தொடர் – 1
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
புனித றபீஉனில் அவ்வல் மாதம் தலைப்பிறையிலிருந்து 12ம் பிறை வரை அண்ணல் நபீயின் ஆன்மிக நிலை தொடர்பாக எழுதுவேன் என்று கூறியிருந்தேன். இரண்டு நாட்கள் வேறு தலைப்புக்களில் எழுதிக் கொண்டிருந்ததால் குறித்த தலைப்பில் எழுத முடியாமற் போயிற்று. இன்றுதான் அதற்குரிய வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
எழுதப் போகின்ற நபீ மொழி புகாரீயில் இடம் பெற்ற ஸஹீஹான ஹதீதாகும். இது நீண்ட ஹதீது. இதையும் எழுதி இதற்கான விளக்கத்தையும் இதே தொடரில் எழுதினால் இக்கட்டுரையை பூர்த்தி செய்ய முடியாமற் போய்விடும். அதேநேரம் இந்த ஹதீதின் வசனங்களை அறிய விரும்புவோர் அறிய முடியாமலும் போய்விடும்.
எனவே தம்மிடம் ஹதீதுகள் இல்லாத மௌலவீமார்களினதும், அறபுக் கல்லூரி மாணவர்களினதும் நன்மை கருதி ஹதீது வசனங்களையும் எழுதி விளக்கமும் எழுதுகிறேன். கட்டுரையை முழுமையாக முடிக்க முடியாமற் போனால் மிகுதியை அடுத்த தொடரில் எழுதுவேன்.
6982 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، ح وحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ: قَالَ الزُّهْرِيُّ: فَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّهَا قَالَتْ: أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الوَحْيِ الرُّؤْيَا الصَّادِقَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، فَكَانَ يَأْتِي حِرَاءً فَيَتَحَنَّثُ فِيهِ، وَهُوَ التَّعَبُّدُ، اللَّيَالِيَ ذَوَاتِ العَدَدِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَتُزَوِّدُهُ لِمِثْلِهَا، حَتَّى فَجِئَهُ الحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ، فَجَاءَهُ المَلَكُ فِيهِ، فَقَالَ: اقْرَأْ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ: اقْرَأْ، فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ: اقْرَأْ، فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدُ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} (العلق: 1)- حَتَّى بَلَغَ – {عَلَّمَ الإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ} (العلق: 5) ‘ فَرَجَعَ بِهَا تَرْجُفُ بَوَادِرُهُ، حَتَّى دَخَلَ عَلَى خَدِيجَةَ، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ: «يَا خَدِيجَةُ، مَا لِي» وَأَخْبَرَهَا الخَبَرَ، وَقَالَ: «قَدْ خَشِيتُ عَلَى نَفْسِي» فَقَالَتْ لَهُ: كَلَّا، أَبْشِرْ، فَوَاللَّهِ لاَ يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَصْدُقُ الحَدِيثَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، ثُمَّ انْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى بْنِ قُصَيٍّ وَهُوَ ابْنُ عَمِّ خَدِيجَةَ أَخُو أَبِيهَا، وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الكِتَابَ العَرَبِيَّ، فَيَكْتُبُ بِالعَرَبِيَّةِ مِنَ الإِنْجِيلِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: أَيِ ابْنَ عَمِّ، اسْمَعْ مِنَ ابْنِ أَخِيكَ، فَقَالَ وَرَقَةُ: ابْنَ أَخِي مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَى، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا، أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَمُخْرِجِيَّ هُمْ» فَقَالَ وَرَقَةُ: نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمِثْلِ مَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا، ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الوَحْيُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا بَلَغَنَا، حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا، فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ، وَتَقِرُّ نَفْسُهُ، فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ ابْنُ عَبَّاسٍ: {فَالِقُ الإِصْبَاحِ} (الأنعام: 96): «ضَوْءُ الشَّمْسِ بِالنَّهَارِ، وَضَوْءُ القَمَرِ بِاللَّيْلِ»
ஹதீதின் சுருக்கம்:
இந்த ஹதீதை அறிவித்த ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு இறைவனிடமிருந்து “வஹீ”யை கொண்டு வரும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம் ஆரம்ப காலத்தில் “வஹீ” வரவில்லை. ஆயினும் உறக்கத்தில் கனவின் மூலம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. கனவின் மூலம் செய்திகள் கிடைத்தாலும் அவையும் “வஹீ”தான். ஏனெனில் رُؤْيَا الْأَنْبِيَاءِ وَحْيٌ நபீமார்களின் கனவுகள் “வஹீ” என்று ஹதீது உள்ளது. அதில் கிடைத்த தகவல்கள் யாவும் “வஹீ”தான். வீணான, அர்த்தமற்ற தகவல்கள் அல்ல. இவ்விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் எப்போது கனவு கண்டாலும் அவர்கள் கண்டது போல் நிச்சயமாக நடக்கும். அவர்கள் மக்காவின் “ஹிறா” மலையில் உள்ள குகைக்கு அடிக்கடி வந்து வணக்க வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அந்த நேரம் அவர்கள் செய்த வணக்கம் தொழுகையல்ல. “முறாகபா”, “முஷாஹதா”, “திக்ர்”, “பிக்ர்” போன்ற வணக்கங்களேயாகும். “ஹிறா” குகையில் தனிமையாக இருந்தே வணக்கம் செய்வார்கள். தொடராகப் பல நாட்களும் அங்கு தங்கிவிடுவார்கள். தங்கும் நாட்களுக்குத் தேவையான உணவுகளையும் எடுத்துக் கொள்வார்கள். இடையிடையே அன்னை கதீஜா நாயகியிடம் வந்து உணவுகளை எடுத்துக் கொண்டு குகைக்கு சென்று விடுவார்கள். ஒரு நாள் அவர்கள் அக்குகையில் இருந்த நேரம் எதிர்பாராமல் சத்தியம் வந்தது. حَتَّى فَجِئَهُ الْحَقُّ இந்த வசனத்தின் பொருள் சத்தியம் வந்தது என்றுதான் அநேக நபீ மொழி விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள். இதற்கு வேறு பொருளும் உண்டு. இதை பின்னால் நான் எழுதுவேன். அங்கு வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து ஓதுங்கள் என்றார்கள். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் مَا أَنَا بِقَارِئٍ நான் ஓதுபவனல்ல என்றார்கள். இந்த வசனத்துக்கு வேறு விளக்கமும் உண்டு. அதையும் இறுதியில் எழுதுவேன்.
அவர்கள் அவ்வாறு சொன்னதும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்னைப் பிடித்து அவர்களின் நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தார்கள். பின்பு மீண்டும் ஓதுங்கள் என்றார்கள். அப்போதும் நபீகளார் நான் ஓதுபவனல்ல என்றார்கள். மீண்டும் ஜிப்ரீல் அவர்களைக் கட்டியணைத்து நெஞ்சோடு இறுக்கமாக்கிவிட்ட பின் இப்போது ஓதுங்கள் என்றார்கள். அப்போது நபீ பெருமானுக்கு முன்னர் சொன்னது போல் நான் ஓதுபவனல்ல என்று கூறினார்கள்.
இவ்வாறு ஜிப்ரீல் மூன்று முறை செய்தார்கள். அதன் பிறகுதான்
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ (1) خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ (2) اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ (3) الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ (4) عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ (5)
மேற்கண்ட ஐந்து வசனங்களையும் ஜிப்ரீல் ஓதிக்காட்ட நபீகளார் அவர்களும் ஓதினார்கள்.
இதைத் தொடர்ந்து நபீ பெருமான் அவர்களை ஒரு வகையான குளிர் ஆட் கொண்டது. தாக்கியது. நடுங்கினவர்களாக குகையிலிருந்து வெளியேறி மனைவி கதீஜாவின் இல்லம் நோக்கி விரைந்து “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்” என்று இரு முறை கூற அங்கிருந்தவர்கள் போர்த்தினார்கள். நடுக்கமும், அச்சமும் கலைந்தன.
அப்போது பெருமானார் அவர்கள் (ஒன்றுமே தெரியாதவர்கள் போல்) يا خديجة ما لي؟ கதீஜாவே! எனக்கு என்ன நடந்தது? என்று கேட்டு நடந்த விடயத்தையும் சொன்னார்கள். மேலும் என்மீது நான் பயந்துவிட்டேன் என்றும் கூறினார்கள்.
“அதற்குப் பதிலாக, இல்லை உங்களுக்கு ஒன்றுமே இல்லை. இது ஒரு நற்செய்திதான், மகிழ்ச்சியாக இருங்கள், அல்லாஹ் ஒரு போதும் உங்களை இழிவு படுத்தமாட்டான், ஏனெனில் நீங்கள் குடும்பத்தவர்களை சேர்ந்து நடக்கின்றீர்கள், உண்மை பேசுகின்றீர்கள், கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்கிறீர்கள், விருந்தாளியை கண்ணியம் செய்கிறீர்கள், மக்களுக்கு உதவி செய்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
இதன் பின் கதீஜா நாயகி தனது தந்தையின் சகோதரன் – கதீஜாவின் சாச்சா மகன் வறகதுப்னு நவ்பல் என்பவரிடம் பெருமானாரை அழைத்துச் சென்றார்கள்.
அவர் ஐயாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் நஸாறாவாக இருந்தவராவார். அறபு மொழி எழுதத் தெரிந்தவர். இன்ஜீல் வேதத்திலுள்ள செய்திகளை அறபியில் எழுதுவார். பார்வையிழந்த வயோதிபராக இருந்தார்.
கதீஜா நாயகி அவரிடம் சாச்சாவின் மகனே! உங்கள் சகோதரனின் மகனிடம் என்ன நடந்தது என்று கேளுங்கள் என்றார்கள். அப்போது அவர் பெருமானாரிடம் என்ன நடந்தது என்று வினவ பெருமானார் நடந்தவை யாவையும் விரிவாகச் சொன்னார்கள். அப்போதவர் இவர் – “உங்களிடம் ஹிறா குகையில் வந்தவர் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த நாமூஸ் – ஜிப்ரீல் என்ற “மலக்” ஆக இருக்கலாம். ஒரு காலத்தில் உங்கள் கூட்டம் உங்களை மக்கா நகரிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். அவ்வேளை நான் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
இது கேட்டு வியப்படைந்த எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எனது கூட்டம் என்னை மக்காவிலிருந்து வெளியேற்றுவார்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் – சாச்சா மகன் வறகதுப்னு நவ்பல் “நீங்கள் கொண்டுள்ள கொள்கை போன்றதை கொண்டு வந்த அனைவரும் அவர்களின் கூட்டத்தாரால் எதிர்க்கப்பட்டே வந்தள்ளார்கள் என்றும், உங்களை உங்கள் கூட்டம் நாட்டிலிருந்து வெளியேற்றும் வேளை நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறினார்கள்.” ஆயினும் அதற்குள்ளாக அவரை மரணம் அணைத்துக் கொண்டது.
இந்த நிகழ்வின் பின் சொற்ப காலம் (ஆறு மாதங்களாயிருக்கலாம்) பெருமானார் அவர்களுக்கு வஹீ வருவது நின்று விட்டது.
வாசக நேயரின் கவனத்திற்கு!
இதன் பின் நான் தொடர்ந்து எழுதவுள்ள விடயத்தை ஆழமான சிந்தனையோடும், நிதானத்தோடும், பெரும் பொறுமையோடும், விரிந்து பரந்த மனதோடும் வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நான் கூறப் போகும் விளக்கம் அணுவளவேனும் “ஷரீஆ”வுக்கு முரணானதில்லை என்பதை புரிந்து கொள்ளும் வரை அமைதியாக இருப்பதவசியம். நான் கூறும் விளக்கத்தில் உலமாஉகளுக்கோ, பொது மக்களுக்கோ ஆட்சேபனை அல்லது கேள்வி இருக்குமாயின் அத்தகையோர் என்னுடன் நேரில் தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன். நம்பத்தகுந்த, மறுக்க முடியாத ஆதாரங்கள் என் கைவசம் உள்ளன. எனது கடந்த காலப் பேச்சு ஒன்றை குண்டுதாரி சக்றான் தனது மனமுரண்டு காரணமாக மாற்றி நான் நபீகளாரை ஹறாமில் பிறந்தவர்கள் என்று சொன்னதாக மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேசி என்னை இஸ்லாமிய எதிரியாக காட்ட முயற்சித்தான். அல்லாஹ் நீதியாளன். சரியான தண்டனை கொடுத்துவிட்டான். அவன் போன்ற இன்னும் சிலர் உள்ளனர். அவர்களுக்கும் நீதியாளன் உரிய தண்டனை வழங்காமல் விடமாட்டான்.
ஸஹீஹுல் புகாரீ நூலில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீது வெளியரங்கத்தில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் ஆன்மிக அறிவில்லாதவர்களுக்கு தோற்றும். பெருமானார் மீது தப்பான எண்ணத்தை உருவாக்கும். பெருமானார் அவர்கள் ஒருபோதும் ஒரு அணுவளவேனும் “ஷரீஆ”வுக்கு முரணாக எதுவும் செய்யவுமாட்டார்கள். சொல்லவுமாட்டார்கள்.
நான் கூறிவந்த வரலாறுகளுக்கான ஹதீது வசனங்களும், இதன் பின் எழுதப் போகின்ற விடயங்களுக்கான ஹதீதின் வசனங்களும் முழுமையாக முன்னால் பதிவாகியுள்ளன. ஆயினும் பொது மக்களும், ஆன்மிக விளக்கமில்லாத உலமாஉகளும் ஹதீதின் வசனங்களையாவது நம்ப வேண்டும் என்பதற்காக தேவையான வசனத்தை மட்டும் மீண்டும் இங்கு எழுதுகிறேன்.
وَفَتَرَ الوَحْيُ فَتْرَةً حَتَّى حَزِنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا بَلَغَنَا، حُزْنًا غَدَا مِنْهُ مِرَارًا كَيْ يَتَرَدَّى مِنْ رُءُوسِ شَوَاهِقِ الجِبَالِ، فَكُلَّمَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ لِكَيْ يُلْقِيَ مِنْهُ نَفْسَهُ تَبَدَّى لَهُ جِبْرِيلُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّكَ رَسُولُ اللَّهِ حَقًّا، فَيَسْكُنُ لِذَلِكَ جَأْشُهُ، وَتَقِرُّ نَفْسُهُ، فَيَرْجِعُ، فَإِذَا طَالَتْ عَلَيْهِ فَتْرَةُ الوَحْيِ غَدَا لِمِثْلِ ذَلِكَ، فَإِذَا أَوْفَى بِذِرْوَةِ جَبَلٍ تَبَدَّى لَهُ جِبْرِيلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ
மேற்கண்ட ஹதீதின் வசனங்களுக்குரிய பொருளை வசனம் வசனமாக மொழியாக்கம் செய்வதை விட அவற்றின் சாராம்சத்தை சாறாகப் பிழிந்து தந்தால் பலரும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். ஆகையால் சுருக்கத்தை மட்டும் எழுதுகிறேன்.
சுமார் ஆறுமாத காலம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு “வஹீ” வரவில்லை. ஜிப்ரீலின் வருகை நின்றுவிட்டது. நபீகள் திலகம் கவலைக்குள்ளானார்கள். அதாவது கவலை அவர்களை கடுமையாக ஆட்கொண்டது.
இதனால் மலைகளின் சிகரத்திற்குச் சென்று கீழே பாய்வதற்கு முயற்சித்தார்கள். அவர்கள் உச்சிக்குச் சென்று தரையை நோக்கிப் பாய நினைத்த போதெல்லாம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அங்கு வந்து முஹம்மதே! நீங்கள் உண்மையாக அல்லாஹ்வின் றஸூல் அல்லவா? என்று தடுத்த போதெல்லாம் அவர்களின் கவலை நீங்கி மனச் சாந்தி கிடைத்ததும் திரும்பிவிடுவார்கள். இவ்வாறு பல தரம் நடந்துள்ளது.
(ஸஹீஹுல் புகாரீ)
தொடரும்.