தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ا=1 ب=2 ج=3 د=4
هـ=5 و=6 ز=7
ح=8 ط=9 ي10
ك=20 ل=30 م=40 ن=50
س=60 ع=70 ف=80 ص=90
ق=100 ر=200 ش=300 ت=400
ث=500 خ=600 ذ=700
ض=800 ظ=900 غ=1000
இதுவே “அப்ஜத்” கணக்கு எனப்படும். மேற்கண்ட 28 எழுத்துக்களும் حروف الهِجاء العربيّة அறபு எழுத்துக்களாகும்.
“அலிப்” என்பதையும், “ஹம்ஸ்” என்பதையும் ஒரு எழுத்தாகவே கணிக்கப்படும். இவ்வாறு கணித்தால் அறபு எழுத்துக்கள் மொத்தம் 28 எழுத்துக்களாகும். 29 எழுத்துக்கள் அல்ல.
“அப்ஜத்” இலக்கங்கள் மேற்கண்ட அடிப்படையிலேயே கணிக்கப்படும். குர்ஆன் பாடசாலைகளில் அறபு எழுத்துக்களை நாம் கற்றுக் கொண்ட வரிசைப்படி ا, ب, ت, ث, ج என்ற இந்த அடிப்படையில் இலக்கங்கள் வரமாட்டா.
ஓர் ஆணின் அல்லது பெண்ணின் பெயருக்கு “அப்ஜத்” கணக்கின் படி இலக்கங்களைக் கூட்டி வருகின்ற மொத்த எண் அப் பெயரின் இலக்கமாகும்.
உதாரணமாக அல்தாப் اَلْطَافْ என்ற பெயருக்கு கணக்கெடுத்தால் அலிபுக்கு 1, லாமுக்கு 30, தாவுக்கு 9, அலிபுக்கு 1, பே எழுத்துக்கு 80. மொத்தம் 121 வரும்.
அஹ்ஸன் اَحْسَنْ என்ற பெயருக்குள்ள எண்களை கூட்டினால் 119 வரும்.
பாதிமா – فاطمة என்ற பெயருக்கு கணக்கெடுத்தால் 530 வரும்.
இவ்வாறு கணக்கெடுப்பதால் கிடைக்கின்ற பலன் என்னவெனில் ஒருவர் அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஏதாவதொரு திரு நாமத்தை “அவ்றாத்” ஆக தினமும் ஓத நாடினால் அவர் தனது பெயரின் மொத்த எண்களின் படியே ஓத வேண்டும்.
உதாரணமாக அல்தாப் என்பவர் அல்லாஹ்வின் திரு நாமங்களில் எதை ஓத விரும்பினாலும் அதை 121 தரம் தான் ஓத வேண்டும். இதை விடக் கூடுதலாகவோ, குறைவாகவோ ஓதுதல் பொருத்தமில்லை.