Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்“செய் பெயர் ” اِسْمُ الْفَاعِلْ தருகின்ற ஞான தத்துவம்!

“செய் பெயர் ” اِسْمُ الْفَاعِلْ தருகின்ற ஞான தத்துவம்!

தொடர் – 4

இமாம், அல்குத்பு ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் “பஜாயா” வந்து நீண்ட காலம் அங்கேயே தங்கியிருந்தார்கள்.
وهنالِكَ ظَهر فضلُ الشّيخ وكثُر أتباعُه وشاع اسمُه، وأقام بمسجد بَجَايَةَ للتدريس وشرع فى نشـر طريقته بين النّاس، وكان يقول ‘ طريقتنا هذه أخذناها عن أبي يَعْزَى بسندِه عن الجنيد، عن سرّيّ السَّقَطِيْ عن حبيبِ العجمي عن الحسن البصـري عن علي بن أبي طالب رضي الله عنهم عن النّبيّ صلّى الله عليه وسلّم عن جبريل عليه السلام عن ربّ العالمين،
பஜாயாவிலேயே ஷெய்கு அவர்களின் சிறப்பு வெளியானது. அவர்களின் ஆதரவாளர்கள் அதிகமாயினர். அவர்களின் கீர்த்தியும், பெயரும் பரவியது.

அவர்கள் “பஜாயா” பள்ளிவாயலில் கற்றுக் கொடுப்பதற்காக தங்கினார்கள். மக்கள் மத்தியில் தங்களின் “தரீகா” ஆன்மிக வழியை பரப்பவும் தொடங்கினார்கள். அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள். (எங்களின் “தரீகா” ஆன்மிக வழியை அஷ் ஷெய்கு அபூ யஃலா அவர்களிடமிருந்து சரியான வழியாக ஜுனைத் அல் பக்தாதீ, ஸரிய்யுஸ்ஸகதீ, ஹபீபுல் அஜமீ, ஹஸனுல் பஸரீ, அலிய்யுப்னு அபீ தாலிப், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் ஆகியோர் வழியில் பெற்றோம்)

கெய்ரோ – அஸ்ஹர் பல்கலைக் கழக வேந்தர் கலாநிதி இமாம் அப்துல் ஹலீம் மஹ்மூத் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “ஷெய்குஷ் ஷுயூக் அபூ மத்யன் அல் கவ்து” எனும் நூலில், அபூ மத்யன் அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களாவர் என்றும், அவர்கள் அனைவரும் “உலமாஉ” மார்க்க அறிஞர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இமாம் இறைஞானி அபூ மத்யன் அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞான வழி வாழ்ந்தவர்களும், அது பற்றிப் பேசியவர்களுமாவர். குறித்த இந்த ஞானம் காட்டுத் தீ போல் பரவத் தொடங்கியதையும், மக்கள் கூட்டம் கூட்டமாக அவர்களிடம் அலை திரள்வதையும் கண்ட பொறாமைக்கார போலி உலமாஉகள் அவர்களைத் தீர்த்துக் கட்டும் முயற்சி மேற்கொண்டு அரச சபை வரை கொண்டு சென்று ஷெய்கு அவர்களைக் கொலை செய்ய முடிவு செய்தார்கள். அவர்கள் இருந்த “பஜாயா”வில் அவர்களின் ஆதரவாளர்கள் அதிகமாக இருந்ததால் அவர்களைக் கொலை செய்ய முடியாதிருந்ததால் அண்மையிலுள்ள “திலம்ஸான்” நகருக்கு எடுத்துச் சென்று அங்கு கொலை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து அவர்களை ஒட்டகத்தில் பாலைவன வழியால் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கையில் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

(நாம் திலம்ஸானை அடையுமுன் வழியில் நான் மரணித்தால் மீண்டும் என்னை “பஜாயா”வுக்கு கொண்டு செல்லாமல் திலம்ஸானிலேயே என்னை அடக்கம் செய்து விடுங்கள்) என்று இறுதியுபதேசம் செய்தார்கள். திலம்ஸானை அடைவதற்கு சில கிலோ மீற்றர் தூரம் இருக்கும் போதே அல்லாஹ் அவர்களின் “றூஹ்” ஐ எடுத்துக் கொண்டான். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”

அவர்கள் கூறியது போல் திலம்ஸான் பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு அழகிய, பெரிய “தர்ஹா” ஒன்று உள்ளது. பக்தர்கள், பக்தைகள், மற்றும் முரீதீன்கள் அணி திரண்டு தரிசனத்திற்காகச் செல்கின்றனர்.

அபூ மத்யன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று வாள் தூக்கியவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்த்த பொறாமை கொண்ட, நற்பாக்கியமிழந்த, நயவஞ்சகர்களான போலி உலமாஉகளேயாவர். எக்காலத்திலும், எல்லா நாட்டிலும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை எதிர்த்தவர்கள் யஹூதிகளோ, நஸாறாக்களோ அல்ல. முஸ்லிம்கள்தான். நமது இத்திரு நாட்டிலும் குறித்த இந்த ஞானத்தை எதிர்த்து “பத்வா” வழங்கியவர்கள் யார்? பௌதர்களா? இந்துக்களா? கிறித்துவர்களா? இல்லை. இல்லவே இல்லை. தம்மை அல்லாமாக்கள் என்றும், மற்றவர்களை ஒன்றும் தெரியாத, முட்டாள்கள் என்றும், முழு மடையர்கள் என்றும் நினைத்துக் கொண்ட வட்டிலப்பம், சாம்பல் புகழ் திரு ரிஸ்வீ முப்தீயும், அவரின் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏனைய “பத்வா” குழுவினருமேயாவர். ரிஸ்வியையும், பத்வா குழுவையும் தவிரவுள்ள ஏனைய உலமாஉகள் அப்பாவிகள். அவர்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கின்றார்கள். அவர்களில் யாராவது எமக்கு ஆதரவாக அதாவது சத்தியத்திற்கு ஆதரவாக வாய் திறந்தால் போதும். ரிஸ்வீ ஸாஹிபு செயலாளருக்கு அவரை விசாரணைக்கு அழைக்குமாறு அரச கட்டளையிடுவார். அவரோ மின்னல் வேகத்தில் அவரை உலமா சபைக்கு வருமாறு கட்டளை பிறப்பிப்பார். ஐயோ பாவம். அவர் சிறிய சம்பளத்திற்கு ஒரு பள்ளிவாயலில் கடமை செய்து கொண்டு வறுமைக் கோட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரை அழைத்து அவரைக் கண்டித்து அவரின் தொழிலைப் பறித்து விடுவார்கள். இவ்வாறுதான் “பத்வா” வழங்கிய காலத்திலிருந்து செய்து வருகிறார்கள். இதுவரை பல உலமாஉகளைத் தண்டித்திருக்கின்றார்கள். பலரின் தொழிலைப் பறித்தும் உள்ளார்கள்.

இவர்கள் மட்டும் இவ்வாறு செய்யவில்லை. காத்தான்குடி உலமா சபையும், காத்தான்குடி சம்மேளனமும் இணைந்து இவ்வாறு பல உலமாஉகளை உலமா சபைக்கு அழைத்து கண்டித்துள்ளார்கள். உலமாஉகளை மட்டுமன்றி பொது மக்களுக்கும் எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். ஏழை உலமாஉகளின் தொழிலைப் பறித்திருக்கின்றார்கள். இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் நிறைய இருக்கின்றன. அவ்வாறே சாட்சிகளும் உள்ளனர். அவிழ்க்க வேண்டிய நேரத்தில், இடத்தில் அவிழ்த்துக் காட்டுவோம். இன்ஷா அல்லாஹ்.

உலமா சபையினதும், சம்மேளனத்தினதும் பயமுறுத்தலினால்தான் பல உலமாஉகள் வாய் திறக்க முடியாமல் தவிக்கின்றனர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சர்வாதிகார ஆட்சிக்குப் பயந்து பல உலமாஉகள் இன்று இலங்கையில் வாழ்கின்றார்கள்.

இலங்கையில் இரண்டு அரசாங்கம் ஆட்சி செய்கின்றன. ஒன்று சட்டப்படி ஆட்சியதிகாரக் கதிரையில் அமர்ந்துள்ள, கௌரவ ஜனாதிபதியினதும், கௌரவ பிரதமர் அவர்களினதும் ஆட்சி. மற்றது சட்டப்படி ஆட்சிக்கு வராமல் தம்மைத் தாமே ஆட்சியாளர்களாக்கி முஸ்லிம்களை மட்டும் ஆட்டிப்படைத்து ஆட்சி செய்யும் உலமா சபையும், சம்மேளனமுமாகும்.

இஸ்லாமும், ஈமானும் தெரியாத, ஸூபிஸமும், தவ்ஹீதும் புரியாத முல்லாக்கள் வழங்கிய குருட்டு “பத்வா”வை கண்களை மூடிக் கொண்டும், சிந்தனைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டும் செயல்படுத்தி வருகின்ற காத்தான்குடி உலமா சபையினதும், சம்மேளனத்தினதும் நியாயமற்ற நடவடிக்கையின் பிரதித் தோற்றமே கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலின் கூட்டு உழிஹிய்யா திட்டம் தலை தூக்கியிருப்பதாகும்.

காத்தான்குடி மக்களுக்கென்று வழங்கப்படுகின்ற பேரீத்தம்பழம் காத்தான்குடியிலுள்ள ஸூபிஸ சமுகத்திற்கு வழங்கப்படுவதில்லை. காத்தான்குடியில் “கூட்டு உழ்ஹிய்யா” ஆட்சி நடத்துவோர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸூபிஸ சமுகத்துக்கு உழ்ஹிய்யா இறைச்சி வழங்கவுமில்லை, சகாத் நிதி வழங்கவுமில்லை. சம்மேளனத்தினதும், காத்தான்குடி உலமா சபையினதும் பாரபட்ச நடவடிக்கை காரணமாகவே இவ்வருடம் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினதும், பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலினதும் அனுசரணையுடன் கூட்டு உழ்ஹிய்யா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டம் உஹது மலை போல் வலுப்பெற அல்லாஹ்வின் அருளை நாடி நிற்கிறோம். பொது மக்களின் ஒத்துழைப்பை விரும்பி நிற்கிறோம்.

ஸூபிஸ சமுகத்தின் நலன் கருதி எமது அடுத்த திட்டம் “காத்தன்குடி தெற்கு” உலமா சபை ஒன்றும், சம்மேளனமும் அமைப்பதாகும். காத்தான்குடியை ஆளும் இரு அமைப்புக்களும் நீதியின் வாசலுக்கு வரவில்லையானால் காத்தான்குடி தெற்கிற்கான ஒரு சம்மேளனமும், ஓர் உலமா சபையும் அமைத்தே தீருவோம். காத்தான்குடி கைறாத் ஜும்ஆப் பள்ளிவாயலில் கூட்டு உழ்ஹிய்யா ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் சம்மேளனமும், உலமா சபையும் விழித்துள்ளன போலும். கூட்டு உழ்ஹிய்யா வழங்கப்பட எல்லா ஏற்பாடுகளும் நிறைவு பெற்று உழ்ஹிய்யாவுக்கான முப்பது மாடுகளும் வந்த பிறகுதான் குறித்த இரு தாபனங்களும் கண்விழித்து நீதியின் வாசலுக்கு வந்து பச்சைக் கொடி காட்டி கூட்டு உழ்ஹிய்யாவில் ஒன்றிணைவோம் என்று சிக்னல் கொடுக்கிறார்கள். இந்த சிக்னல்களுக்காக நகரும் வண்டியல்ல எமது வண்டி என்பதை சிக்னல் கொடுப்போர் புரிந்து கொள்ளட்டும்.

காத்தான்குடி அரசாங்கம் பார பட்ச நடவடிக்கைளை முற்றாக கைவிட்டு முட்டாள் ரிஸ்வியின் “பத்வா”வையும் தூக்கியெறிந்து விட்டு நமதூர் ஒற்றுமைக்குப் பச்சைக் கொடி காட்டி ஒன்றிணையாத வரை உலக அழிவுக்கான “ஸூர்” ஊதப்படும் வரை காத்தான்குடி மண்ணிலிருந்து ஒருவர் கூட அரசியல் அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது. “ஸூர்” ஊதும்வரை அரசியல் அநாதைகளாகவே காத்தான்குடி மக்கள் வாழ்ந்து மரணிப்பார்கள்.

காத்தான்குடி சம்மேளனமும், உலமா சபையும் மக்களுக்குள்ள மத, பேச்சு, எழுத்து, சிந்தனை உரிமைகளுடன் வாழ்வதும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுமே நியாயம் என்ற முடிவுக்கு வராமல் அவர்கள் தொடர்ந்தும் அதிகாரப் போக்கிலேயே இருந்தார்களாயின் காத்தான்குடி மறுமை வரை எந்தவொரு முன்னேற்றமும் அடையாது. காத்தான்குடி மகனொருவர் அரசியலாட்சி பீடத்தில் அமர்வதும் கடினமாகும். ஸூபிஸ சமுகம் தமது உரிமைகளுக்காக உயிர் துறந்தேனும் சாத்வீக, ஆத்மிக வழியில் முயற்சிக்க வேண்டும். போராடவும் வேண்டும். அவர்கள் குட்டியதும் போதும், நாம் நன்மை கருதி குனிந்ததும் போதும். நாம் ஒரு சமுகம் என்பதை இனியாவது காட்ட முன்வர வேண்டும்.

நான் பின்னால் எழுதுகின்ற துர்ப்பாக்கிய நிலை காத்தான்குடிக்கு வந்துவிடாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமைக்கு கை கோர்க்க வேண்டும்.
أخرجَ العلماء الحاسدون العارفَ بالله محمد بن الفَضْلِ البَلْخِيْ رحمه الله من بَلْخَ، لكون مذهبه مذهبَ أهل الحديث من إجرائات الصفات وأخبارها على ظاهرها بلا تأويلٍ والإيمانِ بها على علم الله فيها،

ولمّا أرادوا إخراجَه قال لا أخرج إلّا إن جعلتم فى عنقي حبلا، ومرَرْتُم بي فى أسواق البلد، وقلتُم هذا مُبتدِعٌ، نريد أن نخرجه من بلدنا، ففعلوا ذلك وأخرجوه، فالتفت إليهم، وقال يا أهل بلخ! نَزَعَ الله من قلوبكم معرفته، قال الأشياخ فلم يخرج بعد دَعواتِه عليهم تِلكَ مِن بلخ صوفيٌّ أبدا، مع أنّها كانت أكثر بلاد الله صوفيةً، ;

சுருக்கம்:

ஈரான் நாட்டில் “பல்க்” என்ற ஊரில் ஓர் இறைஞானி இருந்தார் . அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவரை அவ் ஊரிலிருந்து வெளியேற்ற கடும் பாடுபட்டும் அவர்களால் முடியாமற் போயிற்று.

இறுதியில் அவரே அந்தப் பொறாமைக் காரர்களை அழைத்து நான் சொல்வது போல் செய்தால் மட்டுமே என்னை வெளியேற்ற முடியும். நீங்கள் என் கழுத்தில் ஒரு கயிறு கட்டி இவ் ஊர் கடைத் தெருவில் இழுத்துச் செல்ல வேண்டும். இவர் ஒரு “பித்அத்” காரன். நமது ஊரை விட்டும் வெளியேற்றப் போகின்றோம் என்று சொல்லவும் வேண்டும் என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவ்வேளை அவர் ஊர் மக்களை விழித்து உங்களுடைய நெஞ்சங்களிலிருந்து இறைவன் தனது ஞானத்தை வெளிப்படுத்தி விடுவான் என்று சாபமிட்டவராக வெளியேறினார்.

அவ் ஊரில் வாழ்ந்த வயோதிபர்கள், அவர் போன பின் அவ் ஊரில் ஓர் இறைஞானி கூட தோன்றவில்லை என்று கூறியுள்ளார்கள். ஒரு வலீயின் சாபம் ஒரு நாட்டையே சாம்பலாக்கும்.

இந்நிலை நமதூருக்கும் வராமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக! இந்நிலை ஏற்படாமலிருக்க அல்லாஹ்வை மட்டும் பயந்தவர்கள் குரல் கொடுக்கவும் வேண்டும். நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

ஆதாரம்: அல்யவாகீத்
பக்கம்13, பாகம் 01
ஆசிரியர்: இமாம் ஷஃறானீ

தலைப்பு தொடர்பான விடயம் அடுத்த தொடரில் இடம்பெறும்…..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments