தொடர் – 29
شيخ الإسلام فخر الدين الرازي رحمه الله: هو أبو عبد الله محمدُ بن عُمرَ بن الحَسَن بن الحسين بن علي الرازي، الطَّبَرِسْتَانُ المولد القرشِيُّ التَّيْمِيُّ البَكْريّ النَّسبِ، الشّافعيُّ الأشعريُّ الملقّبُ بفخر الدّين الرّازي، وابنُ خطيب الريّ، وسلطانُ المتكلّمين، وشيخ المعقول والمنقول، هو إمام مفسّر فقيه أصوليّ،
وُلد فى الرّيِّ، قُرشيُّ النَّسبِ، أصله من طَبْرِسْتَانْ، رَحَلَ إلى خَوَارِزمٍ وما وراء النّهر، وخراسان، وأقبل الناس على كتبه يدرّسونها، وكان يُحسن اللّغة الفارسيّة،
وكان قائما على نُصـرة الأشاعرة، كما اشتهر بِرُدُودِه على الفلاسفة والمعتزلة، وكان إذا ركب يمشـي حوله ثلاث مأة تلميذ من الفقهاء، ولُقِّب بشيخ الإسلام فى هَرَاة، له تصانيف كثيرة ومفيدة فى كلّ فنّ، من أهمِّها التفسيرُ الكبير الّذي سمّاه ‘مفاتيح الغيب ‘، وقد جَمع فيه ما لا يُوجد فى غيره من التفاسير، وله ‘ المحصولُ فى علم الأصول ‘ و’نهايةُ الإيجاز ف دراية الإعجاز ‘ فى البلاغة، وقد اتّصل الرازي بالسلطان محمد بن تَكْشِيْ الملقّب بخوارزم شاه، توفّي الرازي فى مدينة هراة سنة 606 هجري، وُلد الرازي فى الرّيِّ سنة 544 هـ ،
ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ்.
இந்த மகானின் வாழ்க்கைச் சுருக்கத்தை அறபியில் எழுதியுள்ளேன். அதை தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்யாமல் முக்கிய குறிப்புகளை மட்டும் தமிழில் எழுதுகிறேன்.
இந்த மகான் பற்றி இங்கு குறிப்பிட்டதற்கான காரணம் இவர்கள் திருக்கலிமாவுக்கு கூறியுள்ள விளக்கம் அதற்கு நாம் கூறிவருகின்ற விளக்கத்தை ஒத்ததாக இருப்பதேயாகும். “வஹ்ததுல் வுஜூத்” பாணியில் அவர்களின் கருத்துக்கள் இருப்பதால் அவர்களை கட்டியணைத்து முத்தங்கள் சொரிய வேணும் போல் உள்ளது.
இவர் திருக்கலிமாவுக்கு எவ்வாறு வலிந்துரை சொல்வதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு வலிந்துரை தேவையில்லை என்று திட்டமாகச் சொல்லியுள்ளார். எந்த ஒரு வலிந்துரையுமின்றி திருக்கலிமாவுக்கு பொருளும், விளக்கமும் கொள்வதே சரி என்று கூறுகிறார். இவரின் கருத்துக்களிற் சிலதை மட்டும் எழுதுகிறேன்.
திருக்கலிமாவுக்கு அல்லாஹ் அல்லாத அல்லது அல்லாஹ்வுக்கு வேறான “இலாஹ்” இல்லை என்பதிலும், வேறொன்றுமே இல்லை என்பதிலும் மிகவும் உறுதியோடுள்ளார். இவர் போல் திருக்கலிமாவுக்கு விளக்கம் சொன்னவர்கள் ஒரு சிலர் மட்டுமே!
இவர் ஈரான் நாட்டின் தபரிஸ்தான் பட்டணத்தில் “றைய்” எனும் ஊரில் ஹிஜ்ரீ 544ல் பிறந்தார். ஈரானில் “ஹறாத்” எனும் ஊரில் ஹிஜ்ரீ 606ல் “வபாத்” ஆனார்.
இவர் குறைஷிக் குலத்தைச் சேர்ந்தவரும், ஷாபிஈ மத்ஹபை பின்பற்றியவரும், கொள்கையில் இமாம் அஷ்அரீ அவர்கள் வழி சென்றவருமாவார்.
