தொடர் – 02
நான் எழுதி அண்மையில் வெளியிட்ட இந்நூலின் துணை நூல்கள் மூன்று. ஒன்று – அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு ஹாதித் தகலைன் அப்துர் றஹ்மான் லக்னவீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய “கலிமதுல் ஹக்” எனும் நூல்.
இரண்டு – குத்புல் வாஸிலீன், றயீஸுல் மஜாதீப் அஷ்ஷெய்கு அப்துல் காதிர் அஸ்ஸூபீ, அல் ஹைதர்ஆபாதீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்ஹகீகா” எனும் நூல்.
மூன்று – ஷெய்குல் இஸ்லாம், அல் இமாமுன் நிஹ்ரீர் பக்றுத்தீன் அர் றாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “லவாமிஉல் பையினாத்” எனும் நூல்.
(السّيّد الشّيخ هَادِى الثَّقَلَين عبد الرحمن اللّكنوي رضي الله عنه) كلمة الحقّ
இந்நூலை தற்போது எந்த நாட்டிலும் எடுக்க முடியாதுள்ளது. தமிழ் நாட்டிலும், கேரளாவிலுமுள்ள நூலகங்களிலும், புத்தக விற்பனை நிலையங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இவ்விரு மாநில உலமாஉகளிடம் விசாரித்த போது இப்படியொரு நூலின் பெயரைக் கூட தாம் கேள்விப்படவில்லை என்று அவர்கள் சொன்னார்கள். எனினும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஹழ்றத் மட்டும் அப்படியொரு “கிதாப்” இருப்பது தனக்குத் தெரியுமென்று கூறியுள்ளார்கள். வேறு விபரம் அவருக்குத் தெரியவில்லையாம்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந் நூலில் அக்காலத்தில் ஒரு சில பிரதிகள் மட்டுமே அச்சிட்டு எழுதிய அந்த மகான் தனது “முரீது” சிஷ்யர்களுக்கு மட்டும் கொடுத்திருக்கலாம், அந்தப் பிரதிகள் அவர்களின் “முரீது” சிஷ்யர்களுக்கிடையிலேயே இருந்து வெளியுலகுக்கு வராமல் மறைந்திருக்கலாம்.
சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாமிய அறிஞர்களாலும், “ஆரிபீன்” இறைஞானிகளாலும் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்கள் அறபு நாடுகளிலுள்ள நூலகங்களில் கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதாக அறிய முடிகிறது.
ஸ்பெயினில் பிறந்து சிரியா – டமஸ்கஸ் தலை நகரில் வாழ்ந்து மறைந்தவர்களும், 900 நூல்களுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியவர்களும், “வஹ்ததுல் வுஜூத்” என்ற பெயரில் இறைஞானத்தை வெளிப்படுத்தியவர்களுமான அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு, ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய பல நூல்கள் இன்றுவரை அச்சிடப்படாமல் கெய்ரோ – மிஸ்ர் நாட்டிலுள்ள நூலகங்களில் கையெழுத்துப் பிரதிகளாகவே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பல்லாயிரம் அறிஞர்களினதும், ஸூபீ மகான்களினதும், இறை ஞானிகளினதும் ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதிகளாகவே இன்று வரை அறபு நாடுகளிலுள்ள நூலகங்களில் உள்ளன. ஸூபிஸ நூல்களுக்கு முஸ்லிம்களிடம் பரவலான ஆதரவு இல்லாமற் போனதால் ஸூபிஸ ஞானக் கலை மங்கி மறைந்து போகத் தொடங்கிற்று.
இக்கலை மங்கி மறைந்ததற்கு இன்னுமொரு காரணம் உண்டு. ஹிஜ்ரீ 300 காலப்பகுதியில் வாழ்ந்த இமாம் மன்சூர் ஹல்லாஜ் றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறைஞான உச்சக்கட்ட தத்துவமான أنا الحقُّ நான்தான் மெய்ப்பொருள் – இறைவன் என்று சொன்ன போது அவர்கள் சித்திரைவதை செய்து கொல்லப்பட்ட வரலாறு இஸ்லாமிய உலகம் அறிந்த ஒன்றேயாகும்.
இந்த வரலாற்றை அறிந்த அவர்களுக்குப் பின் தோன்றிய இறைஞானிகளிற் பலர் இறைஞானத்தை பகிரங்கமாகச் சொல்வதைத் தவிர்த்து மிக நெருங்கிய ஒரு சிலருக்கு மட்டும் காதுக்குள் சொல்லலானார்கள்.
இமாம் ஹல்லாஜ் அவர்கள் கொல்லப்பட்ட சம காலத்தில் வாழ்ந்த “ஸெய்யிதுத் தாயிபா” ஸூபீகளின் தலைவர் என்று ஸூபீ மகான்களாலேயே பட்டம் சூட்டப்பட்ட இமாம் இறைஞானி ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஹல்லாஜ் கொல்லப்பட்ட பின் இறைஞானம் பகிரங்கமாகப் பேசுவதை முற்றாக கைவிட்டு வீட்டில் ஒதுங்கிக் கொண்டார்கள். பின்வரும் வரிகளைப் பாருங்கள்.
وقد كان الحسن البصـري، وكذلك الجنيد والشّبلي وغيرُهم لا يُقَرِّرُوْنَ علمَ التّوحيد إلّا فى قُعُورِ بُيوتِهم بعد غَلْقِ أبوابهم وجَعلِ مَفاتيحِها تحتَ وَرِكِهم، ويقولون أَتُحِبُّون أن تُرمى الصحابةُ والتابعون الّذين أخذنا عنهم هذا العلمَ بالزندقة بُهتانا وظُلما،
(اليواقيت، ج 1، ص 17)
இறைஞானிகளான ஹஸனுல் பஸரீ, ஜுனைத் பக்தாதீ, அபூ பக்ர் ஷிப்லீ ஆகியோரும், இன்னுமிவர்கள் போன்ற இறைஞானிகளிற் பலரும் “தவ்ஹீத்” தொடர்பான அகமியங்கள் பேச விரும்பினால் தமது வீடுகளிலுள்ள உட்கதவுகளைப் பூட்டி அவற்றின் திறப்புகளைத் தமது தொடைகளுக்குக் கீழ் வைத்துக் கொண்டே பேசுவார்கள். இதற்கு இவர்கள் காரணமும் சொல்வார்கள். அதாவது நாங்கள் இந்த அறிவை நபீ தோழர்களிடமிருந்தும், தாபியீன்களிடமிருந்தும் பெற்றோம். அத்தகைய நபீ தோழர்களையும், “தாபிஊன்” அவர்களைத் தொடர்ந்தவர்களையும் பொய்யாகவும், அநீதியாகவும் “சிந்தீக்” – காபிர், முர்தத்-என்று இழித்துரைக்கப்படுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்பார்கள்.
இதன் சுருக்கம் என்னவெனில் (அவ்லியாஉகள், இறைஞானிகள், “தவ்ஹீத்” உடைய அறிவையும், ஸூபிஸ ஞானத்தையும் பெற்றது நபீ தோழர்களினதும், தாபியீன்களினதும் வழியாகவேயாகும். அத்தகைய மகான்களிடமிருந்து நாங்கள் பெற்ற அறிவை பகிரங்கமாகச் சொல்லும் போது பொறாமைக் காரர்களும், அறிவிலிகளும் அந்த மகான்களை ஏசுகிறார்கள். கீழ்த்தரமாகப் பேசுகிறார்கள். இதை நாங்கள் விரும்பவில்லை என்று காரணம் கூறியுள்ளார்கள்) என்பதாகும்.
அல்யவாகீத், பக்கம் 17,
பாகம் 01, ஆசிரியர்: அஷ்ஷஃறானீ
இமாம் ஹஸனுல் பஸரீ, இமாம் ஜுனைத், இமாம் ஷிப்லீ போன்றோர் மேற்கண்டவாறு கூறியிருப்பதால் “தவ்ஹீத்” ஞானம், “வஹ்ததுல் வுஜூத்” ஞானம், ஸூபிஸ ஞானம் போன்ற இறை தத்துவங்களை வெளிப்படையாகக் கூறுவது பழை என்பது கருத்தல்ல. அவ்வாறு அவர்கள் செய்தது அவர்களின் பேணுதலையும், அவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தையுமே காட்டுகிறது.
பின்வரும் வரிகளையும் வாசித்துப் பாருங்கள்.
وكان سيّدي عليُّ الوفا رضي الله عنه إذا سُئل لِمَ رَمَزَ القومُ كلامَهم؟ يقول اِفْهَمُوْا هذا المثالَ، تَعْلَمُوْا سبَبَ رَمَزِهِمْ،
وذلك أنّ الدنيا غَابَةٌ، ونُفُوْسُ الْمَحْجُوْبِيْنَ عَنْ حَقَائِقِ الْحَقِّ الْمُبِيْنِ مِنْ أَهْلِهَا كَالسِّبَاعِ وَالْوُحُوْشِ الْكَوَاسِرِ، وَالْعَارِفُ بَيْنَهُمْ كإِنْسَانٍ دَخَلَ لَيْلًا إِلَى تِلْكَ الْغَابَةِ، وَهُوَ حَسَنُ الْقِرَائَةِ وَالصَّوْتِ، فَلَمَّا أَحَسَّ بِمَا فِيْهَا مِنَ السِّبَاعِ الْكَوَاسِرِ اِخْتَفَى فِى بَطْنِ شَجَرَةٍ وَلَمْ يَجْهَرْ بِالْقُرْآنِ يَتَغَنَّى بِهِ هُنَاكَ حَذَرًا مِنْهُمْ، أَلَيْسَ يَدُلُّ اِخْتِفَائُهُ عَنْهُمْ وَعَدَمُ رَفْعِ صَوْتِهِ بِالْقُرْآنِ عَلَى أَنَّهُ عَلِيْمٌ حَكِيْمٌ، إِذْ لَوْ تَرَائَى لَهُمْ، أَوْ أَسْمَعَهُمْ صَوْتَهُ وَقِرَائَتَهُ لَمْ يَهْتَدُوْا بِهِ وَلَمْ يَفْهَمُوْا عَنْهُ وَسَارَعُوْا إِلَى تَمْزِيْقِ جَسَدِهِ وَأَكْلِ لَحْمِهِ، وَكَانَ هُوَ الْمُلْقِيَ لِنَفْسِهِ إِلَى التَّهْلُكَةِ، وَذَلِكَ حَرَامٌ،
فَافْهَمُوْا هَذَا الْمِثَالَ، قولوا لمن يَعْتَرِضُ على العارفين فى رَمْزِهم لكلامهم، قد أنزل الله على محمد صلّى الله عليه وسلّم فَوَاتِحَ سُوَرٍ كَثِيْرَةٍ من القرآن مرموزةٍ، وقال تعالى وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ أي بِقِرَائَتِكَ وَلَا تُخَافِتْ بها، فَأَمَرَهُ أن لا يَجْهَرَ بالقرآن حيث يَسْمَعُهُ الْجَهَلَةُ الْمُنْكِرُوْنَ، فَيَسُبُّوْنَ بِجَهْلِهِمْ مَنْ لَا يَجُوْزُ سَبُّهُ وَلَا يُخْفِيْهِ عَمَّنْ يؤمن به، فكما لم يدلّ إخفاء النبي صلى الله عليه وسلم قرائتَه عن الجاهلين المنكرين على بطلان قرائته، ولا قَدَحٍ فى صِحَّتِها، كذلك لا بد إخفاء العارفين كلامَهم عنِ المجادلين بغير علم على بطلانه ومخالفته للشريعة، فافهم،
அறபு வரிகளின் சுருக்கமான விளக்கம்:
இறைஞானிகள் இறைஞான உச்சக்கட்ட அகமியங்களை அனைவரும் விளங்கும் பாணியில் சொல்லாமல் சிலேடையாகவும், ஜாடையாகவும் ஒரு சிலர் மட்டும் விளங்கும் பாணியிலும் சொல்வதுண்டு. அதாவது பலர் சொல்லியுமுள்ளார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள்? அவ்வாறு சொல்வதற்கு ஆதாரமுண்டா? என்பது தொடர்பான செய்திதான் பின்வரும் செய்தியாகும்.
(அஸ்ஸெய்யித் அலீ இப்னு வபா றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது.
இறைஞானகளிற் சிலர் இறை அகமியங்களை அனைவரும் விளங்கும் பாணியில் தெளிவாகச் சொல்லாமல் சிலேடையாகவும், ஜாடையாகவும் சொன்னதேன்?
விடை:
நான் சொல்லும் உதாரணத்தை சரியாக விளங்கிக் கொண்டால் இறைஞானிகள் அவ்வாறு செய்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வுலகம் என்பது ஒரு பயங்கரக் காடு என்று வைத்துக் கொள். இறை அகமியம் தெரியாதவர்கள் அக்காட்டில் வாழும் பயங்கர மிருகங்களான சிங்கம், கரடி, புலி போன்றவர்களாவர்.
குறித்த விலங்குகளுக்கு மத்தியில் வாழும் இறைஞான மகான் ஒரு நாள் அந்த பயங்கர மிருகங்கள் வாழும் காட்டிற்கு இரவில் போனார். அவர்கள் அழகிய குரலும், அழகிய ஓதலுமுள்ளவர். அவரால் ஓதாமலிருக்க முடியாது. ஆயினும் பயங்கர அக்காட்டுக்குச் சென்றவர் அங்குள்ள பயங்கர மிருகங்களைக் கண்ட போது தற்பாதுகாப்புக் கருதி ஒரு மரத்தடியில் மறைந்து கொண்டு ஓதாமலும், சத்தமில்லாமலும் இருந்தார்.
அவர் இவ்வாறு செய்தது அவர் அறிவுள்ளவரும், புத்தியுள்ளவரும் என்பதற்கு ஆதாரமாகுமா? அல்லது அறிவில்லாத மடையன் என்பதற்கு ஆதாரமாகுமா? என்று கேட்ட அலீ இப்னு வபா அவர்கள். இல்லை சத்தியமாக இல்லை. அவர் அறிவும், புத்தியும் உள்ளவர்தான் என்று அவர்களே பதில் கூறிவிட்டு பின்வருமாறு கூறியுள்ளார்கள். அவன் அவ்வாறு மறைந்திருக்காமல் தன்னைக் காட்டிக் கொண்டு தனது சத்தத்தையும் உயர்த்திக் கொண்டிருந்தாராயின் அக்காட்டு மிருகங்கள் அவரைக் கீறிக் கிழித்து அவனைக் கொன்று சாப்பிட்டு முடித்துவிடும். இவன் தன்னைத் தானே அழிவில் தள்ளியவனாகிவிடுவான். இது “ஹறாம்”. அதாவது ஒருவன் தனது அறியாமையால் தன்னைத் தானே அழிவில் தள்ளுவது மார்க்கத்தில் விலக்கப்பட்டதாகும்.
தொடரும்….