Monday, October 7, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கொரோனா வைரஸை வேருடன் அறுத்தெறிய மருந்தால் முடியாது. ஆன்மிகம் “டாட்டா” காட்டினால் மட்டுமே அது போகும்....

கொரோனா வைரஸை வேருடன் அறுத்தெறிய மருந்தால் முடியாது. ஆன்மிகம் “டாட்டா” காட்டினால் மட்டுமே அது போகும். முன்னோர் வழி சென்று “முஸீபத்”தை அகற்றுவோம்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

பயங்கர வியாதி நாட்டில் பரவி மக்களுக்கு தொல்லை செய்தால், மக்கள் ஒருவர் பின் ஒருவராக பாதிக்கப்பட்டால், அல்லது மரணித்தால் சுமார் 100 வருடங்களுக்கு முன் வாழ்ந்த சங்கைமிகு உலமாஉகள் ஒன்றிணைந்து தமது ஊரில் உள்ள முக்கிய – பிரதான பாதைகளால் – தெருக்களால் பின்வரும் பாடலைப் பாடியவர்களாக வலம் வந்து ஊரின் இரு எல்லைகளிலும் “துஆ” ஓதி மனிதர்கள் இல்லாத இடத்துக்கு அந்த பயங்கர நோயை அனுப்பி வைப்பார்கள். அனுப்பி வைத்தார்கள்.

இவ்வழக்கம் காத்தான்குடியிலும், இன்னும் பல ஊர்களிலும் 100 வருடங்களுக்கு முன் அமுலில் இருந்த நோய் நிவாரணியாகும்.

கி.பி – 1077ல் பிறந்து 1166ல் மறைந்த உலகம் போற்றும் வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் பக்தாத் நகர் மக்களை பெரும் காய்ச்சலொன்று பிடித்தது. அவர்கள் அனைவரும் மகானிடம் வந்து முறையிட்ட போது “யா உம்ம மில்தம் நீ போ” என்றார்கள். அது போய் விட்டது.

இந்த வரலாறை முஹ்யித்தீன் மௌலித் என்ற அவர்களின் புகழ் பாடலை எழுதிய பறங்கிப் பேட்டையில் சமாதி கொண்டு வாழும் மஹ்மூத் தீபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்கள்.

وَقَالَ لِلَّذْ اَتَاهُ – يَشْكُوْ بِحُمَّى فَتَاهُ
فِيْ اُذْنِهِ قُلْ مَتَاهُوْ – تَأْتِيْهِ بِالْإِهْتِمَامِ
قَدْ قَالَ عَبْدُ الْقَدِيْرِ – يَا اُمَّ مِلْدَمَ سِيْرِيْ
لِحِلَّةٍ لَا تَضِيْرِيْ – تَنَلْ حُصُوْلَ الْمَرَامِ

உம்மு மில்தம் – இது ஒரு வகை காய்ச்சலின் பெயராகும்.

முன்னோர்கள் இவ்வாறு செய்து வெற்றி கண்டுள்ளதால் அவர்களின் வழியில் நாமும் சென்று வெற்றி காண்போம்.

இறைவனிடம் கையேந்துங்கள்!
அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.

தெருக்களைச் சுற்றி வந்த சமயம் உலமாஉகள் பாடிச் சென்ற பாடல்கள் பின்வருமாறு:

يَـا لَـطِـيْـفُ لَـمْ تَـزَلْ
اُلْطُفْ بِنَا فِـيْـمَا نَـزَلْ
إِنَّكَ لَطِيْفُ لَـمْ تَــزَلْ
اُلْطُفْ بِنَا وَالْمُسْلِمِيْنْ

لِيْ خَمْسَةٌ أُطْفِيْ بِهَا حَرَّ الْوَبَاءِ الْـحَاطِمَةْ
اَلْمُصْطَفَى وَالْمُرْتَضَى وَابْنَاهُمَا وَالْفَاطِمَةْ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments