Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“ஈதுல் அழ்ஹா” - உழ்ஹிய்யா பெருநாளில் உழ்ஹிய்யா வழங்கி உத்தமர்களாவோம்!

“ஈதுல் அழ்ஹா” – உழ்ஹிய்யா பெருநாளில் உழ்ஹிய்யா வழங்கி உத்தமர்களாவோம்!

காத்தநகர், மக்கள் மாநகராக மாற கை கோர்ப்போம்!

அன்புக்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்

எதிர்வரும் “ஈதுல் அழ்ஹா” தியாகப் பெருநாளில் எம்மையும், எமது உடைமைகளையும் தீன் – மார்க்கத்திற்காக தியாகம் செய்தும், ஆடு, மாடுகள் அறுத்து ஏழைகளுக்கு வழங்கியும் தியாகப் பெருநாளைக் கொண்டாடுவோம்.

“துல்ஹஜ்” மாதம் பத்தாம் நாள் “ஈதுல் அழ்ஹா” தியாகப் பெருநாளேயன்றி அது ஹஜ்ஜுப் பெருநாளல்ல. நாம் அவ்வாறு சொல்லிக் கொண்டாலும் இஸ்லாம் இப் பெருநாளுக்கு வைத்துள்ள பெயர் “ஈதுல் அழ்ஹா” தியாகப் பெருநாள் என்பதேயாகும்.

துஹ்ஹஜ் மாதம் பத்தாம் நாள் يَوْمُ النَّحْرِ – “யவ்முன் நஹ்ர்” அறுக்கும் நாள் என்று இஸ்லாம் அறிமுகம் செய்துள்ளது.

இம் மாதம் பத்தாம் நாள் முதல் பதின் மூன்றாம் நாள் “மக்ரிப்” வரை ஆடுகள், மாடுகள் அறுத்து ஏழைகளுக்கு வழங்குமாறு فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ எனும் திருவசனம் மூலம் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியிருப்பதாலும், பின்வரும் நபீ பெருமானின் அருள் மொழிகள் கூறுவதாலும் ஆடுகளையும், மாடுகளையும் அறுப்பதன் மூலம் நாம் நமது மனவெழுச்சிகள், நம்மிலுள்ள பொறாமை, வஞ்சகம், பெருமை போன்ற தீக்குணங்கள் அனைத்தையும் அறுத்து புனிதமிகு மனிதர்களாவோம்.

நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் அன்பு மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அறுப்பதற்கு கனவு கண்டார்கள். கனவில் கண்டவாறு செயற்பட நடவடிக்கை எடுத்தார்கள். “ஹஜ்” வணக்கம் செய்வோர் ஆடு, மாடுகளை அறுக்கும் இடமான “மினா” எனுமிடத்திற்கு மகன் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்துச் சென்று அவர்களை ஒரு கல்லில் படுக்க வைத்து கழுத்தில் கத்தி வைத்து அறுத்தார்கள். கத்தி செயலிழந்து போயிற்று. கழுத்தை அறுக்க மறுத்துவிட்டது. கோபம் கொப்பளித்ததால் அக்கத்தியால் கல்லை வெட்டினார்கள். கல் இரண்டாகப் பிழந்தது. கல்லை வெட்டும் கத்தியே நீ கழுத்தை அறுக்காமலிருப்பதேனோ? என்று கத்தியை விழித்தவர்களாக நின்ற வேளை வானவர் மூலம் சுவர்க்கத்து ஆடு ஒன்றை அனுப்பி மகனுக்கு பதிலாக அதை அறுக்குமாறு பணித்தான் இறைவன்.

ஒரு நபீயின் செயல் அவர்களுக்குப் பின் தோன்றிய முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தவர்களுக்கு வணக்கமாக ஆக்கப்பட்டிருப்பது ஒரு நபீ செய்ததை நாமும் செய்ய வேண்டுமென்ற தத்துவத்தை உணர்த்துகிறது. ஒரு நபீ செய்த வேலையை நாமும் செய்ய வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே ஒரு வலீ இறை நேசர் செய்த வேலையையும் நாம் செய்ய வேண்டுமென்று தத்துவம் உணரப்படுகிறது.

இதற்கு இப்றாஹீம் நபீ அவர்களின் மனைவியும், இஸ்மாயீல் நபீ அவர்களின் தாயாருமான அன்னை ஹாஜர் அலைஹஸ்ஸலாம் அவர்கள் “ஸபா” எனும் மலைக்கும், “மர்வா” எனும் மலைக்குமிடையில் தண்ணீர் தேடி ஓடினார்கள். அவர்கள் ஒரு நபீ அல்ல. ஒரு “வலிய்யா” தான். ஒரு “வலிய்யா” செய்த வேலையையும் கூட மற்றவர்கள் செய்வது வணக்கம் என்ற அடிப்படையிலேயே ஸபா – மர்வா என்ற இரு மலைகளுக்கிடையில் ஹஜ் வணக்கம் செய்வோர் ஓடுவது மார்க்கமாக்கப்பட்டுள்ளது.

எனவே, நபீமாரும், வலீமாரும் செய்த வேலைகளை நாமும் செய்து அருள் பெறுவோம்.

ஏந்தல் நபீ கொடுத்த “உழ்ஹிய்யா”

عَنْ أَنَسٍ، قَالَ: «ضَحَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ»، قَالَ: «وَرَأَيْتُهُ يَذْبَحُهُمَا بِيَدِهِ، وَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا»، قَالَ: «وَسَمَّى وَكَبَّرَ»،

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அழகிய பெரிய, குறையற்ற, இரு கொம்புகளையுடைய, வெள்ளை, கறுப்பு நிறங்கள் கலந்த இரண்டு ஆடுகள் அறுத்து “உழ்ஹிய்யா” கொடுத்தார்கள். “பிஸ்மில்லாஹ் – அல்லாஹு அக்பர்” என்று சொன்னவர்களாக தங்களின் திருக் கரங்களாலேயே அவ்விரண்டையும் அறுத்தார்கள். அவ்விரண்டையும் அறுக்கும் போது அவ்விரண்டின் மீதும் தங்களின் திருப்பாதங்களையும் வைத்துக் கொண்டார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அறிவிப்பு: அனஸ் றழியல்லாஹு அன்ஹு


عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ يَطَأُ فِي سَوَادٍ، وَيَبْرُكُ فِي سَوَادٍ، وَيَنْظُرُ فِي سَوَادٍ، فَأُتِيَ بِهِ لِيُضَحِّيَ بِهِ، فَقَالَ لَهَا: «يَا عَائِشَةُ، هَلُمِّي الْمُدْيَةَ»، ثُمَّ قَالَ: «اشْحَذِيهَا بِحَجَرٍ»، فَفَعَلَتْ: ثُمَّ أَخَذَهَا، وَأَخَذَ الْكَبْشَ فَأَضْجَعَهُ، ثُمَّ ذَبَحَهُ، ثُمَّ قَالَ: «بِاسْمِ اللهِ، اللهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ، وَآلِ مُحَمَّدٍ، وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ، ثُمَّ ضَحَّى بِهِ»

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், கொம்புள்ள, இரு கால்களும் கறுப்பு நிறமுள்ள, அதன் நெஞ்சும், வயிறும், கண்ணும் கறுப்பு நிறமுள்ள ஓர் ஆடு கொண்டு வருமாறு கூறிய போது அவ்வாறான ஓர் ஆடு உழ்ஹிய்யா கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது. நபீ பெருமான், மனைவி ஆயிஷாவை அழைத்து கத்தியெடுத்து ஒரு கல்லில் கூராக்குமாறு கூறினார்கள். அன்னை ஆயிஷா அவ்வாறே செய்தார்கள். பின்பு கத்தியையும், ஆட்டையும் கையிலெடுத்த பெருமானார் அதை அறுத்தார்கள். அறுக்கும் போது “பிஸ்மில்லாஹ்” சொல்லி இறைவா! முஹம்மதிலிருந்தும், அவரின் குடும்பத்தவர்களிலிருந்தும், அவரின் உம்மத் சமுகத்தவர்களிலிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக! என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்

அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!

இவ்வருடத்திலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஸூபிஸ சமுகம் நடாத்தும் “உழ்ஹிய்யா” நிகழ்வு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினதும், பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலினதும் அனுசரணையுடன் தீன் வீதி மன்பஉல் கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாகவும், எந்த ஒரு ஊழலும், பாரபட்சமுமின்றியும் நடைபெறுமென்பதை அறியத் தருகிறோம்.

மேலதிக விபரங்களுக்காக மன்பஉல் கைறாத் ஜும்ஆ பள்ளிவாயல் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
BJM வீதி, காத்தான்குடி 05.
0777 733 786

குட்டக் குட்ட குட்டுபவனும் மடையன்,
குட்டு வாங்குபவனும் மடையன் என்று மக்கள் சொல்வர்.
—————————-
கொலைஞனுக்கு வாள் வழங்கியோன் கொலைக் குற்றத்தின் பங்காளியாவான்.
—————————-
என்னே புதுமை!

ஒரேயொரு விதை ஏழு கதிர்களாகி ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் உருவாகி ஒன்றுக்கு எழுநூறு நன்மை கிடைக்கும் என்ற அருள் மறையின் ஆணைப்படி உழ்ஹிய்யா பிராணியின் ஒரு முடிக்கு எழுநூறு நன்மை கிடைப்பது அல்லாஹ்வின் அளவற்ற கொடையை வெளிப்படுத்துகிறது!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments