Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 3
 
1979ம் ஆண்டு மீலாத் விழா முடிந்த மறு நாள் மன்னார் – “நான் நாட்டான்” பிரதேசத்தில் நடைபெறவிருந்த மீலாத் விழாவுக்கு நான் செல்ல வேண்டியிருந்ததால் நான் கொழும்பு சென்று மாதம்பை கியாதிய்யா அறபுக் கல்லூரியின் தாபகர் மௌலவீ அபூ ஸாலிஹ் ஹஸ்றத் அவர்களும் அவ்விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் அவரையும் அழைத்துக் கொண்டு “நான் நாட்டான்” சென்று அங்கு மீலாத் விழாவை முடித்துவிட்டு கொழும்புக்கு வந்தேன்.
 
கொழும்பில் என்னைச் சந்தித்த காத்தான்குடி நண்பர்களிற் சிலர், “காத்தான்குடியில் நீங்கள் பேசிய கருத்துக்கள் தொடர்பாக உங்களுக்கு “முர்தத்” என்று உலமாக்கள் “பத்வா” தர இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்களாம்” என்று ஒரு தகவலைக் கூறினர்.
 
ஆகையால் கொழும்பில் தாமதியாமல் மறு நாளே ஊர் வந்து விட்டேன். அப்போது பத்வா வழங்கப்படவில்லையாதலால் காத்தான்குடி உலமாஉகளில் பலர் என்னைச் சந்தித்து உரையாடினார்கள். அவர்களில் என்னுடன் நெருங்கிய நண்பர்களாயிருந்த மௌலவீ மீரா ஸாஹிபு, மௌலவீ முஸ்தபா இஸ்மாயீல் இருவரையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
 
மீரா ஸாஹிப் மௌலவீ என்னுடன் சில வருடங்கள் காலி இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் ஓதிவிட்டு வெலிகாமம் சென்று பாரீ அறபுக் கல்லூரியில் மௌலவீ தராதரப்பட்டம் பெற்றவர். இவர் جَهُوْرِيُّ الصَّوْتِ கடும் சத்தமுள்ளவராயிருந்ததால் நாங்கள் இவரை “பீரங்கி” என்று செல்லமாக அழைத்து வந்தோம்.
 
ஒரு நாளிரவு எனது வீட்டுக்கு வந்த மௌலவீ மீராஸாஹிப் மச்சான்! என்று என்னை விழித்து உலமா சபை உனக்கும், உன்னைச் சார்ந்தவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” தர இருக்கிறார்களாம். இவ்வேளை நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று என்னைக் கேட்டார். அது உன் விருப்பம் என்றேன்.
 
மீண்டும் அவர், நான் பல வீடுகளுக்கு மௌலித் ஓதுவதற்காகவும், இஸ்ம் வேலை செய்வதற்காகவும் போகின்றவனாயிருக்கின்றேன். அந்த வீட்டவர்கள் என்னிடம் றஊப் மௌலவீ பேசியது சரியா? பிழையா? என்று கேட்கிறார்கள். என்னைப் பொறுத்து சரி என்று சொல்லவும் தெரியாது. பிழை என்று சொல்லவும் தெரியாது. நான் என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர்கள் அவ்வாறு கேட்டால் நீ என்ன சொல்கிறாய் என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நான் இந்தியா சென்று ஓதவில்லை. ஆகையால் அவர் ஓதிய கிதாபை என்னால் ஓத முடியாமல் போய்விட்டது என்று கூறி வருகிறேன் என்று கூறினார். நல்ல பதில். நீ அவ்வாறே சொல் என்றேன்.
 
அப்போதவர் நீ சொல்லும் விஷயத்தை நான் விளங்கிக் கொள்வதாயின் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்று கேட்டார். இது கரை காண முடியாத பெருஞ் சமுத்திரம். ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரை குடித்துக் கொள்ளலாம். உன்னைப் பொறுத்தமட்டில் ஒரு மாத காலம் தேவைப்படுமென்று நினைக்கிறேன் என்று சொன்னேன். அதற்கவர் அது சாத்தியமில்லை. ஆகையால் நான் அதைக் கற்றுக்கரையேற முடியாது. நான் ஏற்கனவே சொன்னதுபோல் யாராவது என்னிடம் கேட்டால் றஊப் மௌலவீ ஓதிய கிதாபு நான் ஓதவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன்பின் அவரை நான் சந்திக்கவில்லை. மரணித்துவிட்டார். றஹிமஹுல்லாஹ்!
 
ஆயினும் மர்ஹூம் மௌலவீ முஸ்தபா இஸ்மாயீல் பஹ்ஜீ அவர்கள் ஒரு நாளிரவு என்னைச் சந்தித்து உனக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்க ஏற்பாடு செய்கிறார்கள். இது தொடர்பாக எல்லாக் காரியங்களுக்கும் என்னையும் அழைக்கிறார்கள். நான் போகவில்லையானால் என்னையும் “முர்தத்” என்று சொல்லிவிடுவார்கள். ஆகையால் நீ என்னை கோபித்துக் கொள்ளாதே என்று கூறிவிட்டுப் போனார்.
 
ஆயினும் நண்பன் என்ற வகையில் இவர் எனக்குச் செய்த உதவி என்னவெனில் உலமா சபையில் அல்லது சம்மேளனத்தில் எனக்கு அல்லது எனது தாபனங்களுக்கு எதிராக ஏதாவது சதித்திட்டம் நடந்தால் அதை அவர் இரகசியமாக என்னிடம் சொல்லித் தந்துவிடுவார். இது மட்டுமே அவர் எனது நீண்ட கால நண்பன் என்ற வகையில் எனக்குச் செய்த உதவியாகும். இவர் பகிரங்கமாக எனது கருத்தை ஏற்றுக் கொள்ளாது போனாலும் எனது தந்தையிடம் ஓதியவர் என்ற வகையில் தந்தையின் கருத்தை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் சுவாபமுள்ளவராயிருந்தார்.
 
நானும், மௌலவீ இஸ்மாயீல் அவர்களும் ஒரு காலத்தில் காலிக் கோட்டை இப்றாஹீமிய்யா அறபுக் கல்லூரியில் ஓதிக் கொண்டிருந்த சமயம் தகப்பனார் எங்கள் இருவரையும் அழைத்து என் தந்தையின் வீட்டில் இரவு 9 மணி முதல் “ஸுப்ஹ்” உடைய அதான் – பாங்கு வரை “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் மிக ஆழமான கருத்துக்களை அள்ளிக் கொட்டியபின், உங்களில் அழகாக எழுதக் கூடியவர் யார்? என்று கேட்டார்கள். இஸ்மாயீல் மௌலவீ என்று நான் சொன்னேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
 
தகப்பனார் பின்வருமாறு சொன்னார்கள். என்னிடம் ஹைதறாபாத் ஸூபீ ஹழ்றத் அவர்கள் எழுதிய “அல்ஹகீகா” எனும் அறபு மொழியிலான நூலின் பிரதியொன்று உள்ளது. அது கையெழுத்துப் பிரதி. எழுத்துக்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளது. ஆகையால் நாம் அதை அழியாத மையால் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி எங்களிடம் ஒப்படைத்தார்கள். மௌலவீ இஸ்மாயீல் எழுதினார்கள். நான் வசனங்களை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். இஸ்மாயீல் மௌலவீ தனது கைப்பட எழுதிய பிரதி என்னிடத்தில் உள்ளது.
 
மௌலவீ இஸ்மாயீல் அவர்களுக்கு அல்லாஹ் “றஹ்மத்” செய்ய வேண்டுமென்று நான் “துஆ” செய்கிறேன். அவர் ஒரு நாள் மதிய நேரம் எனது அலுவலகத்திற்கு வந்து பேசிக் கொண்டிருக்கையில் வழமையாகப் பேசுவது போல் “மச்சான்! எனக்கு கலிமா சொல்லித்தா” என்று கேட்டார். என் கண் கலங்கியது. அவர் என்னைவிட வயதில் கூடியவர். கல்வி அறிவிலும் என்னைவிட முந்தினவர். திறமையுள்ளவர். மௌலவீ அவர்கள் இவ்வாறு சொல்வார் என்று நான் நினைத்திருக்கவில்லை. எனினும் அவர் தனது மனதிலுள்ளதை வார்த்தையில் வெளிப்படுத்தியதன் மூலம் அவர் சமுகத்துக்குப் பயந்து என்னை விட்டும் தூரப்பட்டவர் போலும், எனக்கு எதிரானவர் போலும் வெளிப்படையில் காட்டிக் கொண்டாலும் அவர் கூறிய, மேலே நான் எழுதிக் காட்டிய வசனம் மூலம் அவர் ஜெயம் பெற்றவர் என்பதே எனது அபிப்பிராயமாகும். இவர்போல் கடந்த காலத்தில் பலர் இருந்தனர். இப்போதும் உள்ளனர்.
 
நான் எழுதிய இச்செய்தியை சிலர் நம்பாமலுமிருக்கலாம். யார் நம்பினாலும், யார் நம்பாது போனாலும் நடந்ததை நடந்தவாறே நான் சொல்லியுள்ளேன். எவர் என்னைப் பற்றி எதைச் சொன்னாலும் அதை நான் لَا أُبالي -لا أُبَالِيْ என்று சொல்லிப் பழகிவிட்டேன். அது என் தாரகை மந்திரம் போலாகிவிட்டது.
 
இமாம் மன்ஸூர் அல் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது பொறாமை கொண்ட உலமாக்களில் அன்று வாழ்ந்த அட்டூழியக்காரர்களால் சித்திரவதை செய்து வாளால் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட பின் இன்று வரை பல்லாயிரம் ஸூபீ மகான்கள் – குத்புமார்கள் பொறாமை கொண்ட உலமாஉகளால் காலத்திற்கு காலம் துன்புறுத்தப்பட்டே வந்துள்ளார்கள். துன்புறுத்தப்பட்டு வந்து கொண்டுமுள்ளார்கள். அவர்களின் பட்டியலின் விபரம் “அல்கிப்ரீதுல் அஹ்மர்” என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இந்நூல் இன்ஷா அல்லாஹ் இவ்வருட முடிவிற்குள் வெளியாகும்.
 
1979ம் ஆண்டு மீலாத் விழா முடிந்த பின் சுமார் ஒரு வார காலம் காத்தான்குடியில் மார்க்கப் பிரச்சினை எல்லோரினதும் பேசும் பொருளாயிருந்தது.
 
ஒரு நாள் மர்ஹூம் அல்ஹாஜ் அஹ்மத் லெப்பை அவர்களின் தலைமையில் சிக்கந்தர் ஆலிம் அவர்களின் குர்ஆன் பாடசாலைக் கட்டிடத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் காத்தான்குடி உலமாஉகளில் பெரும்பாலானோரும், ஊர் மக்களிற் பலரும் கலந்து கொண்டார்கள். அங்கு நான் பேசிய ஒலி நாடா இயக்கப்பட்டது. அனைவரும் செவியேற்றிருந்தார்கள். அது நீண்ட நேரப் பேச்சாயிருந்ததால் தொடர்ந்து செவிமடுக்க சடைவு ஏற்படுமென்று எனது பேச்சு கட்டம் கட்டமாக இயக்கப்பட்டது. இறுதியில் தலைவர் அவர்கள் பேச்சை நிறுத்துமாறு கூறிவிட்டு அங்கு கூடியிருந்த உலமாஉகளுக்கு மட்டும் உருக்கமான உரையொன்றை நிகழ்த்தினார்கள். அவர்கள் தமது உரையில், உலமாக்களே! இதற்கு சரியான முடிவு சொல்ல வேண்டும். ஆகையால் காத்தான்குடி உலமா சபை இவ்விவகாரத்தை இப்போதே பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
 
மறுநாள் காத்தான்குடி உலமா சபை உறுப்பினர்களிற் சிலர் (விபரம் எனக்கு தெரியவில்லை) கொழும்புக்குச் சென்றனர். அதன் பிறகு நடந்தது எனக்குத் தெரியாது. ஆயினும் காத்தான்குடி குழு கொழும்புக்குச் சென்ற பின் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், நீங்கள் மீலாத் விழாவில் பேசிய கருத்துக்கள் தொடர்பாகப் பேசுவதற்கு கொழும்புக்கு வருமாறு கேட்கப்பட்டிருந்தது.
 
அதற்கு நான் ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதில் (நீங்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக எனக்கும், காத்தான்குடி உலமா சபைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால் நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்வோம்) என்று குறிப்பிட்டிருந்தேன். அதோடு தொடர்பு நின்றது.
 
காத்தான்குடி உலமா சபைக் குழு கொழும்பு செல்வதும், வருவதுமாக கடும் பாடு படுகிறார்கள். நண்பர் மௌலவீ இஸ்மாயீல் அவர்களும் அந்தக் குழுவுடன் சேர்ந்து இயங்கினாலும் முற்றாக அவரோ, ஏனைய மௌலவீமார்களோ என்னை விட்டும் முழுமையாக பிரியவில்லை. எனினும் என்னைக் கண்டு தெரு மாறிச் சென்ற மௌலவீமாரும், பாதையில் என்னைக் கண்டு முகம் மாற்றிச் சென்ற மௌலவீமாரும் இருந்தார்கள் என்பதும் பொது மக்கள் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். இக்கால கட்டம் “பத்வா” வெளியாகாமலிருந்ததால் அன்றைய சூழலில் முஸ்லிம் – முர்தத் என்ற பாகுபாட்டிற்கு வழியில்லாதிருந்தது.
 
இவ்வாறிருக்கும் காலத்தில் நீண்ட நாட்களின் பின் நண்பர் மௌலவீ இஸ்மாயீல் அவர்கள் என்னைச் சந்தித்து, உங்களுக்கு “பத்வா” வழங்குவதற்கு உலமாக்கள் ஓர் உறுதியான ஆதாரம் கண்டுபிடித்துள்ளார்கள் என்று சொன்னார். அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டேன். ஆம் சொல்கிறேன் என்று பின்வருமாறு சொன்னார். இந்த நிகழ்வு “பத்வா” வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன் மர்ஹூம் இப்றாஹீம் மௌலவீ அவர்களின் சகோதரியின் வீட்டில் நடந்தது.
 
உலமாஉகள் எடுத்த ஆதாரமென்றால் அது சாதாரண ஆதாரமாயிருக்காது. சொல்லுங்கள் என்று சொன்னேன்.
 
மௌலவீ இஸ்மாயீல் அவர்கள் தனது ஷேட் பொக்கட்டிலிருந்து மிகவும் கண்ணியமாக ஒரு பேப்பர் துண்டை எடுத்துத் தந்தார்.
 
அதில் பின்வரும் வசனம் எழுதப்பட்டிருந்தது.
مَنْ زَعَمَ أَنَّ اللهَ عَلَى شَيْئٍ أَوْ فِى شَيْئٍ أَوْ مِنْ شَيْئٍ فَقَدْ كَفَرَ،
இவ்வசனத்தைக் கண்ட நான் எதனால் சிரிப்பதென்று தெரியாதவனாய் உலமாக்களின் அபார திறமையை எண்ணி வருந்தினவனாக நண்பர் இஸ்மாயீல் அவர்களிடம் இப்படியோர் ஆதாரம் தந்ததற்காக முதலில் உங்களுக்கு நன்றி சொல்கிறேன். இது எங்களுக்கு சாதகமான ஆதாரமேயன்றி எங்களுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்குச் சாதகமான ஆதாரமல்ல என்று கூறினேன். மௌலவீயின் முகம் மாறிவிட்டது.
 
உலமாஉகள் எடுத்த ஆதாரத்தின் பொருளையும், அதன் சுருக்கத்தையும் இங்கு எழுதுகிறேன்.
 
(அல்லாஹ் என்பவன் ஒரு வஸ்த்தின் மீது உள்ளான் என்றோ, அல்லது ஒரு வஸ்த்தில் உள்ளான் என்றோ, அல்லது அவன் ஒரு வஸ்த்தில் நின்றுமுள்ளவன் என்றோ நம்பினவன் நிச்சயமாக “காபிர்” ஆகிவிட்டான்) இதுவே இதன் வெளிப்படையான பொருளாகும்.
 
இந்த ஆதாரம் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கை பிழையென்று நிறுவுவதற்கும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை சரியென்று நிறுவுவதற்குமான அசைக்க முடியாத ஆதாரமேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பேசுபவனை “முர்தத்” மதம் மாறியவன் என்று சொல்வதற்கான ஆதாரமல்ல. போயும் போயும் அகில இலங்கை ஜம்இய்யதல் உலமா கண்டுபிடித்துள்ள ஆதாரம் பிரம்மாதம் வெளியில் சொன்னால்…
 
RELATED ARTICLES

Most Popular

Recent Comments