பிறர் உலமாஉகளை குறை கூறிய வேளையில் கூட அவர்களை எதிர்த்து தர்க்கித்தும் இருக்கிறோம்.
ஆனால் அக்கால உலமாஉகளுக்கும், இக்கால உலமாஉகளுக்கும் வித்தியாசமுண்டு. முன்னோர்கள் நல்லவர்கள், உயர் குணமுள்ளவர்கள். எது செய்தாலும், எது சொல்வதாயினும் அல்லாஹ்வைப் பயந்து செய்தார்கள், சொன்னார்கள்.
ஆயினும் இன்றுள்ள உலமாஉகளில் அநேகர் பொய், புரட்டுக்காரர்களாகவும், பணத்துக்கு அடிமைப்பட்டவர்களாகவும் அநீதிகாரர்களாகவும் உள்ளனர். இவ்வாறு எல்லா உலமாஉகளும் இல்லை. நல்லவர்கள் நிறைய உள்ளார்கள். இன்று வரை என்னிடம் வந்து சில நாட்கள் தங்கிச் செல்பவர்களும் உள்ளார்கள். ரிஸ்வியும், அவருக்கு நெருங்கிய, அவரால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சிலருமே இவ்வாறுள்ளார்கள். இவர்கள் علماء الدنيا என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
இவர்களில் யாராவது எது செய்தாலும் அதற்கு “பத்வா”வுமில்லை, சட்டமுமில்லை. அவர்களுக்குப் பிடிக்காத ஒருவன் சரியானது செய்தாலும் கூட அவனைக் குற்றவாளியாக சோடித்து அவனுக்கு “பத்வா” வழங்குவதற்கும், தண்டிப்பதற்கும், அவமானப்படுத்துவதற்கும் கடும் பாடு படுவார்கள்.
ஒரு சமயம் ரிஸ்வீ ஸாஹிபு வெசக் தினத்தில் பௌத மத விகாரைக்குச் சென்று அவர்கள் போல் கையில் வெசக் விளக்கேந்தி நின்றார், அதோடு அவரின் “ஈமான்” வெண்புறா உருவத்தில் பறந்து போயிற்று.
இவர் இவ்வாறு செய்தது சரியா? பிழையா? இவரின் செயலுக்கு என்ன “பத்வா” என்று கேட்டு ஒரு கடிதம், இரு கடிதமல்ல பல கடிதங்கள் அனுப்பிக் கேட்டோம். என் முகவரி எழுதியனுப்பிய கடிதங்கள் எல்லாம் முகவரி பிழையென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. எனது முகவரி எழுதாத கடிதங்கள் திருப்பி அனுப்பப்படவில்லை. இதுவும் ஒரு தில்லு முல்லேதான். மலத்திலிருந்து நறுமணத்தை எதிர் பார்க்க முடியதல்லவா?
இது என்ன நியாயம் என்று நான் கேட்கிறேன்? மார்க்கச் சட்டம் என்பது ஏழை, பணக்காரன், பதவியிலுள்ளவன், பதவியில் இல்லாதவன் அனைவருக்கும் ஒன்றேதான். இந்நிலையில் ரிஸ்வி என்ற காரணத்தால் குற்றமும் மறைக்கப்பட்டு, தண்டனையும் தவிர்க்கப்பட்டுள்ளது. لَوْ سَرَقَتْ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا முஹம்மதுடைய மகள் பாதிமா திருடினாலும் கூட அவரின் கையை நான் தறிப்பேன் என்ற ஹதீதை ஓதி ரிஸ்வியின் காதில் ஊதினாலும் அவருக்கு அது ஏறாது. பணவாசையும், பதவியாசையும் அவரின் மூளையில் கலந்துவிட்டது.
நான் பேசிய கருத்தை பிழை என்று எனக்கும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று பத்வா வழங்குவதற்கு விசர் நாய் போல் அங்கும், இங்கும் ஓடியலைந்து முல்லாக்கள் அவசரமாக “பத்வா” கொடுத்ததேன்?
அவர்களின் “பத்வா” சட்டவிரோதமானதும், மனச் சாட்சிக்கு மாறு பட்டதுமேயாகும்.
அதாவது நான் பட்டவர்த்தனமாகவும், தெளிவாகவும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசியிருக்கும் நிலையில் அதை மறுக்க இந்த முல்லாக்களுக்கு ஆதாரம் கிடைக்காததால் சூரியனை உள்ளங்கையால் மறைத்த மடையர்கள் போல நான் கூறியது “ஹுலூல் – இத்திஹாத்” என்று பொது மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொடுத்த “பத்வா” முல்லாக்களின் “முஸீபத்” பத்வா ஆகும்.
நானும், என்னைச் சார்ந்தவர்களும் தலைமுறை தலைமுறையாக பரம்பரை முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் எங்களை “காபிர்” , “முர்தத்” என்று சொல்ல நாங்கள் இவர்களின் அடிமைகாளா? அல்லது கூலியாட்களா? கண்கெட்ட ரிஸ்வியும், அவருக்கு தந்தனா பாடிய பத்வா குழுவினரும், அவர்களின் பாட்டுக்குத் தாளம் போட்ட வஹ்ஹாபிகளும் மிக விரைவில் ஸூபீ மகான்களின் சாபத்துக்குள்ளாகி செத்து மடிவர். நான் மரணித்தாலும் எனக்குப் பின் உயிர் வாழும் ஜீவன்கள் இவர்களின் இழி நிலை கண்டு ஸுப்ஹானல்லாஹ்! என்று சொல்வார்கள் என்பதில் எனக்கு ஐயமே இல்லை. இதேபோல் எவரும் ஐயம் கொள்ளத் தேவையுமில்லை. அல்லாஹ் நீதிவான். நீதியே செய்வான். பிறருக்கு அநீதி செய்வோர் அனுபவித்த சோதனைகளையும், வேதனைகளையும் நான் நேரில் கண்டவன்.
அன்பிற்குரியவர்களே! முஸ்லிம்கள் அல்லாதவர்கள் – அவர்கள் பௌதர்களாயினும், இந்துக்களாயினும், கிறித்துவர்களாயினும் – அவர்கள் அனைவரும் இறைவனின் விடயத்தில் வித்தியாசமான கருத்துள்ளவர்களாகவே இருக்கின்றனர். அதாவது “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையுள்ளவர்களாகவே உள்ளனர்.
“ஹுலூல் – இத்திஹாத்” காரர்கள் போல் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அல்லாஹ் சிருட்டியில் இறங்குகிறான் அல்லது அவன் சிருட்டியுடன் இரண்டறக் கலந்து விடுகிறான் என்ற கொள்கையிலும், அவன் வேறு, படைப்பு வேறு என்ற வேற்றுமைக் கொள்கையிலுமே இருக்கின்றனர். இவ்வாறிருப்பவர்கள் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மட்டுமல்ல. ஸூபிஸ வழி வாழாத ஏனைய முஸ்லிம்களும் கூட அவ்வாறுதான் உள்ளனர்.
ஸூபிஸ ஞான வழி வாழ்கின்ற முஸ்லிம்கள் தவிரவுள்ள அனைவரும் ஹக்கு வேறு, கல்கு வேறு – அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்ற கொள்கையுடையவர்களாகவே உள்ளனர்.
இதனால்தான் குத்புல் வுஜூத் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.
قَدْ مَحَقَ الْحَقُّ تَعَالَى جَمِيْعَ الْأَغْيَارِ بِقَوْلِهِ هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، فَقِيْلَ لَهُ فَأَيْنَ الْخَلْقُ؟ فَقَالَ مَوْجُوْدُوْنَ، وَلَكِنْ حُكْمُهُمْ مَعَ الْحَقِّ تَعَالَى كَالْأَنَابِيْبِ الَّتِيْ فِى كُوَّةِ الشَّمِسْ، تَرَاهَا صَاعِدَةً هَابِطَةً، فَإِذَا قَبَضْتَ عَلَيْهَا لَا تَرَاهَا، فَهِيَ مَوْجُوْدَةٌ فِى الشُّهُوْدِ، وَمَفْقُوْدَةٌ فِى الْوُجُوْدِ، (اليواقيت، ج 1، ص 65)
அல்லாஹ், முந்தினவனும் அவனே, பிந்தினவனும் அவனே, வெளியானவனும் அவனே, உள்ளானவனும் அவனே என்ற தனது திருமறை வசனத்தின் மூலம் ஹக்கு வேறு, கல்கு வெறு (அல்லாஹ் வேறு, படைப்பு வேறு) என்பதை அழித்துவிட்டான். இல்லாமற் செய்து விட்டான் என்று கூறினார்கள். அப்போது படைப்பு எங்கே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் படைப்பு உண்டு, ஆயினும் அது வீட்டின் முகட்டிலுள்ள ஒரு துவாரத்தின் வழியாக “பைப்” போன்று வருகின்ற சூரி வெளிச்சத்தில் ஏறுவதும், இறங்குவதும் போல் தோற்றுகின்ற கண்ணுக்கும் தெரியாத சிறிய தூசுகள் போன்றவையாகும். அவற்றை நீ கையால் பிடித்தால் எதையும் காண மாட்டாய். இவை போன்றவைதான் படைப்புகள். அவை கண்ணுக்குத் தெரியும், அவை எதார்த்தத்தில் தெரிந்த பொருளாக இருக்காது. இதனால்தான் அவற்றை கையால் பிடித்தால் காண முடியாமல் போகிறது என்று விடை கூறினார்கள்.
ஷாதுலீ நாயகம் அவர்களின் இந்த வசனம் மூலம் படைப்பு கண்ணுக்குத் தெரியும், ஆயினும் எதார்த்தத்தில் அது இல்லாதது என்பது தெளிவாகிறது. படைப்பு இல்லை என்பதை இந்தப் பாணியிலும், இந்த உதாரணத்தின் மூலமும் கூறியவர்கள் ஷாதுலீ நாயகமவர்களாவர்.
இன்னும் இதே கருத்து ஷாதுலிய்யா தரீகாவின் “அவ்றாது”களிலும் கூறப்பட்டுள்ளது. اللهُ مَوْجُوْدٌ وَمَا سِوَاهُ مَفْقُوْدٌ அல்லாஹ் மட்டுமே உள்ளான். அவன்தவிர வேறொன்றுமே இல்லையென்று கூறப்பட்டுள்ளது. அதாவது படைப்பு இல்லையென்று கூறப்பட்டுள்ளது.
நான் கடந்த தொடர் ஒன்றில் ஷெய்குல் அக்பர் இப்று அறபீ நாயகம் அவர்களின் பாடலொன்றை எழுதி அதற்கு விளக்கம் கூறுகையில் إنما الكون خيال – وهو حق فى الحقيقة படைப்பு “கயால்” என்றும், கண்ணுக்குத் தென்பட்டாலும் அது எதார்த்தத்தில் இல்லாதது என்றும் குறிப்பிட்டேன்.
கடந்த பதிவின் போது இதே கருத்தை இன்னொரு பாணியில் “தக்ரீபுல் வுஸூல்” என்ற நூலில் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டேன். அதாவது الكون كله ظلمة وإنما أناره وجود الحق فيه أي فى صورته அதாவது படைப்பு என்பது இருள். அது இருப்பதாக காட்டுவது அதன் உருவத்தில் இறைவன் இருப்பதேயாகும். “இருள்” என்று கூறப்பட்டதிலுள்ள விளக்கம் என்னவெனில் இருள் என்று எதார்த்தத்தில் ஒன்றில்லை. அதற்கு வுஜூத் என்ற இருப்பும் கிடையாது. ஆயினும் அது கண்ணுக்குத் தெரியும். எதார்த்தத்தில் இருக்காது. இருள் என்பது عَدَمِيٌّ لَا وجود له இல்லாத ஒன்று. அதற்கு “வுஜூத்” எனும் இருப்புக் கிடையாது.
الله هو الوجود، ولا وجود لغيره
அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான், அவனுக்கு மட்டுமே இருப்பு உண்டு, அவன் தவிர வேறொன்றுமே இல்லை என்ற தத்துவத்தை மனிதன் என்ற மடையனுக்கு ஞானிகள் பல உதாரணங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார்கள். மனிதன் எனும் எருமைக்கு எளிதில் எதையும் புரிய வைக்க முடியாது. இதனால்தான் இறைவன் திருக்குர்ஆனில் إنه كان ظلوما جهولا அவன் – மனிதன் கடும் அநீதியாளனாகவும், கடும் மடையனாகவும் உள்ளான் என்று இழித்துரைத்துள்ளான் போலும்.
தொடரும்….