Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 6
 
உலகில் வாழ்கின்ற ஸுன்னீகள் அனைவரும் மேற்கண்ட இக்கருத்தைக் கூறிய இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களை எந்தவொரு கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது.
 
கொள்கையின் இமாம் அவர்களே தனது வாழ்வில் எவரையும் முர்தத் – காபிர் என்று கூறாமல் வாழ்ந்ததை தங்களின் தோழர்களை சாட்சியாக வைத்துக் கூறியுள்ளார்கள் என்றால் அவர்களின் இக்கூற்றை ஆழமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். இமாம் அபுல் ஹஸன் அஷ்அரீ அவர்கள் எங்கே? இந்த முல்லாக்கள் எங்கே?
 
இந்த விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சில நாட்களுக்கு, பல தவணைகள் வரை ஒத்திப்போட்டு தம்மிடம் “பத்வா” குழு இருந்தாலும் கூட அவர்களையும் விடாமல் அவர்களுடன் இன்னும் பல ஸூபிஸ ஞானத்தைக் கரைத்துக் குடித்தவர்களான தரீகாக்களின் ஷெய்மார்களையும் இணைத்து ஒரு முடிவு செய்திருப்பார்களாயின் “முர்தத்” பத்வா எழுத எழுதுகோலை முப்தீ ஸாஹிப் தொட்டுக் கூட இருக்கமாட்டார். அன்று வாழ்ந்த “முப்தீ” மகான்கள் ஒருவன் கெட்டவனென்றோ, பிழை செய்துவிட்டான் என்றோ, “முர்தத்” – “காபிர்” என்றோ “பத்வா” கொடுக்க தயங்கினார்கள். எவ்வாறேனும், எத்தனை வலிந்துரை கொடுத்தேனும் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து அவனை வெளியாக்கிவிடாமல் பாதுகாப்பதற்கே முயற்சித்தார்கள். ஆனால் இன்றுள்ள பத்வா வியாபாரிகளோ எவனையாவது கொண்டு வர மாட்டார்களா அவனுக்கு “முர்தத்” பத்வா கொடுத்துவிட்டு நாம் மாறிவிடுவோம் என்று பேனையோடும், பேப்பரோடும் வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள்.
 
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கிழக்கு மாகாணத்தில் ஒரு விதானை – கிராம சேவகர் இருந்ததாகவும், எவனாவது ஒருவன் எவன் மாட்டையாவது திருடிக் கொண்டு குறித்த விதானையிடம் வந்து இது தனது மாடென்று உறுதி செய்து தாருங்கள் என்று கேட்டால் அவனிடம் ஒரு கைவிரல் ஐந்தையும் விரித்துக் காட்டுவாராம். அவன் ஆம் என்று தலையசைத்தானாயின் தனது வீட்டிற்குள் சென்று அவன் கேட்டது போல் உறுதி செய்து கொடுத்து ஐந்து விரலால் சுட்டியதையும் பெற்றுக் கொண்டு போய்விடுவாராம்.
 
சில வேளை விதானைக்கு கிராமக் கோர்ட்டால் விசாரணைக்கான அழைப்பு வந்தால் அங்கு சென்று விளக்கம் சொல்வாராம். நீதிவான் சந்தேகப்பட்டு நீ பொய் கையெழுத்துப் போட்டு கடிதம் கொடுக்கவில்லையா என்று கேட்டால் எனது இரண்டு கைகளும் அழுகிப் போகும். நான் கையெழுத்துப் போடவே இல்லை என்று சத்தியம் செய்துவிட்டு வந்துவிடுவாராம். நீதிவானுக்கு இரகசியமாக கிடைத்த ஒரு தகவலின் படி ஒரு நாள் விதானையிடம் நீங்கள் சத்தியம் செய்யும் போது நான் கையெழுத்துப் போடவுமில்லை, காலெழுத்துப் போடவுமில்லை என்று சொல்ல வேண்டுமென்று நீதிபதி கட்டளையிட்டார். விதானையார் மறுத்தார். பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் என்ற பழமொழி நிஜமாகிவிட்டது. நடந்த இரகசியம் என்ன? நான்தானா சொல்ல வேண்டும்? சிந்தியுங்கள். கள்ளன் தப்பிக் கொள்ள காலாலும் ஒப்பமிடுவான்.
 
ஆண்கள் திருடும் தந்திரம் கூடியவர்கள். பெண்கள் குறைந்தவர்கள். பெண்கள் விபச்சார உணர்வு கூடியவர்கள். ஆண்கள் குறைந்தவர்கள். பொதுவாகப் பெண்கள் ஷெய்தானைவிட அதி சக்தி வாய்ந்த தந்திரமுள்ளவர்கள். ஷெய்தான் பெண்களை விட தந்திரம் குறைந்தவனாவான்.
 
முதலாம் அம்சத்திற்கு திருக்குர்ஆன் السَّارِقُ والسَّارقَةُ திருடன் முந்தியும், திருடி பிந்தியும் கூறப்பட்டுள்ளார்கள். உலகில் திருடர்கள், திருடிகளை புள்ளி விபரத்தோடு கணக்கெடுத்தால் ஆண்களே அதிகமாயிருப்பார்கள். கள்ளன், கள்ளி என்றுதான் நமது நாவும் எதார்த்தம் பேசுகிறது.
 
இரண்டாம் அம்சத்திற்கு ஆதாரம் اَلزَّانِيَةُ وَالزَّانِيْ பெண் விபச்சாரி முந்தியும், ஆண் விபச்சாரி பிந்தியும் கூறப்பட்டுள்ளார்கள். இவர்களையும் புள்ளி விபரத்தோடு கணக்கெடுத்தால் பெண்கள் விபச்சார உணர்வு அதிகமானவர்களாகவே இருப்பார்கள்.
மூன்றாம் அம்சத்திற்கு திருக்குர்ஆன் ஆதாரம் إِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ பெண்களின் சூழ்ச்சி – தந்திரம் பயங்கரமானது. إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيْفًا ஷெய்தானின் சூட்சி, தந்திரம் பலம் குறைந்தது.
 
சூட்சி செய்தல், தந்திரம் செய்தலில் ஆண்களை விடப் பெண்கள் சக்தி மிக்கவர்களும், ஷெய்தானைவிட தந்திரம் அதிகமானவர்களுமாவர்.
 
மேலே கூறுப்பட்ட மூன்று அம்சங்களில் – திருடுதல், விபச்சாரம் செய்தல், சூட்சி செய்தல் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் இரண்டு பரிசில்களைத் தட்டித் தனதாக்கிக் கொண்டவர்கள் பெண்களேயாவர்.
 
قال الإمام ابن حجر رحمه الله فى الصفحة التاسعة والتسعين من كتاب ‘ الزواجر ‘، أخرج الشيخان فى جملة حديث ‘ وَمَنْ دَعَا رَجُلًا يا كافر أو قال عَدُوَّ الله، وليس كذلك إلّا حَارَ عليه أي رَجَعَ عليه ما قاله، وفى روايةٍ لهما ‘ من رمى مؤمنا بكفر فهو كَقَتْلِهِ ‘، وهذا وَعِيْدٌ شَدِيْدٌ، هو رُجوعُ الكفرِ عليه أو عَدَاوَةُ الله له، وكونُه كإثم القتل،
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அஸ்ஸவாஜிர்” எனும் நூல் 99ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
 
(நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் ஒரு பொன்மொழியில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “காபிர்” என்று அழைத்தானாயின், அல்லது அல்லாஹ்வின் எதிரி என்று சொன்னானாயின் அவ்வாறு அழைக்கப்பட்டவனும், சொல்லப்பட்டவனும் அவ்வாறு இல்லையானால் சொன்னவனே “காபிர்” ஆகிவிடுவான் அல்லது அல்லாஹ்வின் எதிரியாகிவிடுவான்.
இதே நபீ மொழி இன்னோர் அறிவிப்பில் ஒருவன் ஒரு “முஃமின்” விசுவாசியை “காபிர்” என்று சொன்னால் அது அவனைக் கொலை செய்தது போன்றாகும் என்றும் வந்துள்ளது. இது பெரும் எச்சரிக்கையாகும்.
 
மேற்கண்ட ஹதீதுகள் மூலம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை அல்லாஹ்வின் எதிரி என்று சொல்வது பெருங்குற்றமாகும். இதைவிடப் பெருங் குற்றம் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “காபிர்” என்று சொல்வதாகும்.
 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை காபிர் – முர்தத் என்று சொல்வது கடும் தண்டனைக்குரிய பெருங்குற்றமாயிருந்தும் என்னையும், நான் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களையும் நாக்கூசாமல் எவனெல்லாம் “முர்தத்” என்று சொன்னானோ அவனெல்லாம் ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் என்ற “ஜலாலிய்யத்” ஆன திருநாமங்கள் கொண்டு கீறிக் கிழித்தெறியப்படுவான் என்பதும், அழித்தொழிக்கப்படுவான் என்பதும் நிச்சயம்.
 
என்னையும், எனது கருத்தைச் சரி கண்டவர்களையும் காபிர், முர்தத் என்று கிண்டல் செய்தவர்களும், நையாண்டி பண்ணியவர்களும் மறைந்து மண்ணுடன் மண்ணாகிவிட்டார்கள். அவர்களின் ஆன்மாக்கள் படும் பாட்டை எப்படி நான் சொல்வேன். எனக்குப் புரியவில்லை.
 
இன்னுமோர் கூட்டம் இந்நாட்டில் இருந்தார்கள். அவர்கள் மல, சலம் கழித்துவிட்டு “ஷரீஆ”வின் விதிப்படி சுத்தம் செய்யத் தெரிந்தவர்களுமல்ல, அல்லாஹ் பற்றி ஒரு மண்ணளவும் அறிந்தவர்களுமல்ல. சுருங்கச் சொல்வதாயின் உடலுறவின் போது எது ஓத வேண்டும் என்று கூடத் தெரிந்தவர்களுமல்ல. இப்பெருமகான்கள் ஸூபிஸ வாதிகளுக்கு MR முர்தத் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களிற் பலர் அழிந்து போனார்கள். இன்னும் சிலர் அழிவின் விளிம்பில் இருக்கின்றார்கள். இவர்களின் அழிவுக்காக நாம் அவசரப்பட்டு கரம் உயர்த்தத் தேவையில்லை. அல்லாஹ்வே “ஹதீதுக் குத்ஸி”யில் பின்வருமாறு கூறிவிட்டான்.
 
قال الله تعالى فى الحديث القدسيّ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ،
“எனது ஒரு வலீயை எவன் பகைக்கின்றானோ அவன் என்னுடன் போர் செய்ய வரட்டும்” என்று அவனை அல்லாஹ் போருக்கு அழைக்கிறான். அதாவது சவால் விடுகிறான். அல்லாஹ்வின் சவாலை சமாளிக்க யாரால்தான் முடியும்?
 
ஆகவே அவ்லியாஉகளைக் கீழ்த்தரமாகப் பேசுவோர் பற்றியும், இறைஞானத்தை கிண்டல் செய்வோர், பொய்யென்போர், பிழையென்போர் பற்றியும் நாம் சிந்திக்கத் தேவையில்லை.
 
قال الإمام ابن حجر رحمه الله فى الصفحة التاسعة والثلاثين من الفتاوى الحديثيّة، وَمِنْهَا: مَا صرح بِهِ أَئِمَّتنَا كالرافعي فِي الْعَزِيز وَالنَّوَوِيّ فِي (الرَّوْضَة) و (الْمَجْمُوع) وَغَيرهمَا من أَن الْمُفْتِي إِذا سُئِلَ عَن لفظ يحْتَمل الْكفْر وَغَيره لَا يَقُول هُوَ مهدر الدَّم أَو مباحه أَو يقتل أَو نَحْو ذَلِك، بل يَقُول يسئل عَن مُرَاده فَإِن فسره بِشَيْء عمل بِهِ،
 
மேலும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூல் 39ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். இவ்வாறுதான் இமாம் றாபிஈ என்பவர் “அஸீஸ்” என்ற நூலிலும், இமாம் நவவீ “றவ்ழா” என்ற நூலிலும் கூறியுள்ளார்கள்.
 
(ஒரு “முப்தீ” “பத்வா” தீர்ப்பு வழங்குபவரிடம் “குப்ர்” என்ற நிராகரிப்புக்கும், வேறு கருத்துக்கும் சாத்தியமான ஒரு சொல் பற்றி கேட்கப்பட்டால் அவர், அச்சொல்லை சொன்னவனை கொலை செய்யலாம் என்றோ, கொலை செய்ய வேண்டுமென்றோ, கொலை செய்ய ஆகுமென்றோ சொல்லக் கூடாது. ஆயினும் சொன்னவனிடம் அதன் கருத்து என்னவென்று கேட்க வேண்டும். அவன் சொல்லும் விளக்கத்திற்கேற்றவாறு செயல்பட வேண்டும் என்றுதான் அந்த “முப்தீ” பத்வா கொடுக்க வேண்டும். இதுவே முப்தியாக இருப்பவரின் கடமையாகும்.)
RELATED ARTICLES

Most Popular

Recent Comments