தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
பிறப்பு:
وُلد عام الفِيل قبل مَجيئ الفيل، وببركة وُجودِه صلّى الله عليه وسلّم بِمَكّة طَرَدَ الله الفيلَ عن أهلها،
யானை வருடம் யானைப்படை திரு மக்கா நகரைத் தாக்க வருமுன் பிறந்தார்கள். யானைப்படை வருடம் நபீகளார் அங்கு இருந்ததினாலேயே யானைப்படை தோற்கடிக்கப்பட்டு அப்படை அழிக்கப்பட்டது.
தாயின் வயிற்றில்:
مقدارُ حملِه عشرةُ أشهر،
10 மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்தார்கள் எம் பெருமானார்.
கமுக்கட்டு முடி:
سُئل القطبُ عبد العزيز الدّبّاغ عن الإبطِ الشّريف، هل فيه شَعْرٌ أم لا؟ قال الشّيخ رضي الله عنه لا شَعْرَ فيه، بل فيه شيئٌ قليل جلا، أي بياضٌ يُخالطُه سواد قليلٌ،
குத்புஸ்ஸமான் அப்துல் அஸீஸ் தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானாரின் கமுக்கட்டு முடி எவ்வாறிருந்தது என்று கேட்கப்பட்டபோது அதில் முடியிருக்கவில்லை. ஆயினும் சிறிய அளவிலான வெள்ளையும், கருப்புக் கலந்த சில முடிகள் இருந்தன.
நடை:
سُئل القطبُ عن مِشْيَةِ النّبي صلّى الله عليه وسلّم، هل كان يتكفّأ يمينا وشمالا أو كان ينحدر إلى امام كأنّما ينحطُّ من صَبَبٍ، فقال كان يتكفّأ يمينا وشمالا،
குத்புஸ்ஸமான் அவர்களிடம் நபீ பெருமானின் நடை எவ்வாறிருந்தது? என்று கேட்கப்பட்டது. வலப்பக்கமும், இடப்பக்கமும் சாய்ந்த மாதிரி இருந்ததா? அல்லது ஒரு பள்ளத்திலிருந்து மேட்டுக்கு ஏறுபவர் போல் இருந்ததா? பெருமானாரின் நடை இரு பக்கமும் சாய்ந்த நடையாக இருந்தது என்று கூறிவிட்டு பெருமானாரின் நடையை பார்க்க விரும்புகிறாயா? என்று சிஷ்யனிடம் கேட்டு இதோ பார் என்று அவர்கள் நடந்து காட்டினார்கள். அவர்களின் நடையை நேரில் பார்த்து ரசித்த சிஷ்யர் சொல்வதைப் பாருங்கள்.
مشـى رضي الله عنه امامي نحوًا مِن سِتِّينَ خطوةً، فرأيتُه رضي الله عنه يتكفّأ يمينا وشمالا، ورأيتُ مِشيةً كاد عقلي يطير من حُسنها وجمالها، ما رأت عَيني قطّ أجملَ منها، واَبْهَرَ للعقول،
எனது குருநாதர் குத்புஸ்ஸமான் எனக்கு முன்னால் 60 அடி நடந்தார்கள். அவர்கள் வலதிலும், இடதிலும் சாய்ந்தவர்கள் போல் நடந்தார்கள். அவர்களின் நடையழகைக் கண்ட போது என் “அக்ல்” புத்தி எங்கோ பறந்து போயிற்று. புத்திகள் தடுமாறிற்று என்று கூறினார்கள்.
திரு தாடி:
سُئل القطبُ عن لحيته صلّى الله عليه وسلّم الشّريفةِ، فقال رضي الله عنه كثَّ اللِّحية مع طولِها طولا مُتوسِّطا فى الذّقن،
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் திரு தாடி அடர்த்தியானதாயும், நடுத்தர நீளமுள்ளதாயும் நாடிக்குழி வரை நீளமாக இருந்தது.
سُئل القطبُ عن الشّعر الشريف، وعن الشَّيب الشّريف، والخِضابِ الشّريف، وهَلْ تَنَوَّرَ عليه السّلام، فقال رضي الله عنه شعرُ رأسِه الشّريف صلّى الله عليه وسلّم يَخْتَلِفُ، فأحيانا يَطول وأحيانا يقصـر، ولم يكن على حالة واحدة، ولكنّه عليه السّلام كان يقُصُّ ما يلي الجبهةَولا يدَعُهُ يطول، ولم يَحْلِقْ عليه السّلام إلّا فى نُسُكٍ، وكان الشَّيبُ فى العَنْفَقَةِ نحو الخمس شعرات، وفى الصُّدْغَيْنِ شيئٌ قليلٌ، وفى الذِّقن أكثر مِن ذلك، وخَضَبَ صلّى الله عليه وسلّم بالحِنّاءِ، ولكنّه قليل، حين دخل مكّة، ومرّاتٍ قلائلُ فى المدينة،
கௌரவ குத்பு அவர்களிடம் நபீ பெருமானின் முடிகள் பற்றியும், முடிகளில் உள்ள நரை பற்றியும், முடிக்கு மருதோன்றி போடுவது பற்றியும், இன்னும் முடியை அகற்றும் மருந்து பாவித்தார்களா என்றும் கேட்கப்பட்டது.
குத்பு அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள். நபீ பெருமானின் தலை முடி எக்காலமும் ஒரேமாதிரியாக இருக்காது. சில சமயம் நீளமாகவும், சில சமயம் கட்டையாகவும் இருக்கும். நபீ பெருமானார் அவர்கள் நெற்றியை அடுத்துள்ள முடிகளை கத்தரித்துக் கொள்வார்கள். அது நீளமாக வளர விடமாட்டார்கள். பெருமானார் அவர்கள் தலை முடியை “ஹஜ்” உடைய காலத்தில் மட்டுமே முற்றாக இறக்கியுள்ளார்கள். அதாவது மொட்டை அடித்துள்ளார்கள். ஆயினும் அதிக காலங்கள் தலை முடி வளர்த்தே வந்துள்ளார்கள். அவர்களின் கீழ் உதட்டின் கீழுள்ள பிள்ளை தாடியில் மட்டும் ஐந்து நரை முடிகள் இருந்தன. நெற்றிப் பொட்டிலும் சிறிய, குறைந்த நரை முடிகள் இருந்தன. நாடிக்குழியில் சற்று அதிகமாக இருந்தன. நபீ பெருமான் அவர்கள் முடிகளுக்கு மருதோன்றி பாவித்திருக்கின்றார்கள். ஆயினும் மிகக் குறைவாக! மக்காவில் பிரவேசித்த நேரம் ஒரு தரமும், மதீனாவில் பல தரமும் பாவித்துள்ளார்கள்.
நெஞ்சு பிளக்கப்பட்டது:
سُئل القطبُ عَنْ شَقِّ صدرِه الشّريف كم كان؟ قال رضي الله عنه ثَلَاثَ مرّاتٍ، عند حليمة، وعند عشر سنين، وعند النبوّة،
الأولى عند حليمة، اُستُخرِجَ منه صلّى الله عليه وسلّم حَظُّ الشيطان، وهو ما تَقْتَضِيْهِ الذَّاتُ التُّرابِيَّة مِن مخالفة الأمر واتّباعِ الهَوَى،
الثاني عند عشر سنين، نُزِعَ منه أصلُ الخواطِرِ الرَّدِيئة،
الثالث عند النبوّة،
மகான் குத்புஸ்ஸமான் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது. நபீ பெருமானாரின் நெஞ்சு எத்தனை தடவைகள் பிளக்கப்பட்டது?
அதற்கவர்கள், மூன்று தடவைகள் பிளக்கப்பட்டது என்று கூறி விளக்கமும் சொன்னார்கள்.
முதலில் ஹலீமா நாயகியிடம் வளர்ந்து கொண்டிருந்த சிறு வயதின் போது.
இரண்டாவது பெருமானார் பத்து வயதுள்ளவர்களாக இருந்த நேரம்.
மூன்றாவது நபித்துவம் கொடுக்கப்படு முன்.
முதலில் ஹலீமா நாயகியிடம் வளர்ந்து கொண்டிருந்த போது அவர்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு அதிலிருந்து ஷெய்தானின் பங்கு வெளியேற்றப்பட்டது. அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தல், மனவெழுச்சியைப் பின்பற்றுதல் போன்ற மண்ணினாலான உடல் எதையெல்லாம் தேடுமோ அதுவெல்லாம் மனவெழுச்சியின் தேட்டங்களாகும். இத்தகைய தன்மைகள் அவர்களின் நெஞ்சிலிருந்து வெளியேற்றப்பட்டன.
இரண்டாவது பெருமானார் அவர்கள் பத்து வயதுள்ளவர்களாயிருந்த போது அவர்கள் நெஞ்சு பிளக்கப்பட்டு அதிலுள்ள அனைத்து கீழ்த்தரமான எண்ணங்களின் வேர் வெளியேற்றப்பட்டது.
மூன்றாவது நபித்துவம் வழங்கப்படுமுன் வெளியேற்றப்பட்டது.
இவ்வாறு மூன்று கட்டங்களாக அவர்களின் உள்ளம் பன்படுத்தப்பட்டது.
قال القُطبُ: والشَّقُّ وَقَعَ مِن غير آلةٍ ومِن غير دمٍ والْتِآمٍ بلا خِياطةٍ ولا آلةٍ، ولم يحصل له عليه الصّلاة والسّلام ألَمٌ فى ذلك، لأنّه من فِعل الربِّ تعالى،
பெருமானாரின் நெஞ்சு கத்தியாலோ, வேறு ஆயுதங்களாலோ பிளக்கப்படவுமில்லை, பிளக்கப்பட்ட போது இரத்தம் ஏற்படவுமில்லை, பிளந்த பின் தையல் செய்யாமலேயே ஒட்டிக் கொண்டன. இத்தனை வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு எந்தவொரு வேதனையும் ஏற்படவுமில்லை என்று குத்பு றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
سُئل القطب، عن سبَّابَتِه صلّى الله عليه وسلّم هل هِيَ أطولُ مِن وُسطاه؟ فقال القطبُ سبَّابةُ رِجله الشّريف أطول من وُسطاها، وسبّابةُ يديه مُتساوية لوُسطاهما،
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சுட்டுவிரல் நடுவிரலை விட நீளமானதா? என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்களின் காலின் சுட்டு விரல் நடுவிரலை விட நீளமானது என்றும், அவர்களின் இரு கைகளின் சுட்டு விரல்களும் அவற்றின் நடுவிரல்களும் சமமானவை என்றும் கூறினார்கள்.
மேற்கண்ட குறிப்புக்கள் யாவும் அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல் இப்ரீஸ்” எனும் நூல் 116, 117ம் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.
குத்புஸ்ஸமான் அப்துல் அஸீஸ் அத்தப்பாங் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லச் சொல்ல “இப்ரீஸ்” நூலாசிரியர் அவர்கள் எழுதியுள்ள குறிப்புக்களாகும்.