Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்திரை நீக்கம்

திரை நீக்கம்

தொடர் – 7
 
இமாம் இப்னு ஹஜர், இமாம் றாபிஈ, இமாம் நவவீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரின் பேச்சின் சுருக்கம் என்னவெனில் ஒருவன் ஒரு சொல்லை சொல்கிறான் அல்லது ஒரு வசனம் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். உதாரணமாக ضحك الله அல்லாஹ் சிரித்தான் என்ற வசனம் போன்று. ஒருவன் இவ்வாறு சொன்னால் இவன் அல்லாஹ் சிரித்தான் என்று சொல்லிவிட்டான், இவனுக்கு என்ன சட்டம் என்று ஒரு “முப்தீ”யிடம், அல்லது நீதிவானிடம் கேட்டால் அப்படியா சொன்னான், அவனை உடனே கொலை செய்து விடுங்கள் என்றோ, அவன் காபிர் என்றோ, அவன் முர்தத் என்றோ எந்தவொரு விசாரணையுமின்றிக் கூறிவிடாமல் வசனத்தைச் சொன்னவனை அழைத்து அவனிடம் விளக்கம் கேட்க வேண்டும். அவன் கூறும் விளக்கம் ஷரீஆவுக்கோ, தரீகாவுக்கோ, ஹகீகாவுக்கோ, மஃரிபாவுக்கோ முரணில்லாமல் இருந்தால் அவனுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கக் கூடாது. இதற்கு மாறாக முனாஸ் சிரிப்பது போல் அல்லாஹ் சிரித்தான், அவனுக்கு பல் இருந்தது, நாக்கு இருந்தது என்று சொன்னால் அவ்வாறு சொன்னவனுக்கு “ஷரீஆ” அடிப்படையில் என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதே தண்டனை கொடுக்க வேண்டும்.
 
வசனம் சொன்னவனிடம் நேரில் எந்தவொரு விளக்கமும் கேட்காமல் அவனைக் கொலை செய்ய வேண்டுமென்றோ, அவனை அடிக்க வேண்டுமென்றோ தீர்ப்புக் கூறுவது சட்ட விரோதமாகும். அது மட்டுமல்ல அவ்வாறு தீர்ப்புக் கூறியவன் கடுமையாக தண்டிக்கப்படவும் வேண்டும்.
 
وهذه العبارة للإمام ابن حجر العسقلاني تُوضِّحُ أنّ الإفتاء لِمَنْ يُوهمُ ظاهرُ كلامِه الكفرَ وغيره بارتدادِه عن دين الإسلام من غير سؤال عن مُرادِ كلامِه لا يُقبل ولا يُعمل به،
وأمّا العلماء الّذين أفتوني وجمًّا غفيرا وجمعا كبيرا بالرّدّة فقد خالفوا أقوال الفقهاء المُعْتَمَدين كالإمام النّووي والرافعي وابن حجر، ولكنّهم عملوا كما عمل الجهلاء، وأفتوا بمُقتضى هواهُمْ،
 
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட வசனம் ஒருவனின் பேச்சின் வெளிப்படை “குப்ர்” எனும் நிராகரிப்புக்கும், வேறு நல்ல கருத்துக்கும் சாத்தியமாயிருந்தால் அவன் சொன்ன விடயம் தொடர்பாக அவனை விசாரிக்காமல் அவன் மதம் மாறியவன் என்று “பத்வா” வழங்குதல் கூடாது. அதோடு அந்த “பத்வா” ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது. அதன்படி செயல்படுவதும் குற்றமேயாகும்.
 
எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட பல்லாயிரம் மக்களுக்கும் மதம் மாறியவர்கள் என்று உலமாஉகள் “பத்வா” கொடுத்ததன் மூலம் இஸ்லாமிய வரலாற்றில் சட்டக்கலையில் பிரசித்தி பெற்ற இமாம்களான நவவீ, றாபிஈ, இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர்களின் பேச்சுக்கு எனக்கு “பத்வா” வழங்கிய அறிவிலிகள் மாறு செய்துவிட்டார்கள். அவர்கள் தமது மன ஆசைக்கு அடிமையாகி அவ்வாறு “பத்வா” கொடுத்துவிட்டார்கள்.
 
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
 
உலமாஉகள் “ளுலமாஉ” அநீதியாளர்களாக மாறிச் செயல்படுவது மறுமை நாள் நெருங்கிவிட்டதென்தற்கான அடையாளமாகும்.
 
பத்வா வழங்கிய வழிகேடர்களையும், வேஷதாரிகளையும் நான் விமர்சிப்பதை தாங்கிக் கொள்ள முடியாத, பொறுத்துக் கொள்ள முடியாத நயவஞ்சகர்கள் அதபோடு – மரியாதையோடு உலமாஉகளை விழிக்க வேண்டுமென்று எனக்கு புத்திமதி சொல்கிறார்கள். இவ்வாறு புத்திமதி சொல்பவர்கள் யாரென்று தேடிப்பார்த்தேன். இவர்கள் அவர்களைவிடத் திருடர்கள் என்பது தெரிய வந்தது. உலமாஉகளுடன் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென்ற அறிவுரையையும், புத்திமதியையும், ஆலோசனையயும் நான் வரவேற்கிறேன். இதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. எனினும் قال الشيطان رحمه الله என்று சொல்வதற்கோ, قال أبو جهل رضي الله عنه என்று சொல்வதற்கோ நான் மடையனல்ல. இவர்கள் போல் அரைகுறையாக ஓதிய ஆலிமுமல்ல.
 
இந்த துன்யாதாரிகள் நியாயமின்றியும், ஆதாரமின்றியும், மனிதாபிமானமின்றியும் “பத்வா” என்ற வாளால் என்னையும், எனது தோழர்களையும் கொலை செய்திருக்கும் நிலையில் அவர்களைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவது எந்த வகையில் நியாயமாகுமென்று ஆலோசனை வழங்கும் வால்களிடம் கேட்கிறேன். பதில் தருவார்களா? பற்றையின் மறைவில் பதுங்கிக் கொள்வார்களா?
 
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நாயே பேயே என்றும், ஷெய்தான் இப்லீஸ் என்றும், தேவாங்கு பன்றி என்றும் ஏசுவதை நாம் கேட்கிறோம். ஆனால் காபிர், முர்தத் என்று ஏசுவதை நாம் கேட்கவில்லை. இக்கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் வஹ்ஹாபிஸ விளைவிடத்தை ஆட்சி செய்யும் ரிஸ்வீயும், அவரின் வால்களுமேயாவர்.
 
காத்தான்குடியில் மல, சலம் கழித்து “ஷரீஆ”வின்படி சுத்தம் செய்யத் தெரியாத, படிப்பறிவற்ற பெண்களும், பருவமடையாத சிறுவர்களும் கூட 75 வயதைக் கடந்து நிற்கும் என்னையும், என்னோடுள்ள உலமாஉகளையும் கிண்டல் செய்கின்றார்கள் என்றால் இவர்களுக்கு இந்தப் பாடத்தை கற்றுக் கொடுத்த பத்வா கொடுத்த முல்லாக்களை நாங்கள் மதிக்க வேண்டுமா? இது என்ன நியாயம் என்று கற்றறிந்த மேதைகளைக் கேட்கிறேன்.
 
“முர்தத்” பத்வா வழங்கிய முல்லாக்கள் சபிக்கப்பட்டவர்களே!
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு – திருக்குர்ஆனைக் கொண்டு தீர்ப்புச் செய்யாதவர்கள் அனைவரும் “காபிர்”களாவர். (மாயிதா 44)
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு – திருக்குர்ஆனைக் கொண்டு தீர்ப்புச் செய்யாதவர்கள் அனைவரும் அநீதியாளர்களாவர். (மாயிதா 45)
وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு – திருக்குர்ஆனைக் கொண்டு தீர்ப்புச் செய்யாதவர்கள் அனைவரும் “பாஸிக்” கெட்டவர்களாவர். (மாயிதா 47)
 
மேலே குறிப்பிட்ட திரு வசனங்கள் மூன்றும் திருக்குர்ஆனின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்காதவர்கள் அனைவரும் காபிரீன்களும், “ழாலிமீன்”களும், “பாஸிகீன்”களுமேயாவர் என்று நியாயமாக “பத்வா” கொடுக்காமல் அநீதியாகவும், சட்டத்திற்கு முரணாகவும் “பத்வா” வழங்குவோரையும், வழங்கினோரையும் அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
 
அல்லாஹ்வின் மூன்று வகைச் சாபமும் ஒரே அத்தியாயத்திலும், அடுத்தடுத்த வசனங்களிலும் கூறப்பட்டிருப்பது சிந்திக்க வேண்டிய விடயமும், ஆய்வுக்குரிய விடயமுமாகும்.
 
ஒருவன் இன்னொருவனை சபிக்கும் போது தொடராகவும் சபிப்பான். இடைவெளி விட்டும் சபிப்பான். இதுபோன்றுதான் ஒருவன் மற்றவனை அடித்து தண்டிப்பதுமாகும். தொடராகவும் அடித்து தண்டிப்பான். இடைவெளி விட்டு அடித்தும் தண்டிப்பான். இவ்விரு நடைமுறைகளையும் நாம் நமது வாழ்க்கையில் காண்கிறோம்.
 
தொடர்ந்து ஒருவனை சபிப்பதற்கும், விட்டு விட்டு சபிப்பதற்கும், தொடர்ந்து ஒருவனை அடிப்பதற்கும், விட்டு விட்டு அடிப்பதற்கும் வித்தியாசமுண்டு. தொடர்ந்து சபிப்பதும், தொடர்ந்து அடிப்பதும் கோபத்தை ஒரே நேரத்தில் அள்ளிக் கொட்டுவது போன்றதாகும். விட்டு விட்டு சபிப்பதும், விட்டு விட்டு அடிப்பதும் ஒரே தரத்தில் கோபத்தைக் கொட்டாமல் கட்டம் கட்டமாக கொட்டுவதாகும். இவ்விரு வகையிலும் ஒரே நேரத்தில் சபிப்பதும், தொடர்ந்து அடிப்பதுமே தண்டனையின் வேகத்தைக் காட்டக் கூடியதென்பது அறிஞர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.
 
இந்த அடிப்படையில்தானோ என்னவோ அநீதியான “பத்வா” வழங்கிய ரிஸ்வீ முப்தீயை ஒரே அத்தியாயத்தில் தொடர் வசனங்களில் சபித்துள்ளான்.
 
எந்த ஒருவர் தீர்ப்பு வழங்கினாலும் அத்தீர்ப்பு இறைவன் கீறிய கோட்டுக்குள் அமைந்ததாயிருக்க வேண்டும். தீர்ப்புக்கான நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்.
 
விசாரணையற்ற தீர்ப்பு செல்லுபடியாகாது. “ஷரீஆ”வின் சட்டமும் இதுவேதான்.
 
“பத்வா” வழங்கிய முல்லாக்கள் குற்றவாளி என்று காணப்பட்ட என்னை ஒரு தரமேனும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியது உலமாஉகளின் சதியேயன்றி அவர்களின் தவறில்லை. தவறென்பது மன்னிக்கப்பட வேண்டியதாகும். தப்பும், சதியுமே மன்னிக்க முடியாததாகும்.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments