தொடர் – 3
قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدي والضّلالة والحياة الدنيا ونحو ذلك،
وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان،
فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالةُ بالعَمَى،
காணுதல் என்பதற்கு மூன்று அம்சங்கள் அவசியமாகும். ஒன்று رَائِيْ – “றாயீ” பார்ப்பவன், இரண்டு مَرْئِيْ – மர்ஈ – பார்க்கப்பட்டது, மூன்று رُؤْيَةٌ – “றுஃயதுன்” பார்வை.
இம்மூன்றும் ஒரே நேரம் இருந்தால்தான் பார்த்தல் என்ற பேச்சுக்கு இடமுண்டு. மூன்றில் ஒன்றேனும் இல்லாது போனால் பார்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பார்ப்பவன் உள்ளான், அவனுக்குப் பார்வையும் உண்டு, ஆனால் பார்க்கப்படும் பொருள் இல்லையனால், பார்க்கப்படும் பொருள் உண்டு, பார்ப்பவனும் உள்ளான். ஆனால் அவனுக்கு பார்வை இல்லையானால் இவ்வாறான கட்டத்தில் பார்த்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எப்போதும் பார்க்கப்படும் பொருள் உருவமுள்ளதாய் இருத்தல் அவசியம்.
பார்ப்பவன் உள்ளான், அவனுக்குப் பார்வையும் உண்டு, பார்க்கப்படும் பொருளும் உண்டு. ஆயினும் அதற்கு உருவமில்லையாயின் பார்த்தல் என்ற கதைக்கு இடமே இல்லை. உதாரணமாக காற்றுப் போன்று.
அல்லாஹ்வை விழிப்பில் தலைக்கண்ணால் காணுதல் என்பது சாத்தியமேயன்றி அது அசாத்தியம் அல்ல. ஆயினும் அவ்வாறு கண்டவர்கள் நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவர்.
முஸ்லிம்களால் மட்டும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியும். காண்பதாயினும் ஏதேனுமோர் உருவத்திலேதான் காணலாம். அவ்வாறு காண்பதால் ஈமானுக்கு எந்தவொரு குறையும் ஏற்படமாட்டாது. ஆயினும் அவன் கண்ட உருவத்தில்தான் அல்லாஹ் உள்ளான் என்று அவன் நம்பிவிடலாகாது. உருவமில்லாதவனைப் பார்ப்பதற்காக அந்த உலகத்தைப் பொறுத்து எடுத்துக் கொண்ட உருவமேயன்றி அதுதான் அவனின் உருவம் என்று நம்பி மனதில் பதியவிடலாகாது. கனவுலகின் தன்மை அவ்வாறுதான் இருக்கும்.
உருவமில்லாததை கனவுலகில் உருவத்தில் காண முடியும் என்பதற்கான விளக்கமே மேலே நான் அறபியில் எழுதியுள்ள விளக்கமாகும். இந்த விளக்கம் எழுதியவர்கள் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்தான். இந்த விளக்கம் அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற நூல் முதலாம் பாகம் 108ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. அவர்களின் இந்த விளக்கத்திற்கு மூல கர்த்தா அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களேயாவார்கள். அந்த விளக்கத்தை இங்கு எழுதுகிறேன்.
(அஷ் ஷெய்கு அபூ தாஹிர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ஒரு வஸ்த்து உருவமில்லாததாயிருப்பதால் அதை கனவுலகில் உருவத்தில் காணமுடியாதென்ற வாதம் பிழையானதாகும். அல்லாஹ் உருவமற்றவனாயிருந்தாலும், கனவுலகில் உருவத்தில் காண முடியும்.
உலகில் உருவமில்லாத எத்தனையோ வஸ்த்துகள் உள்ளன. உண்மையில் அவற்றுக்கு உருவமில்லை. ஆயினும் அவற்றை கனவுலகில் உருவத்தில் காண முடியும். இதற்கு ஹதீது ஆதாரமாக உள்ளது.
உதாரணமாக “ஈமான்” – விசுவாசம், “குப்ர்” – நிராகரிப்பு, சிறப்பு, குர்ஆன், நேர்வழி, வழிகேடு, உலக வாழ்வு என்பன போன்று. இவையாவும் எதார்த்தத்தில் உருவமற்றவையேயாகும்.
“ஈமான்” என்ற நம்பிக்கைக்கு உருவமுண்டா? நிராகரிப்புக்கு உருவமுண்டா? சிறப்புக்கு உருவமுண்டா? திருக்குர்ஆனுக்கு உருவமுண்டா? ( இங்கு திருக்குர்ஆன் என்பது தாளில் அச்சிடப்பட்ட “முஸ்ஹப்” அல்ல, அல்லாஹ்வின் பேச்சையே குறிக்கும்) அதற்கு உருவமுண்டா? நேர்வழிக்கு உருவமுண்டா? உலக வாழ்வுக்கு உருவமுண்டா? இல்லை. இவற்றுக்கு உருவம் இல்லவே இல்லை. இவைதான் اَلْمَعَانِي الْمُجَرَّدَةُ கருத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இவை உருவமில்லாதிருந்தாலும் கனவுலகில் இவற்றை உருவத்தில் காணலாம்.
ஒரு சமயம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “எனக்கு கனவில் மனிதர்களைக் காட்டப்பட்டது. அவர்களில் ஒருவர் ஷேட் அணிந்திருந்தார். அது அவரின் கரண்டை வரை நீளமாயிருந்தது. இன்னொருவர் வந்தார். அவரின் ஷேட் அவரின் கனுக்கால் வரை நீளமாய் இருந்தது, அவ்வேளை உமர் இப்னுல் கத்தாப் – இரண்டாவது கலீபா – வந்தார்கள். அவர்களின் ஷேட் காலைக் கடந்து தரையில் இழுபட்டுப் போகிறது என்று கூறினார்கள். அப்போது நபீ தோழர்கள் இதன் விளக்கம் என்ன? நாயகமே! என்று கேட்க, அந்த “கமீஸ்” ஈமான் விசுவாசத்தின் உருவமென்றார்கள் நபீகள் நாயகம்.
“ஈமான்” என்ற விசுவாசத்திற்கு எதார்த்தத்தில் உருவமில்லை. அது கருத்தோடு சம்பந்தப்பட்டதேயன்றி உருவத்தோடோ, சடத்தோடோ சம்பந்தப்பட்டதல்ல. அந்த ஷேட் ஈமானுக்கு உதாரணமேயன்றி அதற்கு நிகரல்ல. உதாரணம் வேறு, நிகர் வேறு. இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டை இதே தலைப்பில் பின்னால் எழுதுவேன்.
நாம் விளங்க வேண்டிய விடயம் என்னவெனில் இயற்கையில், எதார்த்தத்தில் உருவமில்லாத ஒன்றை கனவுலகில் மட்டும் ஓர் உருவத்தில் காண முடியும். அதை அறபியில் مَثَلٌ அல்லது مِثَالٌ உதாரணம் என்று சொல்லப்படும். அதற்கு “மித்லுன்” مِثْلٌ நிகர் என்று சொல்வதில்லை.
இவ்விளக்கத்தின்படி உருவமில்லாத இறைவனை ஏதேனுமோர் உருவத்தில் கனவுலகில் மட்டும் காண முடியும். பெருமானார் அவ்வாறு கனவில் அல்லாஹ்வைக் கண்டு பின்வருமாறு சொன்னார்கள். இந்த ஹதீது முந்தின தொடர் 02ல் அறபியில் எழுதி பொருளும் எழுதியுள்ளேன். அங்கே காணலாம். வாசகர்களின் நன்மை கருதி மீண்டும் எழுதுகிறேன்.
قال النبي صلّى الله عليه وسلّم:رأيتُ اللّيلة ربّي فى صورة شابٍّ أمرد قطط له وفرة من شعر، وفى رجليه نعلان من ذهب،
இன்றிரவு எனது “றப்பு” இறைவனைக் கண்டேன். அவன் முகத்தில் முடி முளைக்காத இளைஞனாகத் தோன்றினான். அவனின் உடல் முறுக்கேறி இருந்தது. அவனின் இரு கால்களிலும் தங்கச் செருப்புக்கள் இரண்டு இருந்தன என்று நபீ பெருமான் கண்டதை கண்டபடியே சொன்னார்கள். இந்த ஹதீது இமாம் தபறானீ அவர்களின் “தபறானீ” என்ற ஹதீதுக் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இது ஹதீதா? இல்லையா? என்று எவரும் சந்தேகம் கொள்ளாதீர்கள். உண்மையான ஹதீதை ஹதீதாக இருக்குமா என்று சந்தேகம் கொள்வதே “குப்ர்” என்ற நிராகரிப்பை ஏற்படுத்திவிடும். ஆகையால் ஹதீதை நம்புங்கள். இந்த ஹதீது ஸஹீஹ் என்று அல்ஹாபிள் இமாம் ஸுயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாம் “ஹாபிள்” என்று சொல்வது திருக்குர்ஆனை மனனம் செய்தவரைத்தான். ஆயினும் ஹதீதுக் கலை மேதைகள் “ஹாபிள்” என்று குறிப்பிடுவது ஓர் இலட்சம் ஹதீதுகளை “றாவீ” அறிவிப்பாளர்களுடன் மனனம் செய்தவரையேயாகும்.
இமாம் ஸூயூதீ மட்டும் இதைச் சரி காணவில்லை. இமாம் தபறானீ அவர்கள்தான் அதை அறிவித்தவர்களாவர். அவர்களும் ஹதீதுக் கலை மேதைதான். இன்னும் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்களும் தங்களின் “அல்யவாகீத்” என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் மட்டுமல்ல இவர்களை விடப் பல படிகள் உயர்ந்த அஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்று அறபீ அவர்களும் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் ஞானக் களஞ்சியத்தில் பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் தவிர இன்னும் பல மேதைகளும் சொல்லியுமுள்ளார்கள். “இப்னு தைமிய்யா” என்பவர் இப்னு அறபீ அவர்களுக்கு கொள்கையில் எதிரானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஏன் குறிப்பிட்டேன் என்றால் இப்னுதைமிய்யா வஹ்ஹாபிகளின் குத்பு இப்னு அப்தில் வஹ்ஹாபின் குத்பாவார். அதனால் அவர்கள் சற்று வாலை முறுக்கத்தான் செய்வார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம்? எமது கொள்கையையும், கருத்தையும் நாம் சொல்லத்தானே வேண்டும். (தொடரும்)
குறிப்பு: தொடராக வருகின்ற கட்டுரைகள், தலைப்புக்களை தொடர்ந்து பார்ப்பவர்கள் பலன் பெறுவர்.
நமது உலமாஉகளில் பலருக்கு இவ்வாறான செய்திகள் நன்றாகத் தெரியும். சரி என்று நம்பினாற்கூட அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். இரண்டு வல்லரசுகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
இறுதியில் இத்தலைப்பின் சாரம் இடம் பெறும்.
தொடரும்….