“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் பேரரசர் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

0
80

தொடர் – 40

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பள்ளிவாயலில் தோழர்களோடு பேசிக் கொண்டிருந்தவர்கள் எந்தவொரு முன்னேற்பாடுமின்றி திடீரென்று எழுந்து தோட்டத்திற்குச் சென்றது முதல் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் யாவையும் கடந்த தொடர்களில் எழுதினேன்.

மேலும் அந்த நபீ மொழியிலிருந்து விளங்கப்பட்ட ஆட்சேபனைகளையும் எழுதி அவற்றுக்கான நான் அறிந்த விளக்கங்களையும் எழுதினேன்.

எந்த ஒரு நபீ மொழியை எடுத்துக் கொண்டாலும் அது பெருமானாரின் திருவாயால் வெளியானதென்ற உணர்வுடன் ஆய்வு செய்தால் நாம் கற்பனை கூடச் செய்யாத, அல்லது செய்ய முடியாத பல உண்மைகளை நாம் அறியலாம்.

தேடல் அவசியம்தான். ஆயினும் எதையும் கிழறித் தேட வேண்டும். கிழறித் தேடுவதன் மூலம் பல பொக்கிஷங்கள் கிடைக்கும்.

நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் இந்த ஹதீதை கிழறி ஆய்வு செய்தால் ஒரு தத்துவம் வெளியாகும். அதென்னவெனில் ஒன்றை ஒரு வஸ்த்தை ஒன்றென்றே நம்புதல்தான் “தவ்ஹீத்” ஏகத்துவம் என்றும், “ஈமான்” நம்பிக்கை என்றும் சொல்லப்படும். ஆனால் இதற்கு மாறாக இருக்கின்ற ஒன்றை இரண்டென்று நம்புதல் “தவ்ஹீத்” ஏகத்துவத்திற்கு முற்றிலும் முரணானதென்று சொல்லப்படும். அதாவது “குப்ர்” நிராகரிப்பு என்று சொல்லப்படும்.

قال النبي صلى الله عليه وسلم: مَنْ قَالَ لَا إلهَ إِلَّا اللهُ دَخَلَ الْجَنَّةَ،

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொன்னவன் சுவர்க்கம் சென்று விட்டான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

இதன் கருத்து குறித்த வசனத்தை அதற்குரிய பொருளைப் புரிந்து நம்பினவன் சுவர்க்கம் சென்றுவிட்டான் என்பதேயன்றி ஒரு பொருளும் தெரியாமல் கிளிப் பிள்ளை – பச்சைக் கிளி போல் வாயால் மட்டும் சொல்வது “ஈமான்” நம்பிக்கையாகாது. இவ்வாறு ஒரு கோடித் தரம் சொன்னவன் கூட விசுவாசியாக முடியாது.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை மட்டும் சொல்வதால் ஒருவன் விசுவாசியாகிவிடுவான் என்றிருந்தால் இன்று வாழும் பௌதர்கள், கிறித்தவர்கள், இந்துக்களில் பலர் முஸ்லிம்களாயிருக்க வேண்டும். முச்சக்கர வண்டி ஓட்டுநர்களிற் பலரும், முஸ்லிம்களுடன் நெருங்கி உள் வீட்டுப் பிள்ளைகள் போல் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்வதை நாம் நேரில் கேட்கிறோம். இதனால் அவர்களை முஸ்லிம்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் மரணித்தால் குளிப்பாட்டி, கபன் செய்து, தொழுகை நடத்த முடியுமா? இல்லை முடியாது. திருக்கலிமாவின் பொருளறிந்து, இஸ்லாமில் இணையும் எண்ணத்துடன் திருக்கலிமா மொழிய வேண்டும்.

திருக்கலிமாவான, இஸ்லாமின் மூல மொழியான “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை பொருள் புரியாமல் ஆயிரம் தரம் சொன்னாலும் சொன்னவன் “முஃமின்” விசுவாசியாகமாட்டான். இவர்கள் போன்றவர்கள்தான் பொருள் புரியாமல் திருக்கலிமாவை சொல்லிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுமாவர். முஸ்லிம்களில் திருக்கலிமாவின் பொருள் தெரியாமலேயே அதை மொழிந்து கொண்டிருப்போர் நிறைய உள்ளனர்.

“லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திற்கு உரிய பொருள் எதுவோ அதை அறிந்து மனதால் நம்பி வாயால் மொழிந்தவர்கள் மட்டுமே முஸ்லிம்களாவர்.

முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்து கொள்ள விரும்பி முஸ்லிம்களின் பள்ளிவாயல்களுக்கு வந்து தமது விருப்பத்தைக் கூறியவுடன் பள்ளிவாயல் தலைவர் பள்ளிவாயல் மௌலவீயை அழைத்து இவரை இஸ்லாமில் இணைத்துக் கொள்ளவும் என்று சொன்னதும் குறித்த மௌலவீ அவருக்கு திருக்கலிமாவை அறபு மொழியில் சொல்லிக் கொடுக்கிறார். அதோடு அதன் பொருளையும் சொல்லிக் கொடுக்கிறார். அதாவது வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லிக் கொடுக்கிறார். வந்தவரும் படிப்பறிவு, ஆய்வுத்திறன் இல்லாதவராயிருந்தால் அவர் சொல்லிக் கொடுத்தவாறே சொல்லிவிட்டுச் செல்கிறார். வந்தவர் மார்க்க ஆய்வாளராகவும், திறமையுள்ளவராகவுமிருந்தால், அல்லது ஏற்கனவே திருக்கலிமாவின் பொருள் அல்லாஹ் அல்லாத எதுவுமில்லை என்று அறிந்தவராயிருந்தால் யாரிடம் வந்தோம்? ஏன் வந்தோம் என்று மனதில் நினைத்துக் கொண்டு ஏதோ ஒரு வகையில் சமாளித்து விட்டுச் செல்கிறார். படித்தவர்கள், ஆய்வாளர்களை ஏமாற்ற முடியாது.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

அல்லாஹ்விடம் சரியான “தீன்” மார்க்கம் இஸ்லாம் என்பதாகும். (03-19)

இஸ்லாம் மார்க்கம் மட்டுமே அல்லாஹ் அல்லாத “இலாஹ்” இல்லை என்று சொல்லும் மார்க்கமாகும். அல்லது அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்று சொல்லும் மார்க்கமாகும். இஸ்லாம் மார்க்கம் மட்டுமே “ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகேடு இல்லாத மார்க்கமாகும். ஏனைய மார்க்கங்களில் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கை இருப்பதைக் காண முடியும்.

மௌலவீமார்களிற் சிலர் – இவர்கள் மௌலவீ என்று சொல்வதற்குக் கூட தகுதியற்றவர்கள் – இஸ்லாமிய கொள்கையில் “நஸீப்” நற் பாக்கியமற்றவர்கள் – திருக்கலிமாவின் பொருள் “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை” என்று அடித்துச் சொல்கிறார்கள். சத்தியமும் செய்கிறார்கள். இவர்களை யாரென்று சொல்வது? இன்னோரை ஆலிம் என்று சொன்னவனும் “ளாலிம்” ஆகிவிடுவான். மலத்தை மலமென்றுதான் சொல்ல வேண்டும். மலரென்று சொல்ல முடியாது. யாராவது அவ்வாறு சொன்னால் அவன் இருக்க வேண்டிய இடம் அங்கோடையேதான்.

இவ்வாறு சொல்லும் போலிகள் திருக்குர்ஆனுக்கு எதிரானவர்களாவர். திருக்குர்ஆனின் வசனங்களின் தத்துவங்களைப் புரியாதவர்களுமாவர். இவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனம் திருக்கலிமா மட்டுமென்று நினைக்கிறார்கள். இவர்கள் திருக்கலிமாவை ஒரு தரமாவது ஓத வேண்டும். ஓதினால்தான் இவ்வசனம் திருக்கலிமா மட்டுமன்றி திருக்குர்ஆன் வசனம் என்பதைப் புரிந்து கொள்வர்.

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ

திருக்குர்ஆன் வசனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பொருளைக் கொண்டதென்று எவன் சொன்னானோ அல்லது நம்பினானோ அவன் “காபிர்” ஆகிவிட்டான். ஏனெனில் அவன் மட்டுப்படுத்த முடியாத, வரையறை செய்ய முடியாத ஒன்றை மட்டுப்படுத்திவிட்டான். வரையறை செய்துவிட்டான். இவன் திருக்குர்ஆனுக்கு முரணாக – அல்லாஹ்வுக்கு மாறாகப் பேசிவிட்டான்.

திருக்குர்ஆன் வசனங்களுக்குரிய விளக்கத்தை எவனாலும் மட்டுப்படுத்த முடியாதென்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்க யாரோ ஒரு மௌலவீ ஸாஹிபு திருக்குர்ஆன் வசனத்திற்கு ஒரு பொருள் மட்டும்தான் உண்டு, அதற்கு வேறு பொருள் ஒன்றும் கிடையாதென்று கூறியிருப்பது அவரின் அறியாமையா? அல்லது மன முரண்டா? அல்லது தாழ்வுச் சிக்கலா? அல்லாஹ் அறிந்தவன்.

மன முரண்டும், தாழ்வுச் சிக்கலும் இதற்கு காரணங்களாயின் இவரை இவ்விரு நோய்களிலிருந்து விடுவிப்பதாயின் இவர் சுமார் 40 நாட்கள் ஒரு “காமில்” ஆன ஞானகுருவின் வழி காட்டலின் கீழ் இருக்க வேண்டும். அந்த ஞான குரு இவரின் நாடி பிடித்து இவருக்கு அவ்வப்போது தேவையான ஆன்மீக மருந்து மாத்திரை கொடுத்து படிப்படியாக அவரை நெருப்பிலிருந்து நீருக்கு கொண்டு வருவார். இவர் நற் பாக்கியமுள்ளவராயின் அவர் “ஸயீது”தான்.

மேற்கண்ட காரணத்துக்கு மாறான அறியாமை காரணமாயிருந்தால் அல்லாஹ்வின் அருள் கொண்டும், காமில்கள் கருணை கொண்டும் அவரை மனிதனாக்க – அறியாமை இருளிலிருந்து அறிவெனும் வெளிச்சத்திற்கு கொண்டுவர என்னால் முடியும். இன்ஷா அல்லாஹ்.

وأنا أقول لهذا العالم النحرير الألمعيّ الغافل أن يطهِّر قلبه أوّلا أي قبل دخول ساحة الكُمّل من الأولياء من الأدناس والأنجاس والأوساخ الّتي غشيت قلبه وأعمت بصائره وأبصاره، وأن يُنزل من قلبه شعور الغيريّة بين الواجد والموجود، وأن يرمي من قلبه حبّ الجاه ويُحرقَه بنار التواضع والذّلّة، وأن يجعل هواه تبعا لما جاء به الشّارع صلّى الله عليه وسلّم، ويقلع شجرة العجب من قلبه بعرقها وأعضائها، ويعتبر بقول الله عزّ وجلّ وفوق كلّ ذي علم عليم،

وأوصي هذا العالم النّحرير المُعجب بنفسه أن يطالع كتاب ‘ الحكم ‘ للشّيخ تاج الدين السّكندري مع شرحه ‘ إيقاظ الهمم’، لأنّه كتاب نفيس نافع للمبتدئين مثل هذا النّحرير، ويَدرس بعده كتاب ‘ التحفة المرسلة ‘ للشّيخ محمد بن فضل الله الهندي رحمه الله، ومعلوم بين العوامّ والخواصّ وخواصّ الخواصّ أنّ هذا الكتاب كتاب مقبول عند العلماء الّذين أفتوني بالردّة وكتاب مبدوء بوحدة الوجود ومختوم بها،
وهذا كتاب مَبْدُوءٌ بوحدة الوجود ومختوم بها، كما لا يخفى على من له عقل سليم وفهم مستقيم، ثمّ يدرس بعده كتاب ‘الفتوحات المكيّة ‘ للشّيخ الأكبر محي الدين ابن عربي قدّس سرّه،
وإنّ هذا العالم أراه طفلا يرضع ثدي أمّه بالنّسبة إلى علم التّوحيد وعلم وحدة الوجود،
والله أسأل أن يهديه إلى الصراط المستقيم، صراطِ النّبيّين والصدّقين والشّهداء والصّالحين،