Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கும், முப்தீகளான முல்லாக்களுக்கும் எனது பகிரங்க மடலும், 'வஹ்ததுல் வுஜூத்' வகுப்புக்கான அழைப்பும்!

ரிஸ்வீ முப்தீ அவர்களுக்கும், முப்தீகளான முல்லாக்களுக்கும் எனது பகிரங்க மடலும், ‘வஹ்ததுல் வுஜூத்’ வகுப்புக்கான அழைப்பும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், எனது கருத்தைச் சரிகண்ட இலங்கைத் திரு நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பல மில்லியன் முஸ்லிம்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், அவர்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் நீங்கள் அநீதியாக வழங்கிய “பத்வா” தீர்ப்புக்கான அல்லாஹ்வின் தண்டனை உங்களுக்கு இறங்கும் காலம் நெருங்கிவிட்டது. இது மணியோசைதான். யானை பிறகுதான் வரும்.


قضَى وقدّر كلّ شيء بحقٍّ، يا علماء الفتوى تنبَّهُوا واتركوا التعصُّبَ والعِنادَ، وارجعوا عن فتواكم قبل أن يحُلَّ بكم عِقابُ الله وعذابُه وبلائُه، لأنّ الله أغيرُ وأشدُّ بطشا، كما أعلن فى كلامِه القديم الّذي لا صوتَ له ولا جهةَ، إنّ بطش ربِّك لشديد،

يا علماء الفتوى كفَّرتُمْ بفتواكم جمًّا غفيرا وجمعا كبيرا من العلماء الموحّدين المتصوّفين المؤمنين، فمنهم من رأى ربّه فى منامِه، ومنهم من رأى نبيَّه فى منامِه، ومنهم من رأى أولياء الله فى منامه، وكيف تكفِّرُون رجلا رأت عيناه رسول الله صلّى الله عليه وسلّم؟ وكيف تكفِّرون شخصا رأت عيناه ربّه فى منامه؟ وكيف تكفِّرون طائفة رأت عيونهم ربّهم فى منامهم؟ والله العظيم، وبالله الكريم قد كفَرْتُم بتكفير الصالحين، بدلائل الآيات والأحاديث،

அல்லாஹ் தான் செய்தவை அனைத்தையும் நீதியாகவே செய்துள்ளான். “பத்வா” வழங்கிய முல்லாக்களே! விழித்தெழுங்கள். பிடிவாதம், மனமுரண்டு இரண்டையும் விடுங்கள். அல்லாஹ்வின் சோதனையும், தண்டனையும், வேதனையும் உங்களைத் தாக்குவதற்கு முன் நீங்கள் வழங்கிய “பத்வா”வை மீளப் பெறுங்கள். வாபஸ் பெறுங்கள். அல்லாஹ் மிகவும் ரோசக் காரனும், கடும் பிடியுள்ளவனுமாவான். சத்தமும், திசையுமில்லாத அவனின் பேச்சில் உங்களின் இறைவனின் பிடி கடுமையானதென்று கூறியுள்ளான்.

மத மாற்றம் செய்வது தொடர்பான பெருமானாரின் எச்சரிக்கை!

நபீ மொழிகள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا قَالَ الرَّجُلُ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهِ أَحَدُهُمَا»،
“ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “காபிர்” என்று சொன்னால் அவர்களில் ஒருவர் நிச்சயமாக “காபிர்” ஆகிவிட்டார்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.

ஆதாரம்: புகாரீ, ஹதீது எண்: 6103
அறிவிப்பு: அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு

ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் “காபிர்” என்று சொன்னால் அவ்வாறு சொன்னவன்தான் “காபிர்” ஆவான். சொல்லப்பட்டவன் “காபிர்” ஆகான். ஆயினும் எம் பெருமானார் அவர்கள் சொன்னவன் காபிர் ஆவான் என்று சொல்லாமல் அவ்விருவரில் ஒருவன் “காபிர்” ஆகிவிட்டான் என்று கூறியுள்ளார்கள்.

இதன் விபரம் என்னவெனில் ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் “காபிர்” என்று சொன்னால் சொல்லப்பட்டவன் மத மாற்றத்துக்கான காரியம் செய்திருந்தால் சொல்லப்பட்டவன் “காபிர்” ஆவான். சொன்னவன் “காபிர்” ஆகமாட்டான். மாறாக சொல்லப்பட்டவன் மத மாற்றத்துக்கான காரியம் எதுவும் செய்யாதிருந்து அவனை “காபிர்” என்று சொன்னால் சொன்னவனே “காபிர்” ஆகுவான். சொல்லப்பட்டவன் “காபிர்” ஆகான். இதனால்தான் பெருமானார் அவ்வாறு சொன்னார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ يَا كَافِرُ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا»

இந்த நபீ மொழியும் மேற்கண்ட நபீ மொழி போன்றதேயாகும்.
ஆதாரம்: புகாரீ, எண்: 6104
அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு
عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ غَيْرِ الإِسْلاَمِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ»
யாராவதொருவன் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தைக் கொண்டு பொய் சொன்ன நிலையில் சத்தியம் செய்தானாயின் அவன் சொன்னது போன்றேதான். பொய் சொன்னவன்தான். ஒருவன் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி கொலை செய்தால் அவன் நரகில் அது கொண்டே வேதனை செய்யப்படுவான். ஒரு விசுவாசியை சபித்தல் அவனைக் கொலை செய்தல் போன்றதாகும். ஒருவன் ஒரு “முஃமின்” விசுவாசியை “காபிர்” என்று சொன்னால் அவன் அவனைக் கொலை செய்தவனாவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, எண்: 6105
அறிவிப்பு: தாபித் இப்னுள்ளஹ்ஹாக் றழியல்லாஹு அன்ஹு

மேற்கண்ட இந்த நபீ மொழியில் நான்கு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் எமது தலைப்புக்கு தேவையானது நாலாவது கூறப்பட்ட அம்சம் மட்டுமே.
معنى الأحاديث المذكورة أنّ مَن كفَّرَ مسلما فقد قتله، وجعله مستحقًّا للقتل ومُهدَرَ الدّم بتكفيره إيّاه، وكفَرَ هو أيضا بتكفيره المسلمَ، فالمكفِّرُ للمسلمِ كقاتلِه بلا شكّ، ولَه إثمُ قتلِه وإن لم يقتُله بيده، لأنّه قد قتلَه بحُكمِه وقولِه وخطِّه، وكذلك من كفّر جمًّا غفيرا وجمعا كبيرا من بعض العلماء المُنْتَمِيْنَ إلى اُمِّ جمعيّات العلماء بـسـريلانكا، كفّروني وأفتوني بالرِّدّة ورِدّةِ قوم صدّقوا قولي وعقيدتي، من مسلمي سريلانكا والهند، فلهم إثم قتلهم جميعا، سيظهر حال المفتي السابق وأعوانه السابقين، وحال المفتي الحاليّ وأعوانه يوم القيامة، ونسمع بآذاننا قولهم واحسرتا على ما فرّطت فى جنب الله،
மேற்கண்ட நபீ மொழிகளுக்கான சுருக்கமான விளக்கம்.

ஒரு முஸ்லிமைக் “காபிர்” ஆக்கி வைத்தவன் – “முர்தத்” என்று “பத்வா” வழங்கினவன் நிச்சயமாக அந்த முஸ்லிமை கொலை செய்து விட்டான். அவனை இவன் “காபிர்” ஆக்கி வைத்தால் – மதம் மாற்றி வைத்தால் அவனைக் கொலை செய்யலாம் என்று சொல்லிவிட்டான். அதோடு அவனும் “காபிர்” ஆகிவிட்டான். முஸ்லிமை “காபிர்” என்று சொன்னவன் சந்தேகமின்றி அவனைக் கொலை செய்துவிட்டான். அதோடு கொலை செய்ய வேண்டுமென்றும் சொல்லிவிட்டான். அவனுக்கு கொலை செய்த பாவம் உண்டு. அவன் அவனை கையால் கொலை செய்யாது போனாலும் அவனின் “பத்வா” எனும் எழுத்து மூலமும், சொல் மூலமும், சட்டம் மூலமும் கொலை செய்து விட்டான்.

இவ்வாறுதான் இலங்கை நாட்டின் தாய் உலமா சபையைச் சேர்ந்த சிலர் முஸ்லிம்களில் பெருங் கூட்டமொன்றை – பெரும் ஸூபிஸ சமுகமொன்றை “காபிர்”களென்று “பத்வா” கொடுத்து அதன் மூலம் அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இவ்வாறு செய்த உலமாஉகளான மார்க்க அறிஞர்களுக்கு கொலை செய்த பாவம் நிச்சயமாக உண்டு. இந்த உலமாஉகள் தமது கையால் வாள் எடுத்துக் கொலை செய்யாது போனாலும் “காபிர்” என்று எழுத்து மூலம் சட்டம் சொன்னதால் அவர்கள் கொலை செய்து விட்டார்கள். முன்னாள் “முப்தீ”யினதும், அவரின் ஆதரவாளர்களினதும் நிலைமையும், இந்நாள் “முப்தீ”யினதும், அவரின் ஆதரவாளர்களினதும் நிலைமையும் மறுமையில்தான் வெளியாகும். அன்று அவர்கள் “அல்லாஹ்வின் விடயத்தில் நாங்கள் அநீதி செய்து விட்டோம்” என்று கூச்சலிடும் சத்தத்தை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்போம்.

சுருக்கமான மொழியாக்கம் முற்றுப் பெற்றது.

ரிஸ்வீ முப்தீ அவர்களே!

மேற்கண்ட நபீ மொழிகளின் படி நீங்களும், “பத்வா” எழுதியவரும், அவருக்கு துணையாக இருந்தவர்களும் யார்? நீங்களே சொல்லுங்கள். நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் நீங்கள் யாரென்று மேற்கண்ட பொன் மொழிகள் மூலம் பெருமானார் அவர்களே தெளிவாக சொல்லிவிட்டார்கள்.
ومن أصدق قولا منه؟ ومن أنسبُ قولا منه؟ وهو الشّارع، وهو المفتى، وهو الصادق،
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسـي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم،
(اليواقيت، ج أوّل، ص 21)
சுருக்கமான தமிழாக்கம்:
இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மிக நெருங்கிய தோழர் அஹ்மத் பின் ஸாஹிர் அஸ்ஸர்கஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக இமாம் அபூ தாஹிர் அல்கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டில் அபுல் ஹஸன் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இருந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் எனது தோழர்களை ஒன்று கூட்டித் தாருங்கள் என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒன்று கூட்டிக் கொடுத்தேன். நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் எங்களிடம், நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு முஸ்லிம்களில் பாமர மக்களை – படிக்காதவர்கள் எவரையும் நான் காபிர் – முர்தத் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்கப்படுகின்ற ஒருவனையே சுட்டிக் காட்டுகிறார்கள் என்றும், இஸ்லாம் என்பது அவர்கள் அனைவரையும் உள்வாங்கியதேயாகும் என்றும் கூறினார்கள்.)

மொழியாக்கம் முடிந்தது.

அவர்களுடைய கூற்றின் சுருக்கம் என்னவெனில் முஸ்லிம்களில் “அவாம்முன்னாஸ்” படிக்காத பாமரர்கள் எதைச் செய்வதால், அல்லது எதைச் சொல்வதால் மதம் மாற்றம் ஏற்படுமென்பதை அறியாதவர்களாக உள்ளனர். ஆகையால் அவர்கள் தமது அறியாமையால் மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலைச் செய்தும், அல்லது ஒரு பேச்சைப் பேசியும் விடுவார்கள். அதற்காக அவர்களைக் “காபிர்”கள் என்றோ, “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றோ சொல்வதும், முஸ்லிம் சமுகத்திலிருந்து ஓதுக்கி வைப்பதும் கூடாது என்பதாகும். அவர்கள் “அகீதா” கொள்கை தொடர்பான தலைமை இமாமாக இருந்தும் கூட இவ்வாறு கூறியிருப்பது ஒரு முஸ்லிமை மதம் மாற்றுவது, அவர் மதம் மாறியவர் என்று “பத்வா” தீர்ப்பு வழங்குவது மிகக் கொடிய பாவம் என்பதை உணர்த்துகிறது.

இவ்வாறு சொன்ன “இமாம்”தான் உலகில் வாழும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகள் அனைவரும் கொள்கையில் பின்பற்றுகின்ற, பின்பற்ற வேண்டிய இமாம் ஆவார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

முப்தீ அவர்களே!

மேலே நான் சுட்டிக் காட்டிய உங்கள் அனைவருக்கும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பாலர் வகுப்பிலிருந்து பட்டதாரி வகுப்பு வரை கற்றுத் தர வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்களும் விரும்பினால் கூறுங்கள். எனது நிபந்தனைகளுக்கு உடன்படுவீர்களாயின் எவ்வாறு, எப்போது, செய்து கொள்வது? என்பது தொடர்பாக பேசிக் கொள்வோம்.

எனது நிபந்தனைகள்.

நீங்கள் கற்பதற்கென காலடி வைக்குமுன் உங்களின் “நிய்யத்” எண்ணத்தை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது திருக்குர்ஆனின் ஆதாரங்கள், நபீ மொழிகளின் ஆதாரங்கள், இறை நேசச் செல்வர்களின் ஆதாரங்கள் மூலம் எது சரியென்று நிறுவப்படுகின்றதோ அதை எந்தவொரு மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளுதல். சத்தியம் எதுவோ அதை அறிவது மட்டுமே குறிக்கோளாயிருத்தல்.

நீங்கள் என்னிடம் வர விரும்பினால் வெற்றி, தோல்வி என்பதை கருத்திற் கொள்ளாமலும், என்னை எவ்வாறேனும் மடக்கியும், குழப்பியும் நீங்கள் வெல்ல வேண்டுமென்ற எண்ணமின்றியும் வரல் வேண்டும்.

தொடராக ஐந்து நாட்கள் காத்தான்குடியில் என்னோடு தங்கியிருக்க வேண்டும்.

தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், இரவில் இஷா தொழுகையைத் தொடர்ந்து சுமார் 3 மணி நேரங்களும் நான் கூறும் விளக்கத்தை கேட்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 5 மணி நேரங்கள் வீதம் நான்கு நாட்கள் 20 மணி நேரங்கள் எனது விளக்கம் இடம் பெறும்.

இறுதி நாளான 5ம் நாள் உங்களுக்குள்ள சந்தேகங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

ஐந்து நாட்களும் நீங்கள் அனைவரும் தங்குவதற்கான இட வசதியும், தினமும் மூன்று வேளை உணவும், குடிபானங்களும் இலவசமாக வழங்கப்படும்.

என்னிடமுள்ள இட வசதிகளை கருத்திற் கொண்டு இந்த வகுப்புக்களில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் 10 பேர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

காத்தான்குடி உலமாஉகளிலும், இதை அண்மித்த பிரதேசங்களிலிருந்தும் 50 பேர்கள் அனுமதிக்கப்படுவர். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கு வழங்கப்படும் எந்த ஒரு சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படமாட்டது.

அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அவர்களை அவர்களின் ஷெய்கு – ஞான குரு அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்கள் என்ன நிபந்தனையோடு அழைத்தார்களோ அதே நிபந்தனையோடு நானும் உங்களை அழைக்கிறேன். எனது நிபந்தனைகளுக்கு நீங்கள் உடன்பட்டால் மட்டும் என்னிடம் வாருங்கள். இவருக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கிய நாம் இவரிடம் கற்றுக் கொள்வதா? என்று உங்கள் மனம் சொன்னால் நீங்கள் விரும்பியவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விஷயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது நோக்கமேயன்றி என்னிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. இது நிபந்தனைகளுள் மிக முக்கயமானதாகும்.

நீங்கள் எனது நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் ஒரு மாதத்திற்கு முன் எனக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்வுகள் யாவும் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும்.
[11:20 pm, 01/02/2022] Nsn: முல்லாக்களின் “முர்தத் பத்வா” இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு முரணானதாகும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அல்லாஹ் குளித்தான், அல்லாஹ் சாப்பிட்டான், அல்லாஹ் திருமணம் செய்தான் என்று ஒருவன் சொன்னால் அவனை விசாரிக்காமல் அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு இஸ்லாமிய மூலாதாரங்களில் இடமுண்டா? ஆதாரங்கள் உண்டா?

விடை:

இல்லை. இல்லவே இல்லை. இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன், ஹதீது, இஜ்மாஉ, கியாஸ் ஆகியவற்றிலும் இடமில்லை. ஷரீஆ, தரீகா, ஹகீகா, மஃரிபா முதலான நாற்பெரும் பிரிவுகளிலும் இடமில்லை.

அல்லாஹ் குளித்தான், அவன் சாப்பிட்டான், அவன் திருமணம் செய்தான் போன்ற வசனங்கள் வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கும், இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கும் முரணானவை போல் விளங்கப்படுகின்றன. எவரிடம் கேட்டாலும் அவ்வாறு சொல்வது பிழையென்றே சொல்வார்கள். இக்கட்டுரையை வாசிக்கின்றவர்களும் கூட இது பிழையென்றே சொல்வார்கள்.

ஒரு முஸ்லிம் மேற்கண்டவாறு சொன்னால் அவரை விசாரிக்காமலும், அதற்கான விளக்கத்தை அவரிடமே வினவி அறியாமலும் அவருக்கு “முர்தத்” என்றோ, பௌதன் அல்லது இந்து அல்லது கிறித்துவன் என்றோ தீர்ப்புச் சொல்லுதல் நூறு வீதமும் பிழையானதாகும். குறித்த வசனங்களைக் கூறிய அவனிடம் விளக்கம் கேட்பது கடமை என்பதில் மாற்றமில்லை. இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.

அவ்வாறு சொன்னவன் தலைமறைவாகியிருந்தால், அல்லது அவனிடம் எந்த வகையிலும் விளக்கம் கேட்க முடியாதிருந்தால், அல்லது அவன் விளக்கம் சொல்ல மறுத்தால் தீர்ப்பு வழங்குகின்ற “முப்தீ” பின்வருமாறு தீர்ப்பு வழங்கலாமேயன்றி பொதுவாக அவன் “முர்தத்” என்றோ, காபிர் என்றோ, பௌதன் என்றோ, இந்து என்றோ, கிறித்துவன் என்றோ “பத்வா” தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமே இல்லை. மார்க்க நியதியும் இதுதான். பொது நியதியும் இதுவேதான்.

இவ்வாறு சொன்னவனை எந்த வகையிலும் விசாரிப்பதற்கு சாத்தியமில்லாத கட்டத்தில் மட்டும்தான் பின்வருமாறு தீர்ப்புக் கூறலாம்.

அதாவது அவ்வாறு சொன்னவன் படைப்புக்குரிய தன்மை போன்ற ஏதேனுமொரு தன்மை இறைவனுக்கு உண்டு என்ற கருத்தில் அவன் அவ்வாறு சொல்லியிருந்தால் மட்டுமே அவன் “முர்தத்” ஆகிவிட்டான் என்றும், அவன் அக்கருத்தில் அவ்வாறு சொல்லவில்லையானால் அவன் “முர்தத்” அல்ல என்றுமே தீர்ப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு சொன்னவனை விசாரிக்கும் போது அவன் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி விளக்கம் சொன்னால் அவனுக்கு “முர்தத்” மதம் மாறியவன் என்று “பத்வா” வழங்குதல் முற்றிலும் பிழையாகும்.

உதாரணமும், விளக்கமும்.

அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى

என்று கூறியுள்ளான். இவ்வசனம் ஒரு நிகழ்வோடு தொடர்புடையதாகும்.

ஒரு சமயம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு திரு மக்கா நகர் நயவஞ்சகர்களால் எதிர்ப்பு உச்சக் கட்டத்தை அடைந்த போது பெருமானார் மக்கா நகரிலிருந்து மதீனாவுக்கு “ஹிஜ்றத்” வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எவருக்கும் தெரியாமல் மக்காவிலிருந்து வெளியேற ஒழுங்கு செய்தார்கள்.

ஒரு நாளிரவு அங்கிருந்து வெளியேறவிருந்த தகவல் அவர்களோடு தோழர்கள் போல் நடித்துக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள் இரகசியமாக இருந்த இத்தகவலை வெளிப்படுத்திவிட்டார்கள். இச் செய்தி மக்கா நகரெல்லாம் பரவியது.

எதிரிகளில் ஒரு குழு அன்றிரவு பெருமானார் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டனர். ஆயுதங்களோடு அந்த வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.

அவ்வேளை பெருமானார் தங்களின் திருக்கரத்தால் மண் ஒரு பிடி எடுத்து எதிரிகளின் பக்கம் எறிந்தபொழுது அவர்களின் கண்கள் பார்வையிழந்தன. பெருமானார் எவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டார்கள்.

இந்த நிகழ்வின் போது பெருமானார் அவர்கள்தான் தங்களின் திருக்கரத்தால் மண்ணை எடுத்தவர்களும், எறிந்தவர்களுமாவார்கள். அவர்கள் தவிர வேறு யாரும் மண் எடுக்கவுமில்லை, எறியவுமில்லை. மண் எடுத்தவர்களும், எறிந்தவர்களும் பெருமானார் அவர்களேதான். இதுவே எதார்த்தம். இதுவே நடந்த உண்மை.

ஆயினும் இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் கூறிய அல்லாஹ், “முஹம்மதே! மண் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான்” (திருக்குர்ஆன் 08-17) என்று கூறியுள்ளான்.

வெளிப்பார்வையில் அல்லாஹ் கூறியுள்ள இத்தகவல் உண்மைக்குப் புறம்பானது போல் தோணுகிறது. எனினும் இத் தகவல் அல்லாஹ் சொன்ன தகவலாக இருப்பதால் அது உண்மைக்குப் புறம்பானதாக இருக்க முடியாது. இதற்கு விளக்கம் இருக்கத்தான் வேண்டும். இதன் விபரத்தை இங்கு எழுதுகிறேன்.

“ஹகீகத் அக்லீ”, “மஜாஸ் அக்லீ”

“ஹகீகத் அக்லீ” என்றும், “மஜாஸ் அக்லீ” என்றும் இரு விடயங்கள் உள்ளன. இவ்விரண்டின் விபரங்களையும் நான் இங்கு எழுதுகிறேன். வாசிக்கும் சகோதரர்கள் முழுக்கவனம் செலுத்தியும், அவசரப்படாமலும் படித்து விளங்கிக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் விடயத்தை விளங்கி ஸூபிஸ ஞானம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது பசியும், தாகமுமேயன்றி நீங்கள் எனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டுமென்பதோ, கொடி தூக்க வேண்டுமென்பதோ, பத்ரிய்யா வளாகத்தை நிரப்ப வேண்டுமென்பதோ அல்ல.

“ஹகீகத் அக்லீ” என்றால் نِسْبَةُ الْفِعْلِ إِلَى مَنْ هُوَ لَهُ ஒரு செயலை அச் செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இதுவே “ஹகீகத் அக்லீ” என்பதற்குரிய வரைவிலக்கணமாகும். உதாரணமாக شَفَى اللهُ الْمَرَضَ அல்லாஹ் நோயை சுகமாக்கிவிட்டான் என்றும், أَنْبَتَ اللهُ الشَّجَرَةَ அல்லாஹ் மரத்தை முளைக்கச் செய்தான் என்றும் சொல்வது போன்று.

இவ்விரு உதாரணங்களும் “ஹகீகத் அக்லீ” என்ற விடயத்தைக் விளங்குவதற்குப் போதும். ஆய்வுத் திறனுள்ளவர்கள் இதுபோல் ஆயிரம் உதாரணங்கள் மூலம் சிந்திக்கலாம். குறிப்பாக படிக்கின்ற மாணவர்களும், படித்த பட்டதாரிகளும் இக்கலையுடன் தொடர்புள்ளவர்களாக இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். ஏனெனில் ஈடேற்றமென்பது ஸூபிஸத்திலேயே தங்கி நிற்கின்றது. இது இன்று உணரப்படாமல் ஸூபிஸம் புறக்கனிக்கப்படுவதும், நகைப்புக்குரியதாக கணிக்கப்படுவதும், ஊர்த்தலைவர்களும், முக்கியத்தர்களும் நகைப்புக்கும், புறக்கணிப்புக்கும் துணை போவதும் உயிர் கொல்லும் நஞ்சுண்பதற்கு சமமாகும்.

மேலே சொன்ன இரு உதாரணங்கள்பால் உங்களின் கவனத்தை திருப்புகிறேன். شَفَى اللهُ الْمَرَضَ அல்லாஹ் நோயை சுகமாக்கினான் என்ற உதாரணத்தில் “ஷிபா” சுகமாக்குதல் என்ற செயல் எதார்த்தத்தில் அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதுவே எதார்த்தம். ஏனெனில் சுகமாக்குதல் என்ற செயல் அல்லாஹ்வால் மட்டும் சாத்தியமானதேயன்றி வேறு எவராலும் சாத்தியமானதல்ல. வைத்தியர்களாலும் சாத்தியமானதல்ல. ஆகையால் இவ்வுதாரணத்தில் சுகமாக்குதல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

இவ் உதாரணம் போன்றதே أَنْبَتَ اللهُ الشَّجَرَةَ அல்லாஹ் மரத்தை முளைக்கச் செய்தான் என்ற உதாரணமமுமாகும். இவ்வுதாரணத்திலும் முளைக்கச் செய்தலெனும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

“மஜாஸ் அக்லீ” என்றால் نِسْبَةُ الْفِعْلِ إِلَى غَيْرِ مَنْ هُوَ لَهُ ஒரு செயலை எதார்த்தத்தில் அதற்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அதோடு தொடர்புள்ள இன்னொருவன் பக்கம், அல்லது இன்னொரு வஸ்த்தின் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இதுவே இதற்கான வரைவிலக்கணமாகும்.

மேலே சொன்ன இரு உதாரணங்களையும் சிறிய மாற்றத்துடன் சொல்வோம். “மஜாஸ் அக்லீ” வந்துவிடும். أَنْبَتَ الْمَطَرُ الشَّجَرَةَ மழை மரத்தை முளைக்கச் செய்தது என்றும், شَفَى الطَّبِيْبُ الْمَرَضَ வைத்தியர் நோயை சுகமாக்கிவிட்டார் என்றும் சொல்வது போன்று.

இவ்விரு உதாரணங்களில் முந்தின உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது முளைப்பதற்கு காரணமான அல்லது உதவியாயிருந்த மழையின் பக்கம் சேர்த்தும், பிந்தின உதாரணத்தில் சுகமாக்கி வைத்தல் என்ற செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் சுகம் கிடைப்பதற்கு காரணமாக அல்லது உதவியாயிருந்த வைத்தியன் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

முதலாம் வகைப்படி சொல்வதில் எந்தவொரு கருத்து வேறுபாடும் எவரிடமும் கிடையாது. எவரிடம் கேட்டாலும் அவ்வாறு சொல்ல முடியும் என்றுதான் சொல்வார். இதை விடுவோம்.

இரண்டாம் வகைப்படி சொல்வதில் ஸுன்னீ கொள்கைவாதிகளுக்கும், அதற்கு மாறான கொள்கை வாதிகளுக்கும் கருத்த வேறுபாடு உண்டு.

ஸுன்னீகள் அவ்வாறு சொல்லலாம் என்று கூறுவார்கள். மற்றவர்கள் அவ்வாறு சொல்ல முடியாதென்று கூறுவார்கள்.

எவர் எவ்வாறு கருத்தக் கூறினாலும் எவன் பேச்சை எவராலும் மறுக்க முடியாதோ அவன் தனது திருக்குர்ஆன் என்ற மேடையில் இரண்டையும் சரி கண்டு பகிரங்கமாக கூறியுள்ளான்.

اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا
“ஆன்மாக்கள் மரணிக்கும் போது அவற்றை அல்லாஹ்தான் மரணிக்கச் செய்கிறான்” என்ற திருமறை வசனத்தையும், (திருக்குர்ஆன் 39-42)
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُم
“முஹம்மதே! நீங்கள் சொல்லுங்கள். உங்களின் மீது சாட்டப்பட்ட இஸ்றாயீல் என்ற “மலக்” அமரர்தான் உங்களை மரணிக்கச் செய்கிறார்” என்ற (திருக்குர்ஆன் 32-11) வசனத்தையும் கவனிக்க வேண்டும்.

இவ்விரு வசனங்களில் ஒன்று மற்றதற்கு முரணாக உள்ளது. எனினும் முரண்பாடு ஒன்றுமே கிடையாது. இரண்டு விதமாகவும் சொல்ல முடியும் என்பதையே அல்லாஹ் இரு வசனங்கள் மூலமும் நிறுவிவிட்டான்.

முந்தின வசனம் “ஹகீகத் அக்லீ” அடிப்படையிலும், பிந்தின வசனம் “மஜாஸ் அக்லீ” அடிப்படையிலும் அமைந்துள்ளன.

பொதுவாக எச் செயலாயினும், அது எவர் மூலம் அல்லது எதன் மூலம் வெளியான செயலாயினும் பொதுவாகச் செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியனவேயாகும். எவருக்கும், அல்லது எதற்கும் சுயமான செயல் கிடையாது. اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குரியன என்பதே தத்துவமும், எதார்த்தமுமாகும்.
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
உங்களையும், உங்களின் செயல்களையும் அல்லாஹ்தான் படைத்தான். (திருக்குர்ஆன் 37-96)

எச் செயலுக்கும் உரியவன், சொந்தக் காரன் அல்லாஹ் மாத்திரமேயாவான். வேறு எவருக்கும் எதற்கும், எச்செயலும் இல்லை. இதுவே இஸ்லாமிய தத்துவமும், கொள்கையுமாகும். மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள “றம்யுன்” எறிதல் என்ற செயலுக்குரியவன் – அதன் சொந்தக் காரன் அல்லாஹ்தான். நபீ பெருமானுக்கோ, அல்லது வேறு யாருக்குமோ, எதற்குமோ செயல் கிடையாது.

உண்மை இவ்வாறிருக்கும் நிலையில், எதார்த்தமும் இவ்வாறே இருக்கும் நிலையில் நான் செய்தேன், அவன் செய்தான், அவள் செய்தாள், இவள் செய்தாள் என்று செயலை படைப்பின் பக்கம் சேர்த்துச் சொல்வது உலக நடைமுறையேயன்றி எதார்த்தமில்லை.

கத்தி வெட்டுகிறது, நெருப்புச் சுடுகிறது என்று வெட்டுதல் என்ற செயலை கத்தியின் பக்கமும், சுடுதல் என்ற செயலை நெருப்பின் பக்கமும் சேர்த்துச் சொல்வதும் உலக நடைமுறைக்காகவேயன்றி எதார்த்தம் அதுவல்ல. சுயமான செயல் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. வேறு யாருக்கும், எதற்கும் எச்செயலும் கிடையாது.
فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ
நீங்கள் அவர்களைக் கொலை செய்யவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவர்களைக் கொலை செய்தான். (திருக்குர்ஆன் 08-17)

கொலை என்ற செயலை “ஹகீகத் அக்லீ” என்ற அடிப்படையிலேயே அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا
அவர்களிடம் அல்லாஹ்வின் திருவசனங்கள் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு ஈமானை – விசுவாசத்தை அதிகப்படுத்தும். (திருக்குர்ஆன் 08-02)

விசுவாசத்தை அதிகப்படுத்துதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயன்றி திருவசனங்களுக்குரியதல்ல. எனினும் “மஜாஸ் அக்லீ” அடிப்படையில் இவ்வசனம் அருளப்பட்டுள்ளது.

எனவே, எந்தவொரு செயலாயினும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ்தான் என்று நம்புவதுடன், அவனின் அச் செயல் அவனின் படைப்புகளில் எதன் மூலம் வெளியாகின்றதோ அதன் பக்கம் அச் செயலைச் சேர்த்துச் சொல்வது பிழையாகாது. “ஷிர்க்” ஆகவுமாட்டாது. “குப்ர்” ஆகவுமாட்டாது என்று நம்புவதும் கடமையாகும்.

மேற்கண்ட விபரங்களையும், விளக்கங்களையும் தெளிவினும் தெளிவாக அறிந்த ஒருவன் முசம்மில் என்பவன் குளித்திருக்கும் நிலையில் “ஹகீகத் அக்லீ” அடிப்படையில் அல்லாஹ் குளித்தான் என்று சொல்வதும், இஸ்மாயீல் சாப்பிட்டிருக்கும் நிலையில் அல்லாஹ் சாப்பிட்டான் என்று சொல்வதும், முஸ்தபா திருமணம் செய்திருக்கும் நிலையில் அல்லாஹ் திருமணம் செய்தான் என்று சொல்வதும் மதம் மாற்றத்தை ஏற்படுத்தாது.

ஆயினும் இவ்வாறெல்லாம் ஒருவன் சொன்னால் அவனை விசாரிக்காமலும், அவனிடம் விளக்கம் கேட்காமலும் அவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்குதல் சட்ட விரோதமானதும், செல்லுபடியாகாததுமாகும்.

யாராவதொரு “முப்தீ” அவ்வாறு சொன்னவன் “முர்தத்”துதான் என்றும், அவனை விசாரிக்காமலேயே அவனுக்கு அவ்வாறு “பத்வா” வழங்கலாமென்றும் சொன்னால் உலகில் திருக்குர்ஆன் ஓதுகின்ற அனைவருக்கும் “முர்தத்” என்று விசாரணையின்றியே “பத்வா” வழங்க வேண்டும். விபரம் அடுத்த தொடரில்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments