தொடர் 23
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களை முல்லாக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தமது “பத்வா” தமிழ் பகுதி 22ம் பக்கத்திலும், அறபுப் பகுதி 5ம் பக்கத்திலும் எழுதியுள்ளார்கள்.
முல்லாக்கள் இவ்வாறு எழுதியதே அவர்கள் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும். ஆதாரமென்றாலும் ஆதாரம்தான். அசைக்கவோ, உசுப்பவோ முடியாத ஆதாரமாகும்.
اَللهم اجْعَلْ تَفْكِيْرَهُمْ فِيْ تَحْقِيْرِهِمْ وَتَدْمِيْرِهِمْ
அவர்களின் சிந்தனையை அவர்களின் அழிவுக்கு வழியாகவும், அவர்களின் அவமானத்திற்கு வழியாகவும் ஆக்கி வைப்பாயாக! என்று எமது எதிரிகளுக்கு எதிராக நாம் “துஆ” கேட்டதுண்டு. அல்லாஹ் எமது “துஆ”வை ஏற்றுக் கொண்டான் என்பதற்கு வெளிப்படையான ஆதாரம் முல்லாக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டதேயாகும்.
இது எது போன்ற அறியாமையெனில் வஹ்ஹாபிஸ கொள்கையை எழுத்து மூலமும், பேச்சு மூலமும் பகிரங்கமாக எதிர்க்கும் ஒருவன் அதன் தாபகர் இப்னு அப்தில் வஹ்ஹாப் என்பவரை சரி கண்டு, (நாங்கள் வஹ்ஹாபிஸத்தை எதிர்க்கிறோம், ஆயினும் அதைக் கொண்டுவந்த தலைவரை ஏற்றுக் கொள்கிறோம்) என்று சொல்வது போன்றதும், இன்னும் (தப்லீக் ஜமாஅத்தின் கொள்கையை எதிர்க்கிறோம், ஆனால் அதன் தலைவர் இல்யாஸை ஏற்றுக் கொள்கிறோம்) என்று சொல்வது போன்றதுமாகும்.
இவ்வாறு ஒருவர் கூறி, தான் கூறுவதுதான் சரியென்றும் அவர் அடம் பிடித்து நிற்பாராயின் அவர் எங்கே அனுப்பி வைக்கப்பட வேண்டியவர் என்று நான் சொல்லாமலேயே புத்தி சாலிகள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
ஏனெனில் இஸ்லாமிய உலகிலும், இஸ்லாமிய வரலாற்றிலும் இப்னு அறபீ நாயகம் போன்றும், இன்னும் முல்லாக்கள் ஏற்றுக் கொண்ட இமாம் ஙஸ்ஸாலீ போன்றும், இன்னும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ போன்றும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியவர்கள் வேறு யாருமில்லை. கடந்த பதிவொன்றில் بَلْ هُوَ الْكُلُّ எல்லாம் அவனே என்று இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னதை எழுதியிருந்தேன். இதன் தாற்பரியம் என்ன? எல்லாம் அவனே என்றால் சர்வ படைப்புக்களும் அவனே என்றுதானே ஙஸ்ஸாலீ சொன்னார்கள். “அல் குல்லு” எல்லாம் என்ற சொல் நடப்பன, பறப்பன, நகர்வன அனைத்தையும், மற்றும் நாய், பன்றி, மலம், சலம் முதலான அசுத்தமானவற்றையும், ஆடு, மாடு, கோழி முதலான அசுத்தமில்லாதவற்றையும் உள்வாங்கிய சொல் என்பது முல்லாக்களுக்குத் தெரியாதா? அல்லது தெரிந்திருந்தும் தெரியாதவர்கள் போல் நடிக்கிறார்களா?
1979ம் ஆண்டுதான் காத்தான்குடி அப்துர் றஊப் எல்லாம் அவனே – “ஹமவோஸ்த்” என்று சொன்னார். ஆனால் இமாம் ஙஸ்ஸாலியோ, இமாம் இப்னு அறபியோ அப்துர் றஊபுக்கு சுமார் 800 வருடங்களுக்கு முன் சொன்னார்களே! இவர்களுக்கு நீங்கள் என்ன “பத்வா” வழங்கினீர்கள்? முந்தினவர்களுக்கு “பத்வா” வழங்கிவிட்டல்லவா பிந்தினவர்களுக்கு “பத்வா” வழங்க வேண்டும்?
குறிப்பிட்ட மகான்கள் “எல்லாம் அவனே” என்று தமது நூல்களில் கூறியுள்ளதை முல்லா மகான்கள் இதுவரை வாசித்துப் பார்க்கவில்லையா? அல்லது வாசித்தும் அவர்களுக்குப் புரியவில்லையா?
வஹ்ஹாபீகள் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் ஹதீதுகளில் – நபீ மொழிகளில் தமது கொள்கைக்கு ஆதரவில்லாத ஹதீதுகளில் அது ழயீப், இது ழயீப் என்று கூறி இறுதியில் புகாரீ நூலிலும் கூட ழயீபான ஹதீதுகள் உள்ளன என்று சொல்லுமளவிற்கு முன்னேறிவிட்டார்கள். இவ்வாறு சொல்லிச் சொல்லி ஹதீதுகளில் அவர்களுக்கு ஆதரவில்லாத ஹதீதுகள் என்று அவர்கள் நினைக்கின்ற ஹதீதுகள் யாவும் ழயீப் என்றும் கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறுதான் முல்லா மகான்களுமாவர். அந்த இமாம் பிழை, இந்த இமாம் பிழை என்று சொல்லிச் சொல்லி அனைத்து இமாம்களையும் பிழையானவர்களாக்கி கடைசியில் இமாம் ரிஸ்வீயும், “பத்வா” குழுவுமே இக்கால இமாம்கள் என்று அவர்கள் சொல்லும் காலமும் வெகு தொலைவில் இல்லை.
அப்படியொரு காலம் வருமுன் என்னை அல்லாஹ் அவன் பக்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றேல் நான் சிறைவாசம் செய்ய நேரிடும்.
முல்லாக்களின் மனைவி, மக்கள் மீதும், அவர்களின் பெற்றோர், மற்றும் இரத்த பாசத்தவர்கள் மீதும் இரக்கம் கொண்ட காரணத்தினால்தான் இவர்களுக்கு – “பத்வா” குழுவினருக்கும், ரிஸ்வீக்கும் எதிராக நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யாமல் உள்ளோம். ஏனெனில் அவர்கள்தான் எனக்கும், ஸூபிஸ சமுகத்திற்கும் அநீதி செய்தவர்களேயன்றி அவர்களின் குடும்பத்தவர்கள் அல்ல.
இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கோ, தொடர்ந்து பல வருடங்களுக்கு வழக்குப் பேசுவதற்கோ எங்களுக்கு நெஞ்சில் பலமில்லாமலுமில்லை. கையில் பணமில்லாமலுமில்லை. ஐக்கிய நாடுகள் சபை வரை இவ்விவகாரத்தை கொண்டு செல்வதற்கும் நாம் சக்தியற்றவர்களல்ல. இவர்களுக்கு இடுப்பில் பலமிருந்தால் ஸூபிஸ சமுகம் “முர்தத்” மதம் மாறியவர்களென்று இன்னொரு “பத்வா” வழங்கட்டும். அல்லது அவர்கள் தமது “பத்வா”வில் எழுதியுள்ளவாறு ஸூபிஸ சமுகத்தில் ஒருவரை கொலை செய்துவிட்டு தாமே செய்ததாக பகிரங்கமாக உரிமை கோரட்டும்.
இவ்வாறெல்லாம் நான் எழுதுவதால் நானோ, ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்த எவருமோ இவர்களுக்கு அநீதி செய்ய ஒருபோதும் நினைத்ததுமில்லை. இதன் பிறகு நினைக்கவும் மாட்டோம். அல்லாஹ் ஒருவனின் நீதியையே நாங்கள் நம்பியுள்ளோம். அதையே எங்களின் “துஆ”க்களிலும் கேட்டும் வருகிறோம்.
وهو أحكم الحاكمين
நீதிவான்களுக்கெல்லாம் தலைமை நீதிவான் அவனேதான்.
முல்லாக்களின் “பத்வா” இலங்கைத் திரு நாட்டின் அரசாங்க சட்டத்திற்கே முரணானது!
அகில இலங்கை ஜம்இய்யதல் உலமா நாடாளுமன்றில் பதிவு செய்யப்பட்டது போல் எமது அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிறுவனமும் நாடாளுமன்றில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமேயாகும்.
எவருக்கும் “பத்வா” வழங்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தால் வழங்கப்படவில்லை. என்றாவது ஒரு நாள் சட்டம் இவர்களைப் பிடிக்கவே செய்யும். அல்லாஹ் எதற்கும் சக்தியுள்ளவனாவான்.
يَا أَحْكَمَ الْحَاكِمِيْنْ! وَيَا ذَا الْقُوَّةِ الْمَتِيْنْ! وَيَا ذَا الْبَطْشِ الشَّدِيْدْ! يَا جَبَّارْ يَا قَهَّارْ يَا مُنْتَقِمْ! يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامْ! يَا اَللهُ! يَا وَاحِدْ! يَا أَحَدُ! يَا صَمَدْ! يَا وِتْرُ! يَا قَائِمْ! يَا دَائِمْ! يَا قَادِرْ! يَا مُقْتَدِرْ! يَا هُوْ!
اَللهم اقْطَعْ أَجَلَ أَمَلِ الْعُلَمَاءِ الَّذِيْنَ أَفْتَوْنِـيْ وَأَفْتَوْا قَوْمِـيْ بِالرِّدَّةِ وَأَبَاحُوْا دِمَائَنَا وَأَمْوَالَنَا، وَشَتِّتْ شَمْلَهُمْ وَأَمْرَهُمْ، وَفَرِّق جَمْعَهُمْ، وَأَقْلِبْ تَدْبِيْرَهُمْ، وَبَدِّلْ أَحْوَالَهُمْ، وَنَكِّسْ أَعْلَامَهُمْ، وَكِلَّ سِلَاحَهُمْ، وَقَرِّبْ آجَالَهُمْ، وَنَقِّصْ أَعْمَارَهُمْ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ، وَغَـيِّـرْ أَفْكَارَهُمْ، وَخَيِّبْ آمَالَهُمْ، وَخَرِّبْ بُنْيَانَهُمْ، وَاقْلَعْ آثَارَهُمْ، حَتَّى لَا تَبْقَى لَهُمْ بَاقِيَةْ، وَلَا يَجِدُوْا لَهُمْ وَاقِيَةً، وَاشْغَلْهُمْ بِأَبْدَانِهِمْ وَأَنْفُسِهِمْ وَأَدِمْهُمْ بِصَوَاعِقِ انْتِقَامِكَ، وَابْطُشْ بِهِمْ بَطْشًا شَدِيْدًا، وَخُذْهُمْ أَخْذًا عَزِيْزًا، إِنَّكَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرْ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِـيِّ الْعَظِيْمْ، اَللهم لَا أَمْنَعُهُمْ وَلَا أَرْفَعُهُمْ إِلَّا بِكَ، اَللهم إِنَّا نَجْعَلُكَ فِى نُحُوْرِهِمْ، وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ، يَا مَالِكَ يَوْمِ الدِّيْنْ! إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ عَلَيْهِمْ، فَدَمِّرْهُمْ تَدْمِيْرًا، وَتَبِّرْهُمْ تَتْبِيْرًا، وَاجْعَلْهُمْ هَبَاءً مَنْثُوْرًا، آمِيْنْ آمِيْنْ آمِيْنْ، يَا اَللهُ يَا اَللهُ يَا اَللهُ، بِسْمِ اللهِ بِحُرْمَةِ مُحَمَّدٍ عِنْدَكَ وَبِحُرْمَتِكَ عِنْدَ مُحَمَّدٍ أَنْ تَسْتُرَنَا فِى الدُّنْيَا وَالْآخِرَةْ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْرْ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِـيِّ الْعَظِيْمْ، وَصَلَّى اللهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيْمًا كَثِيْرًا إِلَى يَوْمِ الدِّيْنْ، وَالْحَمْدُ للهِ رَبِّ الْعَالَـمِيْنْ،
ஸூபிஸ சமுகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே! உங்களால் முடிந்த அளவு இந்த துஆவை இரவு நேரத்தில் பக்தியோடு ஓதி வருமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். இந்த “துஆ” குத்புல் அக்தாப், அல் பாசுல் அஷ்ஹப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குரியது. கடுமையான “ஜலாலிய்யத்” மிகைத்த நேரத்தில் ஓதியது. இது தேவையானோர் மௌலவீ ஜஹானீ றப்பானீ அவர்களிடம் நேரில் சென்று காதிரிய்யா அங்கத்துவ இலக்கத்தை கூறி பெற்றுக் கொள்ளலாம்.