Home எழுத்தாக்கங்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 39

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் செருப்பை அபூ ஹுறைறா எடுத்துக் கொண்டு அவர்கள் செல்லுமாறு சொல்லிக் கொடுத்த சுபச் செய்தியை சொல்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியே வந்த நேரம் முதலில் ஸெய்யிதுனா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களை வழியில் கண்டு கண்மணி நாயகம் அவர்கள் சொன்ன சுபச் செய்தியை சொன்னார்கள்.


அவ்வளவுதான். உமர் அவர்களின் கண்கள் சிவந்தன. தாடி துடித்தது. தனது கையைப் பொத்தி மிக வேகமாக அபூ ஹுறைறாவின் நெஞ்சில் இடித்தார்கள். ஒரு குத்து குத்தினார்கள். குத்தென்றாலும் குத்துதான். குத்தோடு அபூ ஹுறைறா மல்லாந்து நிலத்தில் விழுந்தார்கள். தான் விழுந்த விதம் பற்றிக் கூறுகையில் خَرَرْتُ لِإِسْتِيْ நான் மல்லாந்து விழுந்தேன் என்று கூறினார். இதை நமது பாணியில் சொல்வதாயின் “சூத்தடி பட விழுந்தேன்” என்று சொல்ல வேண்டும்.


இருவரும் தோட்டத்திற்கு வருகிறார்கள். பெருமானாரைக் கண்ட அபூ ஹுறைறா சலித்தவராக கண்ணிலிருந்து நீர் வடியும் நிலையில் அல்லாஹ்வின் றஸூலே! எம் பெருமானே! உங்களின் சுபச் செய்தியை சொல்லப் போன என்னை உமர் அடித்து விட்டார் என்று முறைப்பட்டார்கள்.


அல்லாஹ்வின் திருத்தூதர் உமரைப் பார்த்து உமரே! நீங்கள் அடித்தீர்களா? ஏன் அடித்தீர்கள்? என்று வினவினார்கள்.


நடுங்கிப் போய் நின்ற வீரர் உமர் (அல்லாஹ்வின் திருத்தூதரே! “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னவரெல்லோரும் சுவர்க்கம் சென்று விட்டார்கள் என்று தாங்கள் சொன்னதாக அபூ ஹுறைறா கூறுகிறார். அவ்வாறு சொன்னால் எல்லோரும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று மட்டும் சொல்லிக் கொண்டு இருந்து விடுவார்கள். ஏனைய நல்லமல்கள் ஒன்றும் செய்யமாட்டார்களே யா றஸூலல்லாஹ்! அதனால்தான் அவரைத் தண்டித்தேன்) என்று கூறினார்.


ஆம், நீங்கள் சொல்வது சரிதான். அவ்வாறுதான் செய்வார்கள் என்று கூறிய பெருமானார் தோழர் அபூ ஹுறைறாவிடம் இதோடு விட்டு விடுங்கள் சொல்ல வேண்டாம் என்று கூறினார்கள்.


இவ்வாறு சொன்ன வேளை அங்கிருந்தவர்கள் பெருமானாரும், உமர் நாயகமும், அபூ ஹுறைறா ஆகியோர் மட்டுமே! நாலாம் நபர் எவரும் இருக்கவில்லை. இவ்விடயம் வெளிவருவதாயின் இரண்டு பேர்களால் மாத்திரமே வெளிவர வேண்டும். அவர்கள் திருத்தூதரின் தோழர்கள். தமது உயிரை விட அவர்களின் உயிரை மதிப்பவர்கள். அவர்களுக்காகவே வாழ்பவர்கள். அவர்கள் பெருமானாரின் தடையை மீறியதற்கு வரலாறில்லை.


எதார்த்தம் இவ்வாறிருக்கும் நிலையில் இந்த ஹதீது ஹதீது நூல்களில் எவ்வாறு வந்து சேர்ந்ததென்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.


எங்களின் சிறு புத்திக்கு உமர் அவர்கள் அபூ ஹுறைறாவுக்கு அடித்தது தவறு போல் தெரிந்தாலும் கூட அந்தச் செய்தியை அவர் சொல்வதால் பலர் தமது வணக்க வழிபாடுகள் செய்யாமல் அவற்றை முற்றாக விட்டு விடுவதற்கு சாத்தியம் உண்டு என்பதையறிந்து அவருக்கு அவ்வாறு கோபம் வந்திருக்க சாத்தியமுண்டு. உமர் அவர்கள் கோபப்பட்டது கூட மாபெரும் நன்மையொன்றைக் கருத்திற் கொண்டேயாகும். இதனால்தான் பெருமானார் அவர்கள் கூட உமர் அவர்களை ஒரு வார்த்தை மூலம் கூட தண்டிக்காமல் விட்டார்கள் என்று சொல்லலாம்.


08. எட்டாவது ஆட்சேபனைக்கான பதில்:

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளில் மிக அறிஞராவார்கள். அவர்கள் أَعْلَمُ الْعَالَمِيْنْ உலகிலுள்ளோர் அனைவரிலும் மிக அறிஞராவார்கள். அவர்கள் தங்களின் திருவாயால் عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவையும், நான் அறிந்து கொண்டேன் என்று அவர்கள் கூறியது அவர்களை விட அறிவுள்ள எவரும் இருக்க முடியாது என்பதை எமக்கு தெளிவாக காட்டுகிறது.


பெருமானார் அவர்கள் உமர் றழியல்லாஹு அவர்கள் கூறியதை சரி கண்டதால் பெருமானாரை விட உமர் அவர்கள் மிக அறிஞர் என்ற கருத்தோ, பெருமானாரை விட உமர் புத்திசாலி என்ற கருத்தோ வந்து விடாது.


52 – (31) حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَعَنَا أَبُو بَكْرٍ، وَعُمَرُ فِي نَفَرٍ، فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ أَظْهُرِنَا، فَأَبْطَأَ عَلَيْنَا، وَخَشِينَا أَنْ يُقْتَطَعَ دُونَنَا، وَفَزِعْنَا، فَقُمْنَا، فَكُنْتُ أَوَّلَ مَنْ فَزِعَ، فَخَرَجْتُ أَبْتَغِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَيْتُ حَائِطًا لِلْأَنْصَارِ لِبَنِي النَّجَّارِ، فَدُرْتُ بِهِ هَلْ أَجِدُ لَهُ بَابًا؟ فَلَمْ أَجِدْ، فَإِذَا رَبِيعٌ يَدْخُلُ فِي جَوْفِ حَائِطٍ مِنْ بِئْرٍ خَارِجَةٍ – وَالرَّبِيعُ الْجَدْوَلُ – فَاحْتَفَزْتُ، فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَبُو هُرَيْرَةَ» فَقُلْتُ: نَعَمْ يَا رَسُولَ اللهِ، قَالَ: «مَا شَأْنُكَ؟» قُلْتُ: كُنْتَ بَيْنَ أَظْهُرِنَا، فَقُمْتَ فَأَبْطَأْتَ عَلَيْنَا، فَخَشِينَا أَنْ تُقْتَطَعَ دُونَنَا، فَفَزِعْنَا، فَكُنْتُ أَوَّلَ مَنْ فَزِعَ، فَأَتَيْتُ هَذَا الْحَائِطَ، فَاحْتَفَزْتُ كَمَا يَحْتَفِزُ الثَّعْلَبُ، وَهَؤُلَاءِ النَّاسُ وَرَائِي، فَقَالَ: «يَا أَبَا هُرَيْرَةَ» وَأَعْطَانِي نَعْلَيْهِ، قَالَ: «اذْهَبْ بِنَعْلَيَّ هَاتَيْنِ، فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ، فَبَشِّرْهُ بِالْجَنَّةِ»، فَكَانَ أَوَّلَ مَنْ لَقِيتُ عُمَرُ، فَقَالَ: مَا هَاتَانِ النَّعْلَانِ يَا أَبَا هُرَيْرَةَ؟ فَقُلْتُ: هَاتَانِ نَعْلَا رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَعَثَنِي بِهِمَا مَنْ لَقِيتُ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ، بَشَّرْتُهُ بِالْجَنَّةِ، فَضَرَبَ عُمَرُ بِيَدِهِ بَيْنَ ثَدْيَيَّ فَخَرَرْتُ لِاسْتِي، فَقَالَ: ارْجِعْ يَا أَبَا هُرَيْرَةَ، فَرَجَعْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَجْهَشْتُ بُكَاءً، وَرَكِبَنِي عُمَرُ، فَإِذَا هُوَ عَلَى أَثَرِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَكَ يَا أَبَا هُرَيْرَةَ؟» قُلْتُ: لَقِيتُ عُمَرَ، فَأَخْبَرْتُهُ بِالَّذِي بَعَثْتَنِي بِهِ، فَضَرَبَ بَيْنَ ثَدْيَيَّ ضَرْبَةً خَرَرْتُ لِاسْتِي، قَالَ: ارْجِعْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عُمَرُ، مَا حَمَلَكَ عَلَى مَا فَعَلْتَ؟» قَالَ: يَا رَسُولَ اللهِ، بِأَبِي أَنْتَ، وَأُمِّي، أَبَعَثْتَ أَبَا هُرَيْرَةَ بِنَعْلَيْكَ، مَنْ لَقِيَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ بَشَّرَهُ بِالْجَنَّةِ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَلَا تَفْعَلْ، فَإِنِّي أَخْشَى أَنْ يَتَّكِلَ النَّاسُ عَلَيْهَا، فَخَلِّهِمْ يَعْمَلُونَ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَخَلِّهِمْ»

தொடரும்..

NO COMMENTS