(தொடர் – 2)
فَظَهَرَ مِنْ هَذِهِ الْقِصَّةِ أَنَّ الْعَاشِقَ يَتَكَلَّمُ بِمَا بَدَا لَهُ مِنْ مُمْكِنٍ وَمُحَالٍ مِنْ شِدَّةِ سَكْرِ الْعِشْقِ وَالْمَحَبَّةِ، كَمَا تَكَلَّمَ الْعُصْفُوْرُ مِنْ شِدَّةِ عِشْقِهِ عَلَى الْعُصْفُوْرَةِ بِقَلْبِ الْقُبَّةِ عَلَى نَبِيِّ اللهِ سُلَيْمَانَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامْ، مَعَ كَوْنِهِ عَاجِزًا عَنْ قَلْبِ الْقُبَّةِ الْكَبِيْرَةِ،
وَكَذَلِكَ الْعَاشِقُ وَالْفَانِيْ فِى اللهِ، يَصِفُ الْمَعْشُوْقَةَ وَالْمَحْبُوْبَةَ بِمَا شَاءَ مِنْ شِدَّةِ سَكْرِ الْعِشْقِ وَفَنَائِهِ فِى شِدَّةِ تَنْزِيْهِ الْحَقِّ تَعَالَى، كَقَوْلِ الشَّيْخِ الْأَكْبَرِ مُحْيِ الدِّيْنِ اِبْنِ عَرَبِيْ قُدِّسَ سِرُّهُ، اَلْعَالَمُ مَا هُوَ عَيْنَ الْحَقِّ تَعَالَى، فَلَا يُعْتَمَدُ بِكَلَامِهِ وَلَا يُعَاقَبُ بِهِ وَلَا يُسْتَدَلُّ بِهِ،
மேற்கண்ட சிட்டுக்குருவியின் வரலாற்றிலிருந்து காதல் பைத்தியம் பிடித்தவன் வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் உளறுவான் என்பதும், அது சாத்தியமானதாயுமிருக்கும், சாத்தியமில்லாததாயுமிருக்கும் என்பதும் தெளிவாகின்றது. காதலியின் மோகம் தலையைத் தாக்கினால் இவ்வாறுதான் நடக்கும். கைக்குள் அடக்கத்தக்க சிட்டுக்குருவியால் வல்லரசு ஸுலைமான் நபீ அவர்களின் மாளிகையின் “குப்பா” டோமை புரட்ட முடியுமா? இது சாத்தியமானதா? “ஸக்றுல் விஸால்” இறைவனோடு ஒன்றித்த போதை தலையைத் தாக்கினால் இவ்வாறுதான் பேச்சுக்கள் வெளியாகும்.
இவ்வாறுதான் “ஆஷிகீன் பில்லாஹ்” அல்லாஹ்வின் காதலர்களின் நிலையுமாகும். அவர்களுக்கு இறை காதல் தலைக்கேறினால் வாயால் வருவது தெரியாமல் போய்விடும்.
“எல்லாம் அவனே” என்று தங்களின் நூல் அனைத்திலும் எழுதும் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் கூட சில நேரம் அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” நிலையில் “பனா”வாகி اَلْعَالَمُ مَا هُوَ عَيْنَ الْحَقِّ படைப்பு அல்லாஹ் தானானதாக இல்லை என்று சொல்லிவிடுவார்கள். இதை ஆதாரமாக தூக்கிப்பிடித்துக் கொண்டு “எல்லாம் அவனல்ல” என்று இப்னு அறபீயே சொல்லிவிட்டார்கள் என்று வெடில் கொழுத்திக் கொண்டாடும் கோமாளிகளும், ஏமாளிகளும் மற்றும் இரும்பு மடையர்களும் இறை காதலர்களின் நிலை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். துறை தெரியாமல் தோணி தொடுக்கக் கூடாது.
اَلْعَالَمُ مَا هُوَ عَيْنَ الْحَقِّ تَعَالَى
என்ற அவர்களின் காதல் மொழியின் தாற்பரியத்தைப் புரிந்து கொள்ளாமல் இதை மட்டும் பிடித்துக் கொண்டு اَلْعَالَمُ مَا هو غيرَ اللهِ “படைப்பு அவன் தானானதே” என்று அவர்கள் தங்களின் நூல்கள் அனைத்திலும் எழுதியதை தூக்கியெறிந்து விட்டு தம்பட்டம் அடிப்பது வடிகட்டிய முட்டாள்தனமேயாகும்.
إِنَّ اللهَ لَا يَأْخُذُ بِمَا صَدَرَ مِنَ الْعُشَّاقِ
“இறை காதலர்களின் காதல் மொழி கொண்டு அவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்” என்பது இறை காதலர்களின் ஏகோபித்த முடிவாகும். இது தெரியாமலும், ஏன் சொன்னார்கள்? எதற்காக? எந்த நிலையில் சொன்னார்கள்? என்பதை ஆராயாமலும், புரியாமலும் கூத்தாடும் இரும்பு மடையர்களை எண்ணி வயிறு குலுங்கச் சிரிக்கிறேன். அல்லாஹ் இந்த மடையர்களுக்கு நல்வழி காட்டுவானாக! இந்த இரும்பர்கள் பின்வரும் ஞானமகான்களின் தத்துவங்களைத் தாமாக விளங்க வேண்டும். அதற்கு தமது மூளை தகுதியற்றதாயின் மூளைசாலிகளை அணுகி அவர்களுக்கு முன்னால் கால்மடித்து அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். آخِرُ مَا يَخْرُجُ مِنْ قُلُوْبِ الصِّدِّيْقِيْنَ الصِّيْتُ “ஸித்தீகீன்”களின் உள்ளங்களிலிருந்து இறுதியாக வெளியாகும் நஞ்சு பதவி மோகம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
الولي يتكلّم على قدر أحواله كما يظهر له، لأنّ الشّيخ الأكبر محي الدين ابن عربي يقول فى الباب السابع والسبعين وثلاثمأة أنّ الاسم ‘الله’ اسمُ عَلمٍ، ثمّ ذكر فى الباب هو التاسع والسبعون وثلاثمأةٍ أنّه غيرُ علمٍ، ثمّ ذكر فى الباب الثامن والخمسين وخمسمأة أنّه علم،
(اليواقيت، ج 1، ص 70)
வலிய்யுல்லாஹ் என்பவர் அவரின் ஆன்மிக நிலைக்கேற்றவாறே பேசுவார். ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்கள் “அல்லாஹ்” என்ற திருப் பெயர் பற்றி எழுதுகையில் புதூஹாதுல் மக்கிய்யா 377ம் பாடத்தில் அது “இஸ்மு அலம்” என்றும், அதே நூல் 379ம் பாடத்தில் அது “இஸ்மு அலம் அல்ல” என்றும், இன்னும் அதே நூல் 558ம் பாடத்தில் அது “அலம்” என்றும் கூறியுள்ளார்கள்.
ஓர் இடத்தில் ஒன்றும். இன்னோர் இடத்தில் அதற்கு மாறான இன்னொன்றும் சொல்வது அறியாமை என்று ஆன்மிக அறிவில்லாதோர் சொல்வர். அவர்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான். ஆயினும் அவ்வாறு சொல்வோர் ஆன்மிக ஞானமில்லாதவர்களாயிருந்தால் அது அவர்களின் அறியாமை என்று சொல்லலாம். இறைஞானிகளான வலீமார்கள் விடயத்தில் அவ்வாறு முடிவு செய்தல் கௌரவமில்லை. அவர்களின் அந்தஸ்த்து பேணப்பட வேண்டும்.
வலீமார் أحوال ஆன்மிக நிலைகள் உடையவர்களாவர். மற்ற சாதாரண இமாம்கள் போன்றவர்களல்லர். “விலாயத்” ஒலித்தனமுள்ள இமாம்களுக்கும், அது இல்லாத இமாம்களுக்குமிடையில் வேறுபாடு உண்டு. இமாம்கள் அனைவரும் வலீமார்கள் அல்லர். எனினும் வலீமார் அனைவரும் இமாம்கள்தான். அவர்களிடம் மௌலவீ, கலாநிதி, அஷ்ஷெய்கு முதலான பட்டங்களும் தராதரப் பத்திரங்களும் இல்லாமற் போனாலும் சரியே.
இஸ்லாமிய வரலாற்றில் எந்தவொரு கல்லூரியிலும் படிக்காத, எந்த ஓர் ஆசிரியரிடமும் கால் மடிக்காத பெரும் வலீமார்களும், மகான்களும் வாழ்ந்ததற்கு வரலாறுகள் நிறைய உள்ளன. அவற்றை எழுதினால் இக்கட்டுரை நீண்டுவிடும். யாராவது எழுதத்தான் வேண்டுமென்று கேட்டால் அது எமக்கு பெரிய வேலையுமில்லை.
قال الشّيخ محي الدين ابن عربي قُدِّس سرّه فى الباب الثاني والسّبعين والثلاثمأة بعد كلام طويل، وبالجملة فالقلوب به هائمةٌ والعُقول فيه حائرةٌ، يُريد العارفون أن يفصِلُوه تعالى بالكليّة عن العالم مِن شِدّة التّنزيه فلا يقدرون، ويُريدون أن يجعلوه عينَ العالم مِن شدّة القُرب فلا يتحقّق لهم، فهُمْ على الدّوام مُتحيّرون، فتارةً يقولون هُوَ، وتارة يقولون مَا هُوَ، وتارةً يقولون هُوَ مَا هُوَ، وبذلك ظهرتْ عظمتُه تعالى، وقد أنشد الشيخ فى هذا المعنى،
وَمِنْ عَجَبِيْ أَنِّيْ أَحِنُّ إِلَيْهِمْ
وأسأل عنهم دائما وهم معي
وتبكيهم عيني وهم فى سوادها
وتشتاقهم روحي وهم بين أضلعي
(اليواقيت، ج 1، ص 58)
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் நூல் புதூஹாதுல் மக்கிய்யா 372ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
மொத்தத்தில் உள்ளங்களெல்லாம் அவனைக் காதலிக்கின்றன. புத்திகளெல்லாம் தடுமாறுகின்றன.
அவனின் “தன்ஸீஹ்” அரூப நிலையின் கடுமையை – புனிதத்தை கவனித்து அவனை “ஆலம்” படைப்பை விட்டும் பிரிக்க – அவன் வேறு, படைப்பு வேறு என்று சொல்ல இறைஞானிகள் நினைக்கின்றார்கள். ஆயினும் அவர்களால் அதற்கும் முடியாமலுள்ளது. அதேபோல் அவன் படைப்புக்கு கடுமையாக நெருக்கமாக இருப்பதைக் கவனித்து அவன் படைப்பு தானானவன் என்று சொல்வதற்கும் இறைஞானிகள் நினைக்கின்றார்கள். ஆயினும் அவர்களால் அதற்கும் முடியாமலுள்ளது. அவர்கள் இறைவன் விடயத்தில் தடுமாற்றமுள்ளவர்களாவே உள்ளனர். சில நேரம் எல்லாம் அவன்தான் என்று கூறுவார்கள். இன்னும் சில நேரம் எல்லாம் அவனில்லை என்று சொல்வார்கள். இன்னும் சில நேரம் எல்லாம் அவனும்தான், அவன் இல்லையும்தான் என்றும் சொல்வார்கள். இதன் மூலம் அவனின் மகத்துவமே விளங்கப்படுகின்றது.
இதே கருத்தை உள்வாங்கி ஷெய்குல் அக்பர் நாயகம் பின்வருமாறு பாடியுள்ளார்கள்.
எனது ஆச்சரியம் என்னவெனில் நான் அவர்களைப் பற்றி விசாரிக்கிறேன். அவர்களைப் பற்றிக் கேட்கிறேன். ஆனால் அவர்களோ என்னோடுதான் உள்ளார்கள். இன்னும் அவர்களை நினைத்து அழுகிறேன். ஆனால் அவர்களோ என் கண்ணின் கரு மொழியிலேயே உள்ளனர். அதோடு அவர்களைக் காண என் உயிர் விரும்புகிறது. ஆனால் அவர்களோ எனது விலா எலும்புகளுக்கிடையில் உள்ளார்கள். இதுவே எனது ஆச்சரியம்.
ஆதாரம்: அல்யவாகீத், பாகம் 01, பக்கம் 58.
இறை போதையில் இராப் பகலாய் மயங்கிக் கிடக்கும் இறைஞானி தனது சுய நினைவின்றி வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் பேசுவார். பாடுவார். அதனால் அவர் தண்டிக்கப்படமாட்டார். சுய நினைவுள்ளவருக்கே “ஷரீஆ”வின் விதி விலக்கும், கட்டுப்பாடும் உண்டு.
குணங்குடி மஸ்தானின் பாடலை இன்னும் கேட்போம்.
கூந்தலுக்கு நெய் தோய்த்து
குளிர் மஞ்சல் நீராட்டி
வார்ந்து சிங்காரித்து
வைப்பேன் மனோன் மணியே!
காதம் பரிமழிக்கும்
கஸ்த்தூரி பொட்டிடுவேன்
போதும் ஜவ்வாதணிந்து
புணர்வேன் மனோன்மணியே!
என்னைப் போல் மாப்பிள்ளைமார்
எத்தனைபேர் உந்தனக்கு
உன்னைப் போல் பெண் எனக்கு
இல்லை மனோன்மணியே!
மூக்கு குத்தி காது குத்தி
முழுவைரம் தூக்கி வைப்பேன்
கோக்கு முத்தும். தூக்கு முத்தும்
குவிப்பேன் மனோன்மணியே!
ஆரிபீன் – ஞான மகான்களின் தரத்தை அடையாத, சுய நினைவோடிருக்கும் நாம் அவர்கள் பாடிய பாடல்களைப் பாடலாமா? ஆம், பாடலாம். ஆனால் حِكَايَةُ الْحَالِ “ஹிகாயதுல் ஹால்” அடிப்படையில் மட்டும் பாடலாமேயன்றி பேனாவையும், பேப்பரையும் வைத்துக் கொண்டு கற்பனை செய்து சுய நினைவோடு எழுதிய பாடல் பாடுதல் கூடாது. அவர்கள் அடைந்த அந்தஸ்த்தை நாமும் அடைந்தால் பாடல் தானாக வந்து கதவைத் தட்டும். அப்போது பாடலாம்.
“ஹிகாயதுல் ஹால்” என்றால் ஒருவர் சொல்வதை எந்த ஒரு மாற்றமுமின்றி அவ்வாறே சொல்வதாகும். இது ஆகும். எந்த ஒரு தடையுமில்லை.
உதாரணமாக ஒருவன் இன்னொருவனைத் தண்டிக்கும் போது அசிங்கமான வார்த்தை கொண்டு தண்டித்தான் என்று வைத்துக் கொள்வோம். அவன் என்ன வசனம் சொல்லித் தண்டித்தான் என்பதை காதால் கேட்டவன் முனாஸ் என்று வைத்துக் கொள்வோம். இந்த விவகாரம் நீதி மன்றுக்குச் சென்ற போது நீதிவான் முனாஸிடம் ஏசியவன் எவ்வாறு ஏசினான்? ஏசும் போது என்ன வசனம் பாவித்தான் என்று கேட்டால் ஏசியவன் பாவித்த அதே வசனத்தை முனாஸ் நீதிவான் முன்னிலையில் சொல்ல வேண்டும். அவன் அசிங்கமான, சபையில் சொல்லப் பொருத்தமற்ற வார்த்தை கொண்டு ஏசினான் என்று சொன்னால் நீதிவான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். அவன் என்ன வார்த்தை சொல்லி ஏசினானோ அதே வார்த்தையைத்தான் சொல்ல வேண்டும். அதே வார்த்தையைச் சொல்வதுதான் “ஹிகாயதுல் ஹால்” என்று சொல்லப்படும். இவ்வாறு சொல்லுதல் “ஷரீஆ” சட்டப்படி குற்றமாகாது. தாராளமாகச் சொல்லலாம்.
அதாவது ஏசியதை காதால் கேட்ட முனாஸ் நீதிவான் முன்னிலையில் “ஏசியவன் எதிரியின் தாயை கற்பழிப்பதாகச் சொன்னான்” என்று சொல்வது “ஹிகாயதுல் ஹால்” ஆகாது. ஏசியவன் எதிரியிடம் “நான் உனது தாயை கற்பழிப்பேன்” என்று சொல்லுதல் தான் “ஹிகாயதுல் ஹால்” என்று சொல்லப்படும். இவ்வாறு சொல்லுதல் குற்றமாகாது.
இவ்வாறுதான் இறை காதலர்கள் நள்ளிரவில், நடு நிசியில் எழுந்து இறைவனை முன்னிலைப்படுத்தி,
முட்டைப் பொரிப்பேன்
முழுக் கோழியும் பொரிப்பேன்
தட்டைப் பீங்கானில் வைத்து
தருவேன் மனோன்மணியே
என்று சொல்வதுமாகும். இதை இன்னொருவர் அவர் சொல்லியுள்ளார் என்று எந்த ஒரு மாற்றமுமின்றி சொல்வானாயின் அது அவன் சொன்னதை அவ்வாறே சொன்னதாகுமேயன்றி இவன் சொன்னதாகாது. ஆகையால் எந்த ஒரு ஞானி பாடிய பாடலாயினும் அதை பிறருக்கு விளக்கி அவ்வாறே சொல்லலாம். குற்றமாகாது. அதற்குத் தண்டனையும் கிடையாது.
தொடரும்…