இவர் அதிக நூல்கள் பல கலைகளிலும் எழுதிய மேதையாவார். அவற்றில் “தப்ஸீருல் கபீர்” எனும் திருக்குர்ஆன் விரிவுரை நூல் குறிப்பிடத்தக்கதாகும். “லவாமிஉல் பையினாத்” என்ற தத்துவ நூலும் இவர் எழுதிய நூல்தான்.
இதில் திருக்கலிமாவுக்குரிய பொருள் நாம் கூறும் பாணியில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவரின் விஷேட அம்சம் என்னவெனில் இவர் எங்காவது பயணித்தாராயின் இவரின் பின்னால் சட்ட மேதைகளில் முந்நூறு பேர் நடந்து செல்வார்கள். இவர் தொடர்பான சுவாரஷ்யமான வரலாறு ஒன்று உண்டு. இன்ஷா அல்லாஹ் தேவையேற்படுமிடத்து எழுதுவேன்.
ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் திருக்கலிமாவின் பொருள் தொடர்பாக சில குறிப்புக்களை தங்களின் “லவாமிஉல் பையினாத்” நூலில் எழுதியுள்ளார்கள். அவற்றை அறபுக் கல்லூரி மாணவர்கள், மற்றும் மார்க்க அறிஞர்களின் நலன் கருதி இங்கு குறிப்பிடுகிறேன்.
القول فى تفسير قول لا إله إلا الله، والكلامُ فيه مُرَتَّبٌ على أقسام، الأوّل فيها يَتَفَرَّعُ عليه من المسائل،
الأولى زَعَمَ أَكْثَرُ النَّحْوِيِّيْنَ أنّ هذا الكلام فيه حَذْفٌ وإضمارٌ، ثمّ ذكروا فيه وَجْهَيْنِ، أحدهما التقديرُ لا إله لنا إلا الله، والثاني لا إله فى الوجود إلا الله، واعلم أنّ هذا الكلام فيه نظرٌ عندي،
أمّا الأوّل فلأنّه لو كان التقديرُ لا إله لنا إلا الله لم يكن هذا الكلام دالًّا على التوحيد الحقّ، إذ يحتمل أن يقال أنّه لا إله لنا إلا الله فلِمَ قلتم أنّه لا إله لجميع المحدثات إلا الله،
ولهذا السّبب أنّه تعالى لمّا قال وإلهكم إله واحد، قال بعده لا إله إلّا هو، وفائدة تكرير التوحيد أنّه لمّا قال وإلهكم إله واحد بقِيَ لسائلٍ أن يقول أنّ إلهنا واحد، فلِمَ قلتم أنّ إله الكلِّ واحد، فَلِأَجلِ إزالةِ هذا السؤال قال بعده لا إله إلا هو،
(لوامع البيّنات، ص 93، للإمام الرازي)
மேலே நான் அறபு மொழியில் எழுதியுள்ள விடயத்தை தமிழில் மொழியாக்கம் செய்யத் தேவையில்லை. இது உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரி மாணவர்களுக்குமே பொருத்தமான விடயமாகும். பொது மக்களுக்கு இந்த விபரம் தேவையில்லை.
ஆயினும் அறபு மொழியில் அவர் என்ன சொல்லியுள்ளார் என்ற சாரத்தை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
திருக்கலிமா “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு எந்த வகையிலும் வலிந்துரை சொல்வது கூடாதென்றும், திருக்கலிமாவுக்கு அதன் நேரடிப் பொருள் கொள்வதே சரியென்றும் திட்டமாகக் கூறியுள்ளார்.
அறபு மொழியிலுள்ள விபரத்தை உலமாஉகளும், அறபுக் கல்லூரி மாணவர்களும் விளக்கமாக அறிந்து கொள்வார்கள். மேற்கண்ட அறபு மொழியில் கூறப்பட்ட விளக்கம் பொது மக்களுக்குத் தேவையானால் அவர்கள் உண்மை பேசும் உலமாஉகளிடம் கேட்டறிந்து கொள்வதில் எனக்கு எந்த ஓர் ஆட்சேபனையும் இல்லை. பொது மக்கள் விரும்பினால் என்னிடமும், என்னைச் சார்ந்த உலமாஉகளிடமும் கேட்டறிந்து கொள்ள முடியும்.
ஷெய்குல் இஸ்லாம் இமாம் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு சொல்கிறார்கள்.
نقول للقوم، وأيُّ حامل يحمِلُكم على التزامِ هذا الإضمار، بل نقول إجراء الكلام على ظاهره أولى، لأنّا لو التَزَمْنَا هذا الإضمارَ كان هذه لا إله فى الوجود إلّا الله، فكان هذا نفيًا لوجود الإله الثاني، وإذا أجرينا الكلام على ظاهره كان نفيا لماهية الثاني، ومعلومٌ أن نفي الماهية أولى وأقوى فى التوحيد من نفي الوجود، فثبت أنّ إجراء هذا الكلام على ظاهره أولى، (لوامع البينات، ص 93)
திருக்கலிமாவுக்கு எந்தவொரு வலிந்தரையும் கொள்ளாமலேயே பொருள் கொள்ள வேண்டும். இதுவே எல்லா வகையிலும் சிறந்ததாகும்.
(لا إله – لنا) எங்களுக்கு எந்த தெய்வமும் இல்லை என்று வலிந்துரை கொள்வதோ, அல்லது “லா இலாஹ பில் வுஜூதி இல்லல்லாஹ்” இருப்பதிலே எந்த தெய்வமும் இல்லை என்று வலிந்துரை கொள்வதோ தேவையற்ற விடயமாகும்.
இதனால் இமாம் பக்றுத்தீன் அர் றாஸீ அவர்கள் திருக்கலிமாவுக்கு எந்த வகையிலேனும் வலிந்துரை செய்பவர்களிடம் பின்வருமாறு கேட்கிறார்கள்.
وأيُّ حامل يحمِلُكم على التزامِ هذا الإضمار،
இவ்வறு வலிந்துரை செய்ய என்ன தேவையிருக்கிறது? இவ்வாறு வலிந்துரை செய்வதற்கு உங்களைத் தூண்டியது எது? ஏன் இவ்வாறு வலிந்துரை செய்கிறீர்கள்? இவ்வாறு வலிந்துரைவாதிகளைக் கேட்ட இமாம் அவர்கள், بل نقول நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று தொடங்கி إجراء الكلام على ظاهره أولى திருக்கலிமாவுக்கு அதன் வெளிப்படையான பொருள் சொல்வதே சிறந்ததென்று கூறியுள்ளார்கள்.
அவர்கள் இதற்கு ஆதாரம் கூறுகையில் لأنا لو التزمنا என்று தொடங்கி அவ்வாறு வலிந்துரை கொள்வது பிழை என்று காரணம் கூறுகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்களென்றால் لا إله إلا الله என்றால் அல்லாஹ் அல்லாத எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை என்று பொருள் வரும்.
(لا إله لنا إلا الله) அல்லாஹ் அல்லாத எந்த ஒரு இலாஹ் – தெய்வமும் எங்களுக்கு இல்லையென்று பொருள் வரும்.
மேற்கண்ட இரு வசனங்களிலும் வலிந்துரை செய்யப்படாத வசனத்துக்கும், வலிந்துரை செய்யப்பட்ட வசனத்துக்கும் பொருளிலும், விளக்கத்திலும் சற்று வித்தியாசம் இருப்பதைக் காணலாம்.
திருக்கலிமாவின் வலிந்துரையற்ற வெளிப்படையான பொருளில் எந்த சிக்கலும், முரண்பாடும் இல்லை.
ஆனால் வலிந்துரைப் பொருளில் அதாவது لا إله لنا إلا الله எங்களுக்கு அல்லாஹ் அல்லாத எந்த ஒரு “இலாஹ்” தெய்வமும் இல்லை என்ற வலிந்துரைப் பொருளில் “எங்களுக்கு” என்ற சொல்தான் சிக்கலை ஏற்படுத்துகிறது. முரண்படுகிறது.
அவ்வாறு பொருள் கொள்வதால் பதில் கூற முடியாத கேள்வி வரும்.
தொடரும்